கேணல் நாகேஸ் மகள் தேனுஜா கவிதை -அப்பா..இன்றுடன் அகவை 55 ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

அன்று போலில்லை இன்று,
வாழ்த்துச் சொல்லிக்
கட்டி அணைக்க
இன்னமும் எஞ்சியிருப்பது
சிரிப்பு சுமந்த உங்கள் முகமும்
மனம் நிறைய நினைவுகளுமே

அப்பா..
நீங்கள் இல்லை என்ற
நினைவு கூட எப்போதாவது தான்
நிஐத்தினுள் எங்களை இழுக்கிறது
சுவர்கள் எங்கும்
சிரித்த முகம்;
விறைப்பாய்
வரியுடுத்திய வீரமுகம்;
என நாள்தொறும் எமை
உபசரிக்க நீங்கள் தவறியதே இல்லை
உயிர்கள் தூரம் தள்ளி சென்றாலும்
உணர்வுகளால் என்றும் இணைந்திருக்கிறோம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா…

அன்போடு உங்கள் மகள் தேனுஜா.

புலர்வு

முள்ளிவாய்க்கால் அழுகுரல்கள் மத்தியில் பிறந்த குழந்தை ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #Mullivaikkal

முள்ளிவாய்க்கால் அழுகுரல்கள் வானெழுந்தபோது புதிதாக கேட்ட மழலைக்குரல்…

அது ஒரு பொல்லாத நாள். தமிழீழத் தமிழனின் ஒட்டு மொத்த அபிலாசைகளும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் ஒன்று. ஓரிரு கிலோ மீட்டர்களுக்குள் எங்களது வாழ்க்கை முடக்கப்பட்டு சிறீலங்காவின் சிங்களப் பேய்கள் எம்மை கொன்று தின்ற நாட்களில் ஒன்று. வழமை போலவே அன்றும் அலன் மருத்துவமனை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றின் இறுதியான விடுதலைப் புலிகளின் இராணுவ மருத்துவமனை என்ற வரலாற்று வகிபாகத்தைக் கொண்ட அந்த மருத்துவமனை வட்டுவாகல் பகுதியில் மருத்துவ போராளி அலனின் பொறுப்பாள்கையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது ஒரு இராணுவ மருத்துவமனையாக இருந்தாலும் கூட போராளிகள் மக்கள் என்ற எந்த பாகுபாடுமின்றிய பொது மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தது. அப்போது உயிர் காத்தல் ஒன்று மட்டுமே தலையாய பணியாக்கப்பட்டிருந்தது.

ஒருபுறம் சாவுகளையும் , மறுபுறம் சிதறிக் கிடந்த காயப்பட்டவர்களின் கனதியையும் தாங்க முடியாது தகித்துக் கொண்டிருந்த மருத்துவமனையில் அந்த இறுதி நாட்களில் மருத்துவர் தணிகை, மருத்துவப் போராளி இசையருவி, மருத்துவப் போராளி உயர்ச்சி, மருத்துவப் போராளி சுகுகுமாரன் மற்றும் மருத்துவர் அலனுடன் அவரின் துணைவியான மருத்துவப் போராளி குலமகள் ஆகிய போராளிகள் தமது தமிழீழத்திற்கான மருத்துவப் பணியின் இறுதி வரலாற்றுப் பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

சுற்றிவர சிறீலங்காப்படைகளின் முற்றுகைக்குள் தமிழீழம் தகித்துக் கொண்டிருந்த போது தமது உயிரையும் துச்சமென மதித்த தமிழீழ மருத்துவர்களும் பலநூறு மருத்துவப் போராளிகளும் தமது மருத்துவக் கடமைகளை செய்து கொண்டிருந்தாலும், அலன் மருத்துவமனை என்று குறிப்பிடப்படும், நெய்தல் மருத்துவமனையே தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவமனைக் கட்டமைப்போடு அப்போது இறுதியாக இயங்கிக் கொண்டிருந்தது. மற்றைய மருத்துவமனைகள் யாவும் செயலிழந்து போன நிலையில் மருத்துவப் போராளிகள், மருத்துவர்கள் என அனைவரும் தம்மால் முடிந்த அளவுக்கு கிடைத்த இடத்தில் கிடைத்த பொருட்களை வைத்து தமது பணியை செய்து கொண்டிருந்தார்கள்.

அதே நேரம் மறுபுறத்தில் அரச மருத்துவர்களும் தமது கடமையை உறுதியாகச் செய்து கொண்டிருந்தார்கள். இறுதியாக முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் இயங்கிய அரச மருத்துவமனை, இராணுவத்தின் முற்றுகைக்குட்பட்டு 15.05.2009 அன்று சிறீலங்காவின் ஆளுகைக்குள் வந்தது. அங்கே பணியாற்றிய அரச மருத்துவர்கள் சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டும், சுடப்பட்டு காயப்படுத்தப்பட்டும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படும் வரை அவர்களது பணியும் அங்கே நிறைவாகவே இருந்தது.

அதன் பின்பு அரச மருத்துவமனையின் பணி இல்லாமல் போன நிலையில் நெய்தல் மருத்துவமனை மட்டுமே முற்றுமுழுவதுமான மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை நிலையமாக மாறிப் போனது.

ஊர் முழுக்க பிணக் குவியல்கள். திரும்பும் வீதிகள் எங்கும் காயப்பட்டவர்களின் ஓலங்கள். அந்த மருத்துவமனையை சுற்றி இருந்த நிலமெங்கும் அவலக் குரல்களும் சாவின் ஓலமும் இழுத்து புதைக்கப்படாத பிணத்தின் துர்நாற்றமும் என சொல்ல முடியாத அதி உச்ச வரலாற்று அவலத்தின் நாளாக அன்றைய நாள் உதித்தது. அதனோடு தமிழீழம் தன் மூத்த காவலன் ஒருவனையும் இழந்து தவித்த நாள். தமிழீழத்தின் மூத்த தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் வீர காவியமாகிய கணப்பொழுது அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்த சேர்த்தார்கள் போராளிகள். அந்த மருத்துவமனை சத்திர சிகிச்சை கூடத்தில் அப் பெருமகனாரின் வித்துடலை மருத்துவர்கள் பரிசோதிக்கின்றார்கள். அவர் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற வரலாற்று சோகத்தை அந்த சத்திரசிகிச்சை கூடத்தின் மேசையில் தான் மருத்துவர் அலன் உறுதிப்படுத்துகிறார். தம் கண் முன்னே எங்கள் வீரத் தளபதி உயிரற்றுக் கிடந்த கோலத்தை பார்த்தவர்கள் அவருக்காக தலை குனிந்து அகம் நினைத்து ஒரு நிமிடம் விழிநீர் சொரிந்தார்கள். ஆனாலும் உடனடியாகவே தமது கடமையின் முக்கியத்தை உணர்ந்தவர்களாக அடுத்த சத்தி்ரசிகிச்சைக்கு தயாரானார்கள். அழுது கொண்டிருப்பது போராளிக்கு நற்பண்பல்ல என்பதை அப் போராளிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அதனால் அவரது வித்துடலுக்கான மரியாதையை செலுத்திய மறுகணம் தம் கடமைகளை தொடர்ந்தார்கள்.

அப்போது ஒரு பெரும் இக்கட்டான சூழ்நிலை உருவாகின்றது. குழந்தை பிறப்புக்காக நிறைமாத கர்ப்பிணித் தாய் ஒருவரை ஒரு பெண் போராளி இவர்களது மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டுச் செல்கிறாள். ஆயிரமாயிரம் காயப்பட்டவர்களை ஆயிரமாயிரம் வேறு மருத்துவத் தேவைக்கானவர்களை உயிர் காத்து உன்னத பணி செய்த அவர்களுக்கு இம் மகப்பேறு ஒரு இக்கட்டான சூழ்நிலையை அப்போது உருவாக்கி இருந்தது.
மருத்துவர் தணிகை மகப்பேற்று நிபுணர் மருத்துவக்கலாநிதி கெங்காதரன் அவர்களிடம் பயிற்சி மாணவனாக இருந்த போதும், அதன் பின்பான காலங்களில் மருத்துவராக பணியாற்றிய போதும் சரி அவருக்கு மகப்பேற்று சிகிச்சை அனுபவமும் பட்டறிவும் இருந்தது. ஆனாலும் ஒரு சிக்கல் நிலை, சாதாரண மகப்பேறு என்றால் எந்த சிக்கல்களும் இல்லை ஆனால், அந்த கர்ப்பிணித் தாய்க்கு சுகப்பிரசவம் இல்லாமல் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானால் சிக்கல் நிறைந்துவிடும். அதற்கான உபகரணங்களான,

Sponge Holder
Towelclips
Blade handle
Mosquito forceps curved;straight
ARM forceps
Artery forceps long
Green Army Tage
Rectractor
Suckerhandle
Scissors curved,straight
Cord clamp
Tooth forceps ,Non tooth
Alicès forceps
Needle holder
(Dialator No 4-6 if necessary)

போன்றவையோ அல்லது அதற்கான தயார்ப்படுத்தல்களோ எதுவுமே அற்ற வெறுமையான சூழலில் அவர்கள் இருந்தார்கள்.

என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்கு முதலே “ எம்மால் முடியும், நாம் செய்வோம்” என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.
ஒரு குழந்தை பிறப்புக்காக ஒரு தாய் காத்திருக்கும் போது, எவ்வளவு வலி என்றாலும் அதை சுகமான உணர்வாகத்தான் அந்த தாய் உணர்வாள். அவளுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்களும் புன்னகையோடு சிரிப்பார்கள். ஆனால் இக் குழந்தை பிறப்புக்காக அந்த தாய் வந்த போதே வழமை போலல்லாது “இந்த கொடுமையான உலகத்தில் எதுக்கு வந்து பிறக்கின்றாய் குழந்தையே “ என்றே எண்ணம் அனைவருக்கும் வந்திருந்தது.

சிறீலங்கா எனும் பேரினவாதம் ஆடும் இனவழிப்புத் தாண்டவத்தின் உச்சக்கட்டத்தில் நாம் செத்துக்கொண்டிருக்கும் இந்த கொடுமையான பொழுதில் நீ ஏனடா வந்து உதிக்க போகிறாய் சிசுவே என்று அவர்கள் எண்ணினார்கள். மருத்துவர்களின் மனங்களில் அக் குழந்தை இந்த மண்ணில் எத்தனை காத தூரம் உயிரோடு வாழ இந்த சிறீலங்காப் பேய்கள் அனுமதிக்கப் போகின்றார்கள் என்ற வலி எழுந்தது. பல மாதங்களாக ஒழுங்கான உணவில்லாமல், ஒழுங்கான ஊட்டச்சத்தில்லாமல் குழந்தையை பெற்றெடுக்கப் போகும் அத்தாய் அக்குழந்தைக்கு பாலூட்ட முடியுமா? என்பது பெரும் அதிர்ச்சிக் கேள்வியாக கண் முன்னே எழுந்தது. அல்லது பிறந்த குழந்தைக்காகக் கொடுக்கக் கூடிய பால்மாவோ அல்லது சத்தூட்டமுள்ள எந்த உணவு வகைகளோ அப்போது யாரிமும் இல்லை. அதனால் இக் குழந்தை பிறந்தவுடனே எவ்வாறு பசியாற்றப் போகிறாள் அத்தாய்…? மருத்துவர்களுக்கு எழுந்த பெரும் மனக்குழப்பங்களுள் இதுவும் இருந்தது.

இருப்பினும் அவர்கள் அந்த வலியோடும் சிகிச்சைக்காக அத்தாயை உள்ளே எடுக்கின்றார்கள். அந்த மருத்துவமனைக் கட்டிடத்தின் சிறு அறை ஒன்றில் தங்கி இருந்த பெண் மருத்துவப் போராளிகளிடம் அத் தாயை ஒப்படைத்து அவர்களைப் பாதுகாக்கும் படி பணிக்கின்றார்கள் மருத்துவர் தணிகை மற்றும் அலன் ஆகியோர். மருத்துவர்களுக்கு சத்திரைசகிச்சைகளின் போது மருத்துவப் போராளி குலமகள் தன் கைக் குழந்தையைச் சேலையால் நெஞ்சோடு அணைத்துக் கட்டியபடி உதவி மருத்துவராக கடமையாற்றிக் கொண்டிருந்ததைப் போலவே இப்போதும் பணிக்குத் தயாரானார். அவருடன் இசையருவி மற்றும் எழில் ஆகியபெண் போராளிகளும் அந்த குழந்தை பிறப்புக்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினர்.

மருத்துவர்களோடு உதவிக்கு நின்ற மருத்துவப் போராளிகள் ஓரிருவரே. அவர்களை அந்த தாய்க்கான மகப்பேற்றுக்கான சிகிச்சையில் ஈடுபடுத்தி விட்டு தம் கடமையைத் தொடர்ந்தார்கள் மருத்துவர்கள். வானம் எங்கும் புகை மண்டலம் தமிழீழத்தின் செவிப்புலனை கருவறுக்கும் பயங்கர பல்குழல், ஆட்லறி மற்றும் கிபிர் விமானத் தாக்குதல்களின் வெடிச்சத்தங்கள். தலை நிமிர்த்த முடியாத அளவுக்கு துப்பாக்கி ரவைகளின் தாக்குதல்கள். இவற்றுக்கு நடுவில் அந்த தாய் தன் குழந்தையை பெற்றெடுக்க காத்திருக்கின்றாள். அவளுக்கு உதவியாகப் பெண் மருத்துவப் போராளிகள், வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் உடனடி சிகிச்சைகளை வழங்க தயாராக இரு தமிழீழ மருத்துவர்கள். அந்த மருத்துவமனை தனது வரலாற்றுப் பக்கம் ஒன்றை எழுத்த் தயாராகிக் கிடந்தது. பல ஆயிரம் மக்கள் செத்துக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் அந்தக் குழந்தை இந்த உலகத்தில் பாதம் பதிக்க காத்திருந்தது.

அவலக் குரல்கள் வானெழுந்து கொண்டிருந்த பொல்லாத பொழுதொன்றில் அப் பெண்ணின் இடுப்பெலும்பு வலியெடுக்கத் தொடங்கியது. பிரசவத்துக்கான அறிகுறிகள் ஓவென்று கத்தி அழுது கொண்டிருக்கும் அத் தாயின் அவலக்குரல் என்று அந்த பிரதேசமே அந்தரித்துக் கொண்டிருக்க, அலன் மருத்துவமனை தன் வரலாற்றில் இறுதிப் பக்கத்தில் ஒரு உண்மையை பதிவாக்கிக் கொண்டது. அழுகுரல்கள் வானெழுந்த பொழுதொன்றில் மழலைக்குரல் ஒன்று பசியில் கத்தியபடி தமீழிழத் தாய் நிலத்தில் தன் வருகையை பதிந்து கொண்டது. பல லட்சம் அவலக்குரல்களுக்கு மத்தியில் அக் குழந்தையின் மழலைக்குரல் வானெழுந்தது.

தம்மால் முடிந்த அளவுக்கு குழைந்தைக்கான அல்லது அத் தாய்ககுத் தேவையான விடயங்களை கவனித்துக் கொண்ட அம்மருத்துவ அணி அந்த இளம் தாயைக் குழந்தையோடு முடிந்த அளவுக்கு பாதுகாத்து வைத்திருந்தார்கள். ஆனாலும் அந்த தாய் சாதாரண நிலைக்கு திரும்பிய உடனேயே தன் குழந்தையை அணைத்து மகிழ்ந்தபடி முத்தமிட்டுக் கொள்கிறாள். தமிழினத்தின் ஒரு மாபெரும் வீரத் தளபதியை இழந்து தவித்துக் கொண்டிருந்த அந்த மருத்துவமனை, அதே புனிதனின் வித்துடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஒரு உயிரைப் பெற்றெடுத்த தன் வரலாற்றைப் பதிவு செய்தது.

எழுதியது: இ.இ. கவிமகன்
தகவல்: மருத்துவர் தணிகை
மருத்துவர் அலன்
மருத்துவப்போராளி குலமகள்

ஒப்புநோக்கியது : மஞ்சு மோகன்
நாள்: 20.07.2021

முக்கிய குறிப்பு: இந்த இறுதி மருத்துவமனையில் பணியாற்றிய பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ போராளிகளது பெயர்களை நடைமுறையில் இருக்கும் சூழல் காரணமாக குறிக்க முடியாததுக்கு வருந்துகிறேன்.

புலர்வு

அழுகுரல்கள் வானெழுந்தபோது புதிதாக கேட்ட மழலைக்குரல்…

ரிஷாட் பதியுதீன் – சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி ! #JusticeForHishalini @rbathiudeen #ChildAbuse #HumanRights

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

IMG 4293 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த ஹிஷாலினியின் குடும்பத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் ஒன்றியம் மற்றும், சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

”இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான குற்றங்கள் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் கொழும்பில் மரணமடைந்த ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டு, உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

IMG 4297 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

அவளது மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரி நிற்கின்றோம். தற்போது சிறுமிகள் பெண்கள் மீதான, துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது கேள்விக் குறியாகவுள்ளது.

எனவே ஹிஷாலினியின் மரணத்திற்கு காரணமானவர்கள்  சட்டத்தின்  முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் பெண்கள் சுயகௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🔴ஒற்றை MD 90 மோட்டச் சைக்கிளில் புத்தளத்திற்கு சென்றவர்
🔴15/16 வருடங்களாக அமைச்சராக இருந்தவர்
🔴பாராளுமன்ற உறுப்பினர்
🔴ஜனநாயக கட்சியின் தலைவர்
🔴குறித்த இனத்தின் மக்கள் பிரநிதி
🔴04 பாராளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியின் தவைவர்
🔴169 பிரதேச சபை உறுப்பினரை கொண்ட கட்சியின் பிரதிநிதி
🔴நாட்டின் முக்கிய செல்வந்தர்
🔴ஆசியாவின் முக்கிய செல்வந்தர் தர வரிசையில் உள்ளவர்
🔴70+ கம்பனிகளின் Chairman, MD/ CEO
🔴2000+ ஏக்கர் காணிகளை அசையா சொத்துகளாக கொண்டவர்.

(இலங்கை காணி உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் வயல் காணி+ மேட்டு நிலம் உள்ளங்களாக ஒரு தனி நபர் 75 ஏக்கர் மட்டுமே சட்ட ரீதியாக வைத்திருக்க முடியும்.

ஆகவே தான்
🔴தனது
🔻 தாயார்,
🔻சிறிய தாயார்
🔻பெரிய தாயார்
🔻அத்தை
🔻மனைவி
🔻மனைவியின் சகோதர/ சகோதரிகள்
🔻சகோதரன்
🔻சகோதரனின் மனைவி
🔻சகோதரனின் மனைவியின் சகோதர/ சகோதரிகள்
என்று முறையில் பட்டியல் நீளும்
🔴அத்தோடு
🔻தொலைக்காட்சி அலைவரிசை,
🔻வானொலி அலைவரிசை ஆகியவற்றுக்கு சொந்தக்காரன் ஆகியவர் தனது வீட்டில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியது மட்டுமல்லாது அந்த சிறுமியை துஷ்பிரோகத்திற்கு உள்ளாக்கியதிலும் இந்த மக்கள் பிரதிநிதிக்கும் பங்கு இருக்குமா? சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவரும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து இருப்பாரா என்றே சந்தேகம் எழுகிறது.

உயிர்த்த ஞாயிறு (April-21) குண்டு வெடிப்பில் தொடர்பு என்ற வகையில் தன்னை கைது செய்த போது மனித உரிமை மீறல் அது இது என்று எல்லாம் கதறிய போது ஒரு வேளையில் அரசின் பழிவாங்கல் தானோ என நினைத்தோம்.

இப்போது புரிகிறது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நிலைமைக்கு கூட அஞ்சாத இவர்கள் நிச்சயமாக தேவாலயத்திற்கு குண்டு வைப்பதற்கு ஒத்துழைக்க தயங்கி இருக்க மாட்டார்கள் என்றே சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

அத்தோடு சிறுமியை தனது வீட்டில் வைத்து அவரும் துஷ்பிரயோகம் செய்திருக்க கூடலாம்/ அவரும் உடந்தையாக இருந்திருக்கலாம்/ கண்டும் காணாதது போல் கடந்து சென்று இருக்கலாம். இதில் எதுவுவே இல்லை என்று மட்டும் மறுக்க முடியாது.

இங்கு குற்றம் நிருபிக்கபட்டால் உடந்தையாக இருந்தவர் உட்பட குடும்பத்தோடு அதி உச்ச தண்டையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
நீதியின் பிடியில் குற்றத்திற்கு நியாயமான தீர்ப்பு வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் முதற்கொண்டு சம்மந்தப்பட்ட
🔻அவரின் மனைவி
🔻மனைவியின் சகோதரர்
🔻மனைவியின் தந்தை என துஷ்பிரயோகம் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் என அனைவருக்கும் அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
அத்தோடு சிறுமி என்றும் பாராமல் வேலைக்கு அனுப்பிய பெற்றோர், தரகர் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

சிறுமி ஹிசாலினி விவகாரம்! ரிசாட் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

சிறுமி ஹிசாலினி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை இவர்கவிளக்கமறியலில் வைக்குமாறு புதுகடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்தடவையாக கடந்த 24ம் திகதி புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதவான் அன்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவ்வாறு 48 மணிநேர விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#கறுப்புயூலை 1983 படுகொலைகளின் 38 வருடங்கள் ! #புலிகள் #தமிழீழம் #ஈழம் #தமிழ் #இனப்படுகொலை #BlackJuly #blackjuly #blackjuly1983 #blackjuly83 #TYO #AntiTamilPogrom

——

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் #கரும்புலிகள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி உட்பட்ட #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

July 21st

July 21st

July 23rd, 2012

July 24th

July 26th

July 27th

July 29th

July 29th

July 31st

****

ltte veeravanakam 2

கப்டன் ஊரான் / கௌதமன் ! #மாவீரர்கள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர் ! #மாவீரர்கள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

ஆடிப்பிறப்பு தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினம் ! #eelam #ஆடிப்பிறப்பு #ஈழம் #தமிழர் #Tamil #Eelam

ஈழத்தின் ஆடிப்பிறப்பு தமிழகத்தின் ஆடிப்பெருக்கு

இன்று ஆடிப்பிறப்பு. அதாவது தமிழ் மாத வரிசையில் ஆடி மாதத்தின் தொடக்க நாள். வருடத்தின் நடுப்பகுதியான இந்தத் தொடக்க நாளை கூட்டுணர்வுடனும், குதூகலிப்புடனும் வரவேற்கவே ”ஆடிக்கூழ்” நிகழ்வு தமிழர்களால் நடாத்தப்படுகிறது. இந்தக் கொண்டாட்டமானது, ஒரு மரபாக, பண்பாடாக, நம்பிக்கையாக, நிகழ்நிலை சடங்காக சந்ததி கடத்தப்படுகிறது.
ஏன் ஆடியை வரவேற்கிறோம்?

ஆடி மாதத்துடன் குளிர்காலம் ஆரம்பிக்கிறது. மாறாத காலநிலை இருந்த காலத்தில் ஆடிப்பெருக்கு எனப்படும் மழைக்காலம் சிலவாரங்கள் அடித்துப் பெய்யும். இப்போதெல்லாம் அதைப் பார்க்கமுடிவதில்லை. காலநிலை மாற்றம் ஆடிப்பெருக்கை இல்லாமல் செய்துவிட்டது. ஆடிப்பெருக்குடன் உழவர்கள் பெரும்போக வயல்வேலைகளை ஆரம்பித்துவிடுவர். அடுத்து வருகின்ற ஆறு மாதங்களும் ஓய்வற்ற உழைப்பை வேண்டிநிற்கும் மாதங்களாகும். எனவே அந்த ஆறுமாதங்களுக்கும் வரப்போகின்ற குளிர்மையான காலத்தை வரவேற்கவே ஆடித் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

நெல், பயறு, உழுந்து, ஆகிய தானியங்களால் ஆன கூழ், உணவுப் பண்டங்கள் தயாரித்து உறவினரிமையே பகிர்ந்து மகிந்திருப்பது இந்நாளின் சிறப்பம்சமாகும்.
எனவே தமிழர் நாம் கல்லையும், மலையையும், மரத்தையும், சூரியனையும் மட்டும் வழிபடவில்லை. காலநிலையையும் வணங்கியிருக்கிறோம். வரவேற்று விழா எடுத்திருக்கிறோம். உலகின் செழுமைமிகு பண்பாட்டுக்குரியவர்கள் நாம் என்பதை எடுத்துக்காட்ட இதைவிட வேறு மரபுகளை உதாரணம் காட்டவியலாது.

இந்த மரபுகள், நிகழ்நிலை சடங்குகள், நம்பிக்கைகள், பண்பாடுகள் நிலைத்திருக்க வேண்டுமாயின் கடவுள் பின்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இதனோடு கடவுள்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர். மற்றும்படி அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், சமூகம் கூட்டாக இணைந்து வருடமொன்றின் இரண்டாம் பாகமாகிய காலநிலைக் காலத்தைக் கூட்டாக வரவேற்கிறது. பொருளாதார ரீதியில் வளம் சேர்க்கப்போகிற அந்த ஆறுமாதங்களைத் சீராகத் தரப்போகிற காலத்திற்கு மதிப்பளிக்கிற சடங்குதான் நடக்கிறது.

இன்றைய நிலையில் இந்த மாதிரி மரபுகளைப் பலரும் மறந்துவிட்டனர். தமிழ் சமூகம் விவசாயத்தைக் கைவிட்டு கனதூரம் வந்துவிட்டபடியாலும், நிலத்துக்கும் மக்களின் வாழ்வுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டமையினாலும் இவற்றை மறந்தேவிட்டோம். ஆனால் இதுபோன்ற பண்பாட்டு பின்பற்றல்களில்தான் இனவுணர்வு வேர்விடுகிறது. பரவலடைகிறது. இனவுணர்வின் மீதான பற்றுதலே தேசிய உணர்வாக மாற்றமடைகிறது.

ஒருமித்த தேசிய உணர்வுதான் தேசத்தை சிருஷ்டிக்கிறது. எனவே இவற்றைக் கைவிட்டோ, மறுதலித்தோ இனவுணர்வை மீளக் கட்டமைக்க இயலாது. தேசிய எண்ணத்தைப் புதுப்பிக்கவியலாது. எனவே நம் பண்பாட்டைப் புரிந்துகொள்வோம். ஆழ உளவியல் கொண்ட இந்த மாதிரியான சடங்குகளை மீளமீள நிகழ்த்தி நம்மை புதுப்பித்துக்கொள்வோம்.

ஊறுகாய் பதிவு.

தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ...
கல்வியும் இராணுவ மயமாக்கல் ? #இனப்படுகொலை #ஈழம் #தமிழர்

கல்வியும் இராணுவ மயமாக்கல்3கல்வியும் இராணுவ மயமாக்கல்1
கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் தொடர்பான சட்ட மூலம் கொண்டு வரப்படுவதன் பின்னணியும் கிளர்ந்தெழுந்த போராட்டங்களும்

நாடு எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொண்டு வருவார் என்ற கோஷத்துடன், மற்றொரு ராஜபக்‌ஷ இலங்கை அரசியல் களத்தில் ‘மீண்டும்’ இறக்கப் பட்டிருக்கின்றார். இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் பதவியேற்ற அதே நேரம், நாடு முழுவதிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம். அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் குறித்த சட்ட மூலத்துக்கு எதிரான போராட்டங்கள் மறுபுறம் தீவிரமடைந்து இருக்கின்றன.

கல்வியும்-இராணுவ-மயமாக்கல்2.jpgபஸில் ராஜபக்‌ஷவைக் களத்தில் இறக்கி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அவர் மூலமாகத் தீர்வு கிடைத்து விடும் என்பதாகக் காட்டிக் கொள்வதற்கு அரசு முற்படுகின்றது. பஸிலின் மீள் வருகைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், பிரதான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு முற்பட்டிருப்பதை வெளிப் படுத்தியது. பஸிலின் வருகையை வெடி கொழுத்திக் கொண்டாடு வதற்காக ஒன்று கூடியவர்கள் மீது பாயாத தனிமைப் படுத்தல் சட்டம், அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது மட்டும் பாய்ந்திருக்கின்றது.

அதிகரிக்கும் அரச எதிர்ப்பைக் கட்டுப் படுத்துவதற்கு தனிமைப் படுத்தல் சட்டத்தை அரசு பயன் படுத்துகின்றது என்பதை இது உறுதிப் படுத்தியுள்ளது. தற்போது நடை முறையில் இருக்கும் தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் படி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஒன்று கூடல்களுக்கு முற்றாகத் தடை விதிக்கப் பட்டுள்ளது. அவற்றில் பங்கெடுத் தவர்கள் கைது செய்யப் படுகின்றனர். அத்தடையை மீறிய குற்றச் சாட்டுக்கு உட்படுத்தப்பட்டு, நீதி மன்றங்களில் முன்னிலைப் படுத்தப் படுகின்றனர். தனிமைப் படுத்தல் சட்டப் பிரிவுகளையும் ஒழுங்கு விதிகளையும் மீறிய குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் 6 மாத கால சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும்  விதிக்கப் படலாம்.

தனிமைப் படுத்தல் சட்டத்தில் முன்னர் இருந்த சில தளர்வுகளை அரசாங்கம் இப்போது  இறுக்க மாக்கியுள்ளது. குறிப்பாக, முகக் கவசங்களை அணிந்து கொண்டு, தனிநபர் இடை வெளியைப் பேணும் வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்னர் அனுமதியிருந்தது. ஆனால், அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கு வதற்கு வசதியாகவே தனிமைப் படுத்தல் சட்டங்களை அரசு இறுக்கமாக்கி உள்ளது.

குரலை நசுக்குவதற்கு தனிமைப்படுத்தல்

குரலை நசுக்குவதற்கு தனிமைப்படுத்தல்கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் தொடர்பான சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்று வட்டத்தில் கடந்த வியாழக் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டிருந்தவர்களில் 30 இற்கும் அதிக மானோர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு, தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப் பட்ட போதும் – பின்னர் பலாத்காரமாக தனிமைப் படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், அனைத்துப் பல்லைக் கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதே போன்று ஜே.வி.பி., முன்னிலை சோஷலிஸ கட்சி ஆகியவையும் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பரவலாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுதந்திர சதுக்கத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டத்தை நடத்தி யிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிரணி எம்.பி.க்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

கொரோனாத் தொற்றுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வந்த சட்ட ஏற்பாடுகள் அரசாங்கத் தரப்பில் மேற் கொள்ளப் படும் நடவடிக்கை களுக்கு எதிராக பொது மக்கள் அல்லது அவர்கள் சார்பாக அபிப்பிராயங்களையோ, கருத்துக் களையோ வெளிப்படுத்த முடியாதவாறு அரசாங்கத் தரப்பிற்கு பாதுகாப் பளிப்பனவாக இருக்கின்றன. அபிப்பிராயங் களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்த முன்வருவோர் நசுக்கப் படுகின்றனர். 20 ஆவது திருத்தச் சட்டம், கொழும்பு துறைமுக நகர ஆணைய சட்டம் உட்பட பல விடயங்களை அரசாங்கம் இந்தச் சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி மக்களின் குரல்வளையை நெருக்கிக் கொண்டே அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளது

கல்வித் துறையில் கூட இராணுவ மயமாக்கல்

கல்வித் துறையில் கூட இராணுவ மயமாக்கல்கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகச் சட்ட மூலத்தினூடாக இலங்கையில் இருக்கும் அரச பல்கலைக் கழகங்களில் குவிந்திருக்கும் கல்வி முறைக்கு சமாந்தர மான சில விடயங்களில் மேலாதிக்கத் துடன் இருக்கக் கூடிய தனியார், இராணுவ உயர் கல்வியை சட்ட ரீதியாக உறுதி செய்ய அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தான் தற்போது எதிரணியினர் வீதிகளில் இறங்கு வதற்குக் காரணம்.

இலங்கையின் கல்வி முறையை சீர்திருத்த தற்போதும் ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. அக்குழுவில் இயங்குபவர்கள் அரசாங்கத்தின் தேவை கருதி செயற்படுபவர்களாக இருப்பதாகவும், தொழில் நுட்ப தொழில் படையை உருவாக்கும் வகையில் கல்வி முறையை மாற்ற வேண்டு மென்ற எண்ணம் கொண்டுள்ள அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப கல்விக் கொள்கை, நடை முறைகளைக் கொண்ட கல்வி முறையை உருவாக்க இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலைத் துறைக் கல்வியை நிராகரிப்பவராக உள்ள ஒருவர். அவருக்குப் பின்னணியில் இருந்து செயற்படும் வியத்மக அமைப்பினரும், இராணுவ மயமாக்கலையும், பொருளாதார நலன்களையும் மட்டும் இலக்காகக் கொண்டதாக கல்வி முறை அமைந்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள். அழகியல் கல்வி என்பது அவர்களைப் பொறுத்த வரையில் தேவையற்ற ஒன்று. பொருளாதார சுழற்சிக்கேற்ற தொழிற் படையை உருவாக்குவதை மட்டும் நோக்காக கொண்டு அமைக்கப்படும் கல்வியால் மக்களின் வாழ்விற்கான தன்னாட்சியும், ஆட்சியாளர்கள் பொருளாதார தன்னாட்சியும் ஏற்பட முடியும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் அவர்கள்.

புதிய சட்டமூலத்தின் ஆபத்தான அம்சங்கள்

இந்தப் பின்னணியில் தான் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் தொடர்பான சட்ட மூலத்தை பாராளு மன்றதத்தில் கொண்டு வந்து நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கும், அரச பல்கலைக்கழக பொறி முறைக்கும் அப்பால் இராணுவ முறைமைக்கு உட்பட்ட தனியார் கல்வியை வழங்கும் இன்னொரு நிறுவனத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதற்கான இராணுவக் கட்டுப் பாட்டில் இயக்குநர் சபை இருப்பதுடன், மாணவர்கள் தெரிவு, கட்டணம் அறவிடல் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பொறிமுறைக்கு உட்பட்டதாக இராது. அங்கு கற்பவர்களும், கற்பிப்பவர்களும் இராணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

புதிய சட்டமூலத்தின் ஆபத்தான அம்சங்கள்இது நாட்டை முற்று முழுதாக இராணுவ மயப்படுத்துவதற்கான முதற் படியாகவும், சுயாதீனமான பல்கலைக் கழகச் செயற்பாடுகளுக்கு சாவுமணி அடிப்பதாகவும் அமைந்திருக்கும் என எதிர்க் கட்சிகளும், மாணவர், ஆசிரியர் சங்கங்களும் அஞ்சுகின்றன. அதனால் தான் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம், அடக்கு முறையைப் பிரயோகிக்கும் என்பதைத் தெரிந்து கொண்டும் அந்த அமைப்புக்கள் சீற்றத்துடன் களத்தில் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுத்தன. அரசாங்கமும் காவல் துறையினரைப் பயன்படுத்தி கடுமையான அடக்கு முறையைக் கையில் எடுத்து போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், இது போராட்டத்தின் முடிவாக அமையுமா?

2009 இல் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையின் அரசியல் – நிர்வாகம் என்பனவற்றில் இராணுவ மயமாக்கல் ஆரம்பமாகியது. ஆனால், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர் இது தீவிரமடைந்தது எனச் சொல்ல முடியும். அரச நிர்வாகம், இராஜதந்திர சேவைகள் என்பவற்றின் தொடர்ச்சியாக கொரோனா ஒழிப்புச் செயலணி கூட இராணுவ மயமானதாகவே உருவாக்கப்பட்டது. அதன் உச்சகட்டமாக இப்போது பல்கலைக் கழகக் கல்வியில் மாற்றங்களைச் செய்வதற்கான வியூகங்கள் வகுக்கப் படுகின்றன. கிளர்ந்த தெழும் எதிர்ப்புக்களை முறியடிக்க  தற்போதைய கொரோனா கால தனிமைப் படுத்தல் சட்டங்கள் தமக்கு உதவும் என்ற நம்பிக்கை அரசுக்குள்ளது.

– அகிலன்

தெற்கிற்கு இராணுவ ஆட்சி தெரிகிறதாம்?

இராணுவ ஆட்சியின்   ஊடாக  சிவில் நிர்வாகத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.   இலவச கல்விக்கு எதிராக  அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்  என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மகஜரும் கையளிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள  இலங்கை ஆசிரிய சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் உள்ளிட்ட சிலில் அமைப்பினரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி  17 தொழிற்சங்கத்தினர்  இன்று வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில்  ஈடுப்பட்டார்கள்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் எதிர்க் கொண்டுள்ள  பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி  போராட்டகாரர்கள் ஜனாதிபதி செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்தார்கள்.