முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்…

மே 18 – இனவழிப்பு நாள்

திரும்பிய திசையெங்கும் சிங்களப்பேய்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு…

வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்

சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்… என்பதுதான் உண்மை!தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான். களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டா அந்த தாக்குதல் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அந்தக் களத்தில் அவருக்கு கீழ் போராடிய…

படைத்துறைப்பள்ளி ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்

அண்ணாவின் 6ம் ஆண்டு நினைவு நாள். தாயக மண்ணின் மைந்தனாய் தானைத் தலைவனின் பிள்ளையாய் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சி ஆசானாய் விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் கமலாதேவி தம்பதிகளுக்கு 09.04.1971 அன்று பிறந்தவர் தான்அன்பழகன் . அன்புக்கு ஆசானாய் விளங்கிய அன்பழகன் தான் பிறந்த மண்ணின் கொடுமை கண்டு துடித்தெழுந்தார். தமிழ் மக்கள் படும் இன்னல்கண்டு துவண்டெழுந்த அன்பழகன் தாயகம் மீட்க தானைத் தலைவன் வழியை…

கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழு நீள காணொளித் தொகுப்புகள்

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை. கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்

கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் அன்று….

கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று கடற்கரும்புலி சிதம்பரம நிறையபப் டிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் கஸ்ரநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்த்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன்…

மாதவன் மாஸ்ரர் நினைவுகளோடு…..!

இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால்…