சம்பந்த கூட்டமைப்பின் பொய்யான பேச்சாளர்களை நம்பாதீர்கள்

R Sampanthan TNAஒரு நாடு இருதேசம் தொடர்பான சம்பந்தனின் மாற்றுக் கருத்திற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலடி (வீடியோ இணைப்பு)

அண்மைக் காலமாக சிலர் ஒரு நாடு இரண்டு தேசம் என கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்த கோஷங்களினால் நாம் எதையும் சாதித்து விடப்போவதில்லை. இதனால் பிரிவினைவாதமே ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலடி வழங்கியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே சம்பதனின் கருத்திற்கு பதல் வழங்கியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இன்றைய(கடந்த செவ்வாய்க்கிழமை) ஊடக சந்திப்பினுடைய முக்கிய நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைவர் சம்பந்தன் ஐயா கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் தமிழரசுக் கட்சியினுடைய கிளைக் கூட்டம் ஒன்றை நடாத்தி ஒரு சில கருத்துகளைக் கூறியிருந்தார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக எங்களுடைய பதிலையும் நாங்கள் இந்த இடத்தில் சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் மக்களுடைய எதிர்காலம் தொடர்பாகவும் அவர் கூறியிருக்கின்ற கருத்துகள் தொடர்பாக கூடுதலான ஒரு ஆழமான விளக்கம் கட்டாயம் தேவை என்ற ஒரு கோணத்தில் தான் நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

முதல் கட்டமாக சம்பந்தன் ஐயா கூறியிருக்கின்றார் அண்மைக் காலமாக சிலர் கடுமையான கோஷங்களை எழுப்பிவருகின்றார்கள். ஒரு நாடு இரண்டு தேசம் என்பதே அவர்களின் கோஷமாகும். அதன் கருத்தின் படி தமிழர்கள் ஒரு தேசம் சிங்களவர் ஒரு தேசம், இந்த இரண்டு தேசங்கள் சேர்ந்தவைதான் ஒரு நாடு என்பதே. அவர்களின் கோஷங்களாகும்.

இந்த கோஷங்களினால் நாம் எதையும் சாதித்து விடப்போவதில்லை. ஜதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன. அங்கு சமஸ்டி முறையான ஆட்சி நடைபெறுகின்றன. அதுபோன்றே கனடா, ஜேர்மன், சுவிஸ் போன்ற நாடுகளில் மாநில சுயாட்சிகளின் அடிப்படையில் சுயநிர்ண உரிமையுடன் அங்கு வாழும் பல்லின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரிவினை வாதத்தை பேசுவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என்ற ஒரு கருத்தையும் கூறி நிற்கிறார்.

முதலாவது தமிழர் தேசம் என்ற நிலைப்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் முன்வைத்த ஒரு விடயமல்ல. உண்மையிலே தமிழ்த் தேசம் என்றநிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அனைத்து தமிழ் மக்களும் பிரிதிநிதித்துவப்படுத்தக் கூடிய கட்சிகள் 1986 ஆம் ஆண்டு திம்பூ
மாநாட்டில் இணைந்து ஒருமித்த குரலில் இந்த நிலைப்பாட்டை முன்வைத்தார்கள்.

அந்த திம்பூ கோட்பாடுகளை எடுத்துப் பார்த்தோமானால் 3 முக்கியமான கோட்பாடுகள் அதில் தமிழர் ஒரு தேசம் என்ற விடயம் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழருடைய தேசம் என்ற விடயத்தின் அடிப்படையில்தான் தமிழ் மக்களுக்காக ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதும் திம்பூ கோட்பாட்டிடையே மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழர் ஒரு தேசம் என்ற அடிப்படையிலேயே தான் அவர்களுக்கென்று ஒரு தாயகம் இருக்கின்ற நிலையில் தான் சுயநிர்ணய உரிமையும் அந்தத் தேசத்துக்குரிய மக்களுக்கு உரித்தாகிறது என்பதும் தெளிவான உண்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நாங்கள தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனியாக செயற்படுவதற்கு ஆரம்பித்ததற்குப் பிற்பாடு முன்வைக்கப்பட்ட புதிய கோஷம் அல்ல. தமிழ்த் தேசிய அரசில் இந்த நிலைப்பாடுதான் அத்திபாரம். இந்த நிலைப்பாட்டைக் கைவிட்டு தமிழ்த் தேசிய வாதத்தை முன்னுக்குக் கொண்டு போக முடியாது.

தமிழ் தேசிய வாதத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் இடையே இருக்கக் கூடிய உறவுதான். நீங்கள் தேசம் என்ற நிலைப்பாட்டைக் கைவிட்டு ஒரு தேசியவாதியாக அரசியலை முன்னிலைப்படுத்த முடியாது.

ஆகவே தமிழர் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி உங்களுடைய அரசியல் செய்வது வெறும் கோஷங்கள் எதையும் சாதிக்க முடியாது என்று கூறுவதென்றால் தமிழத் தேசிய வாதத்தைக் கைவிட்டு அந்தத் தலைமை போகின்றது என்பதை இதில் நிருபிக்கப்படுகின்றது என்பது தான் அதன்
முக்கியமான அர்த்தம்.

இதைத்தான் நாங்கள் 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய பொழுதும் கூட ஆணித்தரமாக முன்வைத்து இன்றைய காலம் வரை நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். தமிழர் ஒரு தேசம் இல்லை என்பதை.

நாங்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கைவிடுவதென்றால் அதற்கு அடுத்ததாக தமிழர் இலங்கைத் தீவில் சிறுபான்மையாகத்தான் கருதப்பட வேண்டி வரும். தமிழர் ஒரு சிறுபான்மை என்றால் இந்தச் சம்பந்தன் ஐயாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஏனைய தலைவர்களும் சிங்கக் கொடியை ஏற்று சிங்களத் தேசத்தினுடைய சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இன்று இந்த அரசாங்கத்தினுடைய பங்காளிகளாக செயற்படுவதும் அனைத்தும் சரியான வகையில் அமையும்.

இவற்றை தொகுத்து பார்க்கின்ற பொழுது விளங்கும் என்ன அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படுகின்றது என்பது. தேசம் என்ற ஒரு அடையாளத்தின் அடிப்படையில நீங்கள் செயற்பட்டால்தான் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பிரச்சினைகளாக இருக்குமே தவிர ஒரு சிறுபான்மையாகச் சிந்தித்தால் இது பிரச்சினைகளே அல்ல.

எங்களைப் பொறுத்தவரையில் திருகோணமலையில் சம்பந்தன் ஐயா தேசம் தொடர்பாக இரு தேசம் ஒரு நாடு என்ற கோட்பாட்டை மையப்படுத்தி தெரிவித்திருக்கின்ற கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிப்படையிலே தமிழ்த் தேசிய வாத நலங்களைக் கைவிட்டு ஒரு சிறுபான்மை இனமாக செயற்படுவதற்கு முடிவெடுத்திருக்கிறது என்பதை நிருபிப்பதாகத்தான் இருக்கின்றது.

இரண்டாவது அதிலே அவர் கூறியிருக்கின்றார்இ இந்தத் தேசம் எனப் பேசப்படுவது பிரிவினைவாதம். அவரே கூறியிருக்கிறார் இந்தத் தேசம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றவர்கள் இலங்கையிலே தமிழ்த் தேசம் என்ற ஒன்று இருக்கின்றது. சிங்கள தேசம் என்ற ஒன்று இருக்கின்றது. இந்த இரண்டு தேசங்களும் ஒன்றிணைந்த ஒரு நாடாகத்தான் இது அமைய வேண்டும் என்றும் கூறுகின்றார். அதுதான் எங்கள் கோஷம் என்றும் கூறுகின்றார்.

ஆகவே இந்த இரண்டு தேசங்களும் இணைந்து உருவான நாட்டை நாம் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றால் அது பிரிவினைவாதம் இல்லையே. அதைத் தான் வலியுறுத்துகிறோம். அது பிரிவினைவாதம் இல்லை என்று. ஆனால் இது சம்பந்தன் ஐயாவுக்குத் தெரியாது என்றில்லை. சம்பந்தன் ஐயாவுக்கு
நன்றாகத் தெரியும். இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் பிரிவினைவாதத்தை வலியுறுத்த முடியாது.

6ம் திருத்தச் சட்டம் அதற்கு தடையானதாகும். பிரிவினைவாதத்தை வலியுறுத்துகின்றவர்களை சட்டபூர்வமாகக் கைது செய்யப்பட்டு அவர்களுடைய அரசியல் உரிமைகள் அனைத்தையும் இழந்து அவர்களுடைய சொத்துக்கள் நீக்கப்பட்டு அநாதைகளாக இருக்கக் கூடிய ஆபத்துகளும் இருக்கிறது. இது மக்களுக்கும் தெரிந்த விடயமாகும்.

ஆகவே எங்களுடைய நியாயமானஇ சட்டவிரோதமற்ற சிங்கள தேசத்தினுடைய சட்டங்களையும் மீறாத வகையிலே முன்னெடுக்கப்படுகின்ற கொள்கைகளை நிராகரிப்பதற்கு மக்களுக்கு ஒரு ஆபத்தைஇ பயத்தை ஏற்படுத்தி இன்னொரு வகையில் பயங்கரவாதத்தை அரசியல் ரீதியாகச் செய்து
அந்த மக்களைப் பயப்படுத்தி எங்கள் பக்கம் திருப்பாமல் வைப்பதற்கு முன்வைக்கின்ற ஒரு பொய்யான கருத்தாகத் இந்தப் பிரிவினைவாதம் என்ற அவருடைய கருத்தை பார்க்கின்றோம்.

நாங்கள்இ எங்கள் மக்களிடம் தயவுடன் கேட்கின்றோம் இப்படிப்பட்ட பொய்யான பேச்சாளர்களை நம்பாதீர்கள். இந்த நிலைப்பாடு இரண்டு தேசம் ஒரு நாடு என்ற நிலைப்பாடு நாங்கள் மட்டுமல்ல இந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடைய ஒரு சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக இருந்து வந்த விக்னேஸ்வரன் ஐயாவே இந்தக் கருத்தைக் கூறி நிற்கின்றார். நிச்சயமாக அவர் சட்டம் தெரியாதவர் என்று கூறமுடியாது. சட்டவிரோதமாகவும் அவர் செயற்படப் போவதில்லை.

ஆகவே எங்களைப் பொறுத்தவரையிலே எங்கள் மக்கள் இந்த உண்மைகளை சரியாக விளங்கிக் கொண்டு இன்றைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தனது சொந்தப் பெயருக்கே துரோகமிழைக்கின்ற வகையிலே தான் அவர்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் அமைந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசியம் என்ற வார்த்தைக்கே அங்கு இடமில்லை. ஆகவே கோஷங்களை நீங்கள்தான் எழுப்புகின்றீர்கள். தேர்தல் காலத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பாவிப்பது வெறும் கோஷமாகும். கொள்கை ரீதியாக அல்ல. அதை எங்கள் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதனை விளங்கிக் கொண்டுதான் வருகின்றார்கள்.

அந்த ஒரு பயத்திலேதான் இன்றைக்கு குழப்புகின்ற நோக்கத்துக்காக சம்பந்தன் ஐயா இந்தக் கருத்துக்களை தேசம் என்ற விடயம் தொடர்பாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நாங்கள் ஆணித்தரமாக குற்றம்சாட்ட விரும்புகின்றோம் – என்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே சம்பதனின் கருத்திற்கு பதல் வழங்கியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இன்றைய(கடந்த செவ்வாய்க்கிழமை) ஊடக சந்திப்பினுடைய முக்கிய நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைவர் சம்பந்தன் ஐயா கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் தமிழரசுக் கட்சியினுடைய கிளைக் கூட்டம் ஒன்றை நடாத்தி ஒரு சில கருத்துகளைக் கூறியிருந்தார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக எங்களுடைய பதிலையும் நாங்கள் இந்த இடத்தில் சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் மக்களுடைய எதிர்காலம் தொடர்பாகவும் அவர் கூறியிருக்கின்ற கருத்துகள் தொடர்பாக கூடுதலான ஒரு ஆழமான விளக்கம் கட்டாயம் தேவை என்ற ஒரு கோணத்தில் தான் நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

முதல் கட்டமாக சம்பந்தன் ஐயா கூறியிருக்கின்றார் அண்மைக் காலமாக சிலர் கடுமையான கோஷங்களை எழுப்பிவருகின்றார்கள். ஒரு நாடு இரண்டு தேசம் என்பதே அவர்களின் கோஷமாகும். அதன் கருத்தின் படி தமிழர்கள் ஒரு தேசம் சிங்களவர் ஒரு தேசம்இ இந்த இரண்டு தேசங்கள் சேர்ந்தவைதான் ஒரு நாடு என்பதே. அவர்களின் கோஷங்களாகும்.

இந்த கோஷங்களினால் நாம் எதையும் சாதித்து விடப்போவதில்லை. ஜதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன. அங்கு சமஸ்டி முறையான ஆட்சி நடைபெறுகின்றன. அதுபோன்றே கனடாஇ ஜேர்மன்இ சுவிஸ் போன்ற நாடுகளில் மாநில சுயாட்சிகளின் அடிப்படையில் சுயநிர்ண உரிமையுடன் அங்கு வாழும் பல்லின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரிவினை வாதத்தை பேசுவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என்ற ஒரு கருத்தையும் கூறி நிற்கிறார்.

முதலாவது தமிழர் தேசம் என்ற நிலைப்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் முன்வைத்த ஒரு விடயமல்ல. உண்மையிலே தமிழ்த் தேசம் என்றநிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அனைத்து தமிழ் மக்களும் பிரிதிநிதித்துவப்படுத்தக் கூடிய கட்சிகள் 1986 ஆம் ஆண்டு திம்பூ
மாநாட்டில் இணைந்து ஒருமித்த குரலில் இந்த நிலைப்பாட்டை முன்வைத்தார்கள்.

அந்த திம்பூ கோட்பாடுகளை எடுத்துப் பார்த்தோமானால் 3 முக்கியமான கோட்பாடுகள் அதில் தமிழர் ஒரு தேசம் என்ற விடயம் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழருடைய தேசம் என்ற விடயத்தின் அடிப்படையில்தான் தமிழ் மக்களுக்காக ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதும் திம்பூ கோட்பாட்டிடையே மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழர் ஒரு தேசம் என்ற அடிப்படையிலேயே தான் அவர்களுக்கென்று ஒரு தாயகம் இருக்கின்ற நிலையில் தான் சுயநிர்ணய உரிமையும் அந்தத் தேசத்துக்குரிய மக்களுக்கு உரித்தாகிறது என்பதும் தெளிவான உண்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நாங்கள தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனியாக செயற்படுவதற்கு ஆரம்பித்ததற்குப் பிற்பாடு முன்வைக்கப்பட்ட புதிய கோஷம் அல்ல. தமிழ்த் தேசிய அரசில் இந்த நிலைப்பாடுதான் அத்திபாரம். இந்த நிலைப்பாட்டைக் கைவிட்டு தமிழ்த் தேசிய வாதத்தை முன்னுக்குக் கொண்டு போக முடியாது.

தமிழ் தேசிய வாதத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் இடையே இருக்கக் கூடிய உறவுதான். நீங்கள் தேசம் என்ற நிலைப்பாட்டைக் கைவிட்டு ஒரு தேசியவாதியாக அரசியலை முன்னிலைப்படுத்த முடியாது.

ஆகவே தமிழர் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி உங்களுடைய அரசியல் செய்வது வெறும் கோஷங்கள் எதையும் சாதிக்க முடியாது என்று கூறுவதென்றால் தமிழத் தேசிய வாதத்தைக் கைவிட்டு அந்தத் தலைமை போகின்றது என்பதை இதில் நிருபிக்கப்படுகின்றது என்பது தான் அதன்
முக்கியமான அர்த்தம்.

இதைத்தான் நாங்கள் 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய பொழுதும் கூட ஆணித்தரமாக முன்வைத்து இன்றைய காலம் வரை நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். தமிழர் ஒரு தேசம் இல்லை என்பதை.

நாங்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கைவிடுவதென்றால் அதற்கு அடுத்ததாக தமிழர் இலங்கைத் தீவில் சிறுபான்மையாகத்தான் கருதப்பட வேண்டி வரும். தமிழர் ஒரு சிறுபான்மை என்றால் இந்தச் சம்பந்தன் ஐயாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஏனைய தலைவர்களும் சிங்கக் கொடியை ஏற்று சிங்களத் தேசத்தினுடைய சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இன்று இந்த
அரசாங்கத்தினுடைய பங்காளிகளாக செயற்படுவதும் அனைத்தும் சரியான வகையில் அமையும்.

இவற்றை தொகுத்து பார்க்கின்ற பொழுது விளங்கும் என்ன அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படுகின்றது என்பது. தேசம் என்ற ஒரு அடையாளத்தின் அடிப்படையில நீங்கள் செயற்பட்டால்தான் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பிரச்சினைகளாக இருக்குமே தவிர ஒரு சிறுபான்மையாகச் சிந்தித்தால் இது பிரச்சினைகளே அல்ல.

எங்களைப் பொறுத்தவரையில் திருகோணமலையில் சம்பந்தன் ஐயா தேசம் தொடர்பாக இரு தேசம் ஒரு நாடு என்ற கோட்பாட்டை மையப்படுத்தி தெரிவித்திருக்கின்ற கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிப்படையிலே தமிழ்த் தேசிய வாத நலங்களைக் கைவிட்டு ஒரு சிறுபான்மை இனமாக செயற்படுவதற்கு முடிவெடுத்திருக்கிறது என்பதை நிருபிப்பதாகத்தான் இருக்கின்றது.

இரண்டாவது அதிலே அவர் கூறியிருக்கின்றார்இ இந்தத் தேசம் எனப் பேசப்படுவது பிரிவினைவாதம். அவரே கூறியிருக்கிறார் இந்தத் தேசம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றவர்கள் இலங்கையிலே தமிழ்த் தேசம் என்ற ஒன்று இருக்கின்றது. சிங்கள தேசம் என்ற ஒன்று இருக்கின்றது. இந்த இரண்டு தேசங்களும் ஒன்றிணைந்த ஒரு நாடாகத்தான் இது அமைய வேண்டும் என்றும் கூறுகின்றார். அதுதான் எங்கள் கோஷம் என்றும் கூறுகின்றார்.

ஆகவே இந்த இரண்டு தேசங்களும் இணைந்து உருவான நாட்டை நாம் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றால் அது பிரிவினைவாதம் இல்லையே. அதைத் தான் வலியுறுத்துகிறோம். அது பிரிவினைவாதம் இல்லை என்று. ஆனால் இது சம்பந்தன் ஐயாவுக்குத் தெரியாது என்றில்லை. சம்பந்தன் ஐயாவுக்கு
நன்றாகத் தெரியும். இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் பிரிவினைவாதத்தை வலியுறுத்த முடியாது.

6ம் திருத்தச் சட்டம் அதற்கு தடையானதாகும். பிரிவினைவாதத்தை வலியுறுத்துகின்றவர்களை சட்டபூர்வமாகக் கைது செய்யப்பட்டு அவர்களுடைய அரசியல் உரிமைகள் அனைத்தையும் இழந்து அவர்களுடைய சொத்துக்கள் நீக்கப்பட்டு அநாதைகளாக இருக்கக் கூடிய ஆபத்துகளும் இருக்கிறது. இது மக்களுக்கும் தெரிந்த விடயமாகும்.

ஆகவே எங்களுடைய நியாயமான சட்டவிரோதமற்ற சிங்கள தேசத்தினுடைய சட்டங்களையும் மீறாத வகையிலே முன்னெடுக்கப்படுகின்ற கொள்கைகளை நிராகரிப்பதற்கு மக்களுக்கு ஒரு ஆபத்தை, பயத்தை ஏற்படுத்தி இன்னொரு வகையில் பயங்கரவாதத்தை அரசியல் ரீதியாகச் செய்து அந்த மக்களைப் பயப்படுத்தி எங்கள் பக்கம் திருப்பாமல் வைப்பதற்கு முன்வைக்கின்ற ஒரு பொய்யான கருத்தாகத் இந்தப் பிரிவினைவாதம் என்ற அவருடைய கருத்தை பார்க்கின்றோம்.

நாங்கள் எங்கள் மக்களிடம் தயவுடன் கேட்கின்றோம் இப்படிப்பட்ட பொய்யான பேச்சாளர்களை நம்பாதீர்கள். இந்த நிலைப்பாடு இரண்டு தேசம் ஒரு நாடு என்ற நிலைப்பாடு நாங்கள் மட்டுமல்ல இந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடைய ஒரு சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக இருந்து வந்த விக்னேஸ்வரன் ஐயாவே இந்தக் கருத்தைக் கூறி நிற்கின்றார். நிச்சயமாக அவர் சட்டம் தெரியாதவர் என்று கூறமுடியாது. சட்டவிரோதமாகவும் அவர் செயற்படப் போவதில்லை.

Advertisements