தமிழரசுக்கட்சிக்கு வெள்ளையடிக்கின்ற சிறீதரன் எம்பி

sampanthan_sumanthiran traitorsகௌரவ சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழரசுக்கட்சியின் தூண்… கிளிநொச்சியிலிருந்து சங்கரி

அண்ணை வணக்கம்.

நான்…. அப்பிடி பெயர் சொல்லக்கூடிய பெரிய பேப்பர்காரனில்லை. நீங்கள் வசதி போல சொல்லுற சரவணையின்ரையோ சந்திரகுமாரின்ரையோ அல்லது அனந்தியின்ரையோ ஏன் உங்கடை ஆள் கூட இல்லை. என்ரை சனத்திற்காக கதைக்கவிரும்புகின்ற ஆள். அதுக்காக நீங்கள் கோபிக்க கூடாது. மக்கள் பிரதிநிதிகள் நாங்களெல்லோ கதைக்கலாமெண்டு. அப்பிடி இப்ப நீங்கள் கதைக்கவில்லையெண்டுறதுதான் இப்ப பிரச்சினையே.

சாதாரண பள்ளியில விவசாயம் படிப்பிச்சுக்கொண்டிருந்த உங்களை அரியாசனம் ஏத்தினது இந்த சனமும் பேப்பர்காரருமெண்டதை மறக்க மாட்டியள். எல்லாத்திற்கும் மேலே ஆனந்தபுரம் பொக்ஸ் அடிக்குள்ள தன்ர உடல் கூட கிடைக்கக்கூடாதெண்டு அடிபட்ட தளபதி தீபனின் மச்சான் என்றது மேலதிக கௌரவமாகியிருக்குது.

ஆனால் அப்பிடி தியாகம் செய்தவங்களை வேலையற்றவங்களின்ர போராட்டமெண்டும் சொன்ன பின்கதவு எம்பி சுமந்திரனை எப்பிடியும் வெல்ல வைச்சுப்போடவேண்டுமெண்டு இப்ப ஆலாய் பறக்கிறியள். நல்ல காலம் செத்தவங்கள் திரும்பிவரமாட்டாங்களெண்ட உசார் பலருக்கு இருக்குது பாருங்கோ.

தமிழரசுக்கட்சி உங்களை துரும்புக்கூட மதிக்கின்றதில்லையெண்டது. உலகறிந்த கதை. உங்களிற்கு ஒரு பதவியை கூட தாறதில்லை. ஆனால் முதுங்கெலும்பண்டதே இல்லாத தமிழரசுக்கட்சிக்கு வெள்ளையடிக்கின்றதை நீங்கள் தவறாமால் செய்யிறியள்.

ஒரு பக்கம் பின்கதவு எம்பி முதல் சிங்கக்கொடி காத்த சம்பந்தன், யோகேஸ்வரன் வரை புலம்பெயர் உறவுகளை பொத்திக்கொண்டிருக்க சொல்லி ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கினம்.

ஆனால் நீங்களோ அதுகள் பனியிலயும் வெய்யிலிலயும் உழைச்சதை வைச்சு சனத்திற்கு உங்கடை சொந்தபேரிலை கிள்ளிக்கொடுக்கிறியள். அதுக்கு நூறு படமெடுத்து உங்கடை தம்பியின்ர இணையத்தில் நீங்களே போட்டும் கொள்ளுறியள். வழியில் தேங்காயை எடுத்து தெரிவில் பிள்ளையாருக்கு உடைக்கின்றது உங்கடை ஸ்ரைல். ஆனால் அதிலயும் எந்த புலம்பெயர் உறவுகளை பொத்திக்கொண்டிருக்க சொல்லுற தலைமையளை வைச்சு உதவியளை வழங்கிறியள் பாருங்கோ. அங்கை நிற்குதண்ணை உங்கடை அரசியல் சாணக்கியம். அதுவும் புலம்பெயர் சனத்திற்கு வைக்கிறியள் ஆப்பு ஒருத்தராலும் ஏலாது அண்ணை.

ஒருபக்கம் பொடியளிற்கு சேர்ந்திருந்து தான் பின்கதவு சுமந்திரனை கருவறுக்கவேணுமெண்டு சீன் காட்டுறியள். மற்ற பக்கம் சுமந்திரனை போறவாற இடமெல்லாம் கூட்டித்திரிஞ்சு சனத்திற்கு மூளையை கழுவி விடுறியள். இப்ப உங்கடை கனவு இலட்சியமெல்லாம் அடுத்த முறை பழையபடி நாடாளுமன்ற கதிரை ஏறுகின்றது தான் எண்டு எல்லோருக்கும் தெரியும். இன்னும் சிலர் சொல்லுகினம் தமிழரசுக்கட்சி தலைமையினை கைபற்றுற ஜடியாதான் எண்டும் சொல்லுகினம். ஆனால் சுமந்திரன் தான் அடுத்த தலைவரெண்டு சிங்கக்கொடி காத்த வீரன் சொல்லிப்போட்டாரெண்டது தெரியாமல் இல்லை. ஆனாலும் லைனை கிளியர் பண்ணி கதிரை ஏறத்தான் சுமந்திரனை கூட்டித்திரிஞ்சால் எனது ஞான சூனியத்தை மன்னிச்சுக்கொள்ளுங்கோ அண்ணை.

நீங்கள் அடுத்த முறையும் கதிரையேறுவது எனக்கும் விருப்பம் தான். ஏதோ வெளிநாட்டில எங்கடை சனம் நம்பி தாறதில மிச்சம் மீதியாக கொஞ்சநஞ்சம் பள்ளி பொடியளிற்கு கொப்பி, புத்தகமாயோ சனத்திற்கு தென்னங்கன்றாகவோ கிடைக்கட்டும். ஆனால் கொழும்பில வீடும் கோடிக்கணக்கில பணமும் வாங்கிக்கொண்டு செட்டிலாயிருக்கிற பின்கதவு எம்பிக்கு நீங்கள் கூஜா தூக்கிறது கிள்ளி தெளிக்கிறதில சந்தேகத்தை தருகுதண்ணை.

என்ரை அப்பு அடிக்கடி சொல்லுறவர் பன்றியோட சேர்ந்த பசுவும் எதுவோ தின்னுமெண்டு….இப்ப அந்த கதைமாதிரி தான் உங்கடை கதையும் வருகுது. உங்கடை கதிரை கனவுக்காக காணாமல் போனதுகளையும் பல பிரிவாக சிதைச்சுப்போட்டியள். இதை சொல்லுறதுக்காக என்னை அனந்தியின்ரை ஆள் என்று போடாதீங்கோ. அனந்திக்கான ஆதரவு என்றது காணாமல் போனோருக்காக குரலிற்கான அடையாளம் மட்டுமே. அதை தவிர அவவின்ர அரசியல்பாதையெண்டால் முதலில அது உங்கடை பிழை பாருங்கோ. ஏனெண்டால் அவவை அரசியலிற்கு கொண்டு வந்தது நான் தானெடு அடிக்கடி சொல்லுறனியள்.

பிறகென்ன அண்ணை வட்டக்கச்சியில சரணாகதியடைஞ்ச கதை தொடக்கம் கிளிநொச்சியில உங்கடை தொண்டரடிப்பொடியள் செய்யிற கட்டைப்பஞ்சாயத்து வரை கன கதை கிடக்குது. முக்கியமாக தெய்வீகன்- அப்பன் கதைகளும் பேசக்கிடக்கு. இதையெல்லாம் நான் சந்திரகுமாரிட்ட காசு வாங்கி எழுதினதாகவோ அல்லது இராணுவப்புலனாய்வு பிரிவு எழுதுவிச்சாதாகவோ நீங்கள் உங்கடை தம்பியின்ர அப்பன் பெயர் அறிஞ்ச அறியாத இணையங்களில எழுதுவியள். எது எப்பிடியோ எங்கடை சனம் பாவம் அண்ணை…

கிளிநொச்சியிலிருந்து சங்கரி

Advertisements