சுமந்திரன் ஒரு மோசமான முன்னுதாரணம்!

தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக்கொண்டு, உள்ளிருந்தே தமிழின அழிப்பிற்குத் துணை போன ஏராளமானவர்கள் முள்ளிவாய்க் கால் தமிழினப் பேரழிவின்போது அடையாளம் காணப்பட்டார்கள். அந்தக் கால தாமதமான அடையாளப் படுத்தலால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்தவும் முடிய வில்லை. காட்சிகள் மாறிய காலங்களில் பலர் தம்மை உருமறைத்துத் தமிழர்களது இரட்சகர்களாகத் தம்மை ஏற்க வைக்க முயன்றார்கள். கே.பி. எனப்படும் விடுதலைப் புலிகளின் ஆயுத முகவர், தன்னைத் தலைவர் என்றார். இல்லை, இல்லை, என்னையே தலைமை ஏற்கச் சொன்னார் தேசியத் தலைவர் என்று தளபதி ராம் முன்வந்தார்.sampanthan_sumanthiran traitors

ஆனாலும், தமிழ் மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லாததால், அவர்கள் தங்களது எஜமானர்களிடம் சங்கமித்தார்கள். ஆயுத போர்க் களத்தில் கருணாவை உருவாக்கியவர்களால், அரசியல் களத்தில் யார், யாரையெல்லாம் உருவாக்கியிருப்பார்கள்? தமிழ் மக்கள் யாரையுமே நம்ப முடியாமல், பார்வையாளர்களாக இருந்து கவனித்தே வந்தார்கள். இப் போது, தமிழ் மக்களது சந்தேகப் பார்வை நிலை குத்தி நிற்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டி யல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீதுதான்.

2009 இற்குப் பின்னரான போர்க் களம் களத்திலிருந்து புலத்திற்கு மாற்றப்பட்ட போது, களத்தின் தமிழ்த் தேசியத் தலைமை வெற்றிடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைத்துக் கொண்டது. வெற்றிடத்தை நோக்கிக் காட்டாற்று வெள்ளமாக வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புனிதப்படுத்தல் எதுவும் இல்லாமல், சாக்கடைகளையும் சேர்த்தே கொண்டு வந்தது. அதுவே, புலத்தின் அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களை யும் மலினப்படுத்தும் நிலையினை உருவாக்கியது. புலம் மட்டுமல்ல, தமிழகமும் இதில் சிக்கிக்கொண்டு செயலிழக்கும் நிலையை அடைந்தது.

சுமந்திரன், தனது அப்புக்காத்து மூளையையும், ஆங்கிலப் புலமையையும் தமிழீழ அரசியல் களத்தின் வெற்றிடத்தில் பொருத்தித் தனக்கான இடத்தைத் தவிர்க்க முடியாதது போன்ற பிரமையை உருவாக்கியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை வெளிநாட்டுப் பயணங்களிலும், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பிலும் சுமந்திரன் இயல்பாகவே முன்னிலைப்படுத்தப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுத லைப் புலிகளிடமிருந்து கற்றுக்கொள் ளாத பாடத்தின் விளைவாக இதனைப் பாற்கலாம்.

ஒரு மனிதனது பலம், மொழி சார்ந்தது அல்ல. அவனது திடமான சிந்தனையும், ஆற்றலும் வெளிப்படுத்தப் படுவதற்கு மொழி ஒரு தடையாக இருக்க முடியாது. விடுதலைப் புலிகள், உலகின் வல்லமைசார் தளங்களிலும், ஒரு மொழி பெயர்ப்பாளரை அருகே வைத்துக்கொண்டு பல சமர்க்களங்க ளைத் தமக்குச் சாதகமாக மாற்றியிருந் தார்கள்.

இந்த நிலையில்தான், சுமந்திரன் இரட்டை முகவராகச் செயற்பட்டார். புலம்பெயர் தமிழ்த் தேசிய தளங்களின் ஈரண் நிலைகள் அவரது செயற்பாடு களுக்குச் சாதகமாக அமைந்தது. தட்டிக் கேட்க யாருமே இல்லாத கட்டுக்கடங் காத வசதியை அது வழங்கியது.

சுமந்திரனால், புலம்பெயர் சமூகம் உள்வாங்கப்பட முடியாத பயங்கரவாத மாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அச்சங்கள் பரப்பப்பட்டது. சிங்கள அர சாங்கம் தடை அறிவிப்புச் செய்வதற்கு முன்பாகவே, புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ அரசியலில் இருந்து தூரத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.

புலம்பெயர் தேசங்களில் நடாத்தப் படும் வெளிக்களப் போராட்டங்கள் தமி ழீழ மக்களின் வாழ்நிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கருத்து நிலையும் சுமந்திரனால் உருவாக்கப்பட் டது. புலம்பெயர் தமிழர்கள் மகிந்த ஆட்சி யாளர்கள்மீது போர்க் குற்றம் சுமத்திய காலத்தில், லண்டனில் வைத்து சுமந் திரன் தெரிவித்த கருத்து, ஒரு பூகம்பத் தையே உருவாக்கியிருந்தது. 2011 ஜுலை 24 அன்று லண்டனில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பிரச்சி னைக்குரிய மூன்று கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

1) புலம்பெயர் தமிழர்களது தமிழீழம் நோக்கிய செயற்பாடுகள் மேற்குலகின் ஆதரவைப் பெறவில்லை எனவும், அதில் மாற்றங்கள் தேவை.

2) இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது பெரும் பான்மை சிங்கள, சிங்கள மக்களால் ஏற் கக் கூடிய தீர்வாக அமைய வேண்டும்.

3) சிறிலங்கா அரசு மீதான போர்க் குற்ற விசாரணைக்கான கோரிக்கையைக் கைவிடவேண்டும்.

சுமந்திரனது இந்தக் கூற்றினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் நிராகரித்திருந்தார். அவரது கூற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத் தல்ல என்று அவர் மறுப்புத் தெரிவித்தார். போர்க் குற்ற விசாரணைக் கோரிக் கையையே கைவிடக் கோரிய சுமந்திரன் எப்படி, ஐ.நா. மன்றத்தின் போர்க் குற்ற விசாரணைக்கு அனுசரணையாளராவார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்த ஒவ்வொரு அரிய சந்தர்ப்பத் தினையும் சுமந்திரன் சிங்கள ஆட்சியா ளர்களான மகிந்த சகோதரர்களைக் காப் பாற்றுவதற்காகத் தெரிந்தே தவறிப் போகும்படி செய்தார்.

கடந்த வருடத்திலும், ஐ.நா. போர்க் குற்ற விசாரணை தொடர்பாக ஜெனிவா வந்திருந்த சுமந்திரன், அங்கு சிங்கள அரசியலாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டதுடன், சிறி லங்கா தூதரகத்திற்கும் சென்றுள்ளார். அங்கு, சுமந்திரனுக்கு சிறிலங்காத் தூதர கம் வழங்கிய வரவேற்பைக் கண்டு அவரை அங்கு அழைத்துச் சென்றவரே மிரண்டு போனார்.

சம்;பந்தனது பல குத்துக்கரணங் களுக்கும் சுமந்திரனே காரணமாக இருந் துள்ளார். தமிழீழ அரசியல் தளத்தில், சம்பந்தன் சறுக்கிய இடங்களிலெல்லாம் சுமந்திரன் அருகே நின்றிருந்தார். அண்மையில், நடைபெற்ற ஜனாதி பதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வுக்கு ஆதரவு வழங்கும்படி சம்பந்தனை சுமந்திரனே வற்புறுத்தியதாகவும் தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது ஒரு வரலாற்றுத் தவறாகவே தற்போது உணரப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைத்ததன் மூலம், தமிழ் மக்கள் மேலும் பல பின்னடைவுகளையே எதிர்கொண் டுள்ளனர். ஐ.நா. விசாரணை அறிக்கை மார்ச் மாதத்தில் வெளியிடப்படாததற்கு இந்தத் தவறான முடிவே காரணமாக உள்ளது. அது மட்டுமல்லாமல், மகிந்த ஆட்சியில் இருக்கும்போது கிடைக்க வேண்டிய தமிழீழ மக்களுக்கான நீதி, மைத்திரி ஆட்சியில் இல்லவே, இல்லா மல் ஆகும் நிலையையும் உருவாக்கி வருகின்றது.

அது மட்டுமல்லாமல், தமிழ்த் தேசிய எழுச்சியின் அடையாளமாக, தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த ‘சிறிலங்காவுக் கான சுதந்திர தினத்தை’ நிராகரிக்கும் தமிழ் மக்களது உணர்வினையும் முறி யடிப்பதற்குச் சுமந்திரன் முற்பட்டது, அவரைத் தமிழினம் ஒரு குற்றவாளியாக நோக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

அது, புலத்தில் மட்டுமல்ல, தமிழீழத் திலும் பெரும் எதிர்ப்பு அலையை உரு வாக்கியுள்ளது. சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட அதி உச்ச தமிழினத் துரோகத்தினால் ஆத்திரம் கொண்ட தமிழ் உணர்வாளர்கள் லண்ட னில் சுமந்திரன், சம்பந்தன் ஆகியோரது படங்களுக்குத் தீயிட்டனர். தமிழீழத்தில் சுமந்திரனது கொடும்பாவி கொழுத்தப் பட்டது.

இந்த நிலையில், சுமந்திரன் நடாத்திய ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு மிகப் பெரிய அபத்தங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. தனது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, அவர் புலம் பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள்மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளார். இதன்போது, அவமரியாதையான சொற் பிரயோகங்களையும் பாவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ்த் தேசிய தளங்களி டையே முரண்பாடுகள் இருந்தாலும், அவர்களது பாதையிலும், இலட்சியத்தி லும் யாரும் குறை கூற முடியாது. அவர்கள் அனைவருமே, தமிழீழ மக்க ளது விடுதலைக்காகவும், தமிழீழ மண் மீட்புக்காகவும் தன்நலமற்ற நிலையில், தம்மை அர்ப்பணித்துப் போராடுபவர்கள். சுமந்திரன் போன்றவர்களால், அவர்களது அர்ப்பணிப்புக்கள் பலனற்றுப் போகும் நிலையை அடையும்போது, அவர்களது கோபங்களும் நியாயமானது என்பதே அனைவரது கணிப்பாகவும் உள்ளது.

புலம்பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர் கள் எவரும் தமக்கான பதவி நோக் கியோ, பணம் கிடைக்கும் என்றோ, பகட்டு வாழ்க்கைக்கு வகை உண்டாகும் என்றோ இலக்கு வைத்துப் போராடுவ தில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது இலட்சியப் பாதையில் தடம் மாறாது இப்போதும் பயணிப்பவர்கள் அவர்கள். அவர்களைக் குறை கூறும் தகைமை சுமந்திரனுக்குக் கிடையாது என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.

கடந்த வருடம், ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான அமெ ரிக்கத் தீர்மானம் தமிழீழ மக்களுக்கான தீர்வை வழங்கப் போவதில்லை என்பதே தமிழ் மக்களது ஆதங்கமாகும். பசியால் மயங்கி விழுந்தவனைத் தண்ணீர் தெளித்து எழுப்புவது போன்றது.

60 வருடங்களுக்கும் மேலாக சிங்கள இன வன்முறைக்கும், சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளுக்கும், நிலப் பறிப்புக் களுக்கும், உயிர்ப் பறிப்புக்களுக்கும் ஆளாகி, அனைத்தையும் இழந்து, அவல வாழ்க்கை வாழும் தமிழினம் தனக்கான நீதியையே கோருகின்றது. அதிகபட்ச நம்பிக்கையோடு தமிழினம் அனைத்துலகப் பெருமன்றத்தின் கதவு களை உரக்கத் தட்டுகின்றது. அது, திறக் கப்படும்வரை தொடர்ந்து அங்கேயே போராடுகின்றது. கேட்பது, கிடைக்கும் வரை போராடுவது. அது கிடைக்காத போது, கிடைக்கக்கூடியதற்காகப் போரா டுவது என்பதே இயல்பான வரலாறு. இதை அறிந்து கொள்ளும் ஆற்றலோ, பொறுமையே இப்போது சுமந்திரனுக்குக் கிடையாது.

ஏனென்றால், அவரை எல்லோரும் வெளிச்சத்தில் பார்த்துவிட்டாhகள். அவரி டம் மறைப்பதற்கு எதுவுமே கிடையாது. அதனால், தனது இந்தப் பரிதாபகரமான நிலைக்குக் காரணம் என்று நினைப்பவர் கள்மீது, தனது ஆற்றாமையை வெளிப் படுத்துகின்றார்.

– இசைப்பிரியா-

Advertisements