எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்!

– முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள் அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள்…

கரும்புலி லெப் கேணல் தேனிசை !

உலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய “யூலை-5 கரும்புலிகள் நாள்” நினைவுகூரப்படுகின்றது. இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன். சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு “லெப்ரினன்ட் கேணல் தேனிசை” ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத்…

அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள். இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம்…

கடற்புலிகளின் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் ,மேஜர் தசரதன் வீரவணக்க நாள்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர். மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக்…

நீரிற் கரைந்த நெருப்பு .! லெப்.கேணல் ராஜன்.!

லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.! கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி.…

முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி

அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்…