காதில் பூசுற்றும் சுமந்திரன்-மாவை கூட்டமைப்பு

காதில் பூசுற்றும் சுமந்திரன்!! கூட்டமைப்பு சார்பில் பேச யார் அனுமதித்ததெனக் கேள்வி?sampanthan_sumanthiran_mavai

ஐ.நா அறிக்கை பிற்போடப்படப்பட்டதன் முக்கிய பங்காளியான கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பின்போடப்படுவதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என தமிழ் மக்களது காதுகளில் சுற்ற முற்பட்டுள்ளார்.

இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆணையாளரினால் செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.அது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மீண்டுமொரு முறை காதில் பூசுற்றப் புறப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இலங்கையின் புதிய ஆட்சி மாற்றம் நாங்கள் எதிர்பார்த்தது போல ஏற்பட்டுள்ளது. அது அனைவருக்கும் சந்தோசம். இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் புதிய அரசு மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த இனப்படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கையினை பிற்போடுமாறு கோரியிருந்தது. அந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.நா உயர்ஸ்தானிகருக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் எமது நிலைப்பாடுகளை கடிதம் மூலம் அனுப்பி இருந்தோம். குறித்த கடிதத்தில் நீதிக்காக மக்கள் காத்து இருப்பதனையும் உண்மை அறியப்பட வேண்டும் என்றும் உண்மையை மூடி மறைப்பதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படாது எனவும் நாங்கள் தெளிவுபடுத்தியிருந்தோம்.

இம்மாதம் ஆரம்பத்தில் ஜெனீவாவிற்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தோம். அதன்போது ஆணையாளர் எமது கொள்கைகளையே தானும் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அத்துடன் குறித்த அறிக்கை வெளிவரும் போது திடகாத்திரம், பலம், அங்கலாய்ப்பு, விடுதலை கொடுக்கும் அறிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அறிக்கையாகவும் இருக்க வேண்டும். அதற்கமைய விடயங்களை ஆராய்ந்து தான் ஒரு தீர்மானத்தை எடுப்பதாக எமக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அறிக்கை பிற்போடப்படுகின்றது என்று ஐ.நா ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டது ஏமாற்றமே. எங்களுக்கும் எங்களை விட நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஏமாற்றம். எனினும் இந்த ஏமாற்றத்திலும் கூட தமிழ் மக்களுக்கு புதியதொரு ஒளிக்கீற்று ஏற்பட்டுள்ளது. எனவே இது முழுமையான ஏமாற்றம் அல்ல. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான அறிக்கை மார்ச் மாதத்தில் வெளியாகும் அறிக்கையை விட முழுமையானதாக வர வாய்ப்புள்ளது. இதனை ஆணையாளரே தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மக்களுடைய பங்களிப்பு முக்கியம். ஏற்கனவே திரட்டப்பட்ட தரவுகளை விட மேலதிகமான தரவுகள் பலருக்குத் தெரியும் எனவே நீங்கள் அச்சத்தினை விடுத்து வாய்திறந்து பேச முன்வாருங்கள் நியாயம் கிடைக்க வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் கட்சியின் சார்பாக பேச யார் அனுமதி வழங்கியதென கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிடையே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

**

கேட்டாரே கேள்வி!! மாவை சேனாதிராசாவிற்கு பகிரங்க மடல்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிற்கு கட்சியின் மூத்த ஆதரவாளர் ஒருவர் அனுப்பி வைத்துள்ள பகிரங்க கடிதம் தற்போது பல்வேறு மட்டங்களிலும் பேசுபொருளாகியிருக்கின்றது.பதிவு இணைய செய்தி

அனந்தி மற்றும் சிவகரனிற்கான இடைநிறுத்தம் மற்றும் சுதந்திரதின நிகழ்வினில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் பங்கெடுத்தமை உள்ளிட்டவற்றை முன்வைத்து இக்கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிராக செயற்பட்ட பலருக்கு நடவடிக்கை எடுக்காத நீங்கள் அனந்தியும் சிவகரனும் புலிகளின் தீவிரமான ஆதரவாளர்கள் என்பதால் சுமந்திரனின் ஆலோசனையுடன் செயற்படுகின்றீர்களாவென கேள்வி எழுப்பியதுடன்.பதிவு இணைய செய்தி

பின்வரும் வினாக்களிற்கு பகிரங்கமாக பதில் தரவுமெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

01. 2009 நடந்த யாழ் மாநகரசபை தேர்தலில் செத்த வீட்டில் கலியாண வீடு என கூறிய சீ.வி.கே சிவஞானத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்களா?

02. கூட்டமைப்பு பதிவு தொடர்பாக பலரும் பகிரங்கமாக பேசினீர்கள் எவருக்கு யார் நடவடிக்கை எடுத்தீர்கள்?

03. வடகிழக்கில் வேலையில்லாதவர்களுக்கும் படிப்பறிவில்லாத மூர்க்கர்களுமே போராடியது என ஆங்கிலப்பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய சுமந்திரனுக்கு எடுத்த நடவடிக்கை என்ன?

04. வன்னியசிங்கம் சிலை திறப்பு விழாவில் கட்சியைப்பற்றி பகிரங்கமாக விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?

05. பத்திரிகைகளிலும் கூட்டங்களிளும் கட்சியையும் தலைவர்களையும் பெயர் குறித்து விமர்சித்த பேராசிரியர் சிற்றம்பலத்திற்கு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

06. உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவு திட்டம் தோற்கடித்தால் கட்சியைவிட்டு நீக்குவதாக கூட்டமைப்பால் தீர்மாணிக்கப்பட்டபின்னர் வல்வெட்டித்துறை நகரசபை வரவுசெலவு திட்டத்தை தோற்கடித்த திரு.குலநாயகம் வலிகிழக்கு பிரதேசசபையின் வரவு செலவுதிட்டத்தினை தோற்கடித்த திரு.பரஞ்சோதி இவர்களுக்கு எடுத்த நடவடிக்கை என்ன?

07. வடமாகாணசபைத் தேர்தலில் கட்சியின் கொள்கைக்கு மாறாக ஆங்காங்கே சத்தியப்பிரமாணம் எடுத்தவர்களுக்கு எடுத்த நடவடிக்கை என்ன?

08. கட்சியைவிட்டு விலகிவிட்டேன் என கூறி புளொட்டின் மூலம் தேர்தலில் போட்டியிட்ட திரு.கஐதீபனை மீண்டும் எப்படி கட்சியில் சேர்த்துக்கொண்டீர்கள்?

09. பருந்துறை பிரதேசசபை உபதலைவர், நானாட்டான் பிரதேசசபை உபதலைவர் ஆகியோர் மகிந்த ராஐபக்சவிடம் சென்று வந்தவர்கள் இவர்களுக்கு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

10. வடமாகாண சபைத்தேர்தலுக்காக பல கோடி ரூபா பணம் தங்களிடம் இந்திய அரசாங்கத்தால் தரப்பட்டதாக செய்திகள் வந்தன. ஒரு வேட்பாளருக்கு 5 தொடக்கம் எட்டு லட்சம் வரை வழங்கினீர்களாம். கட்சியைக்கேட்டு வழங்கினீர்களா?கட்சியின் வங்கிக்கணக்கில் உள்ளதா இதுவரை கணக்கு வெளிவரவில்லையே?

11. திரு. சம்மந்தன் அவர்கள் சிங்கக்கொடி பிடித்தது சரியா?

12. வடமாகாணசபை துணை தவிசாளர் மாகாணசபைக்கு எதிராகவும் கட்சிக்கு எதிராகவும் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தினாரே இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

13. ஜனாதிபதிதேர்தல் தொடர்பாக கட்சி தீர்மானிப்பதற்கு முன்னதாக ஆங்கில சிங்கள ஊடகங்களிற்கு திரு.சுமந்திரன் அவர்களால் அறிக்கை விடப்பட்டதே அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

14.காரைநகர் பிரதேசசபை தவிசாளர் செயளாலருக்கு அடித்தாரே இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

15.மூவர் பத்திரிகையாளர் மாநாடு நடாத்திய போதும் மூத்த உறுப்பினர் மறவன் புலவு சச்சிதானந்தன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

16.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு – ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 30-தொடக்கம் 50இலட்சம்வரை எட்டு மாவட்டத்திற்கும் மூன்று கோடி வழங்கியுள்ளீர்கள் என்பது உண்மையான செய்தி. இந்தப்பணம் தந்தது யார்?எந்த வங்கிக் கணக்கூடாகவந்தது? எத்தனைகோடி வந்தது?இதற்கு கட்சி அனுமதித்ததா?

17.தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுடைய தாயாரின் மரணவீட்டில் திரு.சம்மந்தன் அவர்களையும் கட்சியையும் பகிரங்கமாக விமர்சித்த திரு.ஐங்கரநேசன் அமைச்சராக இருப்பது சரியா? பத்திரிகைகளிலே பகிரங்கமாக கட்டுரை எழுதிய திரு.சர்வேஸ்வரனின் நிலை சரியா?

18. வடமாகாண முதலமைச்சர் தெரிவு விடயத்தில் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிற்கு அறிக்கைவிட்ட திரு.சீ.வி.கே.சிவஞானம், திரு.அரியநேந்திரன், பேராசிரியர்சிற்றம்பலம் போன்றோருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?கட்சியின் வேண்டுகோளை அவமதித்து திரு.விக்னேஸ்வரன் அவர்களை திரு.சம்மந்தன் தெரிவு செய்தது சரியா?

திரு. சிவகரன் அவர்கள் வவுனியாவில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டிலும் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்ற யாழ்மாவட்ட மாநாட்டிலும் கட்சியின் குறைபாடுகள் தொடர்பாக பகிரங்கமாக விமர்சித்திருந்தார் அல்லவா? அத்துடன் ஜனாதிபதித்தேர்தலில் கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரவு வழங்கக்கூடாது என உங்கள் எல்லோர் முன்னிலையிலும் தெரிவித்திருந்தாரே அப்படியானால் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே?அவர்கள் இருவரும் கூறிய கருத்துக்கள் தான் எதிர்காலத்தில் சரியாக வரும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ளாமல் அன்று வி.நவரத்தினத்திற்கும் சிங்களவருக்கு ஆதரவளிக்கவில்லை என நடவடிக்கை எடுத்தீர்கள் இன்றும் இவர்கள் இருவரும் சிங்களவருக்கு ஆதரவளிக்கவில்லை என நடவடிக்கை எடுக்கின்றீர்கள்

இவர்களுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் இதுவே சட்டமுறனும் ஊழலும் அல்லவா?

1956 ஆண்டிற்குப்பின்னர் சுதந்திரதினவிழாவில் பங்கேற்றவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள்

எனது வினாக்களிற்கு விடை தருவீர்கள் என்றால் இவர்களுக்கு நடவடிக்கை எடுங்கள். நாற்பது ஆண்டு காலமாக தமிழரசுக்கட்சியின் தொண்டனாக இருக்கும் எனக்கு பதில் தரவும் தலைமைகளும் தமக்கு வேண்டியவர்களும் செய்வது மட்டும் கட்சிக் கட்டுப்பாட்டுமீறல் இல்லையாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Advertisements