#மக்கள்_தலைவர்_சீமான்

#மக்கள்_தலைவர்_சீமான்
#DelhiFarmersProtest
#நாளைஈழத்தில்சந்திப்போம்
#மக்கள்பணியில்நாம்தமிழர்
#உழவர்பாசறை
#நாம்தமிழர்கட்சி
#சீமான்
#தேசிய_உழவர்_நாள்

நாம் தமிழர் கதிர்

அன்றும் இன்றும் என்றும் முதல் நாள் முதல் காட்சி காணும் விஜய் அண்ணாவின் ரசிகன் நான்,
தமிழர்கள் வரலாற்றில் துரோகத்தாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலுமே தோற்கடிக்கபட்டனர் என்பதை என் தமிழ் சமூகம் புரிந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
இன்று அண்ணன் சீமான் கூறிய கருத்தை முற்றிலும் முரண்பட்ட கோணத்தில் பரப்புகின்றனர்.
ரஜினி மற்றும் கமல் மக்களுக்கான போராட்டங்கள் மற்றும் எவ்வித அரசியல் முன்னெடுப்புகளும் இன்றி,
திரையுலக நட்சத்திரம் என்ற ஒற்றை அடையாளத்தை கொண்டு, நாட்டை ஆளத் துடிக்கிறார்கள்.
இதன் மூலம் தமிழர்களை அவர்கள் எந்த அளவு முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்பதை தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணன் சீமான் கூறியது கமல் மற்றும் ரஜினி மட்டும் அல்ல, விஜயாக இருந்தாலும் கூட சினிமா வெளிச்சத்தை மட்டுமே அரசியல் செய்ய தகுதியாக எண்ணி கொண்டு அரசியலுக்கு வர கூடாது என்பதே.
அண்ணன் விஜய்க்கு அதிமுக மற்றும் பிஜேபி தரப்பில் இருந்து பிரச்சனை வரும் போது எல்லாம், அண்ணன் சீமான் குரல் அவருக்கு ஆதராவாக ஓங்கி ஒலித்து இருக்கிறதை அனைவரும் அறிவோம்.
கயவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கி விடாதே தமிழா !
விழுத்துக் கொள் தமிழா !
தமிழாலே ஒன்றாவோம் !
ஆள போறான் தமிழன் !

ஊடக மாமாக்கள்
சீமான் பேசியது:
” ரஜினி கமலை அடிக்கற அடியில், நடிகர் என்பதற்காகவே அரசியலுக்கு வருகிற எண்ணம் இனி எந்த நடிகருக்கும் வரக்கூடாது’
இது தான் சீமான் பேசியது. கீழ News 18. மாமா பைய எப்டி போட்றுக்கான் பாருங்க.
இதுல நைசா விஜய் கோத்துவிட்டு விஜய் ரசிகர்கள நாம் தமிழருக்கு எதிரா கோத்துவிடப் பாக்கறானுங்களாமா.
இந்த ஊடக மாமா பசங்க ஒரு நாளும் திருந்த மாட்டானுக.
ஏண்டா இவ்ளோ பயந்து சாகறீங்க. ஏன் இந்த எச்சத்தனம்.
இப்டி பொழைக்க வேற ஏதாச்சும் தொழில் பண்ணலாம்.


“திரைக் கவர்ச்சி அரசியல்” குறித்து நேற்றைய தினம் விமர்சனங்களை முன்வைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் பற்றி கும்பகோணத்தில் தவறான வாசகங்களோடு பதாகை அடித்திருந்த கௌதம், சபரி ஆகிய சில விஜய் ரசிகர்கள் இன்று என் அலுவலகத்திற்கு நேரில் வந்து புரிதலற்ற தங்களின் தவறான செய்கைகளுக்கு வருத்தம் தெரிவித்தனர்.சமூக வலைதளங்களில் தங்களின் அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டதாக கூறினர். மேலும் விஜய் ரசிகர்களின் இணையதள பொறுப்பாளரான நந்தா என்பவரும் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது என அனைவரும் உறுதி அளித்ததன் பேரில் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சிறு இளைஞர்களின் எதிர்காலம் கருதி கடுமையாக எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
வந்திருந்த விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
வழக்கறிஞர் மணி செந்தில்,
நாம் தமிழர் கட்சி.