தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா?

தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா? உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை சற்று புறம்தள்ளி விட்டு எழுத்தாளர் ஆழி செந்தில்நாதனின் இந்த தெளிவான உரையை கொஞ்சம் நிதானமாக கேளுங்கள்.


“போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்…” ரஜினி பேச்சின் அர்த்தம் என்ன?




ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்…!

*தலைவா நீ வா தலைவா ..! நீ ஜெயலலிதாவை 1996 ளில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க . நாம ,மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்? சொல்லு தலைவா ?

ஜெ. முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம் .

நீங்க காவல் துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உங்க காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது .. நீ வா தலைவா…!

*எம்.ஜி.ஆர் செட்டப் லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கு தெரியப்போவுது நீ வா தலைவா ..!

*என்னமோ நம்ம திமுக வுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க .. ஏற்கனவே அதிமுக ஆட்சில ஏற்பட்ட வெறுப்பு+திமுக +மூப்பனார் கூட்டணி னு விழ இருந்த பனம் பழத்துல போய் உட்காந்துட்டு என்னால தான் ஜெ தோற்றார் னு அள்ளி விடுரோமே இது எவனுக்கு தெரியப் போகுது.. நீ வா தலைவா…!

*ஜல்லிக்கட்டு ,ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் பிரச்சனை னு எதுக்குமே வாய் திறக்காம ஒன்னே காலணா க்கு பெறாத பண மதிப்பிழப்பு திட்டத்தை மோடி கொண்டு வந்த போது முதல் ஆளாய் “ஹேட்ஸ் ஆப் மோடிஜி “ னு வாழ்த்தி துண்டு போட்ட உன் லட்சணத்த எவன் கேள்வி கேட்க போறான் .. நீ வா தலைவா…!

*எல்லா நடிகர்களுமே தங்களால் இயன்றதை செய்யும் போது ,சத்தியராஜ் நம்மை விட அதிக நலத்திட்ட உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் போது , ஜெஞ்சிட்டேன் ஜெஞ்சிட்டேன் னு பீத்துரோமே..! நீ வா தலைவா ..!

*46 வருடம் தமிழ்நாட்டுல இருந்ததால நான் பச்சை தமிழன்னு நீங்க சொல்லும்போது , அப்ப 50 வருசமா பாணி பூரி வித்துட்டு திரியுர இந்திக்காரன் என்ன கிளி பச்சை தமிழனா னு கேட்டு எவனும் உன்னை செருப்புலயே அடிக்கலையே… நீ வா தலைவா ..!

*2004 எம்.பி தேர்தல்ல பா.ம.க போட்டியிட் ட 6 தொகுதியில் மட்டும் பாமாகவை எதிர்த்து ரசிகர்களை வேலை செய்யச் சொன்னதும் அந்த தேர்தலில் 6 தொகுதியிலுமே பா.ம.க அமோக வெற்றி பெற்றதும் (நம்ம மக்கள் செல்வாக்கு) இப்ப எவனுக்கு தெரியப்போவுது . நீ வா தலைவா ..!

*60 வருசத்துக்கு மேல போராடுற ஐயா நல்லக்கண்ணுவை யார்னே தெரியாத இந்த கூட்டம் உங்களை வெறும் படத்துல நடிச்ச ஒரே காரணத்துக்கு தலைவன்னு சொல்லுதே .. இந்த மானங்க்கெட்ட தமிழர்களை ஆள நீ வா தலைவா ..!

*ஐயா வீரப்பன் கொல்லப்பட்ட போது “அரக்கன் ஒழிந்தான்” னு திருவாய் மலர்ந்த உங்களை தமிழர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துல வச்சுருக்காங்களே அந்த பாவத்துக்காச்சும் நீ வா தலைவா ..!

Advertisements