அரசின் திட்டமிடப்பட்ட அழிப்பின் இன்னோர் வடிவம்!

save the water jaffna 2நீரைக் காதல் செய்வோம் – காயத்ரி.வி

இன்று யாழ் குடாநாட்டில் எல்லோராலும் பேசப்படும் ஒரு சொல் Clean Water. சமூக வலைத்தளங்களில் குறிப்பாக எல்லோருடைய முகநூல்களில் கூட இன்று பதிவாகி வரும் புகைப்படம் Clean Wate. எல்லோராலும் பேசப்படும் விடயமாக இப்பிரச்சினை இருந்த போதிலும் அதற்கான தீர்வு என்பது எம் மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.

1967ல் ஆய்வினை மேற்கொண்ட இஸ்ரேலிய நிபுணர்கள் ‘இன்னும் இருபத்தைந்நு வருடங்களில் யாழ்குடாநாடு பாலைவனமாகும்’ என எச்சரித்துச் சென்றுள்ளனர். அவர்கள் எந்த எண்ணத்தினடிப்படையில் கூறினார்களோ தெரியவில்லை. இருந்தும் எமது முன்னோர்கள் இவ் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததன் விளைவே 45 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட நாம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாதவர்களாக இருக்கின்றோம். அது ஒருபுறம் இருக்க அண்மையில் ஐக்கியநாடுகள் நிறுவனத்தின் அறிக்கையில் கூட 2030 இல் உலகம் தண்ணீர் பெறுவதில் பெரும் நெருக்கடியை சந்திக்கும் என அறிக்கை விடுத்துள்ளது. ஆனால் எமது பிரதேசம் தற்போதே நீர் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கிவிட்டது.

யாழ் மக்கள் சுன்னாகம் மின்சார சபையிலிருந்து இவ்வளவு காலமும் மின்சாரத்தைப் பெற்றார்களே தவிர யாரும் இவ்வாறான நிலை ஏற்படும் என்றுகனவிலும் கூட நினைத்திருக்கவில்லை. அதாவது சுன்னாகத்தில் இயங்கி வந்த எண்ணெய் எரிபொருட்கள் ஊடான மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற விதத்தில் நிலத்தில் விடப்பட்டதன் விளைவாகவே இக்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்களும் நிபுணர்களும் கருதுகிறார்கள்.யுத்தம்நடைபெற்ற காலத்தில் தரைவழியாக மின்சாரம் வழங்கப்பட முடியாத நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான மின்வழங்கலுக்காக இந்த எண்ணெய் எரிபோருள் மின் வலு நிலையம் உருவாக்கப்பட்டது. இந்நிலையம் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னரும் தொடர்ச்சியாக இயங்கி வந்தது. தற்போது “நோர்தேர்ன் பவர்” (Northern Power Company (Private) Limited) எனும் நிறுவனத்தினால் 2007ம் ஆண்டில் இருந்து இயக்கப்பட்டுவந்தது.

ஆனால் நொதேர்ன் பவர் நிறுவனம் அரம்பிக்கப்பட்ட பின்னர் வெளியேற்றப்பட்ட கழிவுநீர் எந்தவித சுத்திகரிப்புக்கும் உட்படுத்தப்படவில்லை. வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு கழிவு எண்ணெய் நிலத்தில் பரவவிடப்பட்டுள்ளது. அத்துடன் அவை சேமிக்கப்படும் தொட்டிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. கழிவகற்றலுக்கான எந்தவித முகாமையும் அங்கு பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. அத்துடன் 2009 இருந்து 54000லீட்டர் ஒவ்வொரு 06 மாதகால இடைவெளியில் நிலத்துக்கடியில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது அறிந்தும் சட்டவிரோதமான அனுமதியை அரசு எப்படி அந்நிறுவனத்துக்கு வழங்கியது?? ஆரம்பத்திலிருந்து முறைப்பாடுகள் கண்டு கொள்ளப் படவில்லை!!! .

அரசின் திட்டமிடப்பட்ட அழிப்பின் இன்னோர் வடிவமா?? என்றெல்லாம் தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.

ஆனால் நோதர்ன்பவர் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையில், அந்நிறுவனம் 2007 இல் இம்மின்நிலையத்தைப் பொறுப்பேற்க முன்னர் கழிவு எண்ணெய் நிரம்பிய குளம் ஒன்று இப்பகுதியில் காணப்பட்டதாகவும், அக்குளம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாதென்றும் தெரிவித்துள்ளனர். இக் கழிவு எண்ணெய்க் குளம் இருந்தமைக்குச் சான்றாக கூகிள் ஏர்த் மூலம் பெறப்பட்ட செய்மதிப்படங்களை நீதிமன்றத்தில் தாம் வழங்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அத்துடன் 2007 இற்கு முன்னர் இம்மின்நிலையம் இலங்கை மின்சார சபையினால் நடத்தப்பட்டுவந்தது என்றும் குறிப்பிட்டனர்.
எது எப்படி இருப்பினும் பாதிப்பு என்னவோ எம்மக்களுக்கே. இவ் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து நிலத்தில் விடப்பட்ட கழிவு ஒயில் தற்போது; சுன்னாகம், உடுவில்,ஏழாலை,மல்லாகம், தெல்லிப்பழை,இணுவில்,கட்டுவன்,அளவெட்டி,இளவாலை,சண்டிலிப்பாய் பிரதேசங்களில் இந்நிலை பரவியுள்ளது. குறிப்பாக உடுவில் சுகாதாரப்பிரிவில் 16 கிhரம அலுவலனர் பிரிவில் மட்டுமே கிட்டத்தட்ட 1400 கிணறுகள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதேபோல் வலி வடக்கு சுகாதாரப்பிரிவில் 800க்கு மேற்பட்ட கிணறுகளிலும் இப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 39 பாடசாலைகளிலும், 02 வைத்தியசாலைகளிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்தால் எத்தனையோ அவலங்கள், துன்பங்களை அறிந்தவர்கள் யாழ் குடாநாட்டு மக்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் தண்ணீருக்காக ஒரு நாளும் இவ்வளவு அல்லல்படவில்லை என்றும் இவ் நொதேர்ண் பவர் மின்நிலையத்திற்கு கடந்த வருடம் மட்டுமே 160 கோடி ரூபா இலாபமாகப் பெறப்பட்டது. இவ்வளவு இலாபம் வந்தும் பலன் என்ன?? எமக்கு எட்டுவது அழிவு ஒன்றே என்பது தற்போது எம்மவர்களின் உள்ளக்குமுறல்.

அத்துடன் யாழ்மாவட்ட நீhவழங்கல் வடிகாலமைப்பு சபையினர் 2012 இல் இப் பிரச்சினையை கண்டறிந்ததாகவும், ஆனால் யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறுகின்றார்களே ஒழிய அதை சரியான விதத்தில் அங்குள்ளவர்களுக்கு நிருபிக்கத்தவறி விட்டனர். கடந்த 08 மாதங்களுக்கு முன்னர் நான் என் கற்கைத் தேவைக்காக யாழ்மாவட்ட வடிகாலமைப்புக்கு சென்றிருந்த போது இவ்வாறான பிரச்சினை பற்றி பத்திரிகைகளில் பேசப்பட்டு வருகின்றது இது தொடர்பில் நான் எனது அய்வுக் கற்கையை மேற்கொள்ள விரும்புகின்றேன் எனஆலோசனை கேட்டபோது அவர்கள் கூறியதாவது தாம் பெற்றோலிய ஒயில் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அத்துடன் அதுதொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டுவிடுவோம் என கூறியிருந்தார்கள் தவிர அது இவ்வாறு பூதாகரமாக மாறும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அத்துடன் அவர்களிடம் பெரிய அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. இதனாலேயே அவர்களும் குற்றவாளிகளாக்கப்பட்டனர். பதிவு இணைய செய்தி

பிரதேச சபையின் வளாகம், மல்லாகம் சந்தை, கீரிமலை கூவில், மாவிட்டபுரம் ஆகிய பிரதேசத்திலுள்ள கிணறுகளில் இருந்து பொதுமக்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் இடம்பெற்று வந்த நிலையில் அந்தக் கிணறுகளில் எண்ணெய்க் கசிவு உள்ளதால் மாற்று இடங்களை நாடுமாறு தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்படி பிரதேச சபைக்கு அறிவித்திருந்தது.குறித்த கிணறுகளில் சிலவற்றில் ஒரு லீற்றருக்கு 14 மில்லிகிராம் அளவில் எண்ணெய்க் கசிவு இருக்கின்றமை தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் பிரதேச சபைக்கு தெரியப்படுத்தியிருந்தது. இருந்தும் பிரதேச சபை அதை பொருட்படுத்தாமல் மக்களுக்கு நீரை விநியோகித்துள்ளது. ஒரு லீற்றர் நீரில் 0.2 மில்லிகிராமிற்கு அதிகமாக எண்ணெய்;க் கசிவு இருப்பின் அது மனிதப் பாதிப்புக்கு உகந்தது அல்ல. அப்போது 14 மில்லிகிராம் என்பது எவ்வளவு பாதிப்பை தரவல்லது என்பதை அவர்கள் உணராமல் தொடர்பில் அவர்களிலும் குற்றம் சுமர்த்தப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசங்களில் உள்ள வசதியான மக்கள் இந்த நீரை அருந்தாமல் போத்தல் குடிதண்ணீரையே பயன்படுத்தினர். ஆனால் வறுமை நிலையில் உள்ள அப்பாவி மக்கள் மட்டும் இந்த நீரை பருகினர்.

இன்று வரை இப்பாதிப்பு அதிகரிக்கின்றதே தவிர குறைவதாக இல்லை. சுகாதாரத் துறையினர், மக்கள், பாடசாலை மாணவர்கள் கூட ஆர்ப்பாட்டம் நடாத்தி இருந்தது கண்கூடு. அதாவது தூய நீரை நஞ்சாககாதே, மக்களை முட்டாளாக்காதே, மாணவருக்கு தூயநீரை வழங்கு, தமிழினத்தை அழிக்காதெ,மக்கள் மீது அரசியல் நடத்தாதே, நிரந்தர தீர்வைப் பெற்றுத்தா, எண்ணெப் படையை விரைவாக அகற்று, இலவசமாகப் பரிசோதனை செய், இடர்ப் பிரதேசமாக பிரகடனம் செய், எனப் பல வாசகங்களை தாங்கியவாறு கருத்துக்கள் வெளிப்படுததப்பட்டன. நொதேர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு நீதிமன்று உத்தரவு இட்டாலும் கூட கல்வியறிவுடைய சமூகம் எனக் கூறிக் கொள்ளும் யாழ் மாவட்ட புத்திஜீவிகளால் கூட இதனை தடுப்பதற்கான மாற்று வழிகள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமே.

பெற்றோலியக் கழிவுகள் தரைக்கீழ் நீருடன் கலந்தமையால் நீர்த் தட்டுப்பாட்டு பிரச்சினை ஒருபுறமிருக்க அதனால் ஏற்படும் தற்கால, நீண்டகால பாதிப்புக்களே அதிகமாக உள்ளது. குறிப்பாக உடலில் பல நோய்களை ஏற்படுத்துவதோடு புற்றுநோயை எற்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் அதிகமுள்ளது. பென்சீன் கழிவுகளின் செறிவு 10மூஆக மாற கிட்டத்தட்ட 20 வருடங்கள் எடுப்பதுடன் இதனால் என்புப் புற்றுநோய் எற்படுவதற்கு வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. அத்துடன் மண்ணில் கலப்பதால் மண்வாழ் உயிரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

குறிப்பாக மண்வாழ் உயிரிகள், இப் பிரதேச பயிர்கள், கால்நடைகள் என்பனவும் இத் தாக்கத்தை சந்திக்கும். இது ஒருவிதத்தில் மக்களின் வாழ்வாதாரத்திலும் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது பொருளாதார இழப்புக்கு வழிகோலும். இது தவிர இத்தாக்கம் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இந் நச்சுநீரின் பாவனையால் கருவில் இருக்கும் சிசுக்கள், சிற்றிளம் பாலகர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஒரு துளி எண்ணைக்கழிவு கலந்த நீரை சிறுவர் சமுதாயம் குடிக்கம் பட்சத்தில் எதிர்காலச் சமுதாயமே நோயுற்று மலட்டுத்தன்மை உடையதோ அல்லது நலிந்த உடலைக் கொண்ட சமூகத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலை தோன்றலாம். சுகாதாரப் பகுதியினர் அறிவுறுத்தல் கொடுத்தும் இன்னமும் பல இடங்களில் ஒயில் கலந்த நீர் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சூடாக்குவதால் ஒயிலின் தாக்கம் குறைவடையாது. அத்துடன் யாழ்பாணத்தில் அளவுக்கு மீறி அதிகரித்துவரும் குழாய் கிணறுகளால் கோடை காலத்தில் உறிஞ்சல் அதிகமாவதனால் தாய் பாறையினுள் செலுத்தப்பட்டிருக்கும் இந்த கழிவு மசகெண்ணெய் கூட எதிர்வரும் கோடை காலங்களில் யாழ்பாணத்தின் எஞ்சிய பகுதிகளுக்கு ஊடுருவுவதற்கான வாயப்;புகள் அதிகமாக உள்ளன.எனவே இதிலிருந்து இயன்றவரை எம்மை நாமே பாதுகாக்க வேண்டும்.

இப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க தற்கால, நிரந்தர தீர்வை விரைவில் வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் இப்பிரதேச மக்களுக்கு தற்போதைய நிலையில் விநியோகிக்கப்படும் நீர்த்தாங்கிகள் போதுமானதாக இல்லை. இறைக்கப்படும் நீர் சிறிது நேரத்திலேயே தீர்ந்து விடுவதாகவும் இதனால் பல அசௌகரியங்களை சந்திப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே அதனை அதிகமாக்கும் பட்சத்தில் தற்காலத் தீர்வாக அமையும். அத்துடன் ஒரு கிணற்றுக்கு நீர் பரிசோதனை செய்ய 3500 ரூபா அறவிடப்படுகிறது. இப்பிரச்சினைக்கு மத்திய, மாகாண அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது இப்பகுதியை இடர்ப் பிரதேசமாக அறிவிப்பதுடன் சகல மக்களின் கிணறுகளும் இலவச பரிசோதனைக்க உட்படுத்தப்படுவதுடன் மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும். வட மாகாணசபையின் தூய நீருக்கான விசேட செயலணியின் அவசர தொலைபேசி இலக்கத்தினூடு – 0212211265 தெரியப்படுத்தியும் மக்கள் தற்காலத் தேவைகளை நிறைவேற்ற முடியும்‬

மேலும் எம் மக்களுக்கு பிரச்சனை சார் விஞ்ஞான தகவல்களை அறியும் உரிமை உண்டு. அந்த வகையில் இம் மாசடைவின் பாதிப்பின் அளவு, எந்த இடங்களில் எவ்வளவு பாதிப்பு, ஒவ்வொரு கிணற்றையும் முறைப்படுத்திய இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தி அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளும் வழிமுறை, இந்த பாதிப்பு அதிகரிக்கும்போது நீரில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற தகவல்கள் சரியான முறையில் முன்வைக்கப்பட வேண்டும். அத்துடன் பிரச்சினையின் தோற்றுவாயான எண்ணைக் கசிவின் மூலம் நிலத்தினடியில் இருக்கும் சரியான இடம் கண்டுபிடிக்கப்படும் பட்சத்திலேயேமேலதிக பாதிப்பிற்கு முகம் கொடுக்காமல் தப்பிக்கலாம். பதிவு இணைய செய்தி

மேலும் எண்ணையையும் நீரையும் பிரித்தெடுப் பயன்படுத்துவதற்கான பொறிமுறை இயந்திரங்களை வழங்குவதுடன் அதனை மெற்கொள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர தாம் வாழும் சூழல் குறித்து அறிந்து வைத்திருப்பது என்பது அனைத்து மக்களது உரிமையாகும். இதுவே எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாக்க உதவும். மனிதர்களில் காதல் செய்வதும் அன்பு காட்டுவதையும் போலவே நீரைக் காதல் செய்வோம் எம் சொத்தைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம்.

Advertisements