#மங்களஇசை_கேட்டநாள் #FatherOfCorruption #தமிழினதுரோகி_கருணாநிதி #கருநாய்நிதி #தமிழினதுரோகிதிமுக

கருப்பு துண்டு யூதாசு அரசியல் பச்சோந்தி #வைகோ – #திருமா #திராவிடம் #மதிமுக #துரோகிகள் #சுத்துமாத்துக்கள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால்


கருப்பு துண்டு யூதாசு | அரசியல் பச்சோந்தி | வைகோ | ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு

ரிஷாட் பதியுதீன் – சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி ! #JusticeForHishalini @rbathiudeen #ChildAbuse #HumanRights

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

IMG 4293 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த ஹிஷாலினியின் குடும்பத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் ஒன்றியம் மற்றும், சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

”இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான குற்றங்கள் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் கொழும்பில் மரணமடைந்த ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டு, உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

IMG 4297 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

அவளது மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரி நிற்கின்றோம். தற்போது சிறுமிகள் பெண்கள் மீதான, துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது கேள்விக் குறியாகவுள்ளது.

எனவே ஹிஷாலினியின் மரணத்திற்கு காரணமானவர்கள்  சட்டத்தின்  முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் பெண்கள் சுயகௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🔴ஒற்றை MD 90 மோட்டச் சைக்கிளில் புத்தளத்திற்கு சென்றவர்
🔴15/16 வருடங்களாக அமைச்சராக இருந்தவர்
🔴பாராளுமன்ற உறுப்பினர்
🔴ஜனநாயக கட்சியின் தலைவர்
🔴குறித்த இனத்தின் மக்கள் பிரநிதி
🔴04 பாராளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியின் தவைவர்
🔴169 பிரதேச சபை உறுப்பினரை கொண்ட கட்சியின் பிரதிநிதி
🔴நாட்டின் முக்கிய செல்வந்தர்
🔴ஆசியாவின் முக்கிய செல்வந்தர் தர வரிசையில் உள்ளவர்
🔴70+ கம்பனிகளின் Chairman, MD/ CEO
🔴2000+ ஏக்கர் காணிகளை அசையா சொத்துகளாக கொண்டவர்.

(இலங்கை காணி உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் வயல் காணி+ மேட்டு நிலம் உள்ளங்களாக ஒரு தனி நபர் 75 ஏக்கர் மட்டுமே சட்ட ரீதியாக வைத்திருக்க முடியும்.

ஆகவே தான்
🔴தனது
🔻 தாயார்,
🔻சிறிய தாயார்
🔻பெரிய தாயார்
🔻அத்தை
🔻மனைவி
🔻மனைவியின் சகோதர/ சகோதரிகள்
🔻சகோதரன்
🔻சகோதரனின் மனைவி
🔻சகோதரனின் மனைவியின் சகோதர/ சகோதரிகள்
என்று முறையில் பட்டியல் நீளும்
🔴அத்தோடு
🔻தொலைக்காட்சி அலைவரிசை,
🔻வானொலி அலைவரிசை ஆகியவற்றுக்கு சொந்தக்காரன் ஆகியவர் தனது வீட்டில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியது மட்டுமல்லாது அந்த சிறுமியை துஷ்பிரோகத்திற்கு உள்ளாக்கியதிலும் இந்த மக்கள் பிரதிநிதிக்கும் பங்கு இருக்குமா? சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவரும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து இருப்பாரா என்றே சந்தேகம் எழுகிறது.

உயிர்த்த ஞாயிறு (April-21) குண்டு வெடிப்பில் தொடர்பு என்ற வகையில் தன்னை கைது செய்த போது மனித உரிமை மீறல் அது இது என்று எல்லாம் கதறிய போது ஒரு வேளையில் அரசின் பழிவாங்கல் தானோ என நினைத்தோம்.

இப்போது புரிகிறது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நிலைமைக்கு கூட அஞ்சாத இவர்கள் நிச்சயமாக தேவாலயத்திற்கு குண்டு வைப்பதற்கு ஒத்துழைக்க தயங்கி இருக்க மாட்டார்கள் என்றே சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

அத்தோடு சிறுமியை தனது வீட்டில் வைத்து அவரும் துஷ்பிரயோகம் செய்திருக்க கூடலாம்/ அவரும் உடந்தையாக இருந்திருக்கலாம்/ கண்டும் காணாதது போல் கடந்து சென்று இருக்கலாம். இதில் எதுவுவே இல்லை என்று மட்டும் மறுக்க முடியாது.

இங்கு குற்றம் நிருபிக்கபட்டால் உடந்தையாக இருந்தவர் உட்பட குடும்பத்தோடு அதி உச்ச தண்டையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
நீதியின் பிடியில் குற்றத்திற்கு நியாயமான தீர்ப்பு வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் முதற்கொண்டு சம்மந்தப்பட்ட
🔻அவரின் மனைவி
🔻மனைவியின் சகோதரர்
🔻மனைவியின் தந்தை என துஷ்பிரயோகம் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் என அனைவருக்கும் அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
அத்தோடு சிறுமி என்றும் பாராமல் வேலைக்கு அனுப்பிய பெற்றோர், தரகர் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

சிறுமி ஹிசாலினி விவகாரம்! ரிசாட் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

சிறுமி ஹிசாலினி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை இவர்கவிளக்கமறியலில் வைக்குமாறு புதுகடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்தடவையாக கடந்த 24ம் திகதி புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதவான் அன்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவ்வாறு 48 மணிநேர விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#இந்தியா, ஈழ ஏதிலிகளைக் கையாளும் முறை நாகரீகமற்றது ! #இனப்படுகொலை #ஈழம் #தமிழர்

சே.வாஞ்சிநாதன்கடந்த மே மாதம் 24ஆம் திகதி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் தனிச் சிறையில் அடைக்கப் பட்டுள்ள 78 ஈழத் தமிழ் ஏதிலிகள், தம்மை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து, போராட்டம் ஒன்றினை முன்னெடுத் திருந்தனர். அப்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது. ஆனாலும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் 9 ஆம் திகதி முதல் ஜூன் 28 வரை அதே கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தை முன்னெடுத் திருந்தனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்களை தமிழக அரச அதிகாரிகள் சந்தித்து, அவர்களின் கோரிக்கைக்குத் தீர்வு காண்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இவ்வாறு தாம் ஒவ்வொரு போராட்டங்களை முன்னெடுக்கும் போதும், அரச அதிகாரிகளால் தமது கோரிக்கை தொடர்பில் வாக்குறுதிகள் அளிக்கப் படுவதாகவும், ஆனால் எந்த நடவடிக்கை யினையும் தமிழக அரசு இது வரையில் எடுக்க வில்லை என்றும், தாம் தொடர்ந்து தமது குடும்பங்களைப் பிரிந்து தனிச் சிறையில் வருடக் கணக்கில் துன்பப் படுவதாகவும் குறித்த ஏதிலிகள் கவலை வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தின் மதுரை மாவட்ட உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப் பாளருமான சே.வாஞ்சிநாதன், சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ள ஈழ ஏதிலிகள் குறித்து ‘இலக்கு’ ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

கேள்வி: தமிழக சிறப்பு முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் அனைத்துலச் சட்ட விதிகளுக்கு அமைவாக நடத்தப் படுகின்றனரா?

பதில்: இல்லை. அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப் பட்ட நிலையில், கொத்தடிமைகள் போல் நடத்தப் படுகின்றனர். ஈழத் தமிழர்களின் சட்ட பூர்வ நிலை என்பது ‘சட்ட விரோதக் குடியேறிகள்’ என்பதே. சட்ட விரோதக் குடியேறிகள் 50 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலும், அவர்களுக்கு அரச பணி, ஓட்டுநர் உரிமம் கிடையாது; நீதிமன்றம் செல்லும் உரிமை, கருத்துரிமை, தொழில் செய்யும் உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை என்பனவும் இல்லை.

இலங்கை என்றொரு நாடே தெரியாத இரண்டு தலை முறையினர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குத் தாய் நாடென்று இல்லவே இல்லை. எத்துணை கொடூரமான நிலை இது! அகதிகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா திட்டமிட்டே கையெழுத் திடாமல் இருக்கிறது. இந்தியாவிலும் ஏதிலிகள் சட்டம் இல்லை.

உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா, ஈழ ஏதிலிகளைக் கையாளும் முறை நாகரீகமற்றது. இந்தியா, தமிழ கத்தோடு நேரடித் தொடர்பு டைவர்கள் ஈழத் தமிழர்கள். மொழி, பண்பாடு, உயிரியல் என மூலத் தொடர்பு கொண்டவர்கள். மற்ற நாடுகளைவிட ஈழத் தமிழர்களைக் காப்பதில் வரலாற்று ரீதியாக இந்தியா, தமிழ் நாட்டிற்கு முக்கிய பங்கு உள்ளது.

கேள்வி: இவர்களின் நல்வாழ்வுக்கும், சுதந்திரத்திற்கும் தமிழ் மக்கள் எத்தகைய பணியை ஆற்ற வேண்டும்?

பதில்: ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை தமிழ் நாட்டு மக்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். ஜல்லிக் கட்டுப் போன்று பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். உலகத் தமிழர்கள் இதில் பங்கேற்க வேண்டும். தமிழக அரசு திபெத் அகதிகளுக்கு செய்ததைப் போன்று உரிய வசதிகளைச் செய்து தர வேண்டும்.

ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்துப் போராட வேண்டும். இரட்டைக் குடியுரிமை ஒன்றே தீர்வு என அனைவரும் ஒன்றுபட வேண்டும். மிக மோசமான முறையில் இந்தியா ஈழத் தமிழர்களை நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்கள் பலர் குடியுரிமை பெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கின்றார்கள்.

ஆனால் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைகூட கிடையாது. சிறப்பு வதை முகாம்களில் அடைக்கப் பட்டுக் கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கப் படுகின்றனர். சாவுக்கு செல்லக் கூட அரசு அனுமதி பெற வேண்டும். கூலி வேலைக்குச் சென்றால், மாலை 6 மணிக்குள் திரும்ப வேண்டும். திருமணத்தை இலங்கைத் தூதரகத்தில் தான் பதிய வேண்டும். கியூ பிரிவு கண்காணிப்பு, பாலியல் தொல்லை என ஈழத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நரகமாகவே உள்ளது.

தங்கள் மீது செலுத்தப்படும் அடக்கு முறை, குற்றங்களுக்கு புகார் கூட அளிக்க முடியாது என்பது உச்சபட்ச மோசமான நிலை. விடுதலைப் புலிகள் என்று சொல்லி செலுத்தப் பட்ட அடக்கு முறைகள் இன்று வரை நீடிப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் அனைத்துக் கட்சி, அமைப்புகள் கூட்டம் உடனே கூட்டப்பட்டு இப்பிரச்சனை விவாதிக்கப்பட வேண்டும். வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் பிரச்சினையை எழுப்பலாம்.

கேள்வி: அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் இந்தியா கையெழுத் திடாததும் ஈழத் தமிழ் ஏதிலிகளின் துன்பத்திற்கு காரணமா?

பதில்: அது ஒரு காரணம் தான். திபெத் ஏதிலிகள் இந்திய அரசால் மிகவும் நன்றாக நடத்தப் படுகின்றனரே? கர்நாடக – தமிழக எல்லையான சத்திய மங்கலத்தில் உள்ள திபெத் அகதிகள் முகாமில் உள்ளோருக்கு 3000 ஏக்கர் நிலம், நல்ல வீடுகள், நிவாரணக் கடை, தானியங்கி பண சேவை, புத்த கோயில்கள் என அனைத்து வசதிகளும் உள்ளதே.

ஆனால் அதன் அருகில் உள்ள பவானிசாகர் ஈழ அகதிகள் முகாம், மனிதர்கள் வாழும் நிலையில் இல்லையே. இதில் 24 மணி நேர கண்காணிப்பு வேறு. இலங்கை – ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான இந்திய அரசின் கொள்கை தான் முக்கியமானது. இந்தியப் பெரு முதலாளிகளின் சந்தைக்காக இலங்கையை தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே இந்திய அரசின் நோக்கம்.

இந்திய முதலாளிகளின் பொருளாதார நலன்களுக்காகவும், தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையை நிலை நிறுத்தவுமே இந்திய அரசு செயற்படுகிறது.

ரிலையன்ஸ், டாட்டா, பஜாஜ் உள்ளிட்ட இந்திய முதலாளிகளின் நலன், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் சக்கரத்தில் இணைவது – இதற்குட்பட்டே ஈழ மக்கள் தொடர்பான முடிவுகளை இந்திய அரசு எடுக்கிறது என்பதே உண்மை. காங்கிரஸ் போய் பாஜக வந்தாலும், கொள்கை ஒன்று தான். இரண்டாவதாகத் தமிழர்கள் தமிழ் மொழி, பண்பாடு மீதான ஆரியப் பார்ப்பனீயத்தின் பகை.

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் சித்தாந்த ரீதியாக ஆரிய, வர்ணாசிரம பண்பாட்டை மிக நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். இதனால் தமிழர்களைப் பகை மனப்பான்மையுடன் தான் ஒன்றிய அரசு அணுகுகிறது. இக் கொள்கை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

இதனால் தான் கடந்த ஆண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் இசுலாமியர்கள் போல் இலங்கை நாடும், ஈழ அகதிகளும் கொண்டு வரப்படவில்லை. இன அடிப்படையிலான துல்லியமான பாகுபாடு இது. இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டம் மத, இன, சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தீண்டாமைக் குற்றம் என்கிறது.

ஆனால் ஈழத் தமிழர்கள் மீதான இனப் பாகுபாட்டுக் குற்றம் 40 ஆண்டுகளாக நீடிக்கிறது. எனினும் அகதிகளுக்கான சர்வதேச உடன் பாட்டில் இந்தியா கையெழுத்திட்டால், இந்திய நீதிமன்றங்கள் இப்பிரச்சினையில் தலையிடும். மனித உரிமை அமைப்புகள் சட்டப் போராட்டம் நடத்தும்.

குடியுரிமையை வலியுறுத்த வாய்ப்பு ஏற்படும். நாடுகளின் செயற்கையான எல்லைகள் இன்றுவரை விலங்களுக்கு இல்லை. உலகில் வாழும் உயிரினங்களில் அறிவார்ந்த உயிரினம் என்று அறியப்படும் மனித இனம் 7 கோடி மக்களை நாடற்றவர்களாக வைத்துள்ளது என்பது நாம் அனைவரும் அவமானப் படத்தக்க நிகழ்வு. இந் நிலையை மாற்ற அனைவரும் ஒன்றிணைவோம்!

– சே.வாஞ்சிநாதன்

#இன்னும்_எத்தனை_பிரபாகரன்_பிறக்கவேண்டும்_உனக்கு_மானம்_ரோசம்_வர

#இன்னும்_எத்தனை_போராளிகள்இறக்கவேண்டும்_உனக்கு_சூடு_சொரணைவர

வீட்டிலிருந்துகொண்டு வெந்தசோறு தின்பதா விடுதலை ?

ஈழத்துக்கு சம்மந்தமே இல்லாத சிங்கபூர் பிரதமருக்கு எங்கள் நோக்கம் தெரிந்திருக்கு, தமிழுக்கு சம்மந்தமே இல்லாத மரடோனாவுக்கு எங்கள் வீரம் புரிந்திருக்கு, எங்கள் கலாச்சாரத்துக்கு தொடர்பே இல்லாத ஹிலாரி கிளின்ட ணுக்கு எங்கள் தியாகம் விளங்கி யிருக்கு, எங்கள் பண்பாட்டுக்கு சம்மந்தமே இல்லாத கெல்லம் மேக்ரே மனிதாபி மானத்துடன் இனப் படு கொலையை ஆவணபடுத்துகின்றார், ஆனையிறவு பெட்டி சண்டை வெளி நாடுகளில் இராணுவ வீரர்களுக்கு பாடமாக இருக்கு, பிரான்ஸ் அரசு தேசிய தலைவருக்கு தபால் தலை வெளியிட்டு கெளரவப் படுத்துகி ன்றது, லண்டனில் தனியார் வங்கி ஒன்று ATM பணமெடுக்கும் அட்டையில் தலைவர் படத்தை பொறித்திருக்கின்றனர், ஐரோப்பிய நாடுகள் ஈழத்தமிழரின் அறவழி போராட்டத்தை அனுமதிக்கின்றது, மாவீரர் நிகழ்வுகளை முன்னெடுக்க ஓத்துழைப்பு வழங்குகின்றது…

ஆனால் தமிழினத்தில் பிறந்து தமிழச்சி மார்பில் பால்குடித்து எஞ்சியிருக்கும் கலாச்சார பண்பாட்டோடு அடிமை வாழ்க்கைகே ஆமாம் போட்டூகொண்டிருக்கும் #சில_தறுதலை தமிழனுக்கு மட்டும்தான் எங்கள் போராளிகளின் தியாகம் விளங்குதில்லை. ஒரு விடுதலைப்பபுலி வீரனின் உயிருக்கு விலையில்லையா ? அவர்கள் தியாகத்திற்க்கு மதிப்பில்லையா?கடலிலும் தரையிலும் எத்தனை கரும்புலி மறவர்கள் வெடி சுமந்து வெடித்தார்களே அவர்களின் சாவுக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லையா ? வாழ்வின் அனைத்து சுகபோகங்க ளையும் துறந்து முற்றிலும் சுயம் அறுத்து அவர்கள் வீரச்சாவடைந்தது யாருக்காக? அவர்கள் இலட்சியம் என்னவாயிற்று? அவர்கள் கொண்ட கொள்கை என்னவாயிற்று? அவர்கள் கண்ட கனவு எப்போது பலிக்கும்? அவர்கள் புனித இலட்சியம் நீர்த்துப்போனதோ?

பிறப்பிலையே வசதியானதொரு குடும்பத்தில் பிறந்த தேசியத் தலைவர் தனது 16வது வயதினிலேயே சிங்கள காவல் துறையால் தேடப்பட்டதால் தலை மறைவு வாழ்க்கையை கோவில்கள் மடங்கள் பாழடைந்த வீடுகள் தோட்டங்கள் போன்ற இடங்களில் மாறி மாறி தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தார். ஏன் தெரியுமா?

பசிக்கொடுமையால் மரவள்ளி கிழங்கை வேக வைத்து உண்ணக் கூட வழியில்லாமல் பச்சையாக பச்சை மிளகாயுடன் சேர்த்து உண்ண வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஏன் தெரியுமா?

16வயது இளைஞனுக்குரிய ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து ஆயுதம் தரித்தது ஏன் தெரியுமா?

செய்ய வாய்பிருந்தும் கொள்ளை களவு வழிப்பறி இப்படி ஏதும் செய்தி டாமல் புலம்பெயர் சனத்திடம் உரிமையாக உதவிகேட்டு குருவி சேர்ப்பதுபோல் சிறுக சிறுக சேர்த்தது ஏன் தெரியுமா?

மாகாண முதலைமைச்சர் ஆக்குகி ன்றோம் வசதி வாய்புகளை வழங்கு கின்றோம் என்று ஆசைகூறியும் அதை மறுத்தது ஏன் தெரியுமா?

தன் பெற்ற பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி சுகபோக வாழ்க்கை வாழ வைக்காமல் தன்னுடனே கள முனைகளில் நிறுத்தியது ஏன் தெரியுமா?

எதை சொல்ல, எதை விட, எல்லாத்தை யும் எழுத தொடங்ங்கினால் முற்று புள்ளிதான் வைக்க முடியுமா?

அண்ணை இத்தனை துன்பபட்டது தனது பெயரில் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பதற்க்கு அல்ல

அண்ணை இத்தனை இடர்களை சந்தித்தது மனைவி பெயரிலோ உடன் பிறப்புகள் பெயரிலோ அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி குவிப்பதற்கு அல்ல

அண்ணை இத்தனை துயரத்தை தோளில் சுமந்தது மகன் மகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பதவி கேட்டு அல்ல.

உலகில் மற்ற இன மக்கள் எல்லோ ரையும் போல எங்கட தமிழினமும் சுதந்திரமாக கெளவரமாக பாதுகாப்பாக சுய மரியாதையுடன் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற உயர்ந்த உன்னதமான இலட்சியத்திற்காக தான் அண்ணை இத்தனை துன்பங்கள் இடர்கள் சோதனைகள் வேதனைகள் சவால்கள் இழப்புகள் தடைகள் இத்தனைக்கும் முகம் கொடுத்து நெருப்பாற்றில் நீந்தியது.

சமகாலத்தில் பிரபாகரன் என்ற மாமனிதன் மட்டும் இந்த தமிழினத்தில் பிறக்காது போயிருந்தால் உலகின் ஒரு மூலையில் தனித்துவமான பண்பாட் டையும் கலாச்சாரத்தையும் ஒழுக்க த்தையும் வீரத்தையும் அறத்தையும் தியாகத்தையும் அர்பணிப்பையும் கொண்ட பெருமை மிக்க தமிழினம் என்றவொரு இனமிருப்பது உலகில் எத்தனைப்பேருக்கு தெரிந்திருக்கும்??? சொல் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்???

சத்தியத்திற்காக சாக துணி…!!!
பிரபாகரனை நெஞ்சில் ஏந்து…!!!
பிரபாகரனை படி…!!!
பிரபாகரனை பின்பற்று…!!!
பிரபாகரனாகவே மாறு…!!!
பிரபாகரனாகவே வாழ்…!!!

பிரபாகரன் வழி நீ நடந்தால்
வாழ்வு உன் வசப்படும்…!!!
பிரபாகரன் வழி நீ நடந்தால் நீ பிரபஞ்சத்தில் பிரபலமாவாய்…!!!
பிரபாகரன் வழி நீ நடந்தால்
இமயம்கூட உன் உயரம் காண
ஏணி கேட்டு நாணி குனியும்…!!!
பிரபாகரன் வழி நீ நடந்தால் மானுடத்தில் நீ மகுடம் தரிப்பாய்…!!!

பிரபாகரனியமே நம்மை தலைநிமிர்த்தும்..
பிரபாகரனியமே சுதந்திரத்தை கொடுக்கும்..
பிரபாகரனியமே வாழவைக்கும்..
பிரபாகரனியமே நிலைத்திருக்கும்..

#தமிழரின்_தாகம்_தமிழீழ_தாயகம்.
எழுத்தாக்கம் – பிரபா செழியன்

பகத் சிங்கையும் நேதாஜியையும் தீவிரவாதின்னு சொல்லுவிங்களா? #மேதகு #Methagu #யார்_தீவிரவாதி #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #தமிழர்

“பகத் சிங்கையும் நேதாஜியையும் தீவிரவாதின்னு சொல்லுவிங்களா?” மேதகு இயக்குநர் கிட்டு



 

#யார்_தீவிரவாதி..?

போரின் இறுதி நாட்களில் நாளொன்று க்கு 200 தமிழ்மக்கள் படுகொலை செய்ய பட்டு கொண்டிருக்க குறிப்பாக மே 15 அன்று காயம்பட்டு கிடந்த பல்லாயிரக்காணக்கான மக்கள் புல்டோசர் ஏற்றி படுகொலை செய்ய பட்ட பின் கொழும்பு நகரில் பதற்றம், கொழும்பு மக்கள் மத்தியில் பதற்றம், கொழும்பு இராணுவ உயர் மட்டத்தில் பதற்றம் ஏன் தெரியுமா

இந்த படுகொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக கொழும்பு நகரை குறி வைத்து புலிகளால் மிகக் கடுமையான தொரு தாக்குதல் நடாத்த படுமென்ற பேரச்சம் எதிர்பார்ப்பு, பரிதவிப்பு உண்மையில் இப்படியான தொரு படுகொலைக்கு பின்பு தளபதி மார்களால் தலைவருக்கு கொழும்பு நகரை மையமாக வைத்து மிகக் கடுமையானதொரு தாக்குதல் நடத்த பட வேண்டுமென்ற அப்படியொரு அழுத்தம் கொடுக்கபட்டது உண்மை தான்.ஆனால் அதுக்கு அண்ணை என்ன சொன்னார் தெரியுமா?

“தமிழ் மக்களுக்கான நீதியை வரலா ற்றுக்கும் உலக சமுதாயத்திற்கும் விட்டுவிடுகின்றேன்.புலிகள் இயக்கம் அப்படியொரு செயலை செய்து அவனுக்கும் நமக்கும் வித்தியாச மில்லையென்டு காட்ட வேண்டாம். நிராயுதபாணியாக நிக்கும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது கோழைகளின் செயல்.புலிகள் ஒருபோதும் கோழைகள் அல்ல”

என்று பழிக்கு பழி வாங்க துடித்த தளபதிமார்களின் அந்த தாக்குதல் திட்டத்தையும் நிராகரித்தார். அன்று கூட தலைவர் நினைத்திருந்தால் ஆமி கொன்ற தமிழ் மக்களைவிட பத்து மடங்கு சிங்கள மக்களை அழித்தொழி த்திருக்க முடியும். ஆனால் அப்படி யேதும் நடக்க கூடாதென கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார்.

எது பயங்கரவாதம்
யார் கொடுங்கோலன்
யார் தீவிரவாதி
யார் பயங்கரவாதி
யாரடா சர்வாதிகாரி

மனிதத்தை போதிக்கும் மன்றங்களே
புனிதத்தை போதிக்கும் தேசங்களே
சர்வதேச நாட்டாமைகளே,தீவிரவாதி முத்திரை குத்தியவர்களே,மனித உரிமை ஆர்வலர்களே, நீதிமான்களே, நடுநிலையாளர்களே.எங்கட அண்ணண் இருக்கும் திசையை நோக்கி வணங்குங்கள் ஏனெனில்

#பிரபாகரம் என்பது
அத்தனை புனிதமானது.
அத்தனை உயர்வானது
அத்தனை உன்னதமானது
அத்தனை மென்மையானது
அத்தனை மேன்மையானது
அத்தனைக்கும் மேலானது.

#தமிழரின்_தாகம்_தமிழீழ_தாயகம்

எழுத்தாக்கம் – பிரபா செழியன்

தலைவர் #பிரபாகரன் #தமிழினத்துரோகி #கருநாய்நிதி க்கு எழுதிய கடிதம் .. !! #தமிழர் #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம்

” கருணாநிதி தமிழினத்திற்கு செய்த துரோகத்தையும், அவரை தமிழர்கள் எந்தளவில் மதிப்பிட வேண்டும், என்பதற்கு நமது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் எழுதிய இந்த ஒற்றை கடிதம் போதும்..!! 😡😡

அத்துணையும் துரோகம்.. 😡 நயவஞ்சகம்.. 😡😡

உனக்கென்று மாளிகை இல்லை,

பூனைப் படை இல்லை,

7 தலைமுறைக்குச் சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லை,

ஊரெல்லாம் மனைவிகள் இல்லை,

தெருவுக்கு ஒன்று என்று பிள்ளைகள் இல்லை,

மகனை வெளிநாட்டிற்கு கூத்தடிக்க அனுப்பவில்லை ,

மகளை 100 கோடிக்கு திருமணம் என்ற பெயரில் ஆடம்பரமாக விற்கவில்லை,

மனைவி பெயரில் வர்த்தக நிறுவனம் இல்லை,

குடும்பப் பெயரில் தொலைக்காட்சி இல்லை,

பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் கொள்ளை அடிக்க வில்லை,

—-நீ செய்தது எல்லாம்—————–

இனத்திற்காகவும மக்களுக்காகவும், உரிமை க்காகவும் உண்மையாக போராடியதும், எந்த சமரசத்திற்கும் இடம் இல்லாமல், விடுதலைக் காக எதையும் இழக்க துணிந்த உண்மைத் தலைவன் நீ, இந்த உலகத்திற்கு விடுதலை போராட்டத்தின் உண்மை நெறியை உணர்த்திய ஒப்பற்ற போராளி நீ!

பெயரில் மட்டும் எழுச்சியை வைத்துக் கொண்டு சிறுத்தைகள், சூரியன்கள் என்று பெயர்களை வைத்துக்கொண்டு அற்ப பணத் திற்காகவும் புகழுக்காகவும், பதவிக்காகவும் வாழும் ஆடம்பர ஜென்மங்களுக்கு மத்தியில்….

அமைதியாக இயக்கத்தின் பெயருக்கேற்ப தன்னிகரில்லா வீரமும் அர்பணிப்பும் கொண் ட போராட்டங்களையும் , போராளிகளையும் உன்னை போலே உருவாக்கி, தீவிரவாதம் என்கிற தவறான பெயரையும் இந்த அறியா மை கொண்ட உலகத்திடம் வாங்கிக் கொண் டு சலனமில்லாமல் குடும்பத்தையும், உன்னு டன் இருந்த ஒப்பற்ற போராளிகளையும், நல்ல ஜீவன்களையும் இனத்திற்காக பலிகொடுத்துவிட்டு…

இருக்கிறாயா ? இல்லையா?
என்ற கேள்வியையும் எழவிட்டு…

எங்கேயோ இருந்துகொண்டு எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் உன்னை இந்த தமிழினம் ஈன்றது இந்த இனத்திற்கல்லவா பெருமை!!

உன்னை பற்றி இன்று கூட அறியாமல் பேசு பவர்களும் அறிய மறுப்பவர்களும் இந்த இனத்தின் அவல நிலைமை..!!

Tazama Chache


புலிகள் இவர்களின் விளம்பரப் பண்டங்களா ? இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் ! #ஈழம் #தமிழர் #சுத்துமாத்துக்கள்

தலைவர் பிரபாகரன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடினார். ஆனால் அவருக்கே சுதந்திரம் கொடுக்காமல் அவரைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முனைகிறோம் நாம்..!

இங்கே இணைக்கப்பட்டிருக்கும் நூலான “தேச உடமைகள் காப்புச் சட்ட” நூலின் உள்ளடக்கத்தில்; தமிழீழத்தின் பொதுச் சொத்தான ஆவணங்கள், நிழற்படங்கள், கையேடுகள் மற்றும் கோப்புகளை தனிநபர்/குழு எவரேனும் தமது உடமையாக உபயோகி ப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது “மரண தண்டனைக்குரிய” (உயிர் ஒறுப்பு) குற்றமாகக் கருதப்படுமெனக் குறிப்பிடப் பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. (இந்நூலை வைத்திருப்பவர்கள்/ வாசித்தவர்கள் தயவுசெய்து பின்னூட்டம் அல்லது தனிஅஞ்சல் இடவும்)

தற்போதைய நிலவரப்படி; தமிழீழ ஆவணங்கள்/நிழற்படங்கள் மீது, சில தமிழ் ஊடகங்கள் தமது பெயரைப் பொறித்து வெளி விடுவதில் மும்முரம் காட்டுகிறார்கள். அண்மைக் காலமாக தலைவரின் நெற்றியில் கூட இணையத்தளங்களின் பெயர் “பச்சை குத்தப்பட்டு” வெளியிடப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். இது ஓர்வகை மனநோயின் உச்ச வெளிப்பாடேயன்றி வேறில்லை.

நமது போராட்டத்தின் எல்லைகளை நாமே குறுக்கிக்கொள்ளும் செயல் இது . நமது போராட்டம் பற்றிய செய்திகளுக்காக நிழற்படங்களைத் தேடும் சர்வதேசச் செய்திநிறுவனங்கள், நிழற்படத்தில் ஏதாவது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பின், காப்புரிமைச் சட்டத்திற்கு அஞ்சி அந்நிழற் படத்தை உபயோகிக்காது.

அண்மையில்; அன்னைபூபதி பற்றிக் கேள்வியுற்ற குர்திஸ்தான் செய்தி நிறுவனமொன்று, அதுபற்றிய செய்தியை வெளியிட முனைந்து பூபதியம்மாவின் படங்களைத் தேடினால், தெளிவான படங்கள் அனைத்திலும் ஏதேதோ பெயர்கள் இருந்தகாரணத்தால் காப்புரிமைக்கு அஞ்சி அச்செய்தியையே தவிர்த்துவிட்டார்களாம். இதுதான் “நவீனத்தமிழர்கள்” போராடுகிற முறையால் உருவான சிறப்பம்சம்.

குறிப்பாகத் தலைவரது நிழற்படங்களை யாவது எவ்விதப் பெயர்களும் இன்றி சுதந்திரமாக வெளிவிடவேண்டும். புலிகள் பற்றி எழுதுகின்ற சர்வதேச ஊடகங்கள், நிழற்படங்களைப் பயன்படுத்தாமல் எழுதுவதற்கு நாமும் ஓர் காரணமே. எமது போராட்ட நிழற்படங்களைச் சர்வதேச ஊடகங்கள் சுதந்திரமாகப் பயன்படுத்த ஆரம்பித்தால், முகநூலிலும் தலைவரது நிழற்படங்களை முகநூல் தடைசெய்யாது. இல்லையேல் தமிழர்களது ஊடகங்கள்/முகநூல் கணக்குகள் தவிர வேறெந்தச் சர்வதேசத் தளங்களையும், போராட்ட ஆவணங்கள்/ நிழற்படங்கள் சென்றடைய வாய்ப்பேயில்லை.

ஆவணப்பிரிவில்/நிதர்சனத்தில்/புலிகளின் குரலில் பணிபுரிந்த போராளிகள் கூட எங்கும் இவ்வாறு தமதுதனிப்பட்ட பெயரையோ அன்றி குழுப்பெயரையோ பொறித்ததை இதுவரை கண்டதில்லை. சேகுவேரா, மாவோ , ஹோசிமின், தலாய் லாமா, காந்தி, சுபாஸ்சந்திரபோஸ் ஆகியோரது படங்களில் அந்தந்த இனக்குழுமங்கள்/ஊடகங்கள் தங்களது பெயரைப் பொறித்ததைக் கண்டிருப்பீர்களா ? ஈழத்தமிழர்கள் மட்டும் ஏன் நமது போராட்ட ஆவணங்கள் மீது பச்சைகுத்துகிறார்கள் என்று யாராவது எனக்குத் தெரியப்படுத்தினால் புண்ணியமாப்போகும்.

இயக்கத்தை இப்ப நாங்கள்தான் நடத்துறம் என்ற “வெறித்தனமான” மன நோயாளர்களை இனங்கண்டு, தயவுசெய்து யாராவது அவர்களுக்குப் பேதிமருந்து வாங்கிக் கொடுப்பீர்களேயானால், செலவை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

தமிழீழத்தின் ஆவணங்கள் தலைமுறை கடந்து பாதுகாக்கப்படவேண்டிய பொதுச் சொத்தாகும், அது தனிநபர்களுக்கோ/ குழுங்களுக்கோ உரித்தானதல்ல. “தேச உடமைகள் காப்புச் சட்டத்தை” மதிப்பதுவே தேசத்திற்கு நாம் செய்யும் முதல் மரியாதையாக அமையும்.

-தேவன் Tazama Chache

மகனைத் தேடி அலையும் தாய் ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #Mullivaikkal

“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது” – பாலநாதன் சதீஸ்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மௌனிக்கப்பட்டு, பன்னிரண்டு வருடங்களைக் கடந்த நிலையிலும், இலங்கை அரச படைகள் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவுகளால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் இலங்கை அரசு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக் கூறுவதைத் தவிர்த்து வருகின்றது.

குடும்பத் தலைவரை,  பிள்ளைகளை, பெற்றோரை வாழ்க்கைத் துணையை என தமது உறவுகளை இவ்வாறு அரச படைகளிடம் இழந்து விட்டு, அவர்கள் மீண்டும் வந்துவிட  மாட்டார்களா? என்ற ஏக்கத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், போராட்டங்களுடன் துயர் நிறைந்த தமது வாழ்க்கையினை நடத்தி வருகின்றனர்  .

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள பலர், தம் சொந்தங்களைத் தேடியலைந்து, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, மதுப் பழக்கம் போன்றவற்றிற்கும் அடிமையாகி உள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தன் மகன், இன்று வருவான், நாளை வருவான் என்ற நம்பிக்கையோடு,  தன் முதுமையை மறைத்து விட்டு வவுனியா மாவட்டத்தில், தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு, நடைபெற்று வரும் போராட்டத்தில்  இரவு பகல் பாராது, தன் மகனுக்காகக் காத்திருப்பவர் தான் அமிர்தம் இலட்சுமி என்ற தாய்.

14வருடங்களுக்கு முன்னர் தனது கணவனை இழந்த  அந்தத் தாய், மன உறுதியோடு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை  இன்று வரையிலும் தேடி வரும்  நிலையை எப்படிச் சொல்வது?

வயது முதிர்ந்து, உடல் பலமிழந்து, ஆதரித்து ஆறுதல் கூற பெத்த பிள்ளையும் இன்றி, தனிமையில் தள்ளாடும் அந்தத் தாயின்  கோரிக்கை எவரது செவிகளுக்கும் கேட்கவில்லையா?

“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது. இந்தத் தனிமையே போதும் இறைவா. என் மகனை என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடு. ஆசையாகப் பெற்றெடுத்த பிள்ளையைப்  பறிகொடுத்து விட்டு 13 வருடங்களாகத் தேடியலையும் என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ளவில்லை. எனது  போராட்டத்திற்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை?” என்று புலம்பும் அந்தத் தாயின் துயரத்திற்கு எப்போது விடிவு கிடைக்கும்? அவர் தொடர்ந்து நம்முடன் பேசும் போது,

“வவுனியா மாவட்டம் கற்குழி என்னும் கிராமத்தில்  வாழ்ந்து வருகின்றேன். எனது கணவர் 2007 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக இறந்து விட்டார். எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டும் தான். ஒரு பிள்ளை 2004 ஆம் ஆண்டு இந்தியா சென்று விட்டார்.  எனது இரண்டாவது மகன் சத்தியரூபன் தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்.

2008 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 19ஆம் திகதி என்னுடைய மகன் இரண்டு நண்பர்களோடு வீட்டில்  இருந்த போது,  நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் மின்சாரம் தடைப்பட்டது. அப்போது வெள்ளைவானில் சிலர் வீட்டிற்கு வந்தனர். அவர்களின் கைகளில்  துப்பாக்கிகள் இருந்தன.

அவர்களை  யாரென்றே அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவிற்கு முகத்தை மூடி மறைத்திருந்தனர். வீட்டினுள்ளே நுழைந்த அவர்கள், என் மகனைப் பிடித்துக் கொண்டு போனார்கள். “என்ர பிள்ளையைக் கொண்டு போகாதையுங்கோ. விடுங்கோ” எனக் கதறி அழுது,  கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. “என்ர பிள்ளையை ஏன் கொண்டு போறீர்கள்” என வீதி வரையும் கதறி அழுதுகொண்டு ஓடினேன். என்னை இழுத்து வீதியிலே தள்ளிவிட்டு ஒரு பதிலும் கூறாமல் என்  மகனை  வெள்ளை வானில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டார்கள்.

அதன் பின்னர்  காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் வழங்கிவிட்டு, மனித உரிமைகள் ஆணையகத்திடமும் முறைப்பாடொன்றைப் பதிவு செய்து, சில மனித உரிமைச் செயற்பாட்டில் உள்ள நிறுவனங்களிற்கும் சென்று “என்ர  மகனைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்” என முறைப்பாடு  கொடுத்தேன்.

அப்போது  அந்த நிறுவனங்களில் உள்ளவர்கள், “அம்மா உங்கட மகனைத் தேடிப் பார்க்கிறோம்” என்று கூறி அனுப்பினார்கள். “ஆனால் இன்று வரையும் யாருமே என்ர  மகனைப் பற்றி ஒரு தகவலும் தரவில்லை.

என்ர  மகனைக் கடத்திக் கொண்டு செல்லும் போது அவனுக்கு 20 வயது. அன்றிலிருந்து இன்றுவரை 13 வருடங்களாக எனது மகனைத் தேடி வருகின்றேன். இன்று வரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ர மகன் இப்போ எங்கே எப்பிடி இருக்கிறானோ?

என்ர மகனின் ஒரே ஒரு படம் தான் இருந்தது. அதை வீட்டுக்குள்ளே வைச்சிருந்தனான். என்ர உறவுகள் சும்மா என்னுடன் சண்டை போட்டு, என்ர வீட்டையும் எரிச்சிட்டாங்கள். அதிலே மகனின் படமும் வீட்டுக்குள்ளே இருந்து எரிஞ்சு போட்டுது. படம் என்ர கையில இருக்கும் மட்டும் மகனைப் படத்தில  பார்த்து ஆறுதல் அடைஞ்சன்.

இப்போது படமும் இல்லை. என்னிடம் என்ர மகனும் இல்லை. என்ர மகன் எப்படியாவது என்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில்தான் இன்றுவரை இந்தப் போராட்டப் பந்தலிற்கு வந்து மகனை மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறன்.” என்று கூறினார்.

இப்படிக் கூறும் போது அந்தத் தாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலியும், வேதனையும் பின்னிப் பிணைந்ததாகத் தான் இருந்தது. தன்னந்தனியாக நின்று பெற்ற மகனைத் தேடியலையும் இந்த வயோதிபத் தாயின் கதறலுக்கும்  கண்ணீருக்கும்  யார் பொறுப்பு?

காணாமல்  ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய பிரச்சினை இல்லை. 1980ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை இன அழிப்புத்தான்.

உலகமே! மனித உரிமை அமைப்புக்களே! தம் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு, பல வருடங்கள் ஆன போதும்,   இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என எத்தனையோ  உறவுகள் வீதிகளிலே உண்ணாமல், உறங்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

காணாமல் போனவர்களின் நிலைப்பாடு பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறி,  இந்த மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியதும், நீதியினைப் பெற்றுக் கொடுப்பதும்  அரசியல் தலைமைகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கடமையல்லவா?

தந்தை இறப்பு : 2007 ஆம் ஆண்டு

தாய் பெயர் : அமிர்தம் இலட்சுமி

மகன் பெயர்: அமிர்தம் சத்தியரூபன்(கைது  : 2008.11.19)

இடம் – வவுனியா கற்குழி கிமாமம்.

#சீமான் தான் காரணம் கதறும் #அரக்கர்கூட்டம் #Seeman #DMK #ArakkarKottam

#NaamThamilar #Seeman #KolathurMani
கோமாளி கொளத்தூர் மணிக்கு ஜீவனின் பகிரங்க சவால் முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்.