வல்வை விக்கினேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் உதயசூரியன் கழக நிர்வாகத்தினரின், நாமலுடனான சந்திப்பின் தன்னிலை விளக்க அறிக்கையை பார்த்து வெட்கித் தலை குனிவதுடன், பெரும் அவமானத்தையும் சுமந்து நிற்கின்றோம்.
சரித்திரத்தில் வீரம் செறிந்த வல்வை மண், இன அழிப்பு செய்த அரசுடன் கை கோர்த்து அலரிமாளிகையில் தற்போது நாம், எமக்கு கிடைத்த கௌரவம் என, படங்களுடன் கூடிய அறிக்கைகளை விட்டு வீர மண்ணின் சரித்திரத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டீர்கள்.
அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் இப் பட்டப் போட்டி நடைபெறுமானால் தலைவர் வழியில் போராடி உயிர் நீர்த்த மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாங்கள் காலத்தில் அழியாத துரோகத்தை எமது மண் செய்த வரலாறு பதியப்படும்.
எமது பாரம்பரிய, எங்களுக்கே உரித்தான கலாச்சார நிகழ்வான விசித்திரப்பட்டப் போட்டி இனப்படு கொலை செய்த அரசின் நல்லிணக்கம் என்ற போர்வையில் அவர்களின் நிகழ்வாக காட்சிப் படுத்தப்பட போகிறதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும், அவமானத்திற்குரியசெயலாகும்.
விடுதலை போராட்டம் தொடங்கிய மண்ணில் பிறந்த நீங்கள், இத்தனையாயிரம் மாவீரர்களை கொடையாக்கிய பெற்றோர்கள் வாழும் போதே அற்ப, சொற்ப சுயநலத்திற்காக கையேந்தி எமது மண்ணின் சரித்திரத்தையே அழித்துவிடும் செயலை செய்ய முற்பட்டுள்ளீர்கள். உங்கள் அறிக்கையானது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் மனதை மிகவும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
உலகளாவிய தமிழ் மக்களின் பார்வையில் இருந்த எம் மண்ணினூடான எதிர்பார்ப்புகளை தகர்த்துள்ளீர்கள்.
நீங்கள் எடுத்த முடிவானது எம் மண்ணிற்கு காலத்திற்கும் அழிக்க முடியாத அவமானம் என்பதனை புரிந்து கொண்டு, ஏற்பாட்டாளர்கள் இதை நிறுத்துவதே எம் மண்ணின் மானத்தை காக்க முடியும். இது பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலான வல்வை மக்களின் காத்திரமான வேண்டுகோள்.
வல்வை பட்டத்திருவிழாவில் நாமல் ராஜபக்ஸ பங்கேற்பு?
Namal Rajapaksa to attend Valvettithurai Kite Festival#வல்வை_பட்டத்திருவிழா #நாமல்ராஜபக்ஸ #Namal_Rajapaksa #ValvettithuraiKite_Festivalhttps://t.co/XzlA4QlkvI pic.twitter.com/c358FAFqrq— Valvettithurai.Org (@Valvettiturai) December 29, 2021