விடுதலை புலிகள் மீதான ‘கட்டாய ஆட்சேர்ப்பு‘ குற்றச்சாட்டும், உலக வரலாறும். அத்துடன் உங்களுக்கான சில கேள்விகளும்

விடுதலை புலிகளுக்கு எதிரான தரப்புகள் வழமையாக வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான் ‘ புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு’ செய்தார்கள் என்பது.

இந்த குற்றச்சாட்டை போரியல் பார்வையில் அலசும் முயற்சிதான் இந்த பதிவு.

அத்துடன் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு (Conscription) என்ற முறையின் வரலாற்றையும்,அதை உலக அரசியலின் பின்னணியில் உங்களுக்கு தருவதும் இந்த பதிவின் நோக்கமாகும்.

புலிகள் மீதான ‘கட்டாய ஆட்சேர்ப்பு’ என்ற குற்றச்சாட்டு இலங்கையும் , உலக ஒழுங்கும் விடுதலைபுலிகளை வைத்து விளையாடிய ராஜதந்திர விளையாட்டு.

இது புவிசார் அரசியல்/போரியல்/ராஜதந்திர சதுரங்க ஆட்டத்தில் வழமையான ஒரு நகர்வுதான்.

இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து இன்றுவரை தமிழ் இனத்தை எப்படி முட்டாளாக்கியிருக்கிறார்கள் என்பதை எளிமையாக விளக்குகிறேன்.

அத்துடன் இந்த பதிவின் முடிவில் உங்களுக்கு என சில கேள்விகளையும் வைத்திருக்கிறேன்.இதற்கான பதிலை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

• விடுதலை புலிகள் உண்மையில் கட்டாய ஆட்சேர்ப்பை நடத்தினார்களா?

இதற்கு களத்தில் கிடைத்த தரவுகளை, புள்ளிவிபரங்களை போரியல் பார்வையில் அலசினாலே இதற்கான விடை கிடைத்துவிடும்.

இதற்கு உதவியாக போரியல் ஆய்வாளரான தராகி சிவராம் எழுதிய ‘The Cat, a Bell and a Few Strategists’ எனும் ஆய்வு கட்டுரையை இந்த பதிவில் ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறேன்.

இனி தரவுகளை பார்ப்போம்.

• இலங்கையின் வடகிழக்கு பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்களின் சனத்தொகை

90 களின் இறுதிபகுதிகளில் வட கிழக்கு பகுதிகளில் இருந்த இலங்கை தமிழ் மக்களின் சனத்தொகை தோராயமாக 17 லட்சம் பேர்( 1981 இற்கு பிறகு, 2011 ஆம் ஆண்டுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை).

இவர்களில் இலங்கை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த தமிழர்கள் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்.

மீதி 12 லட்சம் தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் மற்றும் அவர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த பிரதேசங்களிலும் இருந்தார்கள். (areas controlled by the LTTE or where the army is not present).

இந்த 12 லட்சம் பேரில் இருந்துதான் விடுதலைபுலிகள் தங்கள் இயக்கத்திற்கான ஆட்திரட்டலை ( recruitment) நடத்தவேண்டும்.

• விடுதலைப்புலி போராளிகளின் எண்ணிக்கை தொடர்பான மதிப்பீடு

இலங்கை இராணுவம், 1995 இல் விடுதலை புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 ஆயிரம் அளவிலேயே இருக்கும் என மதிப்பிட்டிருந்தது.

“The Directorate of Military Intelligence (DMI), according to a recent publication, had estimated in 1995 that there were fourteen thousand fighting members in the Liberation Tigers.”

“I think that it might be reasonable to assume that the DMI assessment is not flagrantly off the mark with respect to the number of troops the LTTE has stationed in its camps in the northeast.”

(‘The Cat, a Bell and a Few Strategists’ எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து – தராகி சிவராம், May 1997)

போரியல் அறிஞரான தராகி சிவராமும் இந்த மதிப்பீடு கிட்டத்தட்ட சரியானதே என தனது இந்த நீண்ட ஆய்வு கட்டுரையின் மூலம் நிறுவியிருந்தார்.

இந்த ஆய்வு கட்டுரையில் தமிழர்களின் Military Participation Ratio (MPR) 1.1 சதவீதம் என நிறுவியிருந்தார்.

• அது என்ன Military Participation Ratio (MPR) ?

ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களிலிருந்து எத்தனை சதவீதம் பேர்களை போர் வீரர்களாக மாற்றமுடியும் என்பதை அளவிடும் முறை.

“In this connection, the work of the military sociologist Stanislav Andreski might be mentioned.

He is the only academic treatise (Military Organization and Society) on the connection between populations and the quantum of organized fighting men they can produce and sustain.

He is best known among defence specialists for introducing the concept of Military Participation Ratio (MPR), by which, when other factors are taken into account, the degree to which a society is militarised may be measured.”

(‘The Cat, a Bell and a Few Strategists’ எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து – தராகி சிவராம், May 1997)

இப்போது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்களின் சனத்தொகையையும் விடுதலைப்புலி போராளிகளின் எண்ணிக்கைக்கும் இடையேயான தொடர்பை இந்த MPR முறையில் அணுகுவோம்.

தமிழ் மக்களின் சனத்தொகை கிட்டத்தட்ட 12 லட்சம் பேர்.

இலங்கை இராணுவத்தின் Directorate of Military Intelligence (DMI) மதிப்பீடு செய்திருந்த போராளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14000 போராளிகள்.

இதனுடைய பொருள், புலிகள் தங்களுடைய கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் தொகையில் இருந்து போராளிகளாக மாற்றிய வீதம் 1.1 (LTTE’s recruitment ratio as a percentage of the base population was 1.1).

• இந்த 12 லட்சம் பேரிலிருந்து கிட்டத்தட்ட 14 ஆயிரம் போராளிகளைத்தான் புலிகளால் திரட்ட முடியும் என்றால் இது எதனை காட்டுகிறது?

அவர்கள் தங்களது ஆட்திரட்டலை அரசியல் பரப்புரை , போராட்ட விளக்க கூட்டங்கள் மூலமே (persuasive method ) திரட்டியிருக்கிறார்கள் என்று காட்டுகிறது.

அதாவது ஒரு தனி நபர் புலிகளின் பரப்புரையில் ஈர்க்கப்பட்டு சுயவிருப்பத்தின் பேரில் இணைந்திருக்கிறார் என அர்த்தம். அதாவது volunteer soldiers.

• கட்டாய ஆட்சேர்ப்பு (Conscription) என்பது என்ன?

‘வலுக்கட்டாய ஆட்சேர்ப்பு’ என்பது conscription என்று அழைக்கப்படும் . அது ஒரு அதிகார அமைப்பு ஒரு தனி நபரின் சுயவிருப்பை புறந்தள்ளி இராணுவ சேவையில் வலுக்கட்டாயமாக இணைத்து கொள்வது.

இந்த conscription முறையில் இராணுவத்திற்கு ஆட்களை திரட்டும்போது MPR வீதத்தினை பல மடங்குகளுக்கு அதிகரிக்கமுடியும்.

• Conscription முறையின் கடந்த கால வரலாறு

இத்தகைய conscription முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த போதிலும் , நவீன அரசுகளின் conscription முறை பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர் உருவானது.

Modified forms of conscription were used by prussia , Switzerland, Russia and other European countries during the 17th and 18th centuries.

The first comprehensive nationwide system was instituted by the French Republic in the wars following the French Revolution and was institutionalized by Napoleon after he became emperor in 1803.

The First World War was fought predominantly by conscript armies fielding millions of ‘citizen-soldiers’.

• கட்டாய ஆட்சேர்ப்பை உலக ஒழுங்கின் வல்லாதிக்க நாடுகள் கடைபிடித்தனவா?

கடைபிடித்தன என்பதை காட்டுவதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு.

உலகின் வல்லாதிக்க நாடுகள் எல்லாம் போரின் போது எப்படி இந்த conscription முறையை கையாண்டிருக்கின்றன என விளக்குவதற்கு இரண்டு உதாரணங்களை தகுந்த ஆதாரங்களுடன் மிக சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன்.

1. முதல் உதாரணம் பிரிட்டன்

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் அதனது conscription ஐ எப்படி நடைமுறைப்படுத்தியது என்பதை விளக்க அதை இணைப்பாக கீழே கொடுத்துள்ளேன்.

https://www.parliament.uk/…/overview/conscriptionww2/

2. இரண்டாவது அமெரிக்கா

அடுத்தது அமெரிக்கா முதலாம் உலகப்போரின் போது conscription ஐ எவ்வாறு கையாண்டது என்பதை பின்வரும் பந்தி விளக்குகிறது.

‘In 1917, one month after the entry of the United States into world war I , Congress passed the Selective Draft Act (40 Stat. 76).

The act created a government office to oversee conscription. It also authorized local draft boards to select eligible individuals for conscription.

The following year, the Supreme Court upheld the constitutionality of conscription, noting that Article I of the Constitution gives Congress the power to “raise and support Armies” (Selective Draft cases, 245 U.S. 366, 38 S. Ct. 159, 62 L. Ed. 349 [1918]).’

• இந்த கடந்தகால வரலாறு நமக்கு சொல்லும் சேதி என்ன?

போரின் போது ஒரு நாட்டின் survival கேள்விக்குள்ளாகும்போது, அந்த நாடு தயவுதாட்சண்யமின்றி conscription முறையை கையாளும். மேற்சொன்ன உதாரணத்தில் பிரிட்டன்.

அல்லது , ஒரு நாடு போரின் போது தனது போரியல்ரீதியான இலக்கை அடைய இத்தகைய கடுமையான முறையை மேற்கொள்ளுகின்றன.
மேற்சொன்ன உதாரணத்தில் அமெரிக்கா.

• இன்றைய உலக அரசியலில் Conscription முறையின் நிலை

இன்றும் உலகின் பல வளர்ந்த நாடுகள் conscription ஐ பல வடிவங்களில் கடைபிடிக்கின்றன. அந்நாடுகளில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் mandatory military service செய்தே ஆகவேண்டும்.

இந்த நாடுகளின் பட்டியலில் தென் கொரியா, தாய்வான், இஸ்ரேல், சுவிட்சலார்ந்து என பல வளர்ந்த நாடுகள் உள்ளடங்கும். இது தொடர்பான மேலதிக தகவல்களை வாசிக்க இணைப்புகளை தந்துள்ளேன்.

https://www.bbc.co.uk/news/amp/world-44646267

https://worldpopulationreview.com/…/countries-with…/

• இதன் பின்னே ஒளிந்திருக்கும் அடிப்படை காரணம் என்ன?

அமைதியான காலங்களிலும் தொடர்ச்சியான mandatory military Service ஐ கடைபிடிப்பதன் மூலம், போர் காலங்களில் இராணுவத்திற்கு தேவையான போதுமான எண்ணிக்கையை உடனே திரட்ட முடியும். அத்துடன் அத்தகையை இராணுவத்தை மிக விரைவில் தயார்படுத்த முடியும். இதன் மூலம் போர் என ஒன்று வந்தால் தனது survival ஐ உறுதிபடுத்தமுடியும்.

இனி மீண்டும் இலங்கைக்கு வருகிறேன்.

• இலங்கையில் புலிகள் conscription முறையை பின்பற்றினார்களா?

பின்பற்றவில்லை என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட களத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இத்தகைய conscription முறையை விடுதலை புலிகள் பின்பற்றியிருந்தால் அவர்களால் MPR யினை பல மடங்கிற்கு உயர்த்தியிருக்கமுடியும்.

10% ற்கு MPR ஐ உயர்த்தியிருந்தால் கூட அவர்களின் ஆட்பலம் குறைந்தது ஒரு லட்சத்தையாவது எட்டியிருக்கும்.

ஆனால் கடைசிவரை அவர்களுக்கு ஆளணியில் பற்றாக்குறை இருந்ததுதான் வரலாறு.

• ஒரு நாடு அதிகபட்சம் எத்தனை சதவீத MPR யினை கொண்டிருக்க முடியும்?

அதாவது ஒரு நாடு ஒரு பக்கம் அதனது இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து கொண்டே மறுபக்கம் அதிகபட்சமாக எத்தனை சதவீத மக்கள் தொகையினை போர்வீரர்களாக மாற்றமுடியும் என்பதே இதன் பொருள்.அதாவது ‘இயல்பு நிலையை தக்கவைத்து கொண்டு’ என்பது இங்கு மிக முக்கியமானது.

“Some military historians argue that a ten percent MPR is about the maximum a society can tolerate while continuing to function at normal levels of efficiency.

The American Civil War in which the South and the North between them raised three million out of a pre-war population of 32 million-10 percent, is cited as an instance.

I think that a maximum force level that may occasion anything close to five percent MPR can upset the minimum equilibrium required to efficiently run a democratic state in our times.”

(‘The Cat, a Bell and a Few Strategists’ எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து – தராகி சிவராம், May 1997)

போரியல் ஆய்வாளர்கள் தமது வரலாற்று பார்வையினூடாக, இயல்பு நிலை பாதிக்காமல் கிட்டத்தட்ட 10% வரையில் இந்த MPR ஐ அதிகரிக்கமுடியும் என மதிப்பிடுகிறார்கள்.

தராகி சிவராம் இயல்பு நிலை கெடாமல் 5% வரையில் அதிகரிக்க முடியும் என மதிப்பிடுகிறார்.

இந்த ‘இயல்பு நிலை பாதிக்காமல்’ என்பது ஒரு இறையாண்மை அரசுக்கு இருக்கும் நிர்ப்பந்தம்.
காரணம் இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் ஒரு அரசினுடைய இருப்பு கேள்விக்குள்ளாகும்.

ஆனால் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இயல்பு வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் வாழ்ந்தவர்கள். தினமும் குண்டுவீச்சு, இராணுவத்தின் தாக்குதல் நகர்வு, இடம்பெயர்வு,பொருளாதார முற்றுகை என போர்க்கால சூழலில் வாழ்ந்தவர்கள்.

அதனால் ஒரு இறையாண்மை அரசுக்கு அதிகபட்சம் 10% தான் MPR ஐ கூட்டமுடியும் என வைத்துக்கொண்டால், விடுதலை புலிகளை பொறுத்தவரையில் இதைவிட அதிகமான சதவீதத்திற்கு கூட்டமுடியும். காரணம் புலிகளுக்கு ‘இயல்பு நிலை’ என்ற காரணி பொருந்தாது.

ஆனால் போராட்டத்தின் எந்தவொரு கட்டத்திலும் விடுதலை புலிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 20000 ஐ தாண்டியதே இல்லை.

ஓயாத அலைகள்- 3 இன் மூலம் ஆனையிறவு தளத்தை கைப்பற்றி ,அதன் தொடர்ச்சியாக யாழ்குடாவின் மற்றைய பிரதேசங்களை கைப்பற்ற வாய்ப்புகள் இருந்தும் ஆளணி இல்லாமையால் அதை நிறைவேற்ற முடியாமல் போனதை தளபதி பால்ராஜ் அவர்கள் வருத்தமாக தெரிவிக்கும் பேட்டி இன்றும் யூடியூப்பில் வலம் வருகிறது.

• இது எதை உணர்த்துகிறது?

ஆக ஆளணி பற்றாக்குறை கடுமையாக இருந்தும் விடுதலை புலிகள் conscription முறையை கையாளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட வரலாறு நெடுக Force Ratio (1:10) என்ற விகிதத்தில் புலிகளுக்கு எதிராகவே இருந்தது.

அதாவது ஒவ்வொரு விடுதலை புலி போராளிக்கும் எதிராக குறைந்தது 10 இலங்கை இராணுவம் இருந்தது.

இந்த பதிவில் போரியல் பார்வையில் MPR ஐ உங்களுக்கு விளக்குவதற்காக, 14000 போராளிகள் என்ற எண்ணிக்கையை தொடர்ச்சியாக பயன்படுத்தியிருக்கிறேன்.

1983 இலிருந்து 2009 வரையிலான 26 வருட போரை எடுத்துக்கொண்டால், Force Ratio என்பது விடுதலை புலிகளுக்கு எதிராக குறைந்தது (1:10) வோ அல்லது அதைவிட அதிகமாகவோதான் இருந்தது. இது பற்றிய புள்ளிவிபரங்களை எனது மற்றைய போரியல் கட்டுரைகளில் காணலாம்.

• கட்டாய ஆட்சேர்ப்பு என்பதன் அறியப்படாத பக்கம்

தராகி சிவராம் அவரது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு விடயம்தான் அந்த அறியப்படாத பக்கம்.

இலங்கை இராணுவம் அதனது கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையினை கொடுத்திருந்தது.

யாருடைய பிள்ளைகளாவது விடுதலை புலிகளில் இணைந்திருந்தால் அதை இராணுவத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என. இது இராணுவத்தின் நகர்வு.

பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் சுயவிருப்பத்தோடு இணைந்தார்கள் என இராணுவத்திடம் தெரிவித்தால் அவர்களின் குடும்பம் இராணுவத்தின் மோசமான வதைகளுக்கு உள்ளாகும் என்பதால் , புலிகளால் தங்களது பிள்ளைகள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்கள் என தெரிவிப்பதாக குறிப்பிட்டிருப்பார்.

தராகி சிவராம் அதை பின்வருமாறு விவரித்திருப்பார்.

“#The parents of a boy or a girl who has run away to join the LTTE from an area that is dominated by the army, and more particularly the STF, lodge a complaint as a rule with the local Police or report to the STF camp in the village that their child has been forcibly taken as a recruit by the LTTE.

#This is done to avoid harassment or punishment, particularly in areas dominated by the STF.

Parents whose children have run away are sometimes beaten up by soldiers or by local paramilitary personnel.

Some discreetly move out of the village, giving the impression that the child has been sent outstation for education.

#The majority of parents do try their best to get their son or daughter out of the organization. They go from pillar to post worrying all the time that the village, and hence possibly the local STF, might come to know.

This is what mainly gives rise to the general impression that children are being conscripted by the LTTE.”

• இலங்கையின் ஆயுத போராட்ட வரலாற்றில் கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது. அது எப்பொழுது?

#தமிழீழ ஆயுதபோராட்ட வரலாற்றிலேயே, இந்திய படையின் துணையுடன் EPRLF இயக்கம் உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவ (TNA) ஆட்சேர்ப்பின் போதே, வலுக்கட்டாயமாக சிறுவர்கள் இணைக்கப்பட்டதாக தராகி சிவராம் கூறுகிறார்.

தராகி சிவராமின் முக்கியமான அந்த பகுதி கீழே.

‘ There was only one attempt at conscription in the history of the Tamil separatist movement. The EPRLF which, instigated by India’s external intelligence establishment, foolishly dragooned a large number of children into the ill-fated Tamil National Army, is still paying dearly for the sin’

• ஆனால் போரின் கடைசி 4 மாதங்களில் புலிகள் conscription முறையை கைப்பற்றியதாக வந்த தகவல்கள் உண்மையா?

இந்த தகவல்கள் உண்மையென ஒரு வாதத்திற்கு வைத்து கொள்வோம். நான் மேற்சொன்ன போராட்டத்தின் survival இற்காக செய்யப்பட்ட ஒன்றாகவே இதை அணுகமுடியும்.

#துல்லியமாக கூறினால்,விடுதலை புலிகளின் 26 வருட போரில் கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே , போராட்டத்தின் survival இற்காக இந்த conscription ஐ கையாண்டு இருக்கிறார்கள் என்பதாகவே பொருள் கொள்ளமுடியும்.

இன்று நமக்கு உபதேசம் செய்யும் சகல வல்லாதிக்க நாடுகளும் தங்களுடைய போரின் இக்கட்டான காலங்களில் இதைத்தான் செய்தன. இனி வரும் காலங்களிலும் செய்யும் என்பதே உண்மை.

மேலே நான் தந்திருக்கும் உதாரணங்களை மீண்டும் வாசியுங்கள்.

• உலக ஒழுங்கால் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையுள்ள அரசுகள் வலுக்கட்டாய ஆட்சேர்ப்பை நடத்தும்போது அது சட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறது.

• அங்கீகரிக்கப்படாத de facto அரசுகள் அதை செய்யும்போது சட்ட மீறலாகவும், பயங்கரவாதமாகவும் கருதப்படுகிறது.

• ஆனால் நிகழ்வு ஒன்றுதான்.
இரண்டிலுமே தனி மனிதர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு நடக்கிறது.
ஆனால் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையுள்ள அரசுகள் செய்யும்போது, அவை உலக ஒழுங்கால் ஏற்புடையதாக அங்கீகரிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த போரியல்/ராஜதந்திர சதுரங்க ஆட்டம் இப்படித்தான் ஆடப்படும். ஒரு தரப்பை சட்டத்தை மீறியவர்களாக கட்டமைத்து, அவர்களின் கைகளை கட்டி வைத்துவிட்டு வீழ்த்துவதும் ராஜதந்திரம்தான். அதுவும் இந்த சதுரங்க ஆட்டத்தின் நகர்வுகளில் ஒன்றுதான்.

ஆனால் தமிழ் சமூகம்தான் இந்த சதுரங்க ஆட்டத்தை புரிந்து கொள்ள திணறுகிறது.

இன்றுவரை உலக நாடுகள் conscription போன்ற வார்த்தைகளை வைத்து விளையாடும் ராஜதந்திர ஆட்டத்தை புரிந்து கொள்ள தடுமாறுகிறது.

காரணம் உலக வரலாற்று அரசியல் , போரியலில் நமக்கு இருக்கும் அறிவு போதாமையே. இன்றுவரை தமிழ் சமூகத்திற்கு இந்த உலக ஒழுங்கில் ஒரு புதிய நாட்டை உருவாக்குவது எப்படி என்ற அறிவு கைக்கு எட்டவில்லை.

ஆனால் தமிழ் சமூகத்தின் இந்த அறிவு போதாமைக்காக தலைவர் பிரபாகரன் தயங்கி கொண்டு நிற்கவில்லை. அவருக்கு உலக ஒழுங்கின் இயங்கு விதி துல்லியமாக தெரிந்திருந்தது. இறையாண்மையுள்ள நிலப்பரப்பை வலிமையின் மூலமே உலக ஒழுங்கில் உருவாக்க முடியும் என்ற உண்மை அவருக்கு தெரிந்திருந்தது.

சரி. இந்த பதிவை இதுவரை வாசித்தவர்களுக்கு சில கேள்விகள். இதற்கான பதில்களை நீங்கள் பின்னூட்டமிடலாம்.

• விடுதலை புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தவில்லை என்பதை அன்றை கால புள்ளிவிபரங்கள்,தரவுகளுடன் போரியல் பார்வையில் இந்த பதிவில் நிறுவியிருக்கிறேன்.

1) இதை மறுப்பவர்கள் விடுதலை புலிகள் ‘கட்டாய ஆட்சேர்ப்பை’ நடத்தியிருந்தால் ஏன் அவர்களது MPR இனை 1.1% மேல் கூட்ட முடியவில்லை என்பதை தரவுகளுடன் நிறுவவும்.

2) ஏன் விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட வரலாறு நெடுக Force Ratio (1:10) என்ற விகிதத்தில் புலிகளுக்கு எதிராக இருந்தது என்பதை தரவுகளுடன் நிறுவவும்.

3) எந்த வகையில் இறையாண்மை அரசின் (sovereign state ) கட்டாய ஆட்சேர்ப்பானது non state actor இனுடைய கட்டாய ஆட்சேர்ப்பை விட உயர்வானது என்பதை வரலாற்று பார்வையில் நிறுவவும்.

இந்த கேள்விக்கான பதில்களை பின்னூட்டத்தில் எழுதவும்.

க.ஜெயகாந்த்

(மீள்பதிவு)