முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்…

மே 18 – இனவழிப்பு நாள்

திரும்பிய திசையெங்கும் சிங்களப்பேய்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு…

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள்…

வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்

சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்… என்பதுதான் உண்மை!தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான். களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டா அந்த தாக்குதல் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அந்தக் களத்தில் அவருக்கு கீழ் போராடிய…

படைத்துறைப்பள்ளி ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்

அண்ணாவின் 6ம் ஆண்டு நினைவு நாள். தாயக மண்ணின் மைந்தனாய் தானைத் தலைவனின் பிள்ளையாய் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சி ஆசானாய் விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் கமலாதேவி தம்பதிகளுக்கு 09.04.1971 அன்று பிறந்தவர் தான்அன்பழகன் . அன்புக்கு ஆசானாய் விளங்கிய அன்பழகன் தான் பிறந்த மண்ணின் கொடுமை கண்டு துடித்தெழுந்தார். தமிழ் மக்கள் படும் இன்னல்கண்டு துவண்டெழுந்த அன்பழகன் தாயகம் மீட்க தானைத் தலைவன் வழியை…

கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழு நீள காணொளித் தொகுப்புகள்

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை. கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிறப்பு

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.…