முள்ளிவாய்க்காலில் இருந்து அனைத்துலகம் வரை மறைக்கப்பட்டுவிட்ட அர்ப்பணிப்புக்களும், பெரும் துரோகங்களும்.

அழிவுக்குள் ஒளிந்துவிட்ட அர்பணிப்புக்களும்,துரோகங்களும்!!war crimes

வணக்கம் என் அன்பு உறவுகளே.

இன்றைய எனது ஆய்வில் எமது போராளிகளின் தியாகங்களையும்,பொதுமக்களின் அர்ப்பணிப்புக்களையும் எமது இயக்கத்தோடும்,மக்களோடும் உருமறைந்துவாழும் துரோகமிழைத்த சில போராளிகளும்,சில பொதுமக்கள் தொடர்பாகவும்,இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பெரும் பாதிப்புகள் தொடர்பாகவும்,இந்த பாதிப்புக்களினூடாக விடுதலைக்காய் தம்மை முழுதாக அர்பணித்து மடிந்துபோன எம் மாவீரர்களினதும்,அதன்பால் மரணித்த எம் பொதுமக்களினதும் தியாகங்களை அர்தமற்ற ஒன்றாக மாற்றுவதற்கான சதித்திட்டங்களோடு ஈழத்திலும்,உலகத்திலும் செயல்பட்டுவரும் சதிகாறர்கள் தொடர்பான சில தகவல்களை அவசியம் உங்கள் முன்வைக்க விரும்புகின்றேன்.

எமது விடுதலைப்போராட்டத்தின் அழிவு என்பது எதிரியால் நிகழ்ந்தால்கூட,அந்த அழிவுக்கு முன்னின்று வழிகோலியவர்கள் எம் இனத்தில் தோன்றி எம்மோடு கலந்துவாழ்ந்த விடுதலையை விரும்பாத,இனப்பற்றில்லாத,ஈனப்பிறவிகளான போராளிவேடம் தரித்த சில துரோகிகளும்,அதேபோல் இந்த துரோகிகளுக்கு உறவாகவும்,ஊக்கமாகவும் இலைமறை காயாகவும் எமது மக்களோடு மக்களாக வாழ்ந்துவந்த சில துரோக பொதுமக்களுமே இந்த விடுதலைப்போராட்டத்தின் அழிவுக்கு முதன்மையான காரணிகள்’

ஒட்டுமொத்த எமது இனத்திற்கான எமது தேசியத் தலைமையின் வழிநடத்தலில் உருவாகிய எமது விடுதலைப்போராட்டம்,ஒருசில விசமிகளின் எதிர்ப்புகளைத்தவிர மற்ற அனைத்து மக்களினதும் முழு ஆதரவுடனேயே பெரு விருட்சமாக வழர்ச்சியடைந்ததென்றால் அது மிகையாகாது.விடுதலை என்பது எமது இனத்திற்கு மிகவும் அவசியம் என்பதை எமது தலைவர் மட்டுமன்றி,எமது மக்களும் நன்குணர்ந்தே அதற்கான முழு ஆதரவினையும் வழங்கினார்கள்.

ஆனால் இந்த விடுதலைக்கு உயிர்கொடுக்க சில லட்ச்சம் தமிழர்களே தலைவனோடு தோள்கொடுத்தார்’ஏனையவர்கள் விடுதலையை விரும்பியிருந்தும் அவர்களால் அந்த விடுதலைக்கு அருகிருந்து வலுச்சேர்க்கவும்,தோள்கொடுக்கவும் இயலாமல்போனதற்கு,அவர்களுக்குள் இருந்த மனப் பயமும்,நம்பிக்கையீனமும்,வசதி வாய்ப்புக்களும்,சுகபோகங்களும்,வலியை தாங்குகின்ற சக்தியின்மையும்,பாசப் பிணைப்புக்களும்,மது,மாது,புகை மோகங்களும்,பட்டப் படிப்புக்களும்,உயிர்வாழவேண்டுமென்ற ஆசைகளும் அதீதம் குடிகொண்டிருந்ததால்தான் ஏனைய லட்ச்சக்கணக்கான எமது மக்களால் இந்த விடுதலைப்போராட்டத்தை அருகிருந்து தாங்கிக்கொள்ள முடியாமல்போனதற்கு முதன்மைக்காரணம்.

எமது விடுதலைப்போராட்டம் வேகம்பெற்றதற்கும்,அழிவுற்றதற்கும் எமது மக்களே முதன்மை காரணம்’அதற்கான காரணம் என்னவெனில்,மக்களில் இருந்து உருவாகிய எமது போராளிகளின் எண்ணிக்கைகளின் அதிகரிப்பின் வேகமே எமது ஆயுதப்போராட்டத்தின் வேகத்தையும் அதிகரிச்சு சென்றது’எமது ஆயுதப்போராட்டத்தின் ஒவ்வொரு படி முன்னேற்றத்திற்கும் போராளிகளின் புதிய… புதிய இணைவுகளே அந்த முன்னேற்றத்திற்கு முதன்மை காரணிகளாகின.அன்று 1995ம் ஆண்டு பலாலி இராணுவ முகாமை புலிகள் அழிப்பதற்கு யாழ் குடாநாடு பூராகவும் பாரிய ஆட்திரட்டல் ஒன்றை அவசரமாக மேற்கொண்டிருந்தனர்’அந்த ஆட்திரட்டலின் எண்ணிக்கை இலக்கு,10,000ம் ஆனால் அந்த சூழ்நிலையில் இலட்சக்கணக்கில் இருந்த இளஞர் யுவதிகளில்,எவ்வளவோ மாதங்களின் பின்பே ஒரு ஆயிரம் போராளிகளை மட்டும் புலிகளால் திரட்டமுடிந்தது’

இந்த ஆட்திரட்டலின் தோல்வியே, அன்று சிங்களப்படைகள் யாழ் குடாநாட்டை கைப்பற்றுவதற்கு வழிகோலியது’பெரும் படைகளை புலிகளால் மரபுவழி ரீதியாக தடுக்க முடியாத ஆள் ஆயுத பலவீனமே அன்று யாழ் குடாநாட்டை நாம் விட்டு வெளியேறியதற்கு வளிவகுத்தது’ஆனால் திரட்டப்பட்ட ஆயிரம் வரையான போராளிகளால் தான் 26-04-1996று அன்று யாழ்மண்ணை விட்டு நாம் வெளியேறினாலும்,சுமார் மூன்றுமாத இடைவெளிக்குள் முல்லைத்தீவு இராணுவ முகாமை 18-07-1996 அன்று நாம் முற்றுமுழுதாக அழிப்பதற்கு காரணமாயிற்று’

இப்படியாக எமது ஆட்பலத்தின் அதிகரிப்பின் ஊடாகவே எமது வெற்றிகளும் அன்று வேகம்பெற்றிருந்தன.மேலும் எமது ஆட்பலத்தை அதிகரிக்க நாம் எடுத்துக்கொண்ட கால தாமதங்களே எமது போராட்டத்தின் காலக் கடத்தல்களுக்கும்,எமது தளபதிகள்,போராளிகளின் மனச்சலிப்புகளுக்கும்,மக்களின் பலவீனங்களுக்கும் காரணமாய் அமைந்தன’விடுதலைக்காய் எமது போராளிகள் தமது இழமையை துறந்தபொழுதும்,போராளிகளின் அணிதிரட்டலில் ஏற்பட்ட காலக் கடத்தல்களால்தான் நூற்றுக்கணக்கான போராளிகள் தமது வயதினை 30ஐயும் தாண்டி போராடவேண்டி ஏற்பட்டது’

இதன்காரணமாகத்தான் போராளிகளுக்குள் ஒருவித மன உழச்சலும் பலவீனங்களும் அதிகரித்துச் சென்றது,இது இயல்பான ஒன்றுதான்.ஆனால் இது தமது வாழ்நாளில் ஒவ்வொரு போராளியும் பத்துவருடங்களுக்குமேல் ஓயாத பணிசெய்த சூழ்நிலையில்,புதிய போராளிகளின் வரவின்மையாலும்,எமது மக்களின் பூரண ஒத்துழைப்பின்மையாலுமே குறிப்பிட்ட தொகை போராளிகளும்,குறிப்பிட்ட தொகை பொதுமக்களாலும் இதை தொடர்ந்து தாங்கிக்கொள்வதற்கு இயலாமல் போனது’

அனேகமாக வன்னியிலிருந்த அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 60து ஆயிரம் வரையான குடும்பங்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மாவீரர்,போராளி குடும்பங்களே’மற்றைய ஒரு வீதமானவர்கள் இழம் குடும்பத்தினரும்,வயது முதிர்ந்த குடும்பத்தினருமே.அப்படியானால் இந்த இரண்டுவீதமான குடும்பங்களே இந்த விடுதலைப்போராட்டத்தை நேரடியாக,அதாவது 30து வருடகால எமது விடுதலைப்போராட்டத்தில்,சுமார் 20து வருடங்கள் தனித்து நின்று சுமந்துள்ளன என்றால் ஏற்கனவே தமது பிள்ளைகளை மாவீரர்களாகவும்,போராளிகளாகவும்,அப்பாவிகளாகவும் இந்த விடுதலைப்போராட்டத்திற்காக பறிகொடுத்து இனி இவர்களால் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற சூழ்நிலையில் இருந்தபொழுதுதான் சிங்கள கொலைவெறிப்படைகள் வன்னியை நோக்கி தமது தாக்குதல்களை கண்மூடித்தனமாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

விடுதலையின் தேவை என்பது எம் அனைவருக்குமானதாக இருந்தபொழுதும்,அதன் வலியினையும்,அழிவினையும் சுமந்தவர்கள் வன்னியில் வாழ்ந்த அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மிகக்குறுகிய எமது மக்களே.ஆனால் இந்த குறுகிய எமது மக்களின் மிகப்பெரிய தியாகத்தால்தான் இன்று உலகம் பூராகவும் வாழ்கின்ற எம் இன மக்கள் ஏதோ ஒரு வகையில் நின்மதியாகவும்,சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள்’பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்தான், அவர்களை இந்த ஜென்மத்தில் எந்தக் கடவுளாலும் மீட்க்கமுடியாது,இறந்தவர்களும்,அங்கங்களை இழந்தவர்களும்,காயப்பட்டவர்களையும் எந்த மகாத்மாவாலும் இழந்தவற்றை இனி அவர்களுக்கு திருப்பிக்கொடுக்க முடியாது’

ஆனால் இன்று பெரும் அழிவுகளுக்கு மத்தியில் வன்னியில் இறுதிவரை நின்று தங்களால் முடிந்தவரை போரிட்ட சில நூறு போராளிகள் சிங்களவனின் பிடியிலிருந்து தப்புவதற்காக லஞ்சம் வழங்கி ஜெயிலிலிருந்தும்,தலைமறைவாகியும்,மிகவும் துன்பப்பட்டும் ஒருவாறாக மீண்டு வெளிநாடுகளுக்கு வந்தபொழுதும்,இன்னும் அங்கிருந்து வந்த அனேகமான போராளிகள் பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்கனவே ஒருமாவீரர் இருமாவீரர் என்று இழப்புக்கள் இருக்கும்பொழுது’ இங்கு வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின்பால் இயங்கி தமது ராஐ வாழ்க்கையை வாழும் சிலர் இழந்தவர்கள் மீது ஏன் தப்பிவந்தீர்கள் என்று கேட்கிறார்கள் என்றால்,இந்த போராளிகளை பெற்ற தாய் தந்தையர் உறவினர்கள் இந்த மிருகங்களை நேரில் கண்டால் என்ன செய்வர்?

இதே வேளை தாயகத்திலிருந்து வந்த ஒரு சில போராளிகளை இந்த பணம் படைத்த மிருகங்கள் அவர்களிடம் சில தவறான தரவுகளைப் பெற்று தாங்கள் இங்கு புலிகளின்பால்(போராளிகளின்பால்)திரட்டிய நிதிகளை மோசடி செய்வதற்காக,வந்த அனைத்து போராளிகள் மீதும் அபாண்டமான துரோக பழியினை சுமத்தி அவர்களை விடுதலைப்பணியினை தொடராதபடிக்கு அவமானப்படுத்தியும் மக்கள் மத்தியில் அவர்களை விமர்சனம் செய்தும்,தமது பிழைப்பினை மேற்கொண்டு வருவதும் எமது போராளிகள் மத்தியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த துரோக பணக்காரர்களால் மக்களிடம் பெற்ற இலட்ச்சக்கணக்கான சகல நாட்டு நாணயங்களுக்குமான கணக்கினை காண்பிப்பதற்காக புதிய தந்திரோபாய நடவடிக்கைகளையும் வெறும் கண்துடைப்பிற்காக ஈழத்தில் சில குடும்பங்களுக்கு மறைமுகமாக உதவி செய்வதுபோல் இந்த நாடுகளில் இருந்துகொண்டு சிலர் செயற்படுவதையும் நாம் நன்கு அவதானிக்கமுடிகின்றது’

இறுதி யுத்தத்தில் அகப்பட்ட எமது போராளிகள் பலர் சிங்களப்படைகளால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டும்,வெட்டியும்,உயிருடன் எரிக்கப்பட்டும்,உயிருடன் புதைக்கப்பட்டதையும் பார்த்து இந்த பணப் பிசாசுகள் ஒருபுறத்தில் தமது நீலிக்கண்ணீரை மக்கள்முன் வடிப்பதையும்,மறுபுறம் இங்கு வந்த போராளிகளிடம் ஏன் நீங்கள் சாகவில்லை இங்கு வந்தனீங்களென்றும் கேட்கிறார்கள் என்றால் இந்த மிருகங்கள் யார்?

உண்மையில் இவர்கள் 17-05-2009ற்கு பின்னரான விடுதலைப்புலிகளின் பலவீனத்தை தெரிந்துகொண்டு இவர்கள் சிங்களவனின் உள்ளக புலனாய்வு அச்சுறுத்தலின் பணிப்பில் இயங்கிவருவதாகவே நம்பப்படுகின்றது’இவர்களின் செயற்பாடுகள் இன்றுவரை அதாவது17-05-2009ற்கு பிற்பாடு வெறும் நிதித்திரட்டலுக்கான செயற்பாடாகவே அமைந்துள்ளதையும் நன்கு அவதானிக்க முடிகின்றது’இன்னும் சொல்லப்போனால் இன்றுவரை புலிகளின் தடையை இந்த நாடுகள் நீடித்து வருவதற்கு இவர்களின் நிதித் திரட்டல்களே முதன்மை காரணம் என்பதனை இந்த நாடுகளின் புலனாய்வு தகவல்கள் காரணம் காட்டி புலிகள் மீதான தடையை நீடிப்பு செய்வதாகவே நம்பப்படுகின்றது.

உண்மையில் இவர்களின் கைகள் ஓங்கும் பட்ச்சத்தில் உண்மையான எமது விடுதலைப்போராட்டம் எமது போராளிகளாலும் எமது பொதுமக்களாலும் கைவிடப்பட்டு எதிர்காலத்தில் பெரும் பின்னடைவை அரசியல் ரீதியாக சந்திக்கவேண்டிவரும் என்பதனை புரிந்துகொண்டு விடுதலைப் பற்றுக்கொண்ட எமது மக்களே இந்த போலிப் புலிகளை இனங்கண்டு உண்மைக்கு கைகொடுங்கள்.

நன்றி
தாயகம்.

தமிழர்குரல்

Advertisements