#shell கொலைகாரர்கள்

ஈக்வடோர் நாட்டில் வல்லாதிக்க அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் எண்ணை அகழ்வுகள் காரணமாக மாசடைந்து அழியும் தமது விவசாய நிலத்தையும், உயிரினங்களையும் பாதுகாக்கப் போராடும் பழங்குடி மக்களை அடக்க அமெரிக்கா ஒரு வேலையைச் செய்தது. அதாவது எண்ணைவளம் தவிர்ந்த எந்த உற்பத்தியாலும் ஈக்வடோர் நாட்டிற்கு வருமானம் வராமற் செய்துவிட்டால், எண்ணையை மட்டுமே நம்பியிருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்பதே அது. அதற்காக அவர்கள் செய்த கொடூரம்யாதெனில் , எண்ணை உற்பத்தி நிலங்களிலிருந்து எண்ணைக்குதங்களை நோக்கிக் காடுகளூடாகச் செல்லும் எண்ணைக்குழாய்களில் செயற்கையான கசிவினை ஏற்படுத்தும்திட்டமே அது.

அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட கசிவால் ஈக்வடோரின் விவசாய நிலங்கள் அழிந்துபோயின, ஆறுகள், காடுகள் முழுவதும் எண்ணை கலந்தது. ஏறக்குறைய 12000 பறவை மற்றும் விலங்கினங்கள் அழிந்தன. இதனால் விவசாயம்அழிந்தது. ஈக்வடோருக்கு இப்போது வருமானம் என்பது இனி எண்ணையால் மட்டுமே என்ற நிலை வந்தது. அதனால் நிலஉரிமைக்காகப் போராடிய பழங்குடி மக்கள் தளர்வுற்று போராட்டங்களைக் கைவிடலாயினர். இந்த அளப்பரிய செயலைச் செய்தது இன்று உலகம் முழுவதும் கிளைபரப்பியிருக்கும் Shell எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் பொருளாதார அடியாட்களே. எண்ணை அகழப்படும் அந்த இடத்தின் பெயரான shell என்பதையே Shell நிறுவனம் தனது நிறுவனப்பெயராக உபயோகப்படுத்துகிறது.( இந்தவிடயம் பற்றி கடந்த ஆண்டு அகரம்இதழில் விரிவாக எழுதியிருந்தேன்)

சொல்லவந்த விடயம் யாதெனில், “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூலை எழுதிய ஜோன் பெர்க்கின்ஸ் என்பவர் தனது நூலில் ; அந்த எண்ணைக் கசிவை ஏற்படுத்திய நபர்களில் தாமும் ஒருவர் என்று சாதாரணமாக எழுதிக் கடந்து செல்கிறார்.

அடேய் கிராதகா…குற்றத்தைச் செய்ததுமட்டுமின்றி, அதையே ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் நூலாக்கி கோடிகோடியாக பணம் சேர்த்த இவனை என்னவென்று சொல்வது..? யார் தண்டிப்பது..?

-தேவன்

#shellகொலைகாரர்கள்