பிரான்ஸ் தமிழீழ மக்களால் வெள்ளைத் தமிழச்சி என அழைக்கப்பட்டவர் மரணம்

பிரான்ஸ் தமிழீழ மக்களால் வெள்ளை தமிழச்சி என்றழைக்கப்பட்ட பவுல் லுயிய் வியோலெத் (Paula Lugi Violette) மரணமடைந்துள்ளார்.

வெள்ளை இனத்தைச் சேர்ந்த பவுல் லுயிய் வியோலெத் அவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்து வந்துள்ளார்.

இதன்காரணமாக பிரான்சு வாழ் ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்டார்.

நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களுக்காய் குரல்கொடுத்து வந்துள்ளார்.

பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டவர் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.france_luyis_001 france_luyis_002 france_luyis_003

Advertisements