போர்க்குற்ற அறிக்கையைத் தாமதப்படுத்த ஜெனீவா சென்றார் சுமந்திரன்!

sambathan_sumanthiran_black dayதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனீவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளையும், சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் குழுவினரையும் சந்தித்து பேசியுள்ளார்.

அடுத்த மாதம் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டாலும், அதனை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமந்திரனின் தீடீர் ஜெனீவாப் பயணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் அண்மைய நடவடிக்கைகளால் அவருக்கு எதிரான கருத்துக்கள் கூட்டமைப்பு வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் வலுவடையத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் திட்டமிட்டவாறு அந்த அறிக்கையை தமதமின்றி சபையில் முன்னிலைப்படுத்துமாறு கோருவதற்காக தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக சுமந்திரன் தகவலைக் கசிய விட்டுள்ளார்.

துரோகத்தின் உச்சத்தில் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்?

தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு அநாதரவாக கைவிடப்பட்ட யுவதியொருவர் தற்கொலைக்கு முயன்று அபாயகரமான நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மண்ணை பிரதிநிதித்துவம் குறித்த இளம் உறுப்பினர் நீண்டகாலமாக குறித்த பெண்ணை காதலித்து வந்ததாகவும் அத்துடன் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்திருந்ததாகவும் தெரியவருகின்றது.

முன்னர் தான் பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து காதலை அவர் தொடர்ந்த போதும் வடமாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்று கதிரையேறியதும் அவரது செயற்பாடுகள் முற்றாக மாற்றமடைந்துள்ளன.
அண்மைக்காலமாக கூட்டமைப்பின் பின்கதவு எம்பி சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவரும் அவர் பாராளுமன்ற வசதிகள் மற்றும் வாகன வசதிகளென அனைத்தையும் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் குடும்பமாக வாழ்ந்துவந்திருந்த பெண்ணை கைவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கேட்டுப்போயிருந்த பெண்ணை மிரட்டி கலைத்துள்ள அந்நபர் அவரை அச்சுறுத்தியிருப்பதுடன் தனக்கு பெற்றோர் வேறு திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே குறித்த யுவதி தற்கொலை முயற்சியில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதே நபர் இலங்கை சுதந்திர தினநிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்த சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரது கொடும்பாவிகளை எரிக்க யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்து வந்த ஏற்பாடுகளை அவர் மிரட்டி தடுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

அதே போன்று பருத்தித்துறையில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரது கொடும்பாவிகளை எரிக்க முற்பட்ட தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அங்கத்தவர்களை சுமந்திரனிற்கு தகவல் வழங்கி மிரட்டி அதனை தடுத்து நிறுத்தியமையும் அம்பலமாகியுள்ளது.