முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்…

வடக்கில் தொடரும் பஞ்சமா பாதகங்கள்!

வடக்கில் அண்மைக்காலமாக சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளன. அதனால் பெற்றோர் மற்றும் பொது மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, இளம் வயதினர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையே இச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோஷ்டி மோதல்கள், வாள்வெட்டுக்கள், போதைவஸ்து பாவனை, மதுபாவனையென சகலவிதமான பஞ்சமா பாதகங்களும் அதிகரித்து வருகின்றமையே வடபகுதி மக்கள் மத்தியில் தோன்றியுள்ள பாரிய அச்சத்துக்கான பிரதான காரணமாகும். வடக்கில் போர்ச்சூழல் நிலவிய காலத்தில்கூட இந்த விதமான படுபாதகச் செயல்கள் இடம்பெறவில்லை. நடுச்சாமத்தில்கூட…

3 நாட்களுக்கு முன் வித்தியா! 3 மாதத்துக்கு முன் சரண்யா! வெளிச்சத்துக்கு வந்துள்ள திடுக். தகவல்!

வன்னியை சேர்ந்த 16 வயதுடைய சரண்யா எனும் பாடசாலை மாணவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இது தொடர்பிலான விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. சரண்யா பெற்றோரை இழந்த பாடசாலை மாணவி. 2006ம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தில் சரண்யாவின் தந்தை உயிரிழந்ததுடன், அவரது தாயார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஈழத்திலும் கூட்டு பாலியல் வன்புணர்வு – கண்டுகொள்ள யாருமில்லை! அவரது பாட்டியின் அரவணைப்பிலேயே சரண்யா மற்றும் அவரது…

போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே ?

போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப் படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புங்குடுதீவில் உயர்தர மாணவி வித்தியா வன்புணர்வுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாணவி வித்தியாவின் பரிதாப மரணமும் அதற்கு முன்னர் அவர் மீது நடத்தப்பட்ட வன்புணர்வும், சித்திரவதையும்…

மெரினா கடற்கரையில் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபயணம்!

1948ம் ஆண்டு ஈழத்தில் இனவெறி கொண்ட கொடுங்கோலச் சிங்களரசிடம் ஆட்சி வந்த காலம் தொடங்கி இன்றளவிலும் அப்பாவி தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை நடத்தி வருகின்றது. இந்த இனப்படுகொலைக்கு எதிராக முப்பது ஆண்டுகாலமாக மேதகு வே பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் போராடி வந்திருக்கின்றனர். இதன் உச்சக்கட்டமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் சிங்களரசு ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. இந்த இனவெறி ,கொலைவெறி கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்றுக்குவித்த பிறகும் சிங்கள…

தமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும் மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல்

நாளை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறியீட்டுத் தன்மை மிக்கவை. சிறுதொகையினரே இவற்றில் பங்கு பற்றி வருகிறார்கள்.அவர்களிற் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளே.ஆனால் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டால் அது பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றும் ஓர் அரசியல் வணக்க நிகழ்வாகவே இருக்கும்.சிறீலங்காவின் சுதந்திர தின விழாவில் பங்குபற்றிய…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை – நல்லாட்சி அரசின் நயவஞ்சக நல்லிணக்க அணுகுமுறை

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில், நாளை நடத்த திட்டமிட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வுகளை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு, நீதிமன்ற உத்தரவின் மூலம் தடை செய்துள்ளது. 2009ம் ஆண்டு, மே மாதம் 18ம் நாளுடன் முடிவுக்கு வந்த போரில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூரும் வகையில், நாளை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முள்ளிவாய்க்கால் பகுதியில், வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், முதலமைச்சர் மற்றும், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் சர்வமதப் பிரார்த்தனை ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதேவேளை,…