தமிழ்த் தேசிய கூட்டமைப்பிக்கு எதிரானபுலம் பெயர் மக்களின் விமர்சனங்கள்

TNA Traitorsஅண்மைக் காலமாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல பாராளுமன்றஉறுப்பினர்களுக்குஎதிரானவிமர்சனங்கள் புலம் பெயர்நாடுகளில்; இயங்கும் தமிழர் அமைப்புக்களிடமிருந்து எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிரான விமர்சனங்கள் உச்சநிலையை எட்டியிருக்கின்றன. இங்கிலாந்திலும் வேறுசிலநாடுகளிலும் மேற்படி இருவரினதும் உருவப்படங்களும் சிலபோராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.புலம் பெயர் தமிழர்கள் சிலமேற்படிதலைவர்களின் படங்களில் ஏறிநின்றுகால்களால் ம்pதித்தசம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியதாகவேஅனைவருக்கும் தோன்றியிருக்கவேண்டும்.

ஆனாலும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் இவ்வாறானசெயற்பாடுகளுக்குபின்னால் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா என்றுஆராய முற்பட்ட பலர் அவ்வாறுவேறுகாரணங்கள் எதுவும் இல்லைஎன்ற முடிவுக்குவந்துள்ளதாகவே  எமக்கு கிடைத்ததகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும்; இலங்கைமீதானஐநாவின் விசாரணை அறிக்கைவெளியீடு ஒத்திவைக்கப்படலாம் என்றும் அதற்குசாதனமானகாரணங்கள்; உள்ளன என்றும்பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சிலநாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததையும் இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் அவரும் திரு இரா. சம்பந்னும் கலந்துகொண்டமைக்கு தன்னிச்சையானஒரு காரணத்தையும் கூறியமையும் புலம் பெயர் தமிழ் மக்களைசினமடையச் செய்திருக்கலாம். இதனாலேயே இலங்கைமீதான ஐநாவின் விசாரணை அறிக்கைவெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்குஎதிர்ப்புத் தெரிவித்து வடக்கு இலங்கையிலும் பிரிட்டனிலும் நடைபெற்றபோராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குஎதிரானகோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் சிலபோராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சிலதினங்களுக்கு முன்னதாகநடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் இரண்டுதலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்குமுன்னர் இலங்கையின் சுதந்திரதினநிகழ்வில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமைக்கு எதிர்ப்புதெரிவித்தும் புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தில் இருவரதுபடங்களும் எரிக்கப்பட்டிருந்தன.

ஐநாவுக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கைஅரசாங்கத்துக்கும் எதிராகநடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதற்கு என்னகாரணம் என்னவென்றுலண்டனில் போராட்டத்தை ஒழுங்குசெய்திருந்தபிரித்தானியதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டகருத்துக்கள் ஒரளவிற்கு எற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவே உள்ளது. அந்தக் குழுவின் கருத்துக்களின்படிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றியும் தமிழ்த் தேசத்தின் விடுதலைபற்றியும் தேர்தல் மேடைகளில் கோசங்களை எழுப்பி எமது வாக்குகளை எடுத்துவிட்டு இன்று எவ்வாறுநடந்துகொள்கிறார்கள் என்பதுதான் எமதுமக்களின் ஆட்சேபனைக்கு’ காரணம் என்றுஅந்தக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகஎம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரின் அண்மைக்காலசெயற்பாடுகள் திருப்தியளிக்கும் விதத்தில் இல்லைஎன்றும் பிரித்தானியதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

புpரித்தானியாவில் மட்டுமல்ல கனடாபோன்றநாடுகளில் வாழும் தமிழ் மக்களும் இங்கு இயங்கிவரும் தமிழர் அமைப்புக்களும் எமதுதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிலரினகுறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாகவிசனமும் கவலையும் தெரிவித்திருந்தஅதேவேளையில் அவர்கள் இங்கு எவ்விதமான ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. அரசியல் மற்றும் நமது சமூகம் சார்ந்த நாகரிகம் கருதி அவர்கள்; எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் அண்மைக்காலசெயற்பாடுகள் குறித்துகோபங்கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள் என்பதேஉண்மை.

இவ்வாறானசம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைநமதுதாயகத்தின்; பலபாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாமல் அறிக்கைகளையும்விட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் உறவுகள் நாட்டில் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமையையும் உணராமல் செயற்படுவதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தாயகத்தில் வாழும் மக்களின் நலன் கருதியும் அவர்கள் மீதுகொண்டஅக்கறைநிமித்தமுமே எமதுதலைவர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாககவனித்துவருகின்றார்கள் என்பதும் அவ்வாறு அவர்கள் சிலதவறுகளைகண்டறியும் போது இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதையும் நாம் உணரவேண்டும்.

கதிரோட்டம் [2015-03-01]

Advertisements