தமிழனுக்கு புகழாரம் சூட்டிய சிங்கப்பூரின் தந்தை இன்று மரணம்

lee-quan-singaporeதமிழனுக்கு புகழாரம் சூட்டிய சிங்கப்பூரின் தந்தை இன்று மரணம் மனவேதனையோடு அவரின் உரையிலிருந்து இதை கண்ணீரோடு வெளியிடுவதோடு மறைந்த சிங்கப்பூரின் தந்தை முன்னால் பிரதமர் லீ குவான் யூவிற்கு பிரித்தானிய ஈழத்தமிழர் படை கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது.

”பணிந்து போக தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உணர்ச்சிப்பெருக்கம்!

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!

ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழர்களின் இதயங்களை ஆட்கொண்டவர் லீ குவான் யூ; சீமான் இரங்கல்

சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதில் சீமான் கூறியிருப்பதாவது:

‘சிங்கப்பூரின் தந்தை’ எனப் போற்றப்படும் லீ குவான் யூ அவர்களின் மரணச் செய்தி பிற மனிதர்களை நேசிக்கும் மனிதநேய மாந்தர்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் இடியாகத் தாக்கி இருக்கிறது.

உலக நாடுகளுக்கே முன்மாதிரி தலைவனாக விளங்கிய லீ குவான் யூ தமிழர்களின் மனங்களிலும் நீக்கமற இடம் பிடித்தவர். தமிழைச் சொந்த மொழியாகக் கொண்ட தமிழர் நிலத்திலேயே தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்படாத நிலையில், சிங்கப்பூர் தேசத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவித்த பெருமகன் லீ குவான் யூ அவர்கள்.

31 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஆகச்சிறந்த ஆட்சி புரிந்த லீ குவான் யூ அவர்கள் தமிழர்களின் நலனுக்கான அத்தனை ஆக்கபூர்வங்களையும் செய்துகாட்டியவர். சிங்கப்பூரில் தமிழை ஆட்சிமொழியாக அறிவித்தபோது மலையாளிகள் எங்கள் மலையாள மொழிக்கும் அத்தகைய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். அதற்கு, ‘சிங்கப்பூர் என்கிற தேசம் அமைய போராடியவர்கள் தமிழர்கள். அதற்கான நன்றிக்கடனாகவே நான் தமிழை ஆட்சி மொழியாக்கி இருக்கிறேன்’ என வெளிப்படையாகச் சொல்லி தமிழர்களின் இதயங்களை ஆட்கொண்டவர் லீ குவான் யூ அவர்கள்.

ஈழப் போராட்டத்திலும் தமிழர்களின் பக்கம் நின்று அமைதிக்கும் தீர்வுக்கும் வலியுறுத்தியவர். ஆங்கிலேய‌ப் பிடியில் இருந்து விடுதலை பெற மட்டும் அல்லாமல், மலேஷியாவிலிருந்து சிங்கப்பூரை தனித்துப் பெறவும் போராடி வெற்றிகண்டவர் லீ குவான் யூ அவர்கள். எவரோடும் தனிப்பட்ட பகைமை பாராட்டாமல் அதே நேரம் நமக்கான உரிமைக்குப் போராடும் நேர்மையையும் சக்தியையும் நிரூபித்து உலகுக்கே முன்னுதாரணமாக விளங்கிய லீ குவான் யூ அவர்களின் மறைவுக்கு உலகத் தமிழர்களின் சார்பாக‌ நாம் தமிழர் கட்சி வீர வணக்கம் செலுத்துகிறது.

தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வேறுபாடுகள் கடந்து போராடிய இந்தத் தலைவனை வாழும் காலம் வரை நம் இதயத்தில் தூக்கிச் சுமப்பதே தமிழர்கள் ஒவ்வொருவரும் அவருக்குச் செய்யும் உண்மையான வீர வணக்கமாக இருக்கும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் தந்தை லீகுவான் மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பு! வைகோ இரங்கல்

தென்கிழக்கு ஆசியாவில் சின்னஞ்சிறு தேசமான சிங்கப்பூரை உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும், ‘சிங்கப்பூரின் தந்தை’ என அழைக்கப்பட்டவருமான அந்நாட்டின் முதல் பிரதமர் லீகுவான் யூ மறைந்த செய்தி, அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

ஒரு நாட்டின் அதிபர் எப்படி மக்கள் சேவை புரிய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் லீகுவான். பிரதமர் பதவி வகித்தபோதும், அந்நாட்டின் முதல் ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற லீகுவான், அங்கு வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்.

இலங்கை தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்களப் பேரினவாத அரசுக்கும் இனக்கொலை நடத்திய அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். இலங்கை தீவில் வாழும் ஈழத்தமிழர்கள், ஈழத்தின் பூர்வகுடிமக்கள் என்பதையும், சிங்கள இனவாதம் அவர்களை நசுக்கி அழிக்க முனைகிறது என்பதையும், நடைபெற்ற படுகொலைகள் தமிழ் இன அழிப்பின் வெளிப்பாடு என்பதையும் உலகத்துக்குச் சொன்னார்.

சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும், தமிழர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதனால்தான் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நேர்ந்தது என்றும் உலக நாடுகளில் வெளிப்படையாக சொன்ன ஒரே ஒரு அதிபர் லீகுவான் அவர்கள் மட்டும்தான்.

தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த அந்தக் குரல் அடங்கிவிட்டது! அவர் மறைந்துவிட்டார்! என்பது தாங்கமுடியாத துக்கத்தைத் தருகிறது. ஈழத்தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும், தாய்த் தமிழகம் உள்ளிட்ட தரணிவாழ் தமிழர்களும் நன்றி உணர்வோடு அந்த மாபெரும் தலைவர் லீகுவான் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் இந்த நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். லீகுவான் அவர்களின் புகழ் காலத்தால் அழியாது நிலைத்து இருக்கும்.

Advertisements