சூப்பர் சிங்கர் ஈழத்து சிறுமி மீதான இந்திய வெறியர்களின் குரோதங்கள்!

vijay tv supersinger cheating 2மனசாட்சி வலைத் தளத்திலிருந்து

ஈழம் பற்றிய பாடிய அந்த பெண்ணுக்கு ஈழம் பற்றிய புரிதல் எந்தளவுக்கு இருக்கும் என யோசித்து பாருங்கள். அந்தப்பெண் கனடாவில் வாழும் ஈழ அகதியின் மகள். அவளது பெற்றோரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். ஈழ மக்களின் துயரத்தை அந்தப்பெண் பாடலாக பாடும்போது தனுஷ், திவ்யதர்சினி, ஜட்ஜஸ், பெற்றோர்களின் முகங்கள் மாறி மாறி அவர்களது முகபாவங்கள் காட்டப்பட்டன. திவ்யதர்சினியின் கண்ணில் நீர் தளும்புகிறது, தனுஷ் சோகமாகிறார், மற்றொரு பாடகி வாய் பொத்தி அழுகையை கட்டுப்படுத்துகிறார் என காட்டுகிறார்கள். அந்த பாடல் வரி உருக்குவதை போன்றுதான் இருந்தது. உண்மையில் அந்த வரிகள் அந்தப்பெண்ணையே உருக்கவில்லை என்பது தான் உண்மை. பாடி முடித்தபின் அந்தப்பெண் புன்னகைக்க தொடங்கினார். அந்த பெண்ணின் தாயின் முகம் கொஞ்சம் வாடியதாக இருந்தது. இது எல்லாம்மே நடிப்பு தான். ஈழ அவலத்தை தன் வெற்றிக்காக அந்த குழந்தை கையில் எடுத்துள்ளது. வியாபாரத்துக்காக, வெற்றிக்காக நடத்தப்படும் கூட்டு நாடகம்மிது.

****

இந்தப் பதிவு மட்டுமல்லாமல் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இது போன்ற கருத்துக்களுக்குமான பதிலாக இது !

விஜய் டிவியின் பித்தலாட்டங்கள் ஒரு புறம் இருக்க !

விஜய் டிவி சூப்பர் சிங்கர் 4 இல்  ஈழத்துச் சிறுமி பாடிய அதே பாடலைத் தான் சையத் பாடினார்  அதுவும் பின்னணியில் ஈழத்து அவலங்கள் காட்டப்படிருந்தது

Syed Subahan super singer senior 4 song

ஆனால் அப்போது யாரும் அந்தப் பாடல் பற்றியோ அல்லது  ஈழம் பற்றிய பாடிய  சையத்திற்கு ஈழம் பற்றிய புரிதல் எந்தளவுக்கு இருக்கும் அதன் பின்ணனி பற்றியோ விவாதிக்கவில்லை அது ஏன் ?  அவர் இந்தியர் என்பதலா ?

ஒவ்வொரு முறையும்  சூப்பர் சிங்கரில் மலையாளிகள் வந்து வென்று செல்லும் போதெல்லாம் இப்படியான விமர்சனங்கள் வரவில்லை ஆனால் ஒரு ஈழத்துச் சிறுமி அதுவும் பரிசுக்காக அல்லாமல் பாட்டிற்காக  வந்தவரை இவ்வளவு இழிவான குரோதங்களை வெளியிடும் இவர்களிடம் இருப்பதெல்லாம்  வேற்று நாட்டிக்காரி வந்து வென்று செல்வதா என்ற குரோதமே  தவிர  விஜய் டிவியின் பித்தலாட்டம் அல்ல !

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று மார்தட்டிக்கொள்ளுபவர்கள் ஒரு ஈழத்தமிழனைக் கூட வாழ வைத்ததில்லை தமிழ்நாட்டுக்கு தண்ணி கூடக் கொடுக்காத இன்னொரு இந்தியனைத் தான் வாழ் வைப்பார்கள் !

ஈழத்தை வைத்து பிச்சை எடுத்தது விஜய் டிவியா? ஜெசிக்காவா?

*************

விஜய் ரீவி ஈழத்தமிழர்களை ஏமாற்றி விட்டதா ?

***********

தமிழ் மக்களுக்கு விஜய் ரீவி வைத்த பெரிய ஆப்பு

*****

Super Singer 4 Grand Finale

Diwakar Winner

Syed Subahan -Judges Choice Winner and 1st Runner Up

******
Super Singer 3; Grand Finale

Sai Charan Winner

Sathya Prakash -Judges Choice Winner

அவர்கள் வலைத் தளத்திலிருந்து

தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் சொதப்பலாக முடிந்ததன் காரணம் என்ன?[அவர்கள்…உண்மைகள்.]

திறமைக்கு விருது கொடுப்பதாக இருந்தால் முதல் இரண்டு இடங்களில் ஸ்ரீஷா அல்லது பரத்துதான் வந்து இருக்க வேண்டும் அதன் பின் தான் இப்போது வெற்றி பெற்றவர்களில் யாரவது ஒருத்தர்தான் மூன்றாவது இடத்தை பெற்று இருக்க வேண்டும். இதை வெளியில் இருந்து பார்க்கும் பொதுவான மக்கள் இப்படிதான் கருதுவார்கள். ஆனால் நடந்து என்னவோ எப்போதும் விஜய்டிவியினர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் திறமைக்கு மட்டும் மிக முக்கியத்துவம் கொடுப்பதால் அதற்காக அந்த ஜாதியை சார்ந்த ஒருவருக்கும் ஈழத்தமிழர்களை வைத்துதான் தங்கள் வியாபாரமே என்பதால் அதற்க்காக ஒருவரும், இசை துறையை சார்ந்த மறைந்த ஒருவரின் பெண்ணிற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்ற இசை துறையை சாரந்த ஏகோபித்த ஜட்ஜுக்களின் குரலுக்காகவும் கொடுக்கப்பட்டதாகவே தெரிகிறது.

வெற்றி பெற்ற குழந்தைகளின் திறமையில் எனக்கு சந்தேகம் இல்லை. அனைவர்களும் மிக திறமையானவர்கள்தான் இவர்களுக்கும் விஜய் டிவியினர் நடத்திய வியாபார பாலிடிக்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை.

இதை தவிர ஜெஸிக்காவின் வெற்றி பற்றி இணையத்தில் அதிலும் சமுக வலைத்தளமான பேஸ்புக்கில் பெரும் அக்க போரே நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ஜெஸிக்கா வெற்றி பெற்றதற்கு காரணம் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் ஒட்டு போட்டதுதான் என்றும் அதற்காக அவர் ஈழத்தமிழ் பாட்டுகளை பாடி மக்களின் உணர்ச்சியை வைத்து வெற்றி பெற்றதுதான் என்று பேசப்படுகிறது. இந்த பேச்சு மிகவும் கிழ்தரமானது. இது ஜெஸிக்காவின் திறமையையே கேலிக்குரியதாக்குகிறது. இது மிகவும் தவறான எண்ணமாகும். உலகெங்கும் உள்ள மக்கள் போட்ட ஒட்டினால்தான் அவர் வெற்றி பெற்றார் என்ற வாதத்தை எடுத்துக் கொண்டால் அப்போது அவர் நம்பர் ஒன் என்ற இடத்தைதான் அவர் பெற்று இருக்க வேண்டும்.(நான் எனக்கு பிடித்த ஜெஸிக்காவிற்கு 200க்கும் அதிகமான ஒட்டுகளை இணையம் மூலம் பதிந்து இருக்கிறேன்) ஆனால் அவர் பெற்றதோ நம்பர் இரண்டாம் இடத்தைதான். இதிலிருந்தே விஜய்டிவியினர் நடத்திய நாடகம் என்னவென்று எல்லோருக்கும் புரிந்து இருக்கும்

விஜய் டிவியினருக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் உங்களுக்கு நல்ல வியாபாரமும் லாபமும் முக்கியம்தான் அதானல் நியாம் தர்மம் என்பதை அழித்து இளம் குழந்தைகளைகளின் திறமைகளை மழுங்கடிக்காதீர்கள்.

விடுதலை போராட்டத்தின் நினைவுகளை மீட்டு எடுத்த செல்வி.ஜெசீகா நன்றிகள்

Advertisements