இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் !

2009 இற்கு முன்னர் மாவீரர்கள் தொடர்ப்பான இணையமாக தமிழ்நேசன், ஈழத்தமிழ் , சந்திரவதனாவின் மாவீரர்கள் வலைப்பூவும் தான் இருந்தது அதுவும் சொற்ப பதிவுகளுடன் அதனை அடிப்படையாக வைத்து ஒரு முழுமையான பதிவுகளாக ஈழர்வர்குரல் வலைப்பதிவில் சேகரிக்க ஆரம்பித்தோம் அதிலிருந்து தான் பல புதிய வலைப்பதிவுகள் வெட்டி ஒட்டத்தொடங்கினார்கள்.

2009 பின்னர் பல தமிழ் இணையங்கள் நிதிப்பற்றாக்குறையாலும் , மிரட்டியும் பல காரணங்களினாலும் காணாமல் ஆக்கப்பட்டுக் போய்க்கொண்டிருந்த போது எமது பதிவுகள் தான் அதன் பின்னர் வந்த பல புதிய இணயங்களுக்கு கை கொடுத்தன. திருடி தமது பெயர் போட்டு சுயவிளம்பரம் செய்தன அதனை அந்த இணையங்கள் ஒருபோது ஏற்றுக் கொண்டதும் கிடையாது இப்பவும் அதனைத் தான் புதியவர்களும் செய்து வருகின்றார்கள்.

புலிகள் போராட்டம் தொடர்பான பதிவுகள்,படங்கள் , காணொளிகள் பல போராளிகளின் உயிர்த்தியாகத்தால் எடுக்கப்பட்து அவர்கள் யாரும் இதற்கு உரிமம கோரியது கிடையாது ஆனால் அதில் பெயர் போட்டு ஏதோ தாங்கள் நேரடியாக எடுத்தது போல் சகலரும் தமது இணையங்களின் பெயரைப் போட்டு சுயவிளம்பரம் தேடும் அற்பர்களாகத் தான் இன்றைய தமிழ்த்தேசியம் இருக்கின்றது. இதில் இன்று எவரும் விதிவிலக்கில்லை. ஒரு இணயம் கூட உண்மையாக இல்லை.

புலிகளால் எடுப்பட்ட படங்களின் மேல் தமது பெயரை அதுவும் அந்த படத்தை அசிங்கப்படுத்தும் அளவுக்கு பதித்திருப்பார்கள். அதற்கு எதிராக பல பதிவுகளை நாம் இட்டிருந்தோம் அதில் எந்த பலனும் இல்லை.

ஒரு காணொளியை தயாரிப்பதற்கு பல மணித்தியாலங்கள் தேவைப்படும்  , நாம் பல   எம்மிடமிருந்த    ஒளிவீச்சுக்களை ஒளிநாடாவிலிருந்து  உருமாற்றம் செய்து பதிவேற்றியிருக்கின்றோம் அவற்றை திருடி வெளியிடுபவர்கள் உண்மையில் மாவீரர்களை நேசிப்பவர்களாக இருந்தால் எம்மிடம் இல்லாத  ஒளிவீச்சு நாடாக்களை உருமாற்றம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி யாரும் செய்யவில்லையே !

இருப்பதை திருடி தமக்கு விளம்பரம் தேடுகின்றார்களே தவிர இல்லாதவற்றை  தேடி , தயாரித்து வெளியிட முன்வராது ஏன் ?

தமிழ்மீடியா கவுஸ் யூரிப்பில்  9 ஆயிரம் பேர் ஆதரவு   http://www.tamilmediahouse.com/    சுயமாக ஒரு காணொளி கிடையாது .

இவற்றை கேள்விப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதும் இல்லை

எம்மால் தயாரிக்கப்பட்ட காணொளிகளை யாரும் மறுபதிவேற்றம் செய்யலாம் ஆனால் அதில் உரிமை கோரக் கூடாது அது ஈனத்தனம் மட்டுமல்ல சுயவிளம்பரமும் கூட புதிதாக வரும் எல்லா தமிழ் இணையங்களும் புலிகளின் பதிவுகளைப் போட்டு புலிவேசம் போட்டு செய்யும் ஈனத்தனத்தில் இதுவும் ஒன்று அதுவும் அடுத்தவரின் உழைப்பைத் திருடுபவர்கள் புலிகளின் தியாகத்தைப் போற்றுவார்கள் என்பது சந்தேகமே !

போலிகளுக்கு மட்டுமே ஆதரவு அழித்துவ ரும் தமிழ்மாக்கள் மத்தியில் புலிகளின் பதிவுகளை சேகரித்து வைப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது ஆக இனி நாம் எந்த பதிவுகளையும் இடப்போவதில்லை இருப்பதையும் அழித்து விட முடிது செய்துள்ளோம்

இறுதி வரை போராடியவர்களும் அவர்கள் குடும்பமும் வறுமையில் வாட அவர்களின் தியாகத்தை விலை பேசி விபச்சாரம் செய்யும் இந்த போலித்தேசிய இணையங்கள் .

இதனால் தான் நாம் இணையத்தை http://eelamview.com/  மூடி விட்டோம் பச்சொந்திகளுக்கும், பணத்தேசியத்திற்கும், போலிகளுக்கும் மத்தியில் இனி புலித்தேசியம் செல்லாது !

இப்படி ஒருவரின் உழைப்பைத் திருடி தனதாக அடுத்த சந்ததியிடம் விபச்சாரம் செய்ய வந்துள்ளார்கள் 

——

அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் !
http://www.kalaththil.com
உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் தமிழீழ உறவுகளின் வாசல் நோக்கி தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. போராட்ட நெருக்கடியிலும் உயிர் தியாகங்களிலும் எம் போராளிகள், கலைஞர்கள்,பொதுமக்களின் அர்ப்ப‌ணிப்பில் உருவாக்கப் பட்ட படைப்புகளையும் மற்றும் எம் மொழியின் எம் போராட்டதின் வரலாறு சுமந்த பதிவுகளினை அழிந்து விடாமல் பாதுகாத்து எமது அடுத்த சந்ததியினரிடம் கையளிப்பது எமது கடமையாகும்.

///// ஏற்கனவே பல இணையங்களில் சேகரிப்பட்டிருக்கின்றன  இருக்கின்ற இணையங்கள் நிதிநெருக்கடியில்  இவரும் பணம் பண்ணலாம் என்று புதிதாக வந்துள்ளார்    ///////

களத்தில் இணையம்  இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ !

எமது உழைப்பைத் திருடி தமது பெயர் போட்டு வெளியிடும் களத்தில் இணையம்,

http://www.kalaththil.com/

இது போல் பல பாடல்கள், காணொளிகள் நாம் தயாரித்தவை இன்னொருவரின் உழைப்பைத் திருடி தமது உரிமை கோரும் ஈனத்தனம் , இவர்கள் இன்னொருவரின் தியாகத்தை போற்றுவார்களா ?
புலிகளின் தியாகத்தில் விளம்பரம் தேடும் போலித்தேசியவாதிகள்

 


விடுதலைப்புலிகள் இவர்களின் விளம்பரப் பண்டங்களா ?

eelavidyal fake 2காப்புரிமை

காப்புரிமை விடயத்தில் தமிழ் இணையங்கள் முறைக்கேடாக நடந்து வருவதும் அதை ஒரு பெரிய விடயமாக தமிழ் இணையங்களோ , மக்களோ அலட்டிக்கொள்வதில்லை . ஒருவருடைய ஆக்கத்தை ,உழைப்பை திருடி அதில் அவர்கள் பெயரை நீக்கி தமது பெயர் பொறித்து  சுயவிளம்பரம் செய்வது அல்லது அவர்களின் இணையங்களின் பெயர் பொறித்து பதிவிடுவது சட்டப்படி குற்றம், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்.

அதை இன்னும் யாரும் செய்யாததால் இந்த திருட்டு தொடர்ந்த பாடிருக்கின்றது. அதை அவர்கள் இது தமிழ்தேசியம் ,தமிழர்களின் சொத்து என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை முட்டாளாக்கி தமக்கு விளம்பரம் தேடுகின்றார்கள்.

2009 மேக்கு முன்னர் தமிழ் இணையம் தேசியம் சார்ந்தவையாகவும் ,இலாபநோக்கில்லாத  தமிழ் எழுத்தாளர்களால்  அமைப்புக்களின் நிதி உதவிகளோடு இயங்கி வந்தன. ஆனால் 2009 மேக்கு பின்னர் அதற்கு முன்னர் இயங்கி வந்த லங்காசிறி தவிர்ந்த பெரும்பாலான இணையங்கள் நிதி வழங்கல், பிரிவினை , உளவுத் துறைகளின் மிரட்டல் போன்ற பல காரணங்களால் மூடப்பட்டன.

இன்னமும் Tamilnation மாற்றுத் தளத்தில் This is a mirror site of “Tamilnation.org” Since the original website is down to unknown reason(s) தான் இயங்கிவருகின்றது  சிறந்த எடுத்துக் காட்டு.

இப்படியான நிலையில் 2009 மேக்கு பின்னர்  செத்தவீட்டு இணையமான லங்காசிறியின் வருவாயைப் பார்த்து  பல புதிய இணையங்கள் பணம் பண்ணும் நோக்கில் புத்தீசல் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.

தமிழ் இணையபரப்பில் சுயமாக எழுதுபவர்கள்  சிலரே அதுவும் சுய முகத்துடன் எழுதுபவர்கள் ஒரு சிலரே.  ஏன் லங்காசிறிக்கு கூட ஒரு பத்தி எழுத்தாளர் கிடையாது. எல்லாம் வெட்டி ஒட்டுதல் தான்

வெட்டி ஒட்டுதல் தான் இன்றைய தமிழ் இணையங்களின் நிலை எம்மையும் சேர்த்துத் தான் அதனால் கண்ட கண்டதுகள் எல்லாம் பணத்திற்காக தமிழ் இணையம் நடாத்தத் தொடங்கி விட்டார்கள்.

இங்கே விளம்பரம் செய்யுங்கள் என்று கூவிக் கூவி விற்கின்றார்கள்.

தாம் பிரபல்யம் ஆவதற்கு இவர்கள் செய்யும் முதல் வழி தம்மை புலி ஆதரவாளர்களாகக் காட்டுவது  அதற்காக இவர்கள் வீரவணக்கம் என்ற போர்வையில் அடுத்தவரின் உழைப்பை திருடி தமது பெயர் பொறித்து விசுவாசி போல் காட்டுவது .

புலிகளின் படங்களை காப்புரிமை கோருவது

விடுதலைப்புலிகளின் படங்களில் சிக்கல் தொடங்குகின்றது.

காப்புரிமை என்ற பார்வையில் பார்த்தால்

1.புலிகளின் படங்கள் பெரும்பாலும் புலிகளின் களப்படப்பிடிப்பாளர்களால் தான் எடுக்கப்பட்டது அதற்கு புலிகள் அமைப்பு மட்டுமே உரிமை கோரமுடியும்.

2.வீரவணக்கம் அஞ்சலிப் படங்கள் புலிகளாலும் , கிளை அமைப்புக்களாலும் வடிவமைக்கப்பட்டு வந்தது.

3.2009 மேக்கு பின்னர் சில வீரவேங்கைகள், தேசக்காற்று  ,எமது குழுமம் மற்றும் இன்னும் சிலர் வடிவமைத்து வருகின்றோம்.

4.காணொளிகளும் இந்த வகையில் சேரும்.

ஆக உத்தியோக பூர்வமாக புலிகள் அமைப்பு இல்லாத போது  புலிகளால் எடுக்கப்பட்ட புலிகளின் படங்களை இங்கு யாரும் உரிமை கோரமுடியாது !

அவர்களால் வடிவமைக்கப்பட்ட படங்களில் அவர்கள் இலட்சினை பொறிப்பதில் தவறில்லை !

Maj Selvamathi

ஆனால் இன்று ஏற்கனவே புலிகளால் எடுக்கப்பட்ட புலிகளின் படங்களை வெளியிடுபவர்கள் அதில் தமது பெயர் பொறித்து தமக்கெ காப்புரிமை அல்லது சுயவிளம்பரம் தேடுகின்றார்கள்.veeravengaithilak   soosai-1

sritharan sri (2)அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இணையப்பரப்பில் உள்ள படங்களிலும் தமது பெயர் பொறித்து வெளியிடுகின்றார்கள். இது ஒரு அருவருப்பான செயல்.

thesakatrutamilarultamilarul 2

விடுதலைப்புலிகள் படங்களின் மீது பெயர் பொறித்து விளம்பரம் தேடுவது அல்லது காப்புரிமை கோருவது தான் விடுதலை உணர்வா ? அல்லது அவர்கள் தான் தேசப்பற்றாளர்களா ?

அந்த வகையில் ஆனால் நாம் கோருவது

எம்மால் வடிவமைக்கப்பட்ட படங்களில் எமது பெயரை நீக்கி விட்டு தமது பெயரைப் போட்டு வெளியிடுவது அல்லது  எமது பெயரை நீக்கி வெளியிடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அது மட்டுமல்லாமல் புலிகள் தமிழர்களின் சொத்து நீ எப்படி உரிமை கோரமுடியும் என்று சொல்லி அவர்கள் பெயர் பொறித்து வெளியிடுகின்றார்கள் வீரவணக்கம் என்னும் பெயரில் விபச்சாரம் செய்கின்றார்கள்

எமது இணையத்தில் திருடியவர்கள்

tamilwin fruadtamilarul 2 stealingsritharan srieelavidyal fake facebookkathiravan fakeeelavidyal fake 2asrilanka fake

இவை எல்லாம் சிறு உதாரணங்கள் தான், இன்னும் பலர் இருக்கின்றார்கள்  இனி இவர்களை உடனுக்குடன் துகிலுரித்துக் காட்டுவோம்.

fake copyrightஎமது படத்தை திருடிய சிறிதரன் சிறி க்கு செந்தமிழினி நன்றிகள்  என்பது அதிகப்பிரசங்த்தனமாக இருக்கின்றது அவர் இந்த படத்தை எடுத்தாரா ?  எந்தவகையில் காப்புரிமை ?

அடுத்து பவித்ரா நந்தகுமார்pavithra 2தன்னுடைய கவிதையை வெளியிட்ட இணையத்திற்கு நன்றிகள் எமமால் வடிவமைக்கப்பட்டதை திருடி வெளியீடு  அது மட்டுமா ? எங்கிருந்து எடுத்தீர்கள் என்று போட்டிருக்கலாம் அதுவும் இல்லை எமக்கு பதில்லை  2 நாள் ரூம் போட்டு யோசித்து பதில்

pavithra

என்னால் உருவாக்கப்பட்ட ஆக்கம். இதனை வெளிச்ச வீடு இணையம் பதிவிட்டிருந்தது. ஆனால் அதை திரிபு படுத்தி எனது பெயரையும், இணையத்தின் பெயரைம் நீக்கி அருள் என்ற பெயரில் ஈழத்தின் உதயம் (eelam sun) என்ற இணையம் பதிவிட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படி மற்றவர்களின் கருத்துக்களை களவாடி அதை வேறு ஒருவரின் பெயரில் பதிவிடுவது என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை உணர்ந்து செயற்படுவது ஈழத்தின் உதயம் இணையத்திற்கு நல்லது என நினைக்கிறேன்.
pavithra 3இப்படிப் புலம்பியிருக்கின்றார் அதாவது தமது உழைப்பை திருடியதற்கு ஓலமிடுபவர்கள் மற்றவர் உழைப்பை திருடுகின்றார்கள்

இது தான் இன்றைய புலி விசுவாசிகள் என்று வலம் வருபவர்களின் சுயரூபமா ?

இணையத்தில் திருடி விபச்சாரம்- பாகம் 2

இப்படி  பல காலமாக விபச்சாரம் செய்கின்றார்கள்  எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு, இனி உடனுக்குடன் அம்பலப்படுத்துவோம் !

 

VIVASIYITTN NEWSTAMILWINEELAM RANJAN FACEBOOK

விடுதலைப்புலிகள் இவர்களின் விளம்பரப் பண்டங்களா ? பதிவு இணையம்

பதிவு இணையத்திலிருந்து ஏப்ரல் 15, 2016 வேந்தன்

மாமனிதர் கலைஞர் திரு,நாவண்ணன் ஐயா அவர்களின் நினைவு நாள்!navanannaavannan-2navanan 33navanan 3naavannan with jeyamnaavannan

Advertisements

Occasionally, some of your visitors may see an advertisement here

ஈழப்பார்வை குழுமம்

%d bloggers like this: