இனத்துரோகி சுமந்திரன் எம்.பி. வேண்டுகோள்

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள்! புலம்பெயர் மக்களிடம் சுமந்திரன் எம்.பி. வேண்டுகோள்

தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடுமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.sampanthan_sumanthiran traitors

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள்! (காணொளி)

இனத்துரோகி முத்திரைகளும் கொடும்பாவி எரிப்புக்களும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குள் ஒற்றுமையாக இயங்க முடியவில்லையென்பது பல வருடகாலமாக எமக்கெல்லோருக்கும் தெரியும். அதற்குள் தமிழரசுக் கட்சியின் கை ஓங்கியிருந்ததும் எமக்குத் தெரியும். இக்கட்சிகளுக்குள் ஒருவித ஜனநாயக நடைமுறைகளும் இருக்கவில்லை என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும். இதெல்லாம் தெரிந்திருந்தும் தேர்தலுக்குத் தேர்தல் அவர்களுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தோம். ஆனால்,

கேள்விகளைக் கேட்கவில்லை.

கட்சிக் கட்டமைப்புக்களை ஏற்றமுறையில் கட்டினார்களா? வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தெரிவு செய்தனர்? மக்கள் மத்தியில் என்ன வேலைத்திட்டத்தினை வைத்திருக்கின்றனர்?

என ஒன்றையும் கேட்கவில்லை.

கேட்டால் பதில் வரவில்லையெனில் மாற்றுக் கட்சிகளை உருவாக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

யாராவது இக்கட்சிக்குப் போட்டியாக சுயாதீனமாகக் களமிறங்கினால் அவர்கள் யார்? என்ன கொள்கையின் அடிப்படையில் இறங்குகிறார்கள்? என ஆராயாது ஒரேயடியாகத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினோம்.

இப்போது திடீரெனத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை ‘இனத்துரோகி’ எனப் பச்சை குத்தி யாழ். மாவட்டம் முழுவதும் அவர்களது படங்களைத் தூக்கிலிடுவதும் தீக்கிரையாக்குவதையும் செய்தால் எமது அரசியலின் சின்னத்தனங்களை என்ன சொல்ல.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுயின் ஒரு பகுதி  இங்கு தரப்பட்டுள்ளது.

தந்தை செல்வா முதல் மாவீரன் பிரபாகரன் வரை, நமக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராயிருந்த தலைவர்களை மட்டுமே வழிகாட்டிகளாக ஏற்றவர்கள் நாம். ஆய்வாளர் நிலாந்தன் ஒரு மேடைப்பேச்சில் கூறியது போல எம்மக்கள் சாதி, சமயம், பிரதேசம், ஏழை, பணக்காரன் பார்த்துத் தலைவர்களைத் தெரிவுசெய்வதில்லை. றிஸ்க் எடுக்கும் தலமைக்குப் பின்னால் எம் மக்கள் என்றும் நிற்பார்கள்.

ஆகவே சம்பந்தன் – சுமந்திரன் போன்ற அற்ப அரசியல்வாதிகளை நம்பி ஏமாறும் நிலையில் நாம் தொடர்ந்தும் இருக்கப்போகின்றோமா? அல்லது அழிக்கப்பட்ட ஓர் இனத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய நிலையில், அழித்தவர்களின் ஊதுகுழலாக ஒலிக்கும் அவர்களைத் தூக்கியெறிந்துவிட்டு, தகுதியான தலைமையைத் தெரிவு செய்யும் வேலையை இந்த நொடியிலேயே தொடங்கப்போகின்றோமா? சிந்தப்போம் செயற்படுவோம்.

Advertisements