2009 இல் இனவழிப்பு யுத்தம் நடைபெற்றபோது மருத்துவமனைகளில் தங்கியிருந்த மக்களின் மீதும்,உணவிற்காகவும் கூடியிருந்த மக்களின் மீது திட்டமிட்டவகையில் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்தவர்.

அன்று 58 டிவிஷனின் பொறுப்பதிகாரிய பணியாற்றிய இவர் தனது படைகள் தமிழர்களை கொல்வதற்கு வரையறையற்ற அதிகாரத்தை வழங்கினார்.
நூற்றுக்கணக்கான குழந்தைகளையும், பெண்களையும் கொன்றுகுவித்த இவரும், இவரது படையினரும் தமிழ்ப்பெண்களின் மீதும், பெண்போராளிகள் மீதும் மேற்கொண்ட பாலியல் வக்கிரங்களும், அதன் பின்னரான படுகொலைகளும் சர்வதேச அமைப்புக்களிடம் இன்று இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக உள்ளன.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்று குவித்த பேரினவாத இலங்கையரசின் செல்லப்பிள்ளை இவர். அதில் இவரின் பங்கும் உண்டு.

இலட்சக் கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இந்த இராணுவத்தளபதி இன்று இலங்கையரசின் செல்லப்பிள்ளை..

தமிழர்களின் இரத்தத்தால் தோய்ந்த இந்த கொடிய மனிதனுடன் இன்று ரீயூப் தமிழ் ஒட்டி உறவாடுகின்றது.

எண்ணற்ற தமிழ்ச்சகோதரிகளை தன் பாலியல் வக்கிரம் தீர்ந்தபின்னர் படுகொலை செய்த இந்த மனிதனுடன் தமிழர்களின் துயர்துடைப்பேன் என முழங்கும் தமிழ்ச்சகோதரியும் கலந்துகொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

ஒரு இனப்படுகொலையாளியுடன்,
ஒரு போர்க்குற்றவாளியுடன் தமிழர்களின் விடியல் குறித்து பேசுகின்றோம் என தமிழர்களை ஏய்த்துப்பிழைப்பதை ரீயூப் தமிழ் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

ரீயூப் குழுவிற்கு வன்மையான கண்டனங்கள்…

நன்றி-RAVI RAVI F.BOOK