வித்தியாதரனின் பித்தலாட்டம்

viththi Douglasதிரு.ந.வித்தியாதரன் அவர்கட்கு!

வீரகேசரி-உதயன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரங்களைப் பார்த்ததால் இக்கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன். “என் எழுத்தாயுதம்” நூலில் வெளிவந்த படங்கள் யாரையும் இது தொடர்பாக சுதந்திரமாகக் கருத்துச் சொல்லவும், தம்மை அடையாளப்படுத்துவும் வழிவகுக்க மாட்டா வென்பதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதுக்குள் ஒப்புக் கொள்வீர்கள். எமது மக்களுக்கு எல்லாம் தெரியும். அவர்கள் எப்போதும் சரியாகத்தான் நடந்துள்ளார்கள். இந்தியர்களைப் போலவோ, சிங்களவர்களைப் போலவோ, ஏன் மலையக மக்களைப் போலவோ அன்றி வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள். அவர்கள் எப்போதுமே மேற்குறிப்பிட்டவர்கள் பாணியில் நடந்ததில்லை.

இந்தியாவில் நேரு- இந்திரா- ராஜீவ்-சோனியா- ராகுல் என்றும், தமிழகத்தில் கருணாநிதி-ஸ்ராலின்- அழகிரி- கனிமொழி எனவும், மலையகத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகம் தொண்டமான், செந்தில் தொண்டமான் பாணியிலும், சிங்களவர்களில் டீ.எஸ்.‚ டட்லி மற்றும் பண்டா-சிறிமா-அனுரா- சந்திரிக்கா அத்துடன் பீ.ஏ.ராஜபக்ஷா, மகிந்த, பசில், சமல், நாமல், நிருபமா என்னும் குடும்ப ஆட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கும் போக்கு உண்டு. ஆனால் எமது மக்கள் பிரபுத்துவத் தலைமைகளான இராமநாதன், அருணாசலம் ஆகியோருக்குப் பின் தமது தலைவராக அவரது சந்ததியினரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று அரசியலுக்குள் ஐ.தே.க.வினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுவாமிநாதன் இவர்களின் பூட்டன் என்றாலும் அவரும் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்வரல்ல. இராதமநாதனுக்குப் பின் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தையே ஏற்றுக் கொண்டார்கள். அவருக்குப் பின் அவரது மகன் குமார் பொன்னம்பலத்தை ஏற்கவில்லை. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தமிழினம் ஒரு கிறிஸ்தவரான அதுவும் மலேசியாவில் பிறந்த தந்தை செல்வாவுக்குப் பின் அவரது மகன் சந்திரஹாசனை ஏற்கவில்லை. அமிர்தலிங்கத்தை ஏற்றனர். அமிர்தலிங்கத்துக்குப் பின் அவரது மகன் பகீரதன் ஒரு ஆயுதக்குழுவுக்குத் தலைமை தாங்கியிருந்தாலும் கூட பிரபாகரனையே ஏற்றனர்.

பிரபாகரனுக்குப் பின் நிச்சயமாக சாள்ஸ் உயிரோடு இருந்திருந்தாலும் அவரது மகன் என்ற ஒரு தகுதிக்காக ஏற்றிருக்கமாட்டார்கள். அவர்கள் எப்போதும் செயற்பாட்டையே எதிர்பார்ப்பவர்கள் எனவே அவர்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவன் இல்லையே என்ற விளம்பரத்துக்காக இத்தனை இலட்சம் ரூபா செலவழித்து நீங்களோ உங்கள் பின்னணியில் நின்று அழகன் போன்ற அற்புதமான போராளிகளைக் கொச்சைப்படுத்துவோரோ கவலைப்படத் தேவையில்லை. மக்களை அவர்களின் போக்கில் தீர்மானிக்க விட்டாலே தமிழருக்கு விடிவு கிடைக்கும். இத்தனை இலட்சத்தைச் செலவு செய்து அபிப்பிராயம் கேட்கும் தங்களை விடவும் தமிழ்க்கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சு.க, விஜயகாந்த் கட்சி, சிறீ ரெலோ ஆகியோருக்கு கூடுதலாக அரசியல் தெரியும்.

உதாரணமாக சில விடயங்களைக் கவனிப்போம். சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் அரசியற் பணிக்காக அனுப்ப ஏற்பாடாகியிருந்தது. நீங்கள் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தீர்கள். புலிகளை வரவேற்கத் திரண்ட மக்களை மறிக்க மிருசுவிலில் படையினர் தடைகளைப் போட்டனர். அந்தத் தடைகளை உடைத்தெறிந்து காலால் ஓடியே முகமாலைக்குச் சென்றனர் எம்மக்கள். இந்நிலையில் புலிகளின் தளபதிகள் பானு, தீபன் ஆகியோரிடம் வந்த இராணுவக் கேணல் ஒருவர் 40,000க்கு மேற்பட்ட மக்கள் இங்கு கூடியிருக்கின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. விரைவாக உங்கள் உறுப்பினர்களை அனுப்புங்கள் என்று வேண்டிக் கொண்டார். அங்கு வந்த புலிகளின் உறுப்பினர்களை மக்கள் தோளிலே தூக்கிக் கொண்டாடினர். வழியெங்கும் பூரண கும்பம் வைத்து வரவேற்பு, நல்லூரில் கூட்டம் என்று பார்த்தால் மொத்தமாக ஒரு லட்சம் மக்கள் ஏதோவொரு வகையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்கள். இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் 1996 இலிருந்து பல நூற்றுக்கணக்கானோர் காணாமற் போயிருந்தனர். பாலியல் வன்முறைகள், சிறிய சந்தேகங்களுக்குக் கூடக் கடத்தல், சித்திரவதை என்று பெரும் அவலப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் நிராயுதபாணிகளாக வந்த புலிகளை ஆயுதம் தாங்கிய படையினர் பார்த்துக் கொண்டிருக்க அழைத்துச் சென்றனர். மன்னாரிலும் புலிகளின் வருகையை அனுமதிக்க படையினர் தாமதிக்கிறார்கள் என்று உணர்ந்ததும் அவர்களைத் தள்ளிவிட்டு புலிகளின் பகுதிக்குள் வந்து அரசியற் போராளிகளைத் தூக்கிச் சென்றனர். மட்டக்களப்பிலும் கிட்டத்தட்ட இதே போன்ற வரவேற்புத்தான்.

புலிகளின் ஆயுதங்களுக்கு பயப்படவில்லை. இந்த யதார்த்தத்தை உணராத சிறீரங்கா போன்ற ஊடகவியலாளர்கள் நாமலுடனும், றுசாங்கன் போன்றோர் டக்ளசுடனும் சேர்ந்து கொண்டு புலிகள் மக்கள் மனதில் இருந்து அழிந்து விட்டார்கள் எனத் தப்புக்கணக்குப் போட்டனர்.

முகாம் வாழ்க்கை, சீரில்லா மீள் குடியேற்றம், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்தமை போன்ற விரக்தி நிலைமைகளும் மக்களின் தீர்மானங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை. தேர்தல்களில் தமது பங்கைச் சரியாகவே செய்தனர். இதற்காக தமிழர் விடுதலைக் கூட்டமைப்பை, சுமந்திரன் போன்றோரை எல்லாம் ஏற்றுக் கொண்டதாக அர்ததமில்லை, ஏன் அனந்தியைக் கூட தமது வழிகாட்டியாக அவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. அவருக்கு ஒரு உணர்வின் அடிப்படையில் வாக்களித்திருந்தார்களேயொழிய வேறெதுவும் காரணமல்ல. அப்படி வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருந்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்திருப்பார்கள்.

ஒரு கட்சித் தலைவராக இருந்து வவுனியாவில் ஆளும் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய சிறீ ரெலோ கட்சியின் தலைவரையே தூக்கியெறிந்தவர்கள் எம் மக்கள். ஏன் சுமந்திரன் தேர்தலில் போட்டியிட்டுப் பார்க்கட்டும். கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் விருப்பு வாக்கு பெற்றோரில் கடைசி இடத்துக்குத்தான் அவர் போவார். அவர் தனது அரசியல் எதிரியெனக் கருதி அரசியல் குழுவிலேற்ற முயற்சிக்கும் அனந்தி தனியே யாழ். மாவட்டத்தில் எடுத்த வாக்குககளின் கால் பகுதியேனும் கிளிநொச்சி-யாழ்ப்பாண மாவட்டங்களில் பெறமுடியாது என நிச்சயம் சொல்லலாம். இத்தனை வருட அரசியல் அனுபவத்தைக் கொண்ட ஆனந்த சங்கரியே அவரது கட்சியின் சார்பில் மாகாணசபைக்குப் போட்டியிட்ட இருவரின் விருப்பு வாக்குகளுக்கு கிட்டவும் போகமுடியாத நிலையிலிருந்ததை உணர வேண்டும். ஏன் யாழ் மேயர் பதவியைக் கூட அவருக்குக் கொடுக்க மக்கள் விரும்பவில்லை.

ருசாங்கன், சோ.ப, செங்கை ஆழியான், மற்றும் மல்லிகை டொமினிக் ஜீவா போன்ற பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் பெற்ற கசப்பான அனுபவங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்தநிலை விரைவில் சிறீரங்காவுக்கும் ஏற்படும். அவர் யானையில் ஏறினால் என்ன? அன்னத்தில் பறந்தால் என்ன? மகிந்தவுக்கு எதிரான வாக்குகள் மூலம் தெரிவாகிவிட்டு அவர் மூன்றாம் முறை பதவியேற்க வழிவகுக்கும் சட்ட மூலத்தை ஆதரித்ததை, நாமலுக்கும் அவரது தந்தைக்கும் அதிக விசுவாசியார் என்பதை நிரூபிக்க றிசாட் பதியுதீனுடன் போட்ட சண்டையை மக்கள் மறக்கமாட்டார்கள்.

ஒன்றில் பளபளப்பான மொட்டைக்கு ஆசைப்பட வேண்டும். அல்லது அலங்காரக் குடுமிக்கு விருப்பப்பட வேண்டும். பத்திரிகையாளனாகவும் நானே, அரசியல்வாதியாகவும் நானே என்று ரங்கா வழியில் போனால் கசப்பான அனுபவங்கள் தான் தங்களுக்கும் ஏற்படும்.

நீங்கள் தனியாகப் போட்டியிட்டு கொஞ்ச வாக்குகளைப் பிரித்தால் விகிதாசாரப் பிரதிநிதத்துவ முறையின் கீழ் விஜயகலா பெறும் வாக்குகள் அவரது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளப்போதும். இந்த உதவியைத்தான் கடந்த பொதுத் தேர்தலில் சிவாஜிலிங்கம் போன்றோர் செய்தார்கள். இதே உதவியைத்தான் ரணிலும் தங்களிடம் எதிர்பார்க்கின்றார். இன்னுமொரு விடயம் திருமலை, அம்பாறை மாவட்டங்களில் இருந்து ஒரேயொரு தமிழர் தான் தெரிவாக முடியும். இங்கு மாவட்டங்களிலும் ஒவ்வொருமுறைதமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. அந்த நிலைமை மீண்டும் ஏற்பட தாங்கள் துணை போகவேண்டாம்.

18ம் அரசியல் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாகக் கையை உயர்த்திவிட்டு “மின்னல்” நிகழ்ச்சியில் மற்றவர்களைக் கேள்வி கேட்கும் ரங்காவின் வரிசையில் தாங்களும் இடம்பெறவேண்டாம். வேண்டுமானால் இப்போது இணையத்தளம் நடத்துவது போல் புதிதாக ஒரு பத்திரிகையைத் தொடங்குங்கள். இப்போதுள்ள பத்திரிகைகள் ஏதோ ஒரு வகையில் சுய தணிக்கைக் குட்பட்டவைகளே. அப்படியில்லாமல் பக்கச்சார்பின்றி தனித்துவமாக எல்லோரது கருத்துக்களையும் வெளிப்படுத்துங்கள். அதுதான் காலத்தின் தேவை.

பிரபாகரனையும், அன்ரன் பாலசிங்கத்தையும், முன்னாள் போராளிகளையும் விட்டுவிடுங்கள். கூவிக்கூவி அவர்களை விற்காதீர்கள். அவர்கள் நாறிப் போகும் பண்டமல்ல. தங்களுக்கு இதுவரை யார் உதவினார்கள் என்பது முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல் கைதிகளுக்கும் தெரியும். அதுபோல் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சிறீரங்கா யாழ்ப்பாணத்துக்கும், நீங்கள் சிறீகோத்தாவுக்கும் ஏன் சென்றீர்கள் என்பதும் இரகசியமான விடயங்களல்ல.

-பகலவன்-

**
வித்தியாதரனின் கள்ள வித்தை பித்தலாட்டம்: பாச்சா பலிக்குமா ?

ஆ … ஊ என்றால் தேசிய தலைவரோடு நின்று எடுத்த புகைப்படத்தை காட்டி அரசியல்செய்வது ஒரு பாஷனாகிப் போய்விட்டது. வடக்கில் மாகாணசபை தேர்தல் நடக்கும்போது , தனக்கு முதல் அமைச்சர் பதவிவேண்டும் என்று நேரடியாக கோரிக்கை விடுத்த நபர் தான் இந்த வித்தியாதரன். 1990களில் யாழில் ஷபரா நிதி நிறுவனம் என்றும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்த வித்தி, யாழ் தொழில் அதிபர்கள் பலரை இழுத்து அதில் முதலீடு செய்யவைத்தார். பின்னர் அனைவருக்கும் ஒரு பட்டை நாமத்தை போட்டு எஸ்கேப் ஆகினார். அன் நிறுவனம் இவருடையது அல்ல என்று( அவன் நான் அல்ல என்பதுபோல) இவர் ஆடிய நாடகமே தனி. தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் தனக்கு முக்கிய பதவி கிடைக்கவில்லை என்றவுடன், தேசிய தலைவர் மற்றும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு நின்று எடுத்த படத்தை வெளியிட்டு ,அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக வித்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கருணா கூட தேசிய தலைவரோடு நின்று படம் எடுத்தார். இன்று எப்படி இருக்கிறார் என்று எமக்கு தெரியாதா என்ன ?.

இதில் இவர் கூறுவது என்னவென்றால் , முன் நாள் போராளிகளை இணைத்து நான் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்பது ஒருவிடையம். மற்றையது நோர்வேயில் உள்ள “ஊத்தை சேது” என்ற நபரை இணைத்து கட்சி ஆரம்பிப்பது என்பது மற்றைய விடையம். தான் ஆரம்பிக்கும் கட்சியின் சுயநலத்திற்காக முன் நாள் போராளிகளை கட்சியில் இணைக்கிறார் வித்தி என்பது பலரும் அறிந்த விடையம். நோர்வே உள்ள “ஊத்தை சேது” என்னும் நபர், அடிப்படையில் ஒரு புலிகள் எதிர்ப்புவாதி.. தேசிய தலைவர் என்று (இலங்கை அரசால் காட்டப்பட்ட படத்தை), “கோமணத்தோடு பிரபாகரன்” இறந்துள்ளார் என்று தனது இணையத்தில் எழுதிய நபர் தான் இந்த “ஊத்தை சேது”. சாதி பற்றி எழுதுவது , பெண்களை தரக் குறைவாக எழுதுவது. என்று தான் நடந்தி வந்த இணையத்தில் படு தூசன வார்த்தைகளை எழுதி தான் “ஊத்தை சேது” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயரை அவர் பெற்றார்.

இப்படி இருக்க யாழில் உள்ள வித்தியாதரன் புலிகளை படு மோசமாக வர்ணித்த ,சேதுவோடு இணைந்து கட்சி ஆரம்பிக்கிறார். ஆனால் இவர் கட்சியில் முன் நாள் புலிகள் உறுப்பினர்களும் இருப்பார்களாம். இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் எங்கோ இடிக்கிறது என்ற விடையம் நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும். தமிழில் உள்ள அனைத்து கெட்டவார்த்தைகளையும், படு மோசமான சொற்களையும் பாவித்து செய்தி எழுதும் மற்றும் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த சேதுவை இணைத்துக்கொண்டு நோர்வேயில் வித்தி 28ம் திகதி ஒரு மாநாட்டை நடத்தவும் உள்ளார். இந்தக் கூட்டத்தில் இவருக்கு செருப்படி விழாமல் இருக்குமா என்பதே சந்தேகம். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால். பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுபோய் விடும் என்ற கணக்காய் , இவ்வளவு ஊத்தை வேலைகளையும் செய்த சேது , தற்போது நல்ல பிள்ளைக்கு நடிப்பது தான். தான் ஒரு ஊடகவியலாளர் என்றும். நோர்வேயில் நடக்கும் சில கூட்டங்களில் கலந்துகொண்டு, அங்கே உள்ள சில தலைவர்களோடு செல்ஃபி எடுத்து அதனை இணையத்தில் போட்டு அவர் தன்னை உயர்த்திக் காட்ட முற்படுவதை எங்கே சொல்லி சிரிப்பது என்று தெரியவில்லை என்று நோர்வேயில் உள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். மகிந்தரின் செயல் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த வித்திக்கு , புலம்பெயர் மக்களும் ஈழத்தில் உள்ள மக்களும் நிச்சயம் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

வல்லிபுரத்தான்.

**
வணக்கம் வித்தியண்ணை அல்லது வித்திசேர், அல்லது வித்திமாமா .

பத்திரிகையாளன். இதை நீங்களே அடிக்கடி சொல்லுற ஆள். தொழில் காரணமாக சிறை வரை போய்வந்தவர். நீங்களே சொல்லுற மாதிரி நீங்கள் உசுப்பேத்தினதால தான் ஆயிரக்கணக்கான பொடியள் பெட்டையள் இயக்கத்திற்கு போகவச்சனியள். நானும் கூட உங்கடை பேப்பரை பார்த்து போட்டுத்தான் பள்ளிக்கூடத்தில பெடியளாக சேர்ந்து இயக்கத்திற்கு போனான். இப்பதான் புனர்வாழ்வு பெற்று திரும்பினான். ஆனால் என்னோடை படித்த உங்கடை மகள் மேற்படிப்பிற்கு அமெரிக்காவிற்கு அனுப்பியிட்டியள் என்று அறிஞ்சன்.

இவ்வளவு தியாகம் செய்தும் நடந்து முடிஞ்ச மாகாணசபை தேர்தலில ஒரு சீற் தரச்சொல்லி கேட்ட உங்களை கருவேப்பிலையை எடுத்துப்போட்டுச் சாப்பிடுற மாதிரி கூத்தமைப்பு கைவிட்டுட்டாங்களெண்டு எனக்கும் ஒரே கவலை.

நடக்கப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலிலயும் போட்டிபோட ஒரு சீற் கேட்டதாகவும் இம்முறையும் கைவிரிச்சுப்போட்டாங்களெண்டு கடும் கோபத்தில நீங்கள் இருக்கிறமாதிரி நானும் கோபப்பட்டனான். இத்தகைய குழிபறிப்புக்களைத் தாண்டி நல்லதொரு முயற்சியாக முன்னாள் போராளிகளை அரவணைத்து நீங்கள் அரசியல்கட்சியொன்றை ஆரம்பிக்கப்போகிறதாக கேள்விப்பட்டு நானும் தோள்கொடுத்து ஆதரிக்கோணுமெண்டு நினைச்சனான். ஆனாலும் இன்னமும் சில கேள்விகள் என்னிட்டை மிச்சமிருக்கின்றதண்ணை. சிலர் சொல்லுறாங்கள் நீங்கள் இந்திய-இலங்கை கூட்டு சதியின் ஒரு அங்கமாக, அங்கீகாரம் தேடி மௌனித்திருக்கின்ற முன்னாள் போராளிகளை அடையாளப்படுத்தவும் அவங்களை இன்னொருக்கா வடிகட்ட உதவ முன்வந்திருப்பதாகவும் கூறுகின்றார்கள்.

உங்கடை பதிலை பார்த்துதான் அண்ணை நான் அடுத்த முடிவை எடுக்கோணும். அதுக்காக என்னை கூத்தமைப்புகாரர் எண்டு சாயமடிச்சுப்போடாதையுங்கோ இல்லாட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணியெண்டு சொல்லுவியள் அதை பற்றி நான் அலட்டிக்கொள்ளமாட்டேன்.

01. யாழ்ப்பாணத்தில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில இரண்டு சீற் பிடிப்பனெண்டு சொல்லித்திரியிற ரணில் ஜயா உங்களிற்கு சொல்லி அனுப்பியுள்ள அந்த பெறுமதியான தகவல் என்ன?

02. இலங்கை இராணுவத்திற்கு பொம்பிளையளை பிடிச்சுக்கொடுத்து மாமா வேலை பார்த்த தமிழ் சிஎன்என் கண்ணன் தான் உங்கடை ஆலோசகராம். நான் சொல்ல இல்லை அவனே சொல்லித்திரியிறான். அவனின்ர இணையத்தில செய்தி செய்தியாக போட்டுக்கிடக்கு.

உந்த கண்ணனிடம் தான் யாழ்ப்பாணத்தில கோத்தாவின்ர சொத்துக்கள் எல்லாம் கிடக்கெண்டு சொல்லி தெரியவேண்டியதில்லை. நெய்தல் எண்ட பேரில கோத்தாவின் பினாமியாக வடமராட்சி கிழக்கில மண் வியாபாரம் செய்த அவனிற்கு பலாலியில சலூட் அடிக்காத ஆமி இல்லை. அப்ப அவனிற்ர தொடர்புகள் பற்றி சொல்லிய தெரியவேண்டியதில்லை. வறுமையில வாடுற சனத்தை மூளை சலவை செய்து அதுகளின்ர குமருகளையும் முன்னாள் போராளிகளை அச்சுறுத்தியும் ஆமிக்கு பிடிச்சுக்கொடுத்தவன். இப்ப அதுகள் ஆமியின்ர மலசலகூடம் கழுவுறதோட என்ன செய்யுதுகள் எண்டது சொல்லி தெரியவேண்டியதில்லை. முன்னாள் போராளியள உங்கடை அரசியல் கட்சிக்கொண்டு அவன் வாறானெண்டால் அவங்களை மீண்டும் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்ப செய்யுற சதியில்லாமல் வேறென்ன?

03. வன்னி இறுதி யுத்தத்தில தேசியத் தலைவருக்கு என்ன நடந்தது என்று வித்தியண்ணை நீங்கள் எழுதி இயக்கின திரைக்கதையை வாறபோற பொடியள் எல்லாரிட்டையும் இப்பவும் ஓட்டிக்கொண்டிருக்கிறியளாம். மே 19ம் திகதி தலைவர், தளபதிகளின்ர படத்தை போட்டு கூண்டோட முடிஞ்சுது என்று செய்தி போடேக்கையே தெரியுமண்ணை உங்களின்ர நிலைப்பாட்டை. கவனமண்ணை வாற பொடியளிற்குள்ள பலரும் உங்கடை திரைக்கதைக்காகவே உங்களை கோடாரியால கொத்திறதுக்காக திரியிறாங்களாம்.. உங்களைப் போல தலைமையை இப்பவும் கேவலமாக விமர்ச்சித்துக் கொண்டிருக்கும் வழுதி மற்றும் கே.ரி.ராஜசிங்கம் கும்பல்தான் உங்கடை மத்திய குழு பிரமுகர்களாம் அது உண்மையோ?

04. நீங்கள் நடத்துற இணையம் பாதுகாப்பு அமைச்சின் காசு என்று சொல்லறாங்கள். கணக்கு வழக்கென்ன? கஸ்ரத்தில மகளை மேற்படிப்பு படிக்க வைக்க வீட்டை விற்றதாக சொல்லித்திரியிறியளாம்? அப்ப அது ரீல்தானே.

05. கண்டியில றோ அவசரமாக நடத்தின கூட்டத்திற்கு டக்ளஸ், ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் கும்பலை போல உங்களையும் கூப்பிட்டதாம். ஆனால் நீங்கள் பதுங்கி உங்களின்ர பிரதிநிதியளை அனுப்பினியளெண்டு எனக்கு தெரியும். அங்கு என்ன சொல்லி விட்டாங்கள்?

06. நீங்கள் பத்திரிகையாளனாக இருந்தனியள்.அதை அடிக்கடி நீங்களே சொல்லிக்கொள்ளுறனியள். ஆனால் கதைக்கேக்கை அக்கம் பக்கம் பார்க்கிறதில்லையோ அண்ணை. ரயிலில் போகேக்கை உங்களின்ர சதிகள் பற்றி தொலைபேசி வழி உழறி கொட்டியிருக்கிறியளே. அதில கூட முகம் தெரியாத பேப்பர்காரங்களும் பயணித்தது தெரியுமா?. வாற காசெல்லாத்தையும் வாங்குவம். இப்ப என்ர பேரை சொல்லாதையுங்கோவெண்டால் என்ன கதை அண்ணை?

07. கே.பி கைதாகவில்லையெண்டது இப்ப தெளிவாயிட்டுது. அண்ணர் சரண்டர் பண்ணியிருக்கிறார். மஹிந்த மைத்திரியிடம் தன்ரை பிள்ளையளையும் கேபியையும் பழிவாங்கவேண்டாமென்று கேட்டது உலகம் அறிந்த உண்மை. அந்த கேபியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். இப்பொழுது அவரது நிகழ்ச்சி நிரலில் நடக்கும் உங்கள் நாடகம் எவருக்கும் தெரியாதென நம்புகிறீர்களா?

08. கூட்டமைப்பினை பிளவுபடுத்தும் ரணிலின் சதி முயற்சியின் ஒரு அங்கமாக ரணிலுடன் நடந்த பேச்சில் உங்களிற்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளை கூற முடியுமா?

09. எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டில உள்ள விடுதலைப் புலிகளின் குழுக்களை அணிதிரட்டி உங்கள் தலைமையில் அரசியல் கட்சியென கூறுவது அந்தப் பொடியளுக்குத் தெரியுமோ தெரியாது. இப்பவும் விமான நிலையத்தில திரும்பி வாற பொடியளை அள்ளிக்கொண்டிருக்கிறாங்கள். ஆனால் நீங்களோ அறிக்கை விட்டுட்டு விடுதலைப் புலிகளின் அணிகளை இணைத்து உங்கள் தலைமையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போறதாக நோர்வே போறியள். உங்களிற்கு கைதில்லை.

ஆனாலும் அதை நம்பி அடைக்கலம் புகுந்து வரும் முன்னாள போராளிகளை அப்பட்டமாக சிக்கவைக்க சதி பின்னியுள்ளீர்களே உங்களது மனச்சாட்சி உள்ளதா? உங்களிற்கு அழைப்பு விட்ட நோர்வே வாழ் செல்வின் மற்றும் கே.பி கும்பல் நடுரோட்டில நிக்கிற குடும்பங்களிற்கு ஒரு வேளை சோறு போட்டாலே போதும். ஆனால் செய்யமாட்டாங்களெண்டு தெரியும் அண்ணை.

10. புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பினை முன்னர் புலிகளை கருணாவை வெளியேற்றி பலவீனமாக்கியது போன்று இப்போதும் பலவீனமாக்கி உடைக்க சதி தொடர்கின்றது. தற்செயலாக தங்களிற்கு ஒரு சீற் கூட்டமைப்பு தந்தால் கட்சியை கலைத்து விடுவீர்களா?
சொல்லுங்க அண்ணே சொல்லுங்க!!

எப்பிடியும் உங்கடை எடுபிடியள் என்னை தேடத் தொடங்கிவிடுவாங்கள். என்ர கடிதத்தை எந்த பேப்பர்காரனும் போடமாட்டாங்கள். மூன்று மாவீரர்களைக் கொடுத்த குடும்பம். தயவு செய்து அம்மா அப்பாவிற்கு கொள்ளி போடவேனும் விட்டுட்டுங்கோ அண்ணை. மிஞ்சி நடைப்பிணமாக இருக்கிறது நான் தான். நான் தொழிலுக்கு போனால்தான் வீட்டில தீனி கிடைக்குமண்ணை.
உங்கடை பதிலை பார்த்து.

-தூயவன்-

Advertisements