கனடிய அரசின் போக்கில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது எப்படி ? – பற்றிக் பிரவுன்

vote for patric brown

இலங்கையில் தமிழர்களிற்கு அநீதி நடக்கிறது என்ற கருத்தை தனியாளக நான் எனது கட்சி சார்ந்த கூட்டங்களில் தெரிவித்த போது முதலில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எனது கருத்திற்கு ஆதரவளித்தனர். மீண்டும் மீண்டும் நான் கூற இலங்கைத் தமிழர்களிற்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பதை 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர். இதனைக் கண்ணுற்ற கௌரவ பிரதமர் ஆம் இந்த விடயத்தில் நாம் மேலும் உண்மைத் தண்மையை ஆராயவேண்டுமென இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பினார். அதற்கு முன்பாக நானும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரும் செல்ல முனைந்த போது விசா மறுக்கப்பட்டதை எமது அரசு பாரதூரமாக நோக்கியது.

இலங்கையில் தமிழர்களிற்கு அநீதி நடக்கிறது என்ற கருத்தை தனியாளக நான் எனது கட்சி சார்ந்த கூட்டங்களில் தெரிவித்த போது முதலில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எனது கருத்திற்கு ஆதரவளித்தனர். மீண்டும் மீண்டும் நான் கூற இலங்கைத் தமிழர்களிற்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பதை 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர். இதனைக் கண்ணுற்ற கௌரவ பிரதமர் ஆம் இந்த விடயத்தில் நாம் மேலும் உண்மைத் தண்மையை ஆராயவேண்டுமென இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பினார். அதற்கு முன்பாக நானும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரும் செல்ல முனைந்த போது விசா மறுக்கப்பட்டதை எமது அரசு பாரதூரமாக நோக்கியது.

http://www.tamilsforpatrick.ca/

PATRICK BROWN

Visit Patrick’s Website

ஒட்டாவாவிலுள்ள சிறீலங்காத் தூதர் சந்தித்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் நானும் சந்தித்து அவர்களிற்குத் தமிழர்களின் பிரச்சினை என்ன என்பதை எடுத்துரைத்தேன் என திரு. பற்றிக் பிரவுன் அவர்கள் தெரிவித்தார். சிறீலங்கா தூதர் எமது பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க விடுதிக்கு வரும்போது விருந்தினர் வருகைப் புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும். எனவே அவர் யார் யாரையெல்லாம் சந்தித்தாரோ அவர்களை நான் அடுத்த நாள் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் தொடர்பான உண்மை நிலையை எடுத்துரைத்தேன்.

எனவே எனக்கு இந்தப் பிரச்சினை மீது இவ்வளவு ஈர்ப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் திருமதி ரஞ்சி சுரேஸ்குமாரும் அவரது குடும்பத்தினருமே. எனது அலுவலகத்திற்கு வந்து தாரைதாரையாக கண்ணீர் விட்டு அழுதார்கள். எனவே எனக்குத் தரப்பட்ட அறிவுறுத்தல்களையெல்லாம் மீறி நான் இந்த விடயத்தில் காலடி எடுத்து வைத்ததை பெருமையாகக் கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

இன்று தான் எடுத்துவைத்த பாதை சரியென்பதை பலரும் உணருகிறார்கள். நான் பிறப்பால் தமிழனாக இல்லாவிட்டாலும், நான் தான் தமிழரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன். என் மீது தமிழர்கள் காட்டும் அன்பு அரசியலிற்கு அப்பாற்பட்டது. நான் அவர்களின் செல்லப்பிள்ளயாகி விட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழர்கள் 14 ஆயிரம் பேர் அங்கத்துவர்களாக இணைந்ததை களங்கப்படுத்தவும், அவர்களுடைய ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் கனடாவின் தலைநகரிலுள்ள பெரும்பாண்மையினத்தவர் ஒருவர் சில தமிழர்களின் உதவியோடு கடுமையாக முயல்வது கண்டறியப்பட்டுள்ளது.

Member-of-Parliament-Mr.-Patrick-Brown

கருத்தரங்கில் உரையாற்றியபோது

பற்றிக் பிரவுண்-கனேடியத் தமிழ்ச் சமுதாயத்தின் உண்மை நண்பன்.

ஸ்ரீலங்காஅரசிற்கு எதிரான, கனேடிய அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கு முன்னின்று உழைத்தவர்.

தமிழ்ச் சமுதாயத்திற்கு எதிராக இனவாத, அடக்குமுறை ஸ்ரீலங்கா அரசினால்தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகளைக்கண்டு எம்மக்களின் மேல் அனுதாபம் கொண்டு 2009 ம் ஆண்டு தொடக்கம் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருபவர்.

ஸ்ரீலங்கா அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒட்டவாவில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாடங்களில் கலந்துகொண்ட ஒரே ஒரு நடுத்தரவாத கட்சியின் உறுப்பினர்.

பற்றிக் அவர்கள் 2009ம் ஆண்டு மே மாதம் சிறிலங்காவிற்கு விஜயம் செய்து, இனவாத ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அடக்குமுறையையும், அர்த்தமற்ற இறப்புகளையும், சர்வதேசத்தின் கண்முன்னால் நிறுத்தியவர். பற்றிக் பிரவுண் முன்னின்று உழைத்து, வெற்றி பெற்ற தமிழ் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் பலவற்றில் சில,

பிரித்தானிய சனல் 4 இன் “Killing Field” என்ற ஆவணப் படத்தை கனேடியப் பாராளமன்ற வளாகத்தில் திரையிட்டு, தமிழ் மக்கள் எமது தாயகத்தில் எதிநோக்கும் பிரச்சனைகளை கனடியப் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்தியம்பியவர்.

கடந்த ஐந்து வருடங்களாக, எம் தாயகத் தமிழ் மக்களின் தொடர்ச்சியான, நிலையற்ற வாழ்வியலை எண்ணற்ற கருத்தரங்குகளையும், கூட்டங்களையும் நடாத்தி கனேடிய மக்களுக்கும், கனடியப் பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னின்று கற்பித்தவர்.

கனேடியப் பாராளமன்றத்திலே அறிக்கை சமர்ப்பிக்க கிடைக்கும் நேரத்திலோ அல்லது கேள்வி கேட்க கிடைக்கும் நேரத்திலோ, தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் எதிநோக்கும் பிரச்சனைகள் பலவற்றை பாராளமன்றத்திலே சமர்பிப்பதற்கு எப்போதுமே முன்நிற்பவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர்களில் பங்கேற்று ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடாத்தப்படவேண்டும் என வாதிட்டவர்.

இலங்கைத் தமிழ் மக்களால் எதிர்நோக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி கனேடியப் பிரதமருக்கு அறியத்தந்தவர்.

ஐக்கிய நாடுகள் சபையில், ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான கனேடிய அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டிற்கு காரணமானவர்.

கனடா, பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவையெடுக்க முன்னின்று உழைத்தவர்.

ஒன்டாரியோ மாநிலத்தின் நடுத்தரவாத கட்சியின் அடுத்த தலைவராக வரப் போட்டியிடும் பற்றிக் பிரவுண் அவர்களுக்கு எமது தமிழ்ச் சமூகம் முழு ஆதரவையும் வழங்குவோம்.

எமது தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட, எம் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக தாயகத்தில் இழைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற மனித உரிமைவாதி, தமிழ் மக்களின் நண்பன் பற்றிக் பிரவுண் அவர்களை ஒன்டாரியோ மாநிலத்தின் அடுத்த முதல்வராக்குவோம்.

Advertisements