ஈழத்தை வைத்து பிச்சை எடுத்தது விஜய் டிவியா? ஜெசிக்காவா?

vijay tv supersinger cheatingவிஜய் டிவி எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் அது மக்களிடம் வெகுவேகமாக பிரபலமடையும். அதே நேரத்தில் 100% நேர்மையுடனும், நல்ல தரத்துடனும் நடத்துகின்றோம் என்றும் கூறுவார்கள். கடந்த ‘விஜய் விருதுகள்’ நிகழ்ச்சியில் இப்படிதான் இயக்குனர் ராம் தன்னுடைய படத்திற்கு சரியான அங்கீகாரம் இல்லை என மேடையிலேயே ஒப்பாரி வைத்தார். அந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து ‘விஜய் விருதுகள்’ நிகழ்ச்சி என்பது வெறும் கண்துடைப்புதான் என்ற அளவில் அதன் நேர்மை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

எந்த ஒரு தொலைக்காட்சியுமே டி.ஆர்.பி. ரேட்டிங்-யை ஏற்றுவதற்கு என்னவெல்லாம் முடியுமே அதையெல்லாம் செய்வார்கள். சன்டிவியில் சிம்ரன்-விஜய் ஆதிராஜ், விஜய்டிவியில் சிம்பு-பப்லு இவர்கள் தான் போட்டியின்போது உண்மையாக சண்டையிடுவது போல் நடித்து அந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசவைத்தனர். அன்று முதல் இன்றுவரை இதை தான் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவிலும் அனைத்து தொலைகாட்சிகளும் அரங்கேற்றி வருகின்றனர்.

ஒரு பொய் சொன்ன அதுல உண்மை கலந்துருக்கணும், ஒருத்தனோட அழுகைய எப்படி காச மாத்துறது என்பது போன்ற சதுரங்க வேட்டை படத்தின் வசனங்களுக்கு ஏற்ப விஜய் டிவி அவ்வபோது நிரூபித்து கொண்டுதான் வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை முதலில் பார்ப்போம்.

கண் தெரியாதோர்.. உடல் நலம் பாதிக்கப்பட்டோர் என அவர்களை கருணைகளை வைத்து மக்களை நிகழ்ச்சியை பார்க்கத்தூண்டினர். அதன் பின் ஜெசிக்காவை வைத்து ஆதரவை குவிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இன்று விஜய் டிவி செய்த வேலையால் ஜெசிக்கா ஈழ உணர்வை விற்று வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்ற தவறான கருத்து பரவி உள்ளது.

ஜெசிக்கா விஷயத்தில் நடந்தது என்ன?

முதலில் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் பயணத்தில் ஜெசிக்கா பாடிய முக்கிய பாடல்களின் லிஸ்டை கவனமாக பாருங்கள்.

01. கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
02. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
03. புத்தம் புதுகாலை பொன்னிற வேளை
04. எக்ஸ் மச்சி வை மச்சி எஃப் எம் மிர்ச்சி
05. அட என்னாத்த சொல்வேனுங்கோ
06. என்ன என்ன வார்த்தைகளோ
07. தென்கிழக்கு சீமையிலே
08. என் புருஷன் தான் எனக்கு மட்டும்
09. மாயம் செய்தாயோ நெஞ்சை
10. விடை கொடு எங்கள் நாடே
11. கருணை மழையே மேரி மாதா
12. பாடு நிலாவே தேன் கவிதை
13. தில்லானா தில்லானா நீ
14. ரம் பம் பம் ஆரம்பம்
15. என் வானிலே ஒரே வெண்ணிலா
16. புல்வெளி புல்வெளி
17. குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
18. காதோடுதான் நான் பேசுவேன்
19. சகாயனே சகாயனே
20. ஆடவரெலாம் ஆடவரலாம்
21. ஒரு இனியமனது இசையை
22. சீர் கொண்டு வா வெண்மேகமே
23. பனிவிழும் இரவு நனைந்தது
24. அழகுநிலவே கதவு திறந்து
25. அன்று வந்ததும் அதே நிலா
26. ஜூலை மாதம் வந்தால்
27. மலரென்ற முகம் இங்கு சிரிக்கட்டும்
28. நெஞ்சினிலே நெஞ்சினிலே
29. கடவுள் வாழும் கோயிலிலே
30. என் நெஞ்சு சின்ன இலை
31. வாராயோ வாராயோ காதல் கொள்ள
32. நினைவோ ஒரு பறவை
33. அம்மாடி அம்மாடி நெருங்கி
34. காதல் ஓவியம் பாடும் காவியம்
35. மன்னிப்பாயா
36. முன்பே என் அன்பே வா
37. பூ பூக்கும் ஓசை அதை
38. காற்றினிலே வரும் கீதம்
39. அந்தி மயங்குதடி
40. வேதம் அணுவிலும் ஒரு நாதம்
41. பார்த்த ஞாபகம் இல்லையோ
42. அத்தான் என்னத்தான்
43. உன்னை ஒன்று கேட்பேன் உண்மை
44. தூது வருமா
45. காலகாலமாக வாழும்
46. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
47. முதல் முறை பார்த்த
48. பாடவா உன் பாடலை ( வைல்ட் கார்ட் )
49. சில்லென ஒரு மழைத்துளி ( வைல்ட் கார்ட் )
50. ராசாவே உன்ன நம்பி
51. நெஞ்சம் மறப்பதில்லை ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
52. மார்கழி திங்கள் அல்லவா ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
53. இது ஒரு நிலக்காலம் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
54. நல்லதோர் வீணை செய்தே ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
55. வெள்ளைப் பூக்கள் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )

சூப்பர் சிங்கர் பயணத்தில் பாட ஆரம்பித்த ஜெசிக்கா மெல்ல மெல்ல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார். Top 25, Top 15, Top 10 என்று படிப்படியாக ஜெசிக்கா முன்னேறி வந்தார். அந்த நேரத்தில் யாருமே வாக்களிக்கவில்லை. மேலும் நல்ல நல்ல பாடல்கள் பாடி Top 6-க்கு முன்னேறினார். அப்போதும் யாருமே வாக்களிக்கவில்லை.

பின்னர் இடையில் ஒரு சின்ன பிரேக். Direct finalist ஆக 3 பேர் தேர்வு செய்யப்பட, 4-வதாக ஒருவரை தேர்வு செய்யவேண்டிய சூழல். அதற்காகத்தான் Wild Card Round வைத்தார்கள். இந்த Wild Card-ல் மீண்டும் பாட வந்தார் ஜெசிக்கா. இப்போதுதான் வாக்களிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது மக்களின் வாக்குகள் யாருக்கு அதிகமாக கிடைக்கிறதோ அவரே 4 வது Finalist ஆக தேர்வு செய்யப்படுவார். இப்போதுதான் ஜெசிக்காவுக்கு வாக்குகள் தேவைப்படுகின்றன.

தனக்கான வாக்குகளை ஜெசிக்கா மக்களிடம் வேண்டினார். எப்படி வேண்டினார்? “ஐயா நான் ஈழத்தைச் சேர்ந்தவள். எனது உறவுகள் பல முள்ளிவாய்க்காலில் மாண்டு போயினர். தயவு செய்து எனக்கு ஓட்டு போடுங்கோ” என்றா வேண்டினார்? அல்லது,

“ஐயா நான் ஒரு ஈழத்தமிழ் பெண். எங்கள் நாட்டில் ஊர்ப்பட்ட பிரச்சனைகள் இருக்கு. எனக்கு எல்லோரும் ஓட்டு போடுங்கோ” என்றா வேண்டினார்?

இல்லவே இல்லை..! –

அவர் வாக்கு கேட்ட விவரம் பின்வருமாறு.

Hi Friends, I will be performing in Wild Card Finals and Public voting for the 4th finalist will start next Monday, January 19th. Here are the ways you can vote for me

1. Online – Visit http://www.supersinger.in website and follow the instructions.

2. SMS – Type SSJ10 and send to 57827 – This option is not available outside India

3. Airtel customers can call 5432178 – This option is not available outside India

As people outside India can vote online only, please ask your family and friends in India to vote for me as well. Each and every vote counts, I need all your support to make to the final.

தமிழில்,

நான் கனடாவில் இருந்து இந்தியா சென்று இந்த போட்டியில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்து இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இனி அந்த இறுதிச்சுற்றுக்கு செல்வது உங்களது கையில்தான் உள்ளது. நான் அந்த மாபெரும் இறுதிச்சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால், தயவு செய்து எனக்கு உங்களது வாக்குகளை மறக்காது வழங்கவும். அத்துடன் உங்களது உறவினர், நண்பர்களையும் எனக்கு வாக்களிக்கும்படி கூறவும். நீங்கள் பின்வரும் முறைகளில் வாக்களிக்க முடியும்.

ஜெசிக்காவின் வேண்டுகோள் இப்படித்தான் இருந்தது. அதுவும் “நான் அந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால்” என்பதை பலமுறை அழுத்தமாக ஜெசிக்கா சொன்னார். இதற்கான வீடியோ பதிவிலும் இதைத்தான் சொன்னார். இந்த வாக்குகள் கேட்கும் காலப்பகுதியில் ஜெசிக்கா என்ன பாடல்கள் பாடியிருப்பார்?

’விடை கொடு எங்கள் நாடே’ பாடி சிம்பதி கிரியேட் பண்னினாரா? அல்லது மேடையிலே அழுது ஒப்பாரி வைத்தாரா? அல்லது நான் ஈழத்தவள் என்று பேச்சுவாக்கிலே சொன்னாரா? எதுவுமே இல்லை. ஜெசிக்கா தன் திறமையை மட்டுமே நம்பினார். அவர் Wild Card Round-ல் பின்வரும் பாடல்களைப் பாடினார்.

51. நெஞ்சம் மறப்பதில்லை ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
52. மார்கழி திங்கள் அல்லவா ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
53. இது ஒரு நிலாக்காலம் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
54. நல்லதோர் வீணை செய்தே ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
55. வெள்ளைப் பூக்கள் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )

ஆனால் இங்கு தான் விஜய் டிவி ஜெசிக்கா-வை வைத்து தனக்கு சாதகமாக நிகழச்சியை கொண்டு சென்றது. ஜெசிக்காவை ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் ஈழத்து சிறுமி ஜெசிக்கா என்றே அழைத்தது. அவர்கள் ஈழத்தை வைத்து உலக தமிழர்கள் மத்தியில் நிகழ்ச்சியை கொண்டு செல்லலாம் என நினைத்த தன் விளைவு தான் ஜெசிக்காவிற்கு இந்த அவப்பெயர் கிடைத்துள்ளது.

இறுதிப் போட்டிக்கு வாக்களிக்கும் முறையில் சில மாற்றங்கள் வந்தன. அதாவது 13.02.2015 அன்று 200 வாக்குகளும் 19.02.2015 அன்று 200 வாக்குகளும் போட்டி நடைபெறும் போது 100 வாக்குகளும் அளிக்கலாம் என்பதே அந்த மாற்றம். இறுதிப் போட்டி நடந்தது 20 ம் தேதி. ஆனால் ரசிகர்களோ 13 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தங்களுக்கு உண்டான 400 வாக்குகளையும் செலுத்திவிட்டார்கள்.

20-ம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது. அன்று காலையிலேயே அந்த 100 வாக்குகளையும் செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. பிரான்ஸ் நேரம் 15.00 மணிக்கு முன்னரேயே 100 வாக்குகளையும் போட்டு முடித்துவிட்டனர். பின்னர் இந்திய நேரம் இரவு 20.00 மணிக்கு பின்னர் ஜெசிக்கா மேடையில் பாடுகிறார் இறுதிப் போட்டியில் தோல்வி நிலையென மற்றும் விடைகொடு ஆகிய பாடல்களை ஒன்றாக கலந்து ஜெசிக்கா பாடுவார் என்று அனைவரும் என்ன கனவா கண்டார்கள்?

இதே இறுதிப் போட்டியில் ஜெசிக்கா “லாலாக்கு டோல் டப்பிம்மா” என்ற பாடலைப் பாடியிருந்தாலும் கூட அனைவரும் வாக்களித்திருப்பார்கள். ஆனால் இறுதிப்போட்டியில் மட்டும் விஜய் டிவி எஸ்.எம்.எஸ் மூலம் 20 கோடிக்கு மேல் சம்பாதித்து உள்ளனர். இதில் 15கோடி வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் ஜெசிக்காவிற்காக வாக்களித்த எஸ்.எம்.எஸ்-க்கு கிடைத்த பணம். (இந்தியாவில் ஒரு எஸ்.எம்.எஸ்-க்கு கட்டணம் 5 ரூபாய், வெளிநாடுகளில் எஸ்.எம்.எஸ். கட்டணம் 15 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.)

ஜெசிக்கா ஈழத்தை வைத்து பிச்சை எடுக்கவில்லை… ஜெசிக்கா தான் ஜெயிக்க போகின்றார் என்பது போன்றே போட்டியை நடத்தி, வெளிநாட்டு தமிழர்களிடம் எஸ்.எம்.எஸ். வாக்குகள் மூலம் விஜய் டிவி பிச்சை எடுத்துள்ளது. ஆனால் கடைசி வரை எஸ்.எம்.எஸ். வாக்கு விபரங்களை அறிவிக்கவே இல்லை. இதுதான் கருணையை காசா மாத்துறதுன்னு விஜய் டிவி நிருபிச்சுருக்கு…

ஆனா இப்படி பணம் சம்பாதித்த விஜய் டிவியை விட்டு விட்டு ஒன்றுமே அறியாத சிறுமி மீது பழியை போடுவது எந்த விதத்தில் ஞாயம்.

-சதீஸ்

Advertisements