போா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்!

தமிழீழ விடுதலை புலிகள் தொடா்பான குற்றங்களுக்கும் வழக்குகள் இடம்பெறுகின்றன, அரச ப டைகள் மீதான குற்றங்களுக்கும் வழக்குகள் இடம்பெறுகின்றன. எனவே மறப்போம், மன்னிப் போம் என்பதன் அடிப்படையில் போா்குற்ற விசாரணைகள் தேவையில்லை.

மேற்கண்டவாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா், இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்தார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் இரண்டு தரப்பிலும் உள்ளன. இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொல்லப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள், படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன்.. தமிழ் அரசியல் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள். அதேபோல, இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.

இவற்றிற்கு எதிராக இரண்டு தரப்பும் வழக்கு தொடர முயன்றால், முடிவின்றி மாறி மாறி தொடர்ந்து கொண்டு செல்லலாம். இதையெல்லாம் மறந்து, மன்னித்து, உண்மையை கண்டறிந்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதே அவசியமானது“ என்றார்.

அப்படியானால் முன்னால் விடுதலைப்புலிகளின் குற்றங்களையும் மன்னித்து விடுதலை செய்யலாம் தானே !

  சரி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளைக் கூட மன்னித்து விடுதலை செய்யவில்லையே பின்னர் எப்படி தமிழர்கள் மட்டும் மன்னிக்க வேண்டுமா ?

சொந்த மக்களை ஏமாற்றி மத்திய அரசில் சலுகைகளை அனுபவிக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் இல்லை

சாதாரண கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு நிகரான சலுகைகளை பெறுகிறார்கள் . இலங்கை வரலாற்றில் சாதாரண பாராளமன்ற உறுப்பினர்கள் அரச வான் வழி பயண போக்குவரத்தை பெறுவது இயலாத காரியம் . ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொது கூட தயா கமகே நிறுவனத்திற்கு சொந்தமான தயா வான் வழி சேவைகளை தான் பயன்படுத்தி இருந்தார்

இப்போது சாதாரண பாராளமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு அந்த வான் வழி போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகிறது .

இங்கே இவளவு வசதிகளை அனுபவிக்கும் இவர்கள் இவர்களை தெரிவு செய்த மக்களுக்கு பெற்று கொடுத்தது என்ன ?

1. கோவில்கலுக்குள் அமைக்கப்படும் விகாரைகளை, புத்தர் சிலைகளை தடுக்க முடியாமல் இருப்பது ஏன் ?
2. வடக்குக்கு நியமிக்கப்படும் சிங்கள சிற்றுளியார்களை தடுக்க முடியாமல் இருப்பது ஏன்
3. கிழக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை தொடக்கம் கணக்காளர் சேவை பரீட்சை வரை ஏமாற்றப்படும் தமிழ் தேர்வுநாடிகளுக்கு பெற்று கொடுத்த தீர்வு என்ன ?
4. வவுனியா , முல்லைத்தீவு , திருகோணமலை என பறிக்கப்படும் நிலங்கள் , மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ?
5. பட்டதாரிகளுக்கு பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு வழங்கப்பட வில்லை .இது தொடர்பாக இவர்கள் எடுத்து கொண்ட நடவடிக்கை என்ன ?
6. 700 நாட்களுக்கு மேலாக வீதியில் இருக்கும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் , கோப்பாபிலவு மக்கள் , சிறைக்கைதிகள் உறவுகளுக்கு இவர்கள் பெற்று கொடுத்த தீர்வு என்ன ?
7. கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் காசை பங்கீடு செய்து தொகுதிகள் தோறும் வீண் விரயம் செய்யும் இவர்கள் இது வரை நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு செய்த பங்களிப்பு என்ன ?
8. தொல்லியல் திணைக்களம் , வளவள திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை என நாள் தோறும் அபகரிக்கப்படும் நிலங்களுக்கு இவர்கள் வழங்கும் தீர்வு என்ன ?
9. வவுனியா பொருளாதார வலயம் , வடமராட்சி கிழக்கு குடி நீர் திட்டம் , முதலமைச்சர் நிதியம் என வடக்கு மாகாணசபை பெயர் எடுத்து விட கூடாது என மத்திய அரசு சகிதம் இவர்கள் குழப்பி விட்ட பொருளாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு என்ன தீர்வு ?
10. விவசாய சந்தைப்படுத்தல்களை ஆக்கிரமித்து நிற்கும் தம்புள்ள விவசாயிகள் , ஆமியின் விவசாய பண்ணைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
11. ஆமி நடத்தும் முன்பள்ளிகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது ? .

சமஸ்டி தீர்வு , சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது , ஐ நாவில் கால அவகாசம் என சொந்த மக்களை ஏமாற்றி மத்திய அரசில் சலுகைகளை அனுபவிக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் இல்லை

-இனமொன்றின் குரல்-

பௌத்த பிக்குவிற்கு சேவகம் செய்யும் சிறிலங்கா வடக்கு ஆளுனர்!

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை வடமாகாண சிறிலங்கா ஆளுநர் சுரேன் ராகவன்; இன்று (15) முற்பகல் சந்தித்து ஆசி பெற்றதுடன் அவர் உரையாடியுமுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் வடக்கில் முதலாவது பௌத்த மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த சந்திப்பு நடந்துள்ளது.
தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பௌத்த விகாரைகள் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் பலவும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் இத்தகைய சந்திப்பு நடந்துள்ளது.

வழமையாக தமிழ் ஆளுநர் ஒருவரை வடக்கிற்கு நியமிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகள் சுரேன் இராகவன் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (15) முற்பகல் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்களை கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார்.
இதன்போது ஆளுநர் புனித தந்ததாதுவினை தரிசித்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் துரோகத்தின் நீட்சியாகவே வரலாற்று குறிப்பேடு வெளியீடு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே பின்னாட்களில் பாதை மாறி கொள்கை பிறழ்ந்து தமிழ்மக்களின் விடுதலைக்கு விரோதமாக செயற்பட்டார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்புக்கு வலுவான பங்கிருப்பதற்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்துள்ளமை வரலாறு கூறி நிற்கும் உண்மையாகும்.

தமிழர்கள் தமிழ்த் தேசிய சக்திகளாக அரசியல் ரீதியில் ஐக்கியப்பட்டு பலம்பெற வேண்டிய இவ்வேளையில் மீண்டும் இரத்தக்கறை படிந்த துரோக வரலாற்றை மீட்டுப்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலையை அதே ஈ.பி.ஆர்.எல்.எவ். தான் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 03.02.2019 அன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அவர்களின் கட்சி பிராந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட வரலாற்று குறிப்பேடு எனும் ஆவணத் தொகுப்பானது ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் தமிழினத் துரோகத்தின் நீட்சியாகவே அமைந்துள்ளது.

தமிழர்களின் சுதந்திர வாழ்வினை இலட்சியமாக வரித்துக்கொண்டு தம்மையே ஈகம் செய்து களத்திலே போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அதே இலட்சியத்தின் வழி நின்று மேற்கொண்ட தமிழ்த் தேசிய விரோதத்திற்கெதிரான நகர்வுகள் அனைத்தும் தமிழ்த்தேசிய நலன்சார்ந்ததாகவே அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான மக்கள் ஆதரவானது இறுதிவரை வலுவான நிலையில் தொடர்ந்தமை அதனையே கட்டியம் கூறி நிற்பதோடு மட்டும் அல்லாமல் தமிழீழ விடுதலையை நோக்கிய போராட்டம் மக்கள் போராட்டமாக உலகளாவிய ரீதியில் எழுச்சி பெற்றதை யாவரும் அறிந்ததே.

ஆயுதப்போராட்டத்தில் உச்சம் பெற்று இராணுவச்சமநிலையில் மேலோங்கியிருந்த போதிலும் அனைத்துலக போக்கிற்கு ஏற்றவாறு மக்களின் ஜனநாயக பங்கேற்பின் அடித்தளத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழத் தேசியத் தலைமை ஏற்படுத்தியிருந்தது. அதில் புளொட்இ ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளை தவிர்த்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ரெலோ போன்றவற்றையும் இணைத்தே உருவாக்கப்பட்டிருந்தது.

கொள்கைபிறழ்ந்து பின்னின்று இயக்கிய சக்திகளின் நலன்களுக்காக சொந்த இனத்துக்கே எதிராக செயற்பட்ட துரோக வரலாற்றில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கும் அதி முக்கிய இடமுண்டு. அவ்வாறு இருந்தும் அவர்களை மன்னித்து அரசியல் நீரோட்டத்தில் இணைத்து மக்கள் பிரதிநிதிகளாக்கியிருந்தமை தமிழீழத் தேசியத் தலைமையின் தமிழினத்தின் விடுதலையை நோக்கிய அதியுச்ச கரிசனையின் வெளிப்பாடாகும்.

இந்நிலையில் எவரையோ திருப்திப்படுத்தவும் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் வரலாற்று குறிப்பேடு என்ற ஆவணத்தொகுப்பை வெளியிட்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் இச்சதியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஒரு கருவியாக கபடத்தனமான முறையில் பயன்படுத்தியுள்ளமைஇ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆவணத்தொகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக மறுப்பறிக்கை இவர்களை அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழின விரோத நிலைப்பாட்டின் பின்னணியில் ஒரு வலுவான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய தளத்தில் கொள்கை பற்றுறுதியுடன் பயணிக்கும் சக்திகளை ஒருங்கிணைத்து வலுவான ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்க தாயக, புலம்பெயர் தளங்களில் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் இந்த செயற்பாடானது அதற்கு எதிரானதாகவே அமைந்துள்ளது.

ஆகவே இவ்வாறான ஐக்கிய முன்னணியை உருவாக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்து செயற்பட்டுவரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க வேண்டிய காலசூழலிற்குள் தள்ளப்பட்டுள்ளார் . தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் உன்னத பயணத்தில் தமிழினத்தின் நலனை மட்டுமே முன்னுறுத்திய அடிப்படையில் கொள்கை சார்ந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதனை பொறுப்புனர்வுடன் சுட்எக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை


அண்ணாந்து பார்த்து சுரேஸ் தன் முகத்தில் துப்புகிறார் !

ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மாநாட்டின்போது வரலாறு சம்மந்தமான ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. அது குறிப்பாக சகோதர படுகொலைகள் குறித்து பேசும் ஆவணமாக காணப்படுகின்றது.

ஆனால் அந்த விடயத்தினை மீள..மீள.. நினைவுபடுத்துவது தமிழ் மக்கள் மனங்களில் மாறாத வடுவை விதைக்கும் ஒரு செயலாகும் என ரெலோ அமைப்பினைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் மேதகு வே.பிரபாகரனுடன் பேசும் சந்தா்ப்பத்தில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயங்களுடன் தமிழீழ விடுதலை புலிகள் ஒற்றுமைப்படுவதென்பது மறப்போம், மன்னிப்போம் என்பதன் அடிப்படையில் அமையவேண்டும். என கேட்டிருந்தோம். அதனை புலிகள் ஒப்புக் கொண்டாா், அதை பின்பற்றினாா்கள்,

அவ்வாறான நிலையில் மீளவும்.. மீளவும்.. அதை குறித்து பேசிக் கொண்டிருப்பது பயனற்ற ஒன்றாகும். இது சுரேஸ் பிரேமச்ந்திரன் அண்ணார்ந்து பார்த்து தனது முகத்திற்கு நேரே தானே துப்புவது போன்றது என்றாா்.

*
ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்ந்து ,ரெலோ, புளொட் அமைப்பினர் மேற்கொண்ட படுகொலைகள்.!

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் நடுப்பகுதி அது.

நான் எனது ஊரான வல்வெட்டித்துறையிலிருந்து உடுப்பிட்டிக்கு ரியூசனுக்காக மலர் அக்காவீட்டிற்கு சென்றிருந்தபோது அவரின் வீட்டின் முன்னால் ஒரு வாகனம் ஒன்று வந்து கிறீச்சிட்டு நின்றது. அந்த வாகனத்திலிருந்து குதித்த பல பெடியங்கள் ஆயுதங்களுடன் மலர்அக்கா வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்குள் ஓடினார்கள்.

அப்போது ஒரு வயதான அம்மாவும் மூன்று அக்காக்களும் “அண்ணா ஓடு ஓடு” என்று கத்தியபடி அந்த பெடியங்களை தடுக்க முனைந்தார்கள். ஆனால் பெடியங்கள் அவர்களை துப்பாக்கியால் தாக்கி தூக்கி எறிந்துவிட்டு வீட்டுக்குள் ஓடினார்கள். சிறிது நேரத்தில் இரத்த வெள்ளத்தில் ஒரு அண்ணாவை வாகனத்தில் தூக்கி எறிந்தபடி அங்கிருந்து மிக வேகமாக மறைந்து போனார்கள்.

அப்போது ஒருவர் இன்னொருவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.. “பொபியின்ர பெடியள் வந்து தாஸின்ர பெடியளை சுட்டு இழுத்துகொண்டு போகிறாங்கள்” என்று.

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை அது.

சிங்களவன் தமிழனை கொன்றதை நான் அப்போது பார்க்கவில்லை. ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் அழித்ததையும் பார்க்கவில்லை. ஒரே இயக்கத்திற்குள் இருந்தவரை அதே இயக்கம் சுட்டுகொன்றதை பார்த்ததே எனது ஈழப்போராட்ட அரசியலின் முதல் மனப்பதிவு.

ரெலோ இயக்கத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களால் அதன் வேறு பிரிவை சேர்ந்தவர்கள் சுடப்பட்ட வரலாறு இது.

பிற்பாடு அந்த இரு பிரிவினரும் யாழ் வைத்தியசாலைகளில் ஒன்றின் முன் மக்களையும் நோயாளிகளையும் பொருட்படுத்தாது மிக மூர்க்கமாக பொருதி ரெலோவின் பொபி பிரிவினரால் தாஸ் உட்பட பலர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ரெலோ இயக்கத்தை புலிகள் அடக்குவதற்கு முன்னான ஒரு நிகழ்வு இது.

இப்படி நிறைய நிகழ்வுகளை ஒவ்வொரு இயக்கம் தொடர்பாகவும் வரலாற்றிலிருந்து பட்டியலிட முடியும்.

இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சுழிபுரத்திற்கு மாமி வீட்டிற்கு சென்றிருந்தபோது ‘ஆறு விடுதலைப்புலிகளை காணவில்லை’ என்ற அறிவித்தலும் பிற்பாடு அவர்கள் புளொட் இயக்கத்தினரால் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு இரகசியமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கண்ணீர் அஞ்சலி அறிவித்தல்களையும் காணநேரிட்டது.

நிலைமை இப்படியிருக்க எல்லா மாற்று இயக்க அண்ணையும் சேர்ந்து புலிகள்தான் சகோதரப் படுகொலையை ஆரம்பித்தவை என்று சொல்லித் திரியினம்.

அதை ஏந்தி வாந்தியாக எடுக்க காலாகாலத்திற்கு ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது.

-பரணி கிருஷ்ணரஜினி

எங்களிடம் இந்த சில்லித்தனமான வாதத்தைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் !

ஈபிஆர்எல்எப் இயக்கம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடூரங்களை பதிவு செய்தவுடன் அதற்கு பதிலளிக்க முடியாமல் புலிகளின் இறுதி நேர ஆட்சேர்ப்பை தூக்கிக் கொண்டு வருகிறார்கள் ஈபிஆர்எல்எப் அனுதாபிகள்.

புலிகளின் இந்த செய்ற்பாட்டுக்கு தத்துவ – கோட்பாட்டு ரீதியாக மட்டுமல்ல படைத்துறை விஞ்ஞான அடிப்படையில் தர்க்க ரீதியாகவும் என்னால் பக்கம் பக்கமாக நியாயம் கற்பிக்க முடியும்.

ஏனென்றால் புலிகளின் வீழ்ச்சியோ / அழிவோ எம் போன்றவரை உலுக்கவில்லை மாறாக இறுதி நேரத்தில் புலிகள் இழைத்ததாகச் சொல்லப்படும் குற்றங்களில் ‘புலிகள் எப்படிச் சிக்கினார்கள்?’ என்ற கேள்வியே எம்மைக் குடைந்தெடுத்தது.

அறம் சார்ந்த அந்த கேள்விகளுக்கான தேடலிற்கு கிடைத்த விடைதான் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகள்.

எனவே எங்களிடம் இந்த சில்லித்தனமான வாதத்தைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

அதுவும் இந்திய படைகளின் இன அழிப்புக்கு சேவகம் செய்ய வீடுகள்/ கல்விக் கூடங்கள்/ பொது இடங்கள் என்று எந்த வேறுபாடில்லாமல் இளைஞர்களைக் கடத்திச் சென்று கட்டாயப் பயிற்சி கொடுத்து அவர்களின் வாழ்வைச் சூறையாடிய ஈபிஆர்எல்எப் இயக்கத்திற்கு அதற்கான தகுதி எள்ளளவும் கிடையாது.

மக்களிற்கு மட்டும் அதற்கான உரிமை உண்டு. அதற்கான பதிலை தலைவர் ‘நந்திக்கடலில்’ விட்டுச் சென்றிருக்கிறார்.

எனவே இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கில்லை.

ஆனால் ஆட்சேர்ப்பு குறித்து இன்னும் குழப்பத்திலுள்ள சிலருக்காக தர்க்கம்/ கோட்பாடு என்று நீட்டி முழக்காமல் எளிமையாக எழுதிய முன்னைய பதிவொன்றை இணைக்கிறேன்.

*****

இன்று “Enemy at the Gates” படம் பார்த்தேன். கிட்லரின் படைகள் நிலங்களை விழுங்கிக்கொண்டு ரஸ்யாவில் “Stalingrad” வரை வந்த வரலாறு எமக்கு எல்லோருக்கும் தெரியும்.”Stalingrad” நிலத்தில் வைத்து ரஸ்ய வீரர்கள் கிட்லரின் படைகளை வெற்றிகொண்டு துரத்தியடித்ததும் நாம் அறிந்ததே.. உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த வரலாறு அந்த சிறு நிலத்தில் வைத்து எழுதப்பட்டது. இந்த பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

ஆக்கிரமிப்பாளர்களை என்ன விலை கொடுத்தாவது துரத்தியடிக்க வேண்டும் என்பதற்காக பெரும் அழிவுக்கு மத்தியிலும் போராட முற்படும் சோவியத், நாடு முழுவதிலிருந்தும் ஆட்களை வலுக்கட்டாயமாக போர் முனைக்கு கொண்டுவருவதும் எந்த பயிற்சியுமில்லாமல் போதிய ஆயுதங்கள் கூட இல்லாமல் அவர்களை கள முனையில் இறக்குவதும் மிகவும் தத்ருபமாக காட்சிப்படுத்தப்ட்டடுள்ளது. மீறி தப்பி ஓடுபவர்களை ரஸ்ய வீரர்கள் “தாய்நாட்டை காக்காமல் ஓடும் நீ வாழத் தகுதியற்றவன்” என்று சுட்டுக்கொல்லும் காட்சிகளும் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி சேர்க்கப்பட்ட ஒரு இளைஞன் காலத்தின் தேவை கருதி போர் முனையில் ஆக்கிரமிப்பாளர்களை துரத்தியடிக்க துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை விபரிப்பதே இத் திரைப்படத்தின் மையக்கதை..

வெற்றியின் பின்னால் இத்தகைய கதைகள் ஏராளமாக இருப்பதை உணர முடிகிறது.

இங்கு ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் வன்னி இறுதிப்போரிலும் புலிகள் குறித்து இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் “Stalingrad” இல் ரஸ்ய வீரர்களின் செயற்பாட்டிற்கு ஒப்பானது. வெற்றி பெற்றதால் அது வரலாறாகியது. இங்கு வீழ்ந்து போனதால் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இறுதிக்காலத்தில் புலிகள் மீது வைக்கப்படும் குற்றங்களின் உளவியல் இந்த பின்புலத்திலேயே ஆராயப்பட வெண்டும்.

இன்று எமது பின்னடைவு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடந்த நிகழ்வுகளை திரிப்பதற்கு வசதியாக மாற்றிவிட்டிருக்கிறது.

எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மத்தியில் சிறீலஙகா, இநதியா அமெரிக்கா உட்பட பெரும் இராணுவ – அரசியல் வலையமைப்புக்கு எதிராக போராட வேண்டியிருப்பதை உணர்ந்து யாரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என்பதை கண்டறிந்து எதிரிகளை மக்களின் பலத்துடன் தமது மண்ணில் வைத்து அழித்தொழிப்பு செய்து ஒரு இராணுவ வெற்றியை அடைவதுதான் ஒரே தீர்வு என்பதை உணர்ந்து முன்பு கிளிநொச்சியையும் பின்பு அனந்தபுரத்தையும் ஒரு ஸ்ராலின்கிராட்டாக மாற்ற புலிகள் முயன்றார்கள்.

அதன் பின்புலம்தான் காலத்தின் தேவை கருதிய கட்டாய ஆட்சேர்ப்புக்களாகவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய குறைவான பயிற்சிகளுடன் களமுனைக்கு ஆட்கள் அனுப்பப்பட்டதும் அதில் சில அசம்பாவிதங்களும் இதன் வழியேதான் நடந்தேறியது.

உள்ளிருந்து வேரறுத்த துரோகங்களும் சாவ்தேச படைவலு கட்டமைப்புக்களின் இராணுவ- ராஜதந்திர- தொழில்நுட்ப உதவிகளும் சிறீலங்கா படுகொலை அரசிற்கு பெரும் பக்கபலமாக புலிகளை எதிர்த்து பேரிட்டன..

அந்த சின்னஞ் சிறிய படை இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.? விளைவாக செய் அல்லது செத்துமடி என்ற ஓர்மத்துடன் இறுதிவரை போராடி வீழ்ந்தார்கள் அந்த மண்ணில் புலிகள்..

*******
போராடும் தேசிய இனங்களிற்கான ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் மைய சரடு

உயரிய நோக்கங்களுடன் ஆரம்பத்தில் அனைவரும் போராடப் புறப்பட்டிருந்தாலும் புலிகள் தவிர அனைத்து இயக்கங்களும் அழிந்து போனதற்கு அடிப்படைக் காரணம் தனி மனித ஒழுக்கமின்மை.

புகைப் பிடித்தல்/ மது அருந்துதல்/ தகாத உறவு என்பது ஒரு இயல்பான நடைமுறையாக இருந்தது அல்லது அதை ஒரு குற்றமாக அவர்கள் கருதவில்லை.

ஆனால் புலிகள் அமைப்பில் அது தண்டனைக்குரிய குற்றம்.

தளபதி குமரப்பாவுடன் லெபனான் வரை சென்று பயிற்சி எடுத்த புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவருடன் ஒரு முறை ஏனைய இயக்கங்களின் இந்த நடைமுறைகள் குறித்துப் பேசிய போது ஒரு ஆச்சர்யமான தகவலைக் குறிப்பிட்டார்.

“தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஏனைய தலைவர்கள் அனைவரும் வேறுபாடில்லாமல் உலகப் போராட்டங்களைப் பிரதியெடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இது ஒரு கட்டத்தில் சேகுவேரா/ பிடல் காஸ்ட்ரோ போன்று புகைபிடித்தல், மது அருந்துதலையும் இயல்பாக அணுகும் மனநிலை மட்டுமல்ல பல புரட்சியாளர்களின் பலதாரமணம்/ காதல் எல்லாவற்றையும் அடியொட்டவும் தலைப்பட்டார்கள். அதையெல்லாம் ஒரு சாகசமாகப் பேசியும் திரிந்தார்கள். மக்களைப் படிக்காமல் புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்ததால் போராட்டத்தில் புது உத்தியை உருவாக்க முடியாமல் போனது மட்டுமல்ல மேற்படி தனிமனுத ஒழுக்கத்தையும் இழந்து உட்கட்சிப் படுகொலை / மாற்று இயக்கப் படுகொலை என்று சுய சீரழிவுக்குள்ளாகி அழிந்தும் போனார்கள்.

இப்போது குற்றத்தை மட்டும் எம்மீது திருப்புகிறார்கள்.” என்றார்.

அடுத்து அவர் குறிப்பிட்டதுதான் வரலாற்றில் முக்கியமானது, ‘ ஒரு போராடும் இனக் குழுமத்தில் பல மாற்றுக் கட்சிகள்/அமைப்புக்கள் உருவாகுவது இயல்பு. ஆனால் ஒரு போராட்ட இயக்கம் தலைமை வகிப்பதுதான் சரி. அதுவும் ஒழுக்கத்தில் சிறந்த ஒரு இயக்கம் முக்கியமானது. உலகில் எங்கும் இரு இராணுவ கட்டமைப்பு இருப்பதில்லை. ஒரு இராணுவம்தான். அரசுகளின் வெற்றிக்கு இது ஒரு முக்கியமான காரணம். அதுதான் தலைவர் இவர்களை வெளியேற்ற முடிவெடுத்தார்.”

போராடும் தேசிய இனங்களிற்கான ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் மைய சரடு இது.

மாற்று இயக்கங்கள் ஏனைய போராட்டங்களைப் படித்தது தவறல்ல. அது அவசியம்தான். ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இனியும் தங்கள் தவறை ஏற்றுக் கொள்ளாமல் தலைவரையும் போராட்டத்தையும் தூற்றுவது மாற்று இயக்கத்தினரை மேலும் மக்களிடமிருந்து அன்னியப்படவே செய்யும்.

புரிந்தால் சரி.

Parani Krishnarajani

விளம்பர பதாகையில் போட்டிருந்த தனது படத்தை அவசரமாக மறைத்த சிறிதரன் !

சிறீதரன் அரசுடன் கோபித்துக்கொண்டாரா?

ரணில் அரசு தொடர்பில் நம்பிக்கையுடன் எம்.ஏ.சுமந்திரன் காத்திருக்க அவரது கட்சியை சேர்ந்த சிறீதரனோ கிளிநொச்சியில் நாட்டப்பட்டிருந்த தனது அரச அமைச்சர்களுடனான தனது படத்தை மூடி வர்ணம் பூசியுள்ளார்.

கிளிநொச்சியில் பொருத்த்பட்டிருந்த குறித்த பெயர்பலகையில் மைத்திரி,ரணில்,விஜயகலா வரிசையில் சிறீதரனின் படமும் இணைக்கப்பட்டிருந்தது.

குறித்த படம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் தனது படத்தை விளம்பரப்பலகையில் அழித்திருந்தார்.

இதனிடையே அவரது கட்சி சகாவான சுமந்திரனோ புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவென தெரிவித்துள்ளார்.

பிரதமர் இப்படிச் சொல்லிவிட்டார், ஜனாதிபதி அப்படிக் கூறிவிட்டார் என்பதை வைத்து நாம் கணிப்புக்களை மேற்கொள்ளமுடியாது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமது அரசியல் நிலைப்பாடுகள், இருப்புகள், பாதுகாக்கவேண்டியவைகள் எல்லாம் இருக்கும்.

இது அரசியல். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் அவர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். நாட்டுக்காக இதனைச் செய்து முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு வருமெனவும் சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விளம்பர பதாகையில் போட்டிருந்த தனது படத்தை அவசரமாக மறைத்த சிறிதரன்

ஶ்ரீலங்கா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புனித திரேசா தேவாலயத்தில் நான்கு மில்லியன் ரூபா செலவில் அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 03 ஆம் தினதியன்று இடம்பெற்றது.

இதன் போது விபரங்கள் அடங்கியதாக குறித்த அபிவிருத்தி திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் தேவாலயத்தின் முன்பாக ஏ9 பிரதான வீதியில் அமைச்சர் சஜித் பிறேமதாசவின் படத்தை பெரிதாகவும், அதன் மேற்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா, மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரின் படங்களுடன் பதாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று 06 ஆம் திகதி குறித்த பதாதையில் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் படம் தீடிரென ஸ்ரிக்கர் மூலம் மறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த போது

பதாகையில் காணப்பட்ட தனது படத்தை மறைத்துவிடுமாறும், அரசின் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் தனது படத்தை இட்டு விளம்பரங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அறிவித்தமைக்கு அமைவாக தாம் அவரின் படத்தை மறைத்து விட்டதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த பதாகையில் ஶ்ரீலங்காப் பேரினவாதிகளுடன் சிறிதரனின் படம் மற்றவர்களை விட சிறிய அளவில் போடப்பட்டிருந்தது. அண்மைய நாட்களில் இணைய பக்கங்களாலும் சமூக வலைத்தளங்களில் மக்களாலும் சிறிதரனின் இந்த வெக்கங் கெட்ட அரசியல் விளையாட்டு விமர்சிக்கப்பட்டுமிருந்தது

சரஸ்வதியின் ஒருநாள் கதை-காணொளி

5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம். அவனையும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். மூவருக்கும் மூன்று விதமான சாப்பாடு. அந்த வேலையையும் முடித்துவிட்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.

காலை 6.45 மணியிருக்கும், பக்கத்துவீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலி செய்தி வழியாக ஆறுமுகன் தொண்டமான் பேசுகிறார். “யார் யாரோ சொல்றாங்க, நாங்க 600, 700 ஒப்பந்தத்துல சைன் வச்சிட்டோமுனு. அதெல்லாம் பொய். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கினா தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வாங்கிக்கொடுக்கலாம்னு எனக்கு முழு நம்பிக்க இருக்கு.” மகளுக்கு தலை பின்னிக்கொண்டிருக்கும் சரஸ்வதியின் முகத்தில் சந்தோசம் தெரிகிறது. ஆனால், அன்றே 700 ரூபாவை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதை சரஸ்வதி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நாங்கள் என்னவோ எஸ்டேட்டுக்கு, கம்பனிக்கு உழைச்சு குடுப்பது போலத்தான் இருக்கு. நாங்க செய்யும் வேலைக்கு 1000 ரூபா கூட போதாது. ஆனாலும், இப்போதைக்கு 1000 ரூபா கிடைச்சாலே போதும் என்கிறார் 38 வயதான சரஸ்வதி.

சரஸ்வதியுடன் அரை நாள் பயணம் செய்தேன். அந்த அரை நாளில் அவர் செய்யும் வேலைகளை, அவர் எதிர்நோக்கும் சவால்களை வீடியோ வடிவில் பதிவுசெய்து இங்கு தந்திருக்கிறேன்.

குறிப்பு: கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட முன், ஜனவரி 25ஆம் திகதி இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டது.

ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவின் கைக்குள் இருந்து வெளியேறுவாரா விக்னேஸ்வரன் !


ஈழத்தமிழர் வாழ்வியலில் போராட்டத்தில் தமிழர்களின் எதிர்காலத்தின் உறுதிப்பாடாக இரு துருவங்களாக இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனும் காணப்படும் நிலையில் இந்தியாவின் மாயைக்குள் இருந்து முன்னாள் வடமாகாண முதல்வர் வெளியில் வந்து தமிழர்களின் உரிமைக்காக இரண்டு தூண்களும் ஒன்றிணையுமா என்ற ஏங்காலாய்ப்பு நிறைவேறவேண்டும் என்பது தமிழ் மக்கள் மத்தியில் இன்று காணப்படும் நிலைப்பாடு.

தமிழர்களின் உரிமைக்காகவும் சுயநிர்ணய வாழ்விற்றாகவும் தன்னிறைவான பொருண்மியத்திற்காகவும் என்றும் விலைபோகாத இருபெரும் தலைவர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் காணப்படுகின்றார்கள்.

04.02.19 அன்று கிளிநொச்சியில் வைத்து இரு துருவங்களும் கைலாகு கொடுத்துக்கொண்டதன் பின்னணியில் தமிழர் வாழ்வியலுக்காக இரண்டு பேரும் ஒன்றிணைந்தால் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் எந்த ஏமாற்றுக்களும் காலஇழுத்தடிப்பக்களும் புல்லுருவிகளின் செயற்பாடுகளும் இருக்காது என்து திண்ணம்.

இதற்காக இந்தியாவின் நிழலின் கீழ் இருந்து இந்தியத ஆதிக்க சக்தியின் பின்னணியில் இருந்து வெளியே வந்து தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற தமிழர்களின் இலக்கு நோக்கிய பயணத்தின் முன்னால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இணைந்து கொள்வாராக இருந்தால் தமிழர்களின் வராலாறு உண்மையாக எழுதப்படும்.

இன்று தமிழர்களின் வரலாற்றினையும் அவர்களின் வாழ்வியலையும் வழ் நிலத்தினையும் விற்று தங்கள் சுகபோக வாழ்விற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மத்தியில் இவ்வாறான கொள்கையுடன் இருப்பவர்கள் இருதுருவங்களை கொண்டவர்கள் இணைந்து செயற்பட்டால் தமிழ் மக்கள் வாழ்வியலில் மாற்றத்தினை ஏற்படுத்து முடியும் என்பது உண்மை.

இதற்காக முன்னால் முதலமைச்சர் அவர்கள் இந்தியாவின் நிழலில் இருந்து விடுபட்டு உண்மையான தன் முகத்தினை மக்கள் மத்தியில் காட்ட வேண்டும் அதுவே இன்று மக்களின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.

கொள்கைப்பற்றுடன் தமிழர்களின் உரிமைக்காக அன்று தொட்டு இன்றுவரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்கை மாறாது வழிமாறாது பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் அடுத்து வரப்போகும் தமிழர்களின் வாக்குகள் யாருக்கு என்ற கேள்வியும் அதனை வலைவீசி சிதறடிக்கும் சக்திகளுக்கு மத்தியில் இந்த இரண்டு தலைகளும் ஒன்று சேர்ந்து தமிழர் நலனின் அக்கறைகொண்டு செயற்படுபார்களானால் தமிழர்களின் பக்கமே வரலாறு எழுதப்படும் என்பதை பறைசாற்றி நிக்கம்.

இரண்டு துருவங்களின் கை இலாகு கொடுத்தலுடன் மட்டும் நின்றுவிடாது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மக்கள் பேசப்படும் தமிழர் பேசுபொருளாக மாறவேண்டும் என்பதுதான் நாம் சொல்லி நிக்கும் செய்தி.

(ஈழவன்)


சிங்கள தேசத்தால் தமிழ் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டு இன்றுடன் 71ஆண்டுகள்! – கஜேந்திரகுமார்

பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதை சிங்கள இனத்தவர்கள் கொண்டாடும் வேளையில், சிங்கள காலனித்துவ ஆட்சி தமிழ் தேசம் மீது செலுத்தப்பட்ட நினைவு நாளை தமிழர்கள் அனுஷ்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ சிங்கள தேசத்தால் தமிழ் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டு இன்றுடன் 71ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

சிங்கள காலனித்துவ ஆட்சி தமிழ் தேசம் மீது செலுத்தப்பட்ட 71ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்காத வரையில், தமிழ் மக்களின் சுயநிர்ணயம் அங்கீகரிக்காத வகையில் தமிழர்கள் தொடர்ந்தும் அடிமைகளாகவே வாழ்வோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நாம் மக்களிற்காகவே கூட்டு சேர்வோம்!

சுதந்திரதினம் சுதந்திரம் பெற்ற மக்களாலேயே கொண்டாடப்படலாம். அடக்குமுறைகள் மத்தியில் வாழும் எம்மால் சுதந்திரம் கொண்டாடப்படுவது அழுத்தத்தின் பேரால் நடைபெறுவதாக அமையுமென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு சுதந்திரதின போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர் எம்மிடையே பத்து வருடங்களின் பின்னரும் பெருவாரியாக குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரின் பலவந்தத்தாலேயே நடைபெறுவதாக அமையும். இனியும் எமது மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாத ஒரு கட்டம் தற்பொழுதுஉருவாகியுள்ளது.

இது எம்மால் மட்டும் நடத்தப்படும் போராட்டம் அன்று. அடக்கு முறைகள்,மக்கள் உரிமைகளை வழங்குவதில் அசமந்தப் போக்கு,ஆக்கிரமிப்பு போன்றவை எங்கெங்கு காணப்படுகின்றதோ அங்கெல்லாம் இவ்வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எமது மக்களுக்கு எதிராக இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளார்கள். எமது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றன. வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன. எம்மை நாமே ஆளும் அதிகாரம் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.பறித்தவற்றில் அதைத் தருகின்றோம் இதைத் தருகின்றோம் என்று பேரம் பேசுகின்றார்கள் அரசாங்கத்தினர்.அரசாங்கத்தைக் கோபப்படுத்தாதீர் என்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மெத்தப்படித்த நபர்கள்.

இன்றைய எமது இந்தநிலைமையினைச்சரியாகப்புரிந்துகொண்டுகாணாமல் போனமக்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழகமாணவர்கள் 71 ஆவது இந்த சுதந்திரதினத்தை கரிநாளாகக்கருதி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.இந்த நடவடிக்கை எம்மை நெகிழவைக்கும் நடவடிக்கை.எம் மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் நடவடிக்கை. புத்துணர்வைத்தரும் போராட்டம். நம்பிக்கையைஅளிக்கும் போராட்டம்.தமிழ்த் தலைமைகள் போல் அல்லாது எமதுமக்கள் விழித்தெழுந்துள்ளார்கள்

இதேவேளை ஐ.நா சாசனத்தின் 7 ஆவதுஅத்தியாயத்தின் கீழ் உள்ளஅதிகாரத்தின் கீழும் செயற்படுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் ஐ.நா செயலாளர் நாயகத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை கூட்டாக ச மர்ப்பிப்பது பொருத்தமானது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஊடாகநடவடிக்கைஎடுக்க இருக்கின்றேன். இது தொடர்பில் கஜேந்திரகுமார்,சுரேஷ் பிறேமச்சந்திரன்,ஐங்கரநேசன்ஆகியோர் மற்றும் அனந்திசசிதரன் ஆகிய பலரின் கட்சிகளுடன் தொடர்புகொள்ள இருக்கின்றேன்.

எமது போராட்டங்கள் எமது மக்களுக்கு விடிவுகாலத்தைத் தந்து,ஒற்றுமையைத் தந்து,உரியநிவாரணங்களையும் பெற்றுத்தரவேண்டியே இன்று நாம் இணைந்துள்ளோம் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

விஜய் பற்றி சீமான் பேசியது சரியா ?

நடிகை கஸ்தூரி தெளிவான விளக்கம் !

யாருடா வந்தேறிகள் ? கொந்தளித்த சீமான்

ரஜினி தலைவனா? அப்போ பிரபாகரன் யாரு? – சீமான் ஆவேசம்

விஜய் தான் சூப்பர் ஸ்டார்

படத்தில் நடிக்க விஜய் பயந்தாரா ?

அயோக்கிய நாய்களா… வெளுத்து வாங்கிய சீமான்

கம்மா நாயுடுகளை தெலுங்கிலேயே கலாய்த்த சீமான்

சீமான் சொல்றதுதான் சரி | Prakash Raj Interview

வெளியார் யார்? – பெ. மணியரசன்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் பிற்போக்குத்தனம் !

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழாவில் பங்கேற்றார். அதில் ரகுமானுடன் மேடையில் ஏறி பேசிய கதிஜா இஸ்லாமிய முறைப்படி கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்திருந்தார்.

அதனால் ரகுமான் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அவர் இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்றும் பலர் ட்ரோல் செய்தனர்.

மதங்களை வலுவாகக் கடைப்பிடிக்கும் அநேகமான சமூகங்களில் பெண்களின் நிலை மிகக் கீழ்த்தரமாக இருக்கின்றது. இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் எந்தளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது சொல்லத் தேவையில்லை !

ஏன் இந்துக்களின்  பூப்புனித நீராட்டு விழா என்னும் போர்வையில் சிறுமிகளை படுத்தும் பாடு போன்றன நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை இதில் வெட்கப்படவேண்டியது என்னவென்றால் இதை பெண்களே அதிகம் வலுக்கட்டாயமாக முன்னின்று நடாத்துவது !

ரகுமான் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும் இவர் பிறப்பில் முஸ்லீம் கிடையாது !

முகத்தை மூடும் உடை ஒரு மத வெறித்தனத்தின்  பெண் அடிமைத் தனம் தான் !

முஸ்லீம்  குடும்பத்தில் பொதுவாக பெற்றொர்கள் பின்பற்றுவதைத் தான் வாரிசுகளும் பின்பற்றுவார்கள் ஆனால் ரகுமானின் குடும்பத்தில் தலைகீழாக இருக்கின்றது.

ஏ.ஆர். ரகுமானின்  மனைவி அணிந்திருந்தால்  கூட ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால்  அவர் முதலாவது தலைமுறை  என்று விட்டு விடலாம் ஆனால் அவர் அப்படி உடை அணியவில்லை இரண்டாவது தலை முறை மகள்களில் ஒருவர் எதுவும் அணியவில்லை  இன்னொருவர்  தீவிர மதவெறித்தனைத்தை பின்பற்றி அணிவது  என்பது வியப்பாகவும் , சற்று உறுத்தலாகவும் இருக்கின்றது.

அதை தனது ஒரு  மகளுக்கு புரிய வைப்பதில் ரகுமான் தோற்றுவிட்டார். அல்லது அதற்கு பின்னால் வேறு காரணம் இருக்க வேண்டும் .  ஒரு பிற்போக்குத்தனமான  இந்த  மகளை மேடையில் ஏற்றியிருக்கத் தேவையில்லை !

பொதுவாக முற்போக்குத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வரும் ரகுமான் , சொந்த குடும்பம் என்னும் போது பிற்போக்குவாதியாகி விட்டார் போலும் அல்லது குடும்ப சூழ்நிலையா என்பது எமக்குத் தெரியாது !

இந்நிலையில் இது பற்றி கதிஜா அளித்துள்ள விளக்கத்தில் “என் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் ஆகியவற்றுக்கும் என் பெற்றோருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இது எமக்கு தேவையற்றதும் கூட ஆனால் மேடை ஏறி அம்பலப்படுத்தியது  ஏன் ?  அம்பலத்திற்கு வந்து விட்டால இனி அந்தரங்கம் என்பது கிடையாது !

முகத்தை மூடி தன்னை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றால் எதற்கு மேடை ஏற வேண்டும் ? வீட்டிலேயே இருந்திருக்கலாம் தானே !

ஒரு பிற்போக்குத் தனத்தை மேடையேற்றி ஒரு பிற்போக்குவாதியாகி விட்டார் ரகுமான்.

இப்படி உடை அணிந்தது ஏன்? சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா பதிலடி  என்று  ஜல்ரா அடிக்கும் கூட்டம் வேறு !

 

குழந்தமையைக் கொல்லும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்

மக்களை கட்டிப்போட்டார்போல் மணிக்கணக்கில் தன்முன் இருக்கவைக்கும் சக்தி காட்சி ஊடகமான தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு என்று துணிந்து சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விசயம் அதில் உண்டு. கார்ட்டூன் படங்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், காமெடிகள், நெடுந்தொடர்கள், செய்திகள், மத நிகழ்ச்சிகள், என்று நம் விருப்பம் போல் ஒவ்வொன்றிற்கும் தனி சேனலே உள்ளது. சேனல்களை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே செல்லலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் கொட்டிக்கிடக்கும் இந்த தொலைக்காட்சியில் தான் இன்று பெரும் வணிகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பெரும் வணிகத்தை மையமாகக் கொண்டே அதன் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அதன் வடிவமைப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங் உயரவேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சமுதாயம் தான்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினுடைய தாக்கம் யாரையெல்லாம் பாதிக்கின்றது என்று பார்த்தால், வயது வித்தியாசமே இல்லாமல் அனைவரையுமே என்று கூறலாம். பார்வையாளர்களைச் சிந்திக்கவிடாமல் அதற்கு அடிமையாக்கி உட்காரவைக்கின்றது இந்த தொலைக்காட்சி. குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை மணிக்கணக்கில் பார்ப்பதையும், இளம் வயதினர் விளையாட்டு, திரைப்படம், பாடல்கள், காமெடிகள் பார்ப்பதையும், இல்லத்தரசிகள் நெடுந்தொடர்களைப் பார்ப்பதையும், முதியவர்கள் செய்திகளைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதை நம் சுற்றத்தினர் மூலம் தினமும் கண்கூடாகப் பார்க்கலாம். வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் இருப்பதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருந்தால் கூட நல்லது என்று எண்ணுகின்ற அளவிற்கு வந்துவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் என்றால் அதில் பங்கேற்பவர்களின் நிலைமையும் பிரச்சனைகள் நிறைந்ததுதான்.

இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. இவற்றில் குழந்தைகள் போட்டியாளர்களாக பங்குபெறும் நிகழ்ச்சிகளே அதிகம். குறிப்பாக குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் போட்டியாளர்களான குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் மற்றும் சமூகம் சார்ந்தும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு தன்னுடைய வயதுக்கு மீறிய ஆபாச சிந்தனையைத் தொலைக்காட்சிகள் நடத்தும் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் தூண்டுகின்றது. நடனம் சம்பந்தமான போட்டிகளில், பாடல்களில் வரும் ஆபாச வரிகளின் உள் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் அதற்கு ஏற்றார்போல் வாய் அசைத்து ஆபாசமக உடலை வளைத்து ஆடுகின்றனர். தாங்கள் எதற்காக அப்படி உடல் அசைவை வெளிப்படுத்துகின்றோம், அந்த வரிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் என்ன, போன்ற எதுவுமே தெரியாமல் குழந்தைகள் இவற்றைச் செய்கின்றன. இச்செயல்கள் பார்ப்போரை குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் பெரியவர்கள் போல் பார்க்கச்செய்துவிடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் ஆபாசமாக பார்ப்பது என்று கூறலாம்.

நடிப்பு சம்பந்தமான போட்டி நிகழ்ச்சிகளில், குழந்தைகள் வயதுவந்த ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் வேடங்கள் அணிந்துகொண்டு அந்த வேடத்திற்கு ஏற்றர்போல் நடிக்கின்றனர். உண்மையிலேயே பெரிய மனிதர்கள் போன்று பாவனை செய்து நடிக்கின்றனர். பின்னர் நடிப்பு குறித்து நடுவர்கள் சொல்லும் கருத்துக்களுக்குப் பெரியவர்கள் போல பதில் அளிக்கின்றனர். இதில் குழந்தைகள் குழந்தைத்தனம் இல்லாமல் மாறிவிடுகின்றனர். இது அவர்களின் இயல்பு அல்லாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட நடத்தையாக உள்ளது. குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற நடத்தையுடனும், மனோபாவத்துடனும் வளரவேண்டும். அதுவே சீறான வளர்ச்சி, படிப்படியான மனநிலை முன்னேற்றமே சாலச்சிறந்தது.

இவற்றில் மிகவும் வருந்தத் தக்க விசயம் என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியில் நான்கைந்து குழந்தைகளைத் தேர்வுசெய்து நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்கின்றார்கள். மேலும் பார்வையாளர்களின் வரிசையில் அவர்களின் பெற்றோர்களை அமரச்செய்கின்றார்கள். அக்குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றிய கேள்வியை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தைகள் அனைவரின் மத்தியிலும் வீட்டில் நடைபெறுவதைஎல்லாம் பொதுவெளி என்று பாராமல் அனைத்தையும் தங்களின் மழழைக் குரலில் கூறுகின்றனர். தங்களின் அப்பா, அம்மா, எவ்வாறு வீட்டில் சண்டை போட்டுக்கொள்கின்றனர், என்ன மதிரியான வார்த்தைகளில் திட்டிக்கொள்கின்றனர், எவ்வாறு சந்தோசமான நேரங்களில் கொஞ்சிக்கொள்கின்றனர் என்று அவர்களின் அந்தரங்க விசயங்களையெல்லாம் தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் ஆமோதிப்பதைப்போல் அனைத்துப்பெற்றோர்களும் சந்தோசத்தில் திளைத்து தங்களின் குழந்தைகளின் அறிவுக்கூர்மையைப் பார்த்து மெய்சிலிர்த்து வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பதாக எண்ணி பெருமைப்படுகின்றனர்.

பெரும்பாலும் எல்லாத் தொலைக்காட்சிச் சேனல்களும் தங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் எல்லாவற்றையும் செயற்கைத்தனமாக செய்கின்றனர். ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும், சோகங்களும், அழுகைகளும், கோபங்களும், சூழ்ச்சிகளும், சுயநலன்களும் இப்படி எதிர்மறை எண்ணங்களையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காண்பித்து மக்களின் அனுதாபங்களைப் பெறுகின்றனர். தங்களின் விளம்பர வருமானத்திற்காக குழந்தைகள் இயற்கையாக அவர்கள் கொண்டுள்ள இயல்பான குணநலங்கள் காவுகொடுக்கப்படுகின்றன.

ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று குழந்தைகள் நெருக்கடி கொடுக்கப்படுகின்றனர். தாங்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற எண்ணமே அவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது.பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்று பிரபலமடைய வேண்டுமென்று அவர்களை உற்சாகமூட்டுகிறேன் என்ற பெயரில் மறைமுக மனஅழுத்தம் கொடுக்கின்றனர். வெற்றி பெற்றால் பிரபலமாகலாம், நிறைய பணப்பரிசு கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களில் திணிக்கின்றனர். இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளர் முறையே. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். அவர்கள் தங்களின் குழந்தைகளின் உடல் மற்றும் மன வல்லமை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஏமாற்றம் நிகழாது. குழந்தைகளும் இதை விளையாட்டுப் போட்டியாக எண்ணாமல் வாழ்வா சாவா என்ற போட்டிபோல் எண்ணி, தோல்வியுற்றால் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனநிலை இல்லாதவர்கள் ஆகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விசயமல்ல இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கடுமையான தீர்ப்புகளைக் குழந்தைகளின் மனம் சமாளிப்பது எளிதானதல்ல. பெரியவர்களுக்கு அறிவுமுதிர்ச்சி இருக்கும் அதனால் விமர்சனங்களையும், தோல்விகளையும் கையாளத்தெரியும். ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல அவர்கள் அந்த அளவிற்கு அறிவுமுதிர்ச்சியை எட்டவில்லை. அவர்கள் விமர்சனங்களை மிகக்கடுமையாக எடுத்துக்கொள்கின்றனர். தங்களின் நடிப்புக்கு எதிரான கருத்துக்களை நடுவர்கள் கூறினால், அதனால் தாங்கள் மதிப்பிழந்துவிட்டதாக நினைக்கின்றனர். நிகழ்ச்சியில் நடுவர் சொல்லும் முடிவால் குழந்தைகள் அழுவதன் மூலம் இதைத் தெரிந்துகொள்ளலாம். தோல்வி எண்ணங்கள் அவர்களைத் தாங்களாகவே கஷ்டப்படுத்திக்கொள்ளச் செய்கின்றது. இது போன்ற போட்டி சூழ்நிலையால் இக்குழந்தைகள் வளரும்போதே எதிரி மனப்பாண்மையுடன் மற்ற குழந்தைகளைப் பார்க்கின்றனர். இது குழந்தைகளிடையேயான நட்புறமைப் பாதிக்கின்றது. உலகமே நம்மைப் பார்க்கும் என்ற பயத்திலேயே குழந்தைகள் இவ்வாறு நடக்கின்றனர்.

பெயர்கள் தான் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆனால், அவற்றில் எல்லாமே மிகைப்படுத்தப்படும் நடிப்புகள். குழந்தைகளுக்கு கேமரா முன் எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. நடுவர் சொல்லும் தீர்ப்புக்கும், தொகுப்பாளர்களிடம் எவ்வாறு பேசுவது, என்று இவை எல்லாமே சொல்லிக்கொடுக்கப்படும் வசனங்கள்தான்.

உளவியல் ரீதியாக ஒரு குழந்தையின் வயதுக்கு ஏற்ப அதன் சிந்தனையும் செயலும் இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் மூலம் போட்டி உலகத்தில் தள்ளும்போது பிற்காலத்தில் அவர்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகநேரிடுகின்றது. மேலும், இக்குழந்தைகளின் சீரான கல்வியில் தடையேற்படுகின்றது. தொடர்ந்த வெற்றிக்கு அவர்கள் தங்களை உடல் ரீதியாக வருத்தி, பெரிதும் மெனக்கெடவேண்டியுள்ளது. இம்மெனக்கெடல் அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனையையும் செயலையும் வளர்க்கின்றது அல்லது பெற்றோர்களினால் வலுக்கட்டாயமாகத் தினிக்கப்படுகின்றது. ரியாலிட்டி ஷோக்களுக்கு ஒரு முடிவில்லாத பயிற்சி தேவைப்படுகின்றது. உடல் ரீதியான பயிற்சியும் நீண்ட நேரம் ஒத்திகையும் இன்றியமையாத ஒன்று. இதனால் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரும் போகும் ஆனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகள் தன் சகவயதுள்ள குழந்தைகளுடன் பழக வாய்ப்பில்லாமலும், இவர்களின் வயதுக்கு மீறிய செயல்களினால் சககுழந்தைகளுடன் இயல்பாகப் பழகமுடியாததாலும் தனிமைப்படுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் இக்குழந்தைகளைத் தனித்துவிடப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்வதுபோன்று மாற்றிவிடுகின்றது. பெரும்பாலும் வெளிஉலகத் தொடர்புகளையே துண்டித்துவிடும் அளவுக்குச் இட்டுச்செல்கின்றது.

இறுதியாக, ரியாலிட்டி ஷோக்கள் குழந்தைகளின் மீது கெடுதலான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. நன்றாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் குழந்தைகளுக்கு ஏமாற்றதைக் கொடுக்கின்றது. இந்த அழுத்தங்கள், ஏமாற்றங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் குழந்தைகளிடம் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும், புற அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் அளவுக்கு குழந்தைகளின் வயது இருப்பதில்லை. குழந்தைகள் இந்த வயதில் விளையாட, ஒரு விசயத்தைக் கற்றுகொள்ள, சந்தோசத்தை அனுபவிக்க மற்றும் சமுதாயத்தில் சிறந்தவர்களாக வளர பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.

– சி.வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட ஆய்வாளர், சமூகப்பணித்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630003

http://www.keetru.com

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்? காணொளி

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் ஆவா குழு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற எந்தவொரு அமைப்பும் இல்லை என அருளானந்தம் அருண் என்ற இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் வடக்கில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஆவா குழு உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளார்.

ஆவா குழு சுமந்திரன், சரவணபவன், வித்தியதரன் ஆகியோரினால் உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை சட்டத்திற்கு முன்னாள் நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவா என்ற குழுவை சிலர் உருவாக்கி கொண்டதற்கு யாழில் அப்படி ஒரு குழு இல்லை.

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு விளையாடுவதற்கு ஒரு சிறிய இடமேனும் இல்லை என்ற போதிலும் கொழும்பு பிரதேசத்தில் சிலர் நடப்பதற்கு உட்பட தனி இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.