ஜெசிக்கா சூப்பர் சிங்கர் மட்டுமல்ல… நெகிழ்ந்து நிற்கும் ஈழத்தமிழர்கள்!

super singer jessicaவிஜய் டி.வி. சார்பில் சிறந்த இளம் பாடகியாக தேர்வு செய்யப்பட்ட ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா, தனக்கு பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டி.வி. சார்பில் நடததப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஈழத்தை சேர்ந்த ஜெசிக்கா என்ற மாணவி, இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இறுதி சுற்றில் ஈழத்தமிழரின் தேசிய கீதமாக போற்றப்படுகிற ‘விடைகொடு எங்கள் நாடே’ என்ற பாடலை, ‘தோல்வி நிலையென நினைத்து’ என்ற பாடலுடன் இணைத்து ஜெசிக்கா பாடிய போது, அரங்கத்தில் குழுமியிருந்த விருந்தினர்கள் உள்ளிட்டோர் கண்களில் கண்ணீர் தேங்கியது. ஜெசிக்கா பாடி முடிக்கவும் நடுவர்கள் உள்ளிட்டோர் எழுந்து நின்றி கை தட்டினர்.

https://dailymotion.com/video/x2hq3me

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ்,”இளம் வயதில் ஈழத்தமிழரின் வலிகளையும் வேதனைகளையும் தனது பாடலால் பதிவு செய்ய ஜெசிக்காவை பாராட்ட வார்த்தைகளே இல்லை” என்றார்.

ஆனால் உண்மையிலேயே ஜெசிக்கா செய்த அடுத்த செயலுக்கு பாராட்ட வார்த்தைகள் கிடையாது. இந்த நிகழ்வில் அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தையும், தமிழக மற்றும் ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக வழங்குவதாக ஜெசிக்காவின் பெற்றோர் அறிவித்த போது, அரங்கத்தில் கூடியிருந்த ஒவ்வொருவரும் உருகிதான் போனார்கள்.

தற்போது கனடாவில் வசித்து வரும் ஜெசிக்கா…”இது போன்ற போட்டியில் வெற்றி பெறுவதை விட எங்கள் மக்களின் வலிகளை பதிவு செய்ததையே வெற்றியாக கருதுகிறேன்” என்றார்.

ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது தாய் தமிழகத்தையும் நெகிழச் செய்தது.

நன்றி: விகடன்
**

சூப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றினார் ஸ்பூர்த்தி: தங்கம் வென்ற ஜெசிக்கா

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்றது.

பல கட்டத்தேர்வுக்கு பின்னர் இறுதிச்சுற்றில் பரத், அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, சிரிஷா ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.

அனைவரையும் மெய்மறக்கச் செய்த ஸ்பூர்த்தி மக்கள் ஓட்டுக்கள் மற்றும் நடுவர்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சூப்பர் சிங்கர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் 60 லட்சம் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி வீட்டை வென்றுள்ளார்.

இதில் ஈழத்தமிழ் சிறுமியான ஜெசிக்கா இரண்டாவது இடத்தை பெற்று 1 கிலோ தங்கத்தையும், ஹரிபிரியா மூன்றாம் இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் பரிசாக வென்றனர்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஸ்பூர்த்தி மற்றும் ஜெசிக்காவுக்கு உலகத்தமிழர்கள் சார்பாக சினிஉலகத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

https://dailymotion.com/video/x2hq1l7


நடுவர் உட்பட டிடியையும் கண்கலங்க வைத்த ஜெசிக்கா

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

பல கட்டத்தேர்வுக்கு பின்னர் இறுதிச்சுற்றில் பரத், அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, சிரிஷா ஆகிய 6 பேர் போட்டியிட்டு வருகின்றனர்.
இதில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசித்துவரும் ஜெசிக்கா 2வது சுற்றில் ஈழ மக்களுக்காக ஒரு பாடலை சமர்ப்பனம் செய்யும்விதமாக பாடினார்.
தோல்வி நிலையென்று நினைத்தால் என்னும் பாடல் கலவையை கொடுத்து அனைவரையும் உணர்ச்சிமிகுதியால் கண்ணீர் நீர்சிந்த வைத்ததுடன் மீண்டும் ஒரு முறை தமிழ் உணர்வினை தட்டியெழுப்பியுள்ளார்.

இப்பாடலை கேட்ட மக்கள் உட்பட நடுவர்களையும் கலங்கவைத்தார். அப்பாடலை பாடிய மாணிக்க விநாயகம் அவர்களும் ஜெசிக்காவை மனதார பாராட்டி மனம் நெகிழ்ந்தார். நடிகர் தனுஷ் உணர்ச்சிமிகுதியோடு பாராட்டினார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் டிடியின் மனதையும் நெகிழ வைத்தார்.

Advertisements