வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்

சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்… என்பதுதான் உண்மை!தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான்.Brigadier Sornam

களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டா அந்த தாக்குதல் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அந்தக் களத்தில் அவருக்கு கீழ் போராடிய போராளிகள் உணர்ந்திருந்த காரணத்தால் “முன்னேறு” என்னும் தளபதியின் புலிக் கர்ச்சனையைக் கேட்டதுமே..வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் போராளிகள் முன்னேறி எதிரிகளின் நிலைகளைத் தாக்குவார்கள் . பூனகேரித் ‘தவளை’ நடவடிக்கையின்போது பங்குபற்றிய ஓர் இளம் போராளி சிலகாலம் என்னுடன் நின்றவர் தவளை நடவடிக்கையின் போது அவரையும் அனுப்பும்படி எனக்கு வேண்டுகோள் வந்ததும்அந்தப் போராளி மகிழ்வுடன் துள்ளிக் குதித்தான்..இதுதான் புலிகள் அமைப்பின் சிறப்புக் குணம்!..

எமது போராளிகளுக்கு தாக்குதல் நடவடிக்கையில் பங்கு பற்றுவது என்றால் கரும்பு தின்னுவது போன்றது!.1993இல்…பூனகேரி தாக்குதல்( தவளை பாய்ச்சல் )நடந்தபோது அதில் பங்குபற்ற எமது போராளிகள் ஒவ்வொருவருமே ஆர்வத்துடன் இருந்தார்கள்..சிலவேளை தாக்குதல் நடவடிக்கைக்கு ஓர் போராளிக்கு அழைப்பு வரவில்லை என்றால் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எதையோ பறிகொடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.அந்த நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு எது சொன்னாலும் அவர்களின் காதுகளில் அது ஏறுவதில்லை.


அதற்கு ஓர் சிறு உதாரணம் சொல்கிறேன் படியுங்கள்.

ஒரு தாக்குதல் நடவடிக்கையில் பங்குபெறும்முன்களப்போராளிகளுக்கு பெரும்பாலும் சில வாரங்களுக்கு முன்னரேஅவரின் பொறுப்பாளர் மூலம் அழைப்பு போய்விடும்.ஆனால் எங்கே தாக்கப் போகிறோம்?Tiger commanders Sornam, Balraj with S.P. Thamilchelvan during LTTE Counter Op. 'Tiger Leap' in Jaffna

அல்லது எப்போது அந்த முகாமை தாக்கப் போகிறோம்? என்பதை புலிகள் பெரும்பாலும் இறுதி நேரத்தில்தான் சொல்வர்.ஆயினும் முன்கள வீரர்கள் சிலருக்கு சில விசேட பயிற்சிகள் கொடுக்க வேண்டும் என்பதால் முன்பே அழைத்து இராணுவ வரைபடம் பற்றியும் தாக்குதலின் இலக்கு பற்றியும் விளக்கமாகச் சொல்லப்படுவதுடன் அதற்கான சிறப்பு பயிற்சியும் அளிக்கப் படும்.

என்னுடன் இருந்த அந்தப் போராளிக்கு இறுதி நேரத்தில்தான் அழைப்பு வந்தது..ஆனால் அவருடன் பயிற்சி பெற்ற சில போராளிகள் ஏதோ ஓர் நடவடிக்கைக்கு என்று சொல்லி ஏற்கனவே அழைக்கப் பட்டிருந்ததை அறிந்த அந்த இளம் போராளி எப்போதும் சோர்வாகவே காணப்பட்டார்.ஒருநாள் எனது காருக்கு எண்ணெய் பார்த்து ரேடியேட்டருக்கு’ தண்ணீர் விடும் பணியை அவர் செய்து கொண்டிருந்தபோதுதண்ணீர் விடும் ரேடியேற்றருக்குள்’ எண்ணெயை விடச் சென்றார்..இதை எதேச்சையாக கண்ட நான் ஓடிச் சென்று தடுத்துவிட்டேன்..தாக்குதலுக்கு அழைப்பு வரவில்லையே என்ற ஏக்கத்தால் யோசனையால் விளைந்த சம்பவம் இது!எனவே புலிகள் என்பவர்கள் உண்மையிலேயே நிஜப் புலிகள் போன்றவர்கள்தான்.

இரையைப் பிடிப்பதுதான் புலிகளின் இலக்கு என்றால் எங்கள் புலிகளின் இலக்கு அதைவிட கூர்மையானது.வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புலிகள் என்றால் ஆயுதங்களைக்கட்டிக் கொண்டு காட்சி காட்டுபவர்கள் என்று சில வேளை எண்ணம் வரலாம்.ஆனால்  அவர்களின் இதயத்துக்குள் எப்போதும் சிங்களவர்களை சிங்கள இராணுவத்தை பழிவாங்கவேண்டும் என்ற உணர்வே உண்டு.

அதிலும் பிரிகேடியர் சொர்ணம் போன்றவர்கள்  சிறுவயதில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்ந்தபோது பட்ட அடிகளின் வலியைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்..அதனால்தான் அவர்களின் கைகள் எப்போதும் போராட தாக்குதல் நடாத்த துடிக்கின்றன!

பிரிகேடியர் சொர்ணம் அந்த ரகத்தில் இருந்து இன்னும் வேறுபட்டவர் .போராடிய வேளை ஆயுதத்தை  எந்தியதுடன் தலைமை தாங்கும் பண்பையும் மிகச் சிறப்பாக பெற்ற ஒருவர் என்று கூட சொல்லலாம்.. ‘தவளை நடவடிக்கையின் போது நாகதேவன்துறை கடற்படை முகாமைத் தாக்கும் பணி தளபதி சூசை தலைமையில் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது..அப்போது கடற்புலிகளின் அரசியல் வேலை என் தலைமேல் விழுந்த நேரம் என்பதால் பின்கள வேலைகளின் சில பாரிய பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்திருந்தார் தளபதி சூசை.அதில் நான் வெளியேயும் உள்ளேயும் ஓடவேண்டியிருந்தது.

அதிக அளவில் மக்களை தாக்குதல் நடக்கும்போதேகொண்டு சென்று களத்துக்கு அண்மையில் சேர்க்கவேண்டி இருந்தது.கைப்பற்றப் படும் சிறியரக நீரூந்து போர்க் கப்பல்கள் பலவற்றை கைப்பற்றி எமது முகாமுக்கு டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டு செல்வதற்கு பாரிய மனித வலு அன்று தேவை பட்டது .அதைச் செய்யும் பணியில் அன்று நான் மிகுந்த வெற்றி பெற்றேன் என்றால் அந்த அதிகாலைப் பொழுதில் மக்கள் நூற்றுக்கணக்கில் தாக்குதல் நடந்த இடத்துக்கு எம்முடன் வரத் தயாராக இருந்ததுதான் பெரும் வெற்றிகளில் ஒன்றாகும்!ஆனால் தளபதி சொர்ணம் எமது இடத்தில் இருந்து தெற்கே தன்..தரைபிரிவுப் படையோடு அப்போது இருந்தார்.sornam 2

கடற்புலிகளின் தாக்குதல் ஆரம்பித்து அதன்மூலம் பூனகேரிக்கு அரணாக இருந்த நாகதேவன் துறையில் உள்ள சிங்களக் கடற்படை முகாம் கடற்புலிகளிடம் விழுந்த பின்னர்தான் பூனகேரியைச் சுற்றி நின்ற எமது தரைபடைப் பிரிவுகள் பூனகேரி முகாம் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே புலிகளின் திட்டம்.அழகிய வைகறைப் பொழுதுக்கு முன்னர் கடற்புலிகளின் அதிரடிப் பிரிவு நாகதேவன்துறை கடற்படை முகாமை தாக்கி அழித்து சின்னா பின்னப் படுத்திவிட்டனர்.அப்போதுதான் எதிர்பார்த்தவாறு தளபதி சொர்ணம் உட்பட பல தளபதிகள் தத் தம் குழுக்களை முன்னேறித் தாக்கும் பணியில் ஈடுபடுத்தினர்..ஆம்..அந்த நடவடிக்கைகள் யாவும் வைகறை பொழுதுக்குள் முடிந்து எண்ணிறைந்தஆயுதங்களை அந்த முகாமுக்குள் இருந்து புலிகள் அள்ளி எடுத்தனர்..அவைகளில் முக்கியமானவை இராணுவத்தின் கனரக டாங்கிகள் சில  மற்றும் சில ஆட்டிலறிகள் ஆகும்..தானியங்கி துப்பாக்கிகளோ நூற்று கணக்கில் இருந்தன.பிரிகேடியர் சொர்ணனின் படை அணியும் அதில் ஒன்று.

கனரக டாங்கிகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் ஏற்கனவே சில போராளிகளுக்கு அவற்றை எப்படி இயக்கவேண்டும்? என்பது பற்றி பயிற்சி கொடுக்கப் பட்டிருந்தது..இராணுவ வேவு நடவடிக்கைகள் நூறு வீதம் வெற்றி அளித்ததால்தான் அன்று ‘தவளை’நடவடிக்கை மாபெரும் வெற்றியை ஈட்டியதுடன் நூற்றுக் கணக்கான இராணுவத்தினரும் மாண்டுபோக அது காரணம் ஆயிற்று.!

தளபதி சொர்ணனின் பங்களிப்பு ஒப்பரேசன் ‘தவளை’ நடவடிக்கையில் மறக்க முடியாத ஒன்று ஆகும்!
தளபதி சொர்ணம் பங்கெடுத்த சிலமுக்கிய தாக்குதல்கள் பின்வருவன ஆகும்!

(1) ஆகாய கடல் வெளிச் சமர்.
(2) மாங்குளம் தாக்குதல்
3) ‘தவளைப் பாய்ச்சல்’ தாக்குதல்.
(4) மண் கிண்டி மலைத் தாக்குதல்.
(5) புலிப் பாய்ச்சல் தாக்குதல்
(6) இதய பூமி தாக்குதல்
(7)முல்லை முகாம்தாக்குதல்
(8) சூரியக் கதிர் நடவடிக்கை
(9) ஓயாத அலைகள்’ நடவடிக்கை
(10)ஜெய சிக்குறு நடவடிக்கை முறியடிப்பு’
(11) எல்லாளன்’ நடவடிக்கை
(12) மண்டைதீவு முகாம் தாக்குதல்
(13) திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற பல தாக்குதல்கள்.

இப்படி இன்னும் ஏராளமான தாக்குதல் நடவடிக்கைகள் உண்டு.எதை எழுதுவது? எதை விடுவது? நிச்சயம் பிரிக்கேடியர் சொர்ணனின் வீர வரலாறு தனி நூலாக எழுதப் பட வேண்டிய ஒன்றே!பிரிகேடியர் சொர்ணத்தை திருமணம் செய்யும்படி தலைவர் வேண்டிக் கொண்டபோது x என்னும் பெண் போராளியை மணந்து கொண்டார்.தலைவர் எது சொன்னாலும் தட்ட மாட்டார் சொர்ணம் ..

இயக்கத்தில் தலைவரின் பிரதான மெய்ப் பாதுகாவலராக மட்டும் அல்ல.. உயிர்க் கவசமாக இருந்தவர்தான் பிரிக்கேடியர் சொர்ணம்..தலைவரின் சொற்படி சொர்ணம் திருமணத்துக்கு சம்மதித்து திருமணம் நடக்க இருந்த வேளை….திருமணத்துக்கு தலைவர் நிச்சயம் வருவார்என்பதால் திருமணத்துக்கு உடுத்தியிருந்த தன் வேட்டிக்குள் தன் கைத் துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டே திருமணம் செய்தார்..ஏன் தெரியுமா? அப்போதும் கூட தலைவரின் பாதுகாப்பு முக்கியம் என்பதால்! இப்படி ஓர் தலைவரின் மீது விசுவாசம் மிக்க ஓர் வீர மெய்ப் பாதுகாவலரின் கதையை நான் எங்கும்கேட்டதில்லை. படித்ததும் இல்லை..சுமார் ஆறரை அடிக்கு மேல் உயரம் உள்ள..வீரத்தின் இலக்கணமாக விளங்கிய தளபதி சொர்ணம் 2009 இறுதி முள்ளி வாய்க்கால் போரின்போது தலைவரை தன் சிறகுகளுக்குள் வைத்து காத்து தன் விடுதலைப் போராட்டப் பணியை கடைசி வரை நிறைவேற்றி 15.5.2009 இல் வீரச் சாவை தழுவிக் கொண்டார்.

மூன்று பிள்ளைகளுக்கு தந்தை ஆன தளபதி சொர்ணனின் வரலாற்றை ,வீரத்தை ,செயல்பாடுகளை ,அர்ப்பணிப்பு உணர்வுகளை தமிழ் உலகம் உள்ளவரை எவராலும் நிச்சயம் மறக்க முடியாது! இது ஓர் பூரண வரலாறு இல்லை என்பதால் என்னால் சில சம்பவங்கள் எழுதப் படாமல் விடுபட்டிருக்கலாம்..ஆனால் ஒரு காலத்தில் தளபதி சொர்ணனின் வரலாறு நிச்சயம் யாராவது ஒரு முன்னாள் புலியால் நிச்சயம் எழுதப் படும்போது அனைத்தும் வெளியில் வரும்!அப்போது ஓர் வரலாற்று நாயகனின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது மட்டும் உண்மை!..

Brigadier Shashikumar