திரு.பற்றிக் பிரவுண் வென்றே தீருவோமென தமிழர்கள் திடசங்கற்பம்!

Member-of-Parliament-Mr.-Patrick-Brown

இருவர்களுக்கிடையேயான போட்டியாக மாறியுள்ள ஒன்ராறியோ மாகாண புரோகிரசிவ் கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் தெரிவிற்கான போட்டியில் தமிழர்களை வைத்து மேற்கொள்ளப்படும் காழ்ப்புப் பிரச்சாரம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கனடியத் தமிழர்களை நோக்கி காலகாலமாக பிரயோகிக்கப்படும் நிறவெறுப்புப் பிரச்சாரங்களினை கடந்த காலங்களில் தமிழர்கள் முறியடிக்க முடியாதிருந்தனராயினும், இந்தத் தடவையுடன் இவ்வாறான நிறவெறுப்பைத் தோற்றுவிக்கக்கூடிய அல்லது இனக்குறியீட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்பதெனத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

மேற்படி கட்சியின் தலைவருக்கான போட்டி மும்முனைப் போட்டியாக இருந்ததென்பதும், மூன்றாவதாக இருந்த வேட்பாளர் திரு. பற்றிக் பிரவுணுக்கு தனது ஆதரவினைத் தெரிவித்து இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளதால் பற்றிக் பிரவுண் தற்போது வாக்களிக்கத் தகுதியுள்ள 70 ஆயிரம் அங்கத்தவர்களில் 50 ஆயிரம் அங்கத்தவர்களின் ஆதரவைப் பெறக்கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளதைத் தொடர்ந்தே இந்த இனக்குறியீட்டுப் பிரச்சாரம் தமிழர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக சமூகவலைப் பரிவர்த்தனைத் தளங்களில் ஆரம்பிக்கப்பட்ட திரு.பற்றிக் பிரவுணுக்கு எதிரான அணியினால் தமிழர்கள் 14 ஆயிரம் அங்கத்துவர்களாகச் சேர்ந்திருந்தாலும், அவர்கள் ரொறன்ரோ பெரும்பாகத்தைச் சுற்றியே வசிப்பவர்கள். அவர்கள் ஒன்ராறியோ மாகாணத்தின் இதர பகுதிகளில் வசிப்பவர்கள் அல்ல என்பதான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

உண்மைக்குப் புறம்பான இப்பிரச்சாரம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ தமிழர் சமூகத்தின் மீதான வெறுப்பு மற்றைய இனங்களுக்கு ஏற்படத் தூண்டும் ஒரு நடவடிக்கையென்பது அடையாளம் காணப்பட்டதால் அங்கத்துவர்களாகச் சேர்ந்த தமிழர்கள் தாங்கள் முழு அளவில் இந்தத் உள்ளகத் தேர்தலில் பங்கு கொண்டு இத்தகைய பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற உற்சாகத்தில் களமிறங்கியுள்ளனர்.

அதேவேளை தென்னாசியர்களை, குறிப்பாக தமிழர்களையும், மையப்படுத்தி மேற்படி எதிர்ப்பிரிவால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வரம்புக்கு மீறிய வகையில் தகவல் பெறுபவையாகவும், புதிய கனேடியர்களை வாக்களிப்பிலிருந்து தவிர்க்கும் ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகவும் இடம்பெற்றதாக கிடைக்கப் பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான அழைப்புக்கள் வந்தவர்கள் திரு.பற்றிக் பிரவுண் அவர்களின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களைப் பரிமாறியதுடன், கனடியத் தகவல், தொலைதொடர்பு நிறுவனம் மற்றும் கட்சியின் தலைமைப்பீடத்திடமும் முறையிட்டுள்ளனர்.

பல் அமைப்புச்சார் தலைமைத்துவத்தை கொண்ட கனடியத் தமிழர்கள் திரு.பற்றிக் பிரவுண் அவர்களின் வெற்றிக்காக உழைத்தமையும், இவ்வாறானதொரு தலைமைத்துவமே இனவாத, நிறவாதப் பிரச்சாரங்களை நடுநிலையாக முறியடிக்க உறுதியாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.tamilsforpatrick.ca/

PATRICK BROWN

Visit Patrick’s Website

Prior to launching his campaign to be the next Leader of the PC Party of Ontario, Patrick Brown spent the last 15 years serving the public, a responsibility he undertakes with great pride. Patrick’s passion for his profession has made him an effective leader, and a respected politician.

One of three children in a close family, Patrick often credits his parents with teaching him the values and principles – including his work ethic – that have guided his career.

Patrick was first elected to Barrie City Council in 2000 and was re-elected in 2003 with 72% of the vote. In 2006, he beat an incumbent Liberal cabinet minister in the federal election and became the Member of Parliament for Barrie.

As Chair of the GTA and Central Ontario Caucus, Patrick has worked hard to build partnerships with people, groups, corporations, governments and organizations – both at home and abroad – establishing connections that will help him rebuild Ontario as Premier.

Patrick studied political science at the University of Toronto before earning his LL.B from the University of Windsor. Prior to his first election, Patrick ran a law practice in downtown Barrie. Fluent in French, Patrick also attended l’Université de Trois Rivières.

Advertisements