பொறுப்புக்கூறும் விடயத்தில் ஐ.நாவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குங்கள்

untitledமைத்திரிபாலவுக்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் கடிதம்.

முன்னைய அரசால் அலட் சியப்படுத்தப்பட்ட அல்லது மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட முக்கிய மனித உரிமை விவகாரங்களுக்குத் தீர்வை காண்பதற்கான வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்ப மும், பொறுப்பும் உங்களுக்கு கிடைத்துள்ளது. இலங்கையில் கடந்த காலங் களில் இடம்பெற்ற தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களுக்கு முடிவை காண்பதற்கான உங்க ளுடைய முயற்சிகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் என்பது உல கின் 90 நாடுகளில் மனித உரிமை நிலைவரம் குறித்து கண் காணிக்கும் சுயாதீன, அரசசார் பற்ற அமைப்பு, அரச மற்றும் அரசுசாராத செயற்பாட்டாளர்க ளால் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவது குறித்து நாங்கள் மூன்று தசாப்தமாக அறிக்கை யிட்டு வருகின்றோம்.
மனித உரிமை கண்கா ணிப்பகம் கடந்த 25 வருடங் களாக இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆவணப்படுத்தி வருகின்றது. விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையணிகளில் பயன்படுத்துவது உட்பட அவர்களுடைய ஏனைய மீறல்களையும், வளைகுடா நாடுகளில் இலங்கை பணிப் பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாவதையும், மோதல்களின் போது அரசபடையினர் மேற் கொண்ட சித்திரவதைகளையும்,ஏனைய துஷ்பிரயோகங்களையும் நாங்கள் பதிவுசெய்து வெளிப்படுத்தியுள்ளோம். இலங்கையில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றியுள்ளோம்.

பயங்கரவாத தடைச்சட்டத் தின் கீழ் தடுத்துவைக்கப்பட் டுள்ளவர்கள் குறித்து மீண்டும் ஆராய்வதற்கான நடவடிக்கை, ஊடகங்கள் மீதான கட்டுப் பாட்டை தளர்த்தல், இணையத் தின் மீதான தணிக்கையை முடிவுக்குக் கொண்டுவருதல், வடக்கு, கிழக்கிற்கு ஆளுநர் களாக இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை முடிவுக்குக் கொண்டு வருதல் போன்ற உங்களுடைய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.

மேலும் அரசசார்பற்ற அமைப் புகளை பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பிலிருந்து அகற்று தல், வடக்கில இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை உரிய உரிமையாளர்களிடம் வழங்கு தல் போன்ற உங்கள் அரசின் நடவடிக்கைகளும் முக்கியமா னவை.

2012இல் வெலிக்கடை சிறை யில் இடம்பெற்ற மரணங்கள் குறித்து விசாரணை செய்வதென உங்கள் அரசு தீர்மானித் துள்ளமை, பொறுப்புக்கூறுதல் தொடர்பான விடயங்களைக் கையாள விரும்பாத முன்னைய அரசின் போக்கிலிருந்து மாறுபட்ட செயலாகும்.

உங்கள் அரசு தீர்வு காண வேண்டும் என நாங்கள் எதிர் பார்க்கும் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றோம்.

மனித உரிமை கண் காணிப்பகம் மேற்கொண்ட ஆய் வுகள் மற்றும் விசாரணைகளின் மூலம் இலங்கை பொலிஸாரால் கைதுசெய்யப்படுபவர்கள் துன் புறுத்தப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் வழமையாக இடம்பெறுவது தெரியவந்துள்ளது. சிலவேளைகளில் வாக்குமூலங் களைப் பெறுவதற்காக சித்திர வதைகள் பயன்படுத்தப்பட்டா லும், தனிப்பட்ட பழிவாங்கல்கள் மற்றும் பணம் பறிப்பதற்காகவும் இது இடம்பெறுகின்றது.

இலங்கையில் சித்திரவதை களைத் தடைசெய்யும் சட்டம் காணப்பட்டாலும் நடைமுறை யில் பொலிஸ் அதிகாரிகள் அல் லது அவர்களது உயர் அதிகாரி களுக்கு எதிராக சித்திரவதை களுக்காக ஒழுக்காற்று நடவடிக் கைகளோ, விசாரணைகளோ, நீதிமன்ற நடவடிக்கைகளோ இடம்பெறுவதில்லை.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட சில சந்தர்ப்பங்களில் கூட அவர்கள் தொடர்ந்தும் பணியில் நீடிப்பதும், வெறுமனே இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ள மையும் தெரியவந்துள்ளது.
ஊடகங்களால் வெளிக்கொண ரப்பட்டு பொதுமக்களின் தீவிர கவனத்தைப் பெற்ற ஓரிரு சம்ப வங்களில் மாத்திரம் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களின் போது கூட உயர் அதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படுவதில்லை.

சித்திரவதை காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் அவர் களது குடும்பத்தவர்களும் நீதியைப் பெறுவதற்காக மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, அவர்கள் கிராமங்களைச் சேர்ந்தவர்களாகக் காணப்பட்டால் மேலும் பாதிக்கப்பட்ட பலர் தாங்கள் பொலி ஸாரால் அச்சுறுத்தப்படுவதாக வும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினத் தன்று ஆற்றிய உரையில்,

“”இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் சிறுபான்மைச் சமூகங்களின் இதயங்களை வெல்லத் தவறிவிட்டனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். மேலும் பெப்ரவரி 17ஆம் திகதி நீங்கள் ஆற்றிய உரையில் இலங்கைக்கு இந்து சமயத்தை பின்பற்றும் மக்கள் ஆற்றிய பங் களிப்பை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை முக்கியமான சமிக்ஞை கள். எனினும், கடந்த காலத்தின் நச்சு பாரம்பரியம் காரணமாக இலங்கையின் சிறுபான்மையி னர் மத்தியில் காணப்படும் கரிசனைகளுக்குத் தீர்வுகாண் பதற்கு மேலும் தீவிர நடவடிக்கைகள் அவசியம்.
கடந்த சில வருடங்களாக பொதுபலசேனா என்ற தீவிர பெளத்த அமைப்பு சிறுபான்மை யினத்தவர்களுக்கு எதிராக கசப் புணர்வை விதைத்து வருகின் றது. குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளுத்கமவில் ஞானசார தேரர் நடத்திய பேரணி காரணமாக மூண்ட வன்முறை களின்போது 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், 80 பேர் வரை காயமடைந்தனர். சொத்துகள், உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இவ்வாறான வன்முறைகள் மீண்டும் நிகழ்வதைத் தடுப்பதற் காக குறிப்பிட்ட இன வன் முறைகளுக்குக் காரணமான பொதுபலசேன உறுப்பினர்கள் குறித்து அரசு விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்.மேலும், இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினரின் தலை யீடுள்ளதா அல்லது அவர்கள் வன்முறைகளைத் தடுக்க தவறி னார்களா என்பது குறித்தும் விசாரித்து ஒழுக்காற்று நடவடிக் கையை எடுக்கவேண்டும்.

கடந்த அரசால் சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்கு முறைகள் உங்களது அரசில் நிலவாது என்பதே நீங்களும், பிரதமரும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கைக்கு அளித்த முதல் வாக்குறுதியாகும்.மேலும், எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அவர் களது தொலைபேசிகள் இடை மறித்து ஒட்டுக்கேட்கப்படும் நடவ டிக்கைகளை நீங்கள் நிறுத்து வதாக உறுதியளித்தீர்கள். அரசசார் பற்ற அமைப்புகளைப் பாதுகாப்பு அமைச்சு கண்காணிப்பதை நிறுத்தினீர்கள். சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் முன்னர் எதிர்கொண்ட அச்சுறுத்தும் சூழ் நிலையிலிருந்து மாற்றத்தை ஏற்ப டுத்தியுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இவை.

கீழே நாங்கள் சுட்டிக்காட்டும் வன்முறைச் சம்பவங்களுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்த விசாரணைகளை மேற் கொள்வதன் மூலமாக ஒடுக்கு முறை கலாசாரம் என்பதை கடந்த காலத்தின் விடயமாக்கவேண்டும் என நாங்கள் உங்களை வலியு றுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.முக்கியமாக சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக கடந்த சில வருடங்களில் இடம் பெற்ற நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளுக்கு உங்கள் அரசு முன்னுரிமையளிக்க வேண் டும். லசந்த விக்கிரமதுங்க படு கொலை, பிரகீத் எக்னலிகொட பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டது போன்றவை சில வாகும். மேலும், முக்கியமான கொள்கைகளை வகுக்கும்போது சிவில் சமூகத்தினருடன் கலந்தா லோசனைகளை மேற்கொள்ளு மாறும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

பயங்கரவாதத் தடைச்சட்டத் தின் கீழ் தடுத்துவைக்கப்பட் டுள்ள அனைவரினது வழக்குகள் குறித்து விசாரணை செய்வதற்கு உங்கள் அரசு உத்தரவாதமளித் துள்ளது.
அவர்களை விடுதலை செய்வ தற்காகவோ அல்லது அவர்கள் மீது முறைப்படி குற்றச்சாட்டு களை சுமத்துவதற்காகவோ. விடுதலைப்புலி சந்தேகநபர் களையும் ஏனையவர்களையும் பல வருடங்களாக தடுத்துவைப் பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத் தப்பட்டுள்ளது.முன்னைய அரசு இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரங்களை வெளியிடப் போவதாகத் தெரிவித்த போதி லும் பல குடும்பத்தவர்களும், சட்டத்தரணிகளும் கைதுசெய்யப் பட்ட நபர்கள் குறித்த உரிய விடயங்களின்றி தவிக்கின்றனர்.

இந்த விடயத்திற்குத் தீர்வு காண் பதற்கான உடனடியான ‡ முழு மையான அரச நடவடிக்கை முன் னுரிமைக்குரிய விடயமாகும்.இந்த வழக்குகள் ஆராயப் படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்கள் குறித்த அரச அறிக் கைக்காக நாங்கள் காத்திருக்கின் றோம்.1999 இல் ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணமற்போகச் செய்தல் குறித்த குழுவினர் பயங் கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என எடுத்த நிலைப் பாட்டை மனித உரிமை கண் காணிப்பகம் நீண்டநாட்களா கவே வலியுறுத்தி வருகின்றது.குறிப்பிட்ட சட்டமூலம் நபர் ஒருவரை நீதிமன்ற ஆணை யின்றி கைதுசெய்து 18 மாதங் களுக்குத் தடுத்து வைப்பதற்கும், நீதிமன்றில் ஆஜராக்காமல் வைத் திருப்பதற்கும் அனுமதிக்கின்றது.கடந்த பல வருடங்களில் பெரு மளவு மனித உரிமை துஷ்பிர யோகத்திற்கு இது வழிவகுத்துள் ளது. உள்நாட்டு யுத்தத்தின் போது இது பிரச்சினைக்குரிய விடயமாகக் காணப்பட்டது. யுத் தம் முடிவடைந்த பின்னரும் இது தொடர்கின்றது.

விடுதலைப்புலிகளுடன் தொடர் புள்ளவர்களையும், வெளிநாடு களிலிருந்து திருப்பி அனுப் பப்பட்ட புகலிடக்கோரிக்கையா ளர்களையும் படையினர் சித்தி ரவதை செய்துள்ளதை மனித உரிமை கண்காணிப்பகம் அறிந் துள்ளது.கொழும்பிலுள்ள குற்றப்புல னாய்வுப் பிரிவனர் அலுவலகம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்தில் பல தடவைகள் சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும், ஏனைய குற்றங்களும் இடம் பெற்றுள்ளன. ஏனைய அறிவிக்கப் படாத தடுப்பு முகாம்களிலும் இவை இடம்பெற்றுள்ளன.இவ்வாறான இரகசிய மறை விடங்கள் காணப்படும் பட்சத்தில் சர்வதேச அமைப்புகளுடனான ஏற்பாடுகள் அர்த்தமற்றவையாகி விடும்.

முன்னைய அரசு அரசியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறான சித்திரவதை நடவ டிக்கை குறித்து விசாரணை செய்து அதற்குக் காரணமான வர்களை நீதியின்முன் நிறுத்து மாறு உங்களைக் கேட்டுக்கொள் கிறோம்.மோதல் தொடர்பாக பொறுப் புக்கூறும் கடப்பாடு இலங்கையின் தசாப்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நீதி வழங்குவதற்கு முன் னைய மஹிந்த ராஜபக்­ அரசு மறுத்துவந்தமையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை இலங்கை குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொள்ளும் நிலையை உருவாக்கியது என்பது உங்க ளுக்குத் தெரியும்.

உங்களுடைய அரசு உள் நாட்டு விசாரணைப் பொறி முறையை ஏற்படுத்துவதாக அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து மார்ச் 15ஆம் திகதி வெளியாகவேண்டிய விசாரணை அறிக்கை தாமதமாகியுள்ளது.இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் பொறுப் புக்கூறும் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளுக்கு முழுமை யான ஒத்துழைப்பை வழங்க மாறு நாங்கள் உங்களை வலியு றுத்துகின்றோம்.மனித உரிமைகள் ஆணை யாளர் மற்றும் காணமற்போ னோர் தொடர்பான செயற்குழு ஆகியவற்றிற்கு விடுத்த அழைப் பிற்கு அப்பால் நீங்கள் இலங்கை குறித்து விசாரணைகளை மேற் கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் குழு விற்கும்அழைப்பு விடுக்கவேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கை வருவதற்கு வேண்டுகோள் விடுத்த ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.சர்வதேச நிபுணர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் பங்களிப்பை மாத்திரம் கொண் டுள்ள உள்நாட்டுப் பொறிமுறை குறித்து குறிப்பிடப்படுவது பற்றி நாங்கள் கவலையடைந்துள் ளோம்.சுயாதீன பக்கச்சார்பற்ற உள்நாட்டுப் பொறிமுறை கூட அச்சுறுத்தல்களுக்கு உள்ளா கலாம். சாட்சிகள் மாத்திரமல்ல, உள்நாட்டு நீதிபதிகள், விசார ணையாளர்கள் கூட அச்சுறுத் தப்படலாம் என்பது குறித்து நாங் கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

பிரபலமான சர்வதேச நீதிபதி கள் மற்றும் விசாரணையாளர் களின் பிரசன்னம் இந்த வகை அழுத்தத்தைக் குறைக்கும். விசாரணைகளுக்கு நம்பகத் தன்மையையும் சுயாதீன தன் மையையும் வழங்கும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நீதி மன்றங்கள் இணைந்த ஒரு மாதி ரியைப் பின்பற்றுமாறு உங்களை நாங்கள் கேட்டுக் கொள்கிள்றோம்.

Advertisements