கடந்த வாரம் Analai Express Media Inc 07 01 2023 கனடா ரொரன்ரோவில் அனலை எக்ஸ்பிரஸ் பாராம்பரியம் கலை நிகழ்ச்சி நடந்தேறியது இது ஐபிசி தமிழ் கனடா அங்குராப்பன நிகழ்ச்சியைப் பின்பற்றியது போல் இருந்தாலும் சில ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்தது

இந்திய கூத்தாடிகளை அழைத்து வந்து கூத்தடிக்காமல் உள்ளூர் கலைக்கூடங்களையும் கலைஞர்களையும் வைத்து அரங்கு நிறைந்த காட்சியாக நடந்தேறியது வரவேற்க்கத்தக்கது. வந்தவர்கள் பெரும்பாலும் கலைஞர்களின் குடும்ப நண்பர்கள் நலன் விரும்பிகள் போல் தான் இருந்தது.

அதிலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆங்கிலக்கலப்பின்றி தூய தமிழில் பேசியது மிகவும் வரவேற்க்கத்தக்கது.

பிரதம விருந்தினர்களாக சைவ ஆலய குருக்கள்கள் மட்டும் விளக்கேற்றி ஆரம்பித்தார்கள் அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்டார்களா இல்லையா என்பது தெரியாது. ஆனால் நிகழ்ச்சி நடுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும் வந்திருந்தார்கள்.

ஆலயங்களில்  தமிழர்களுக்கு தெரியாத   சமஸ்கிருத்ததை விட்டு தமிழர்களுக்கு தெரிந்த தமிழில் ஓத வேண்டும் என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்

ஆனால் கனடிய வரலாற்றில் ஒரு போதும் இல்லாமால் இளம் சைவ குருக்கள்கள் சில நிமிடங்கள்  சமஸ்கிருத்தில் புரியாத  மந்திரம் ஓதி ஆரம்பித்தது  நெருடலைத் தந்தது.

தாயகத்தில் நிகழ்ச்சிகளில் இரண்டு மத போதகர்களும் இருப்பார்கள் ஆனால்

தமிழர்களின் பாராம்பரியத்தில் சைவமும் தமிழும் என்றிருந்ததால் தமிழ் கிறிஸ்தவ பாதிரிகளை விட்டு விட்டார்கள் போலும் கனடாவில் கலை நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவ பாதிரிகள் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்படுவதை காணவில்லை அதற்கான காரணமும் தெரியாது

இதில் பங்குபற்றியவர்களில் தமிழ்  கிறிஸ்தவ மத்ததினர்கள் எவரும் இல்லையா ?

கனடாவில் எமக்கு தெரிந்த வரையில் பல தமிழ்  கிறிஸ்தவ மத பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ் கலைகளை பயிற்றுவிக்கின்றார்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்றார்கள் அப்படியிருக்க சைவ சமயத்தை மட்டும் முன்நிறுத்தியது ஏமாற்றமே !

அடுத்து குத்துப்பாட்டு நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது இது தமிழர் பாரம்பரியம் இல்லை என்றாலும் அதுவும் ஒன்றாகி விட்ட நிலையில் எற்றுக்கொள்ளலாம்.

அதில் ஒரு சிறுமி ( ஐரம் )கவர்ச்சிப் பாடலுக்கு குத்தாட்டம் ஆடியது மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. அரங்கு நிறைந்த கரகோசம் கிடைத்திருந்தாலும் சிறுமியாக இருப்பினும் கவர்ச்சி குத்தாட்டங்களை மேடையேற்றி அங்கிகரிப்பது தவறான முன்னோட்டமே.

வரும் காலங்களில் இவற்றை தவிர்க்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.

நன்றி