சுமந்திரன் கும்பலது ஊழல்கள்! சஞ்சீவன் பல மில்லியனை விழுங்கினார்!!

தெற்கில் மஹிந்த கும்பலினது ஊழல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுபிடிகளது ஊழல்களும் அம்பலமாகத்தொடங்கியுள்ளது.sanjeevan_sumanthiran

அவ்வகையில் கூட்டமைப்பு சார்பு பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூ.சஞ்சீவனின் பல மில்லியன் ஊழல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

தனது பிரதேச சபையில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்திருந்த ஏழைத் தொழிலாளர்களிற்கு நிரந்தர வேலைகளை வழங்குவதாகக்கூறி சஞ்சீவனினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களே தற்போது அம்பலத்திற்கு வரத்தொடங்கியுள்ளது.

நிரந்தர பணி நியமனம் வழங்குவதாக உறுதியளித்து பலரிடமும் இருந்து இரண்டு இலட்சம் முதல் ஜந்து இலட்சம் வரை இலஞ்சப்பெறப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசாவிற்கு பாதிக்கப்பட்டவர்களால் கையளிக்கப்பட்ட மகஜரினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சிலரிற்கு மட்டும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு விட்டதாகவும் ஏனையவர்களிற்கு நியமனம் வழங்கப்படாத போதும் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை கூட திருப்பி வழங்க சஞ்சீவன் மறுத்துவருதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை திருப்பி தராவிடின் தமிழரசுக்கட்சியின் மார்ட்டின் வீதி தலைமை அலுவலகம் முன்பதாக சாகும்வரையான உண்ணாவிரதத்தினில் ஈடுபடப்போவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்த மணல்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வடமாகாணசபை போராடிய போது சுமார் ஜந்து மில்லியன் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு மணல் அகழுவதற்கான அனுமதியை சஞ்சீவன் வழங்கியிருந்ததாக வடமாகாண அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டியுமிருந்தார்.

தற்போது அடுத்த பாராளுமன்ற தேர்தல் கனவிலிருக்கும் சுமந்திரனால் அள்ளி வீசப்பட்டுள்ள பணத்தால் அவரது எடுபிடிகளாகி தமிழ் தேசிய ஆதரவாளர்களை மிரட்டுவது மற்றும் கொலை அச்சுறுத்தல்களை இவர் விடுத்துவருவதாக தெரியவருகின்றது.

Advertisements