நவரட்ணம் முதல் அனந்தி வரை

தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், எஸ்.சிவகரன் ஆகியோர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கட்சிக் கட்டுப்பாட்டைமீறிச் செயற்பட்டதாலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் செயலர் கி.துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார்.elilan wife ananthi

ஒரு கட்சியில் அங்கம் வகிப்போர் அதன் கட்டுப்பாடு, தமது அளவு என்னவென முதலில் அறிந்திருக்கவேண்டும். தhம் நினைத்தபடியெல்லாம் பேசவோ, செயற்படவோ முடியாது. அந்தவகையில் மேற்குறித்த இருவர் மீதான நடவடிக்கை மிகமிகச் சரியானதே. கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமது உணர்வுகளின் அடிப்படையிலேயே மக்கள் இவர்களுக்கு வாக்களித்திருந்தனர். அதற்காக இவர்களை தமது வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டனர் என்று அர்த்தமில்லை. அந்த செய்தியைத் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தypல் இவர்களின் நிலைப்பாட்டை நிராகரித்து மிகப் பெரிய வீதத்தில் தமது வாக்குச்சீட்டைஆயுதமாகப் பயன்படுத்தி தெரிவித்துள்ளனர.; மக்கள். அதேவேளை அ னந்தியின் நிலைப்பாட்டையோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்தாலும் மக்களின் வாக்காளிப்பு வீதம் இப்படியேதான் இருந்திருக்கும். அந்தவகையில் மக்களின் எண்ணவோட்டத்தை புரிந்து செயற்பட்டிருக்கின்றதுகட்சி.

அதுசரி! கட்சிக் கட்டுப்பாடு என்பது அனந்தி, சிவகரனுக்கு மட்டுந்தானா? இவர்களாது கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது கட்சிக்குள் வந்தவர்கள். ஆனால் குலநாயகம் கட்சியின் மூத்த உறுப்பினர் அவர் வல்வைநகரசபையை நாறடித்தவிதம் நாடாறிந்ததே. வலிதென்மேற்கு, வலிகிழக்கு, காரைதீவு முதலான பிரதேசசபைகள் வவுனியாநகரசபை என்பனவற்றில் கட்சிஉறுப்பினர்களின் செயற்பாடுகள் பெருமைதரக் கூடியனாவாக இருந்தனவா? வடமாகாணசபையின் பிரதிஅவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ‘மாகாணசபை முல்லைத்தீவு மக்களால் புறக்கணிக்கப்படுகின்றது’ என ஊடகங்களுக்குப் பேட்டிகொடுத்தபோது கட்சிக் கட்டுப்பாடு நினைவில் வரவில்லையா? இவர்கள் மீதெல்லாம் அக்கறையுடன் எடுக்கப்படாத நடவடிக்கை இப்போது ஏன் எடுக்கப்படுகின்றது?

கடந்த பொதுத்தேர்தலின் போது முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு போட்டியிடசந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இவ்விடயம் குறித்து பி.பி.சி தமிழோசை வினாவெழுப்பியது. இதற்கு பதிலாளித்த கட்சியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ‘அரசுக்குஆதரவாக செயற்பட்டோர்: வெளிநாட்டில் இருந்தோர் தவிர ஏனையோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது’ என பதிலளித்தார்.

கனகரத்தினம், கிசோர், தங்கேஸ்வரி ஆகியோர் ; அரசுக்கு ஆதரவாகசெயற்பட்டனர் என்பதால் வேட்பாளர் பட்டியலில் இடம்வழங்கப்படாமை நியாயமானதே. ஆனால் சம்பந்தன் ஐயா ,சுரேஸ், செல்வம் ஆகியோரதும் பத்மினி, கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோரினதும் கடவுச்சீட்டுக்களை ஒப்பீட்டுப் பார்த்தால் யார் குறிப்பிட்ட பதவிக்காலத்தில் நீண்டநாட்கள் வெளிநாட்டில் நிற்கின்றனர் என்பது புரிந்திருக்கும். இதைவிட இன்னொருவிடயம் எந்த நாட்டுக்கும் போகாமல் கொழும்பிலேயே நின்ற சொலைமன் சூ சிறிலையும் இந்தப்பட்டியலில் சேர்த்து சந்தர்ப்பத்தை பழிவாங்காமல் விட்டார்கள். இதற்கு காரணம் கட்சிக்குள் புலிவாசனை வந்துவிடக்கூடாதே என்பதுதான்.

இதே சுரேஸ்பிரேமச்சந்திரன்தான் எழுத்து மூலம் வேண்டியும் தனது தம்பி மாகாண அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லையென சிவாஜிலிங்கத்துடன் சேர்ந்து மாராடித்து அழுதவர். அந்தநேரத்தில் பத்மினி,கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, சொலைமன் சூசிறில் போன்றோருக்கு புலி நீக்கத்தின் பெயரால் தான் செய்த கழுத்தறுப்பு நினைவுக்கு வரவில்லை.

இன்னொரு விடயம் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அவதியில் திளைக்கும்போது அரசதரப்புடன் கிரிகெற் ஆடி மகிழ்ந்தார் சுமந்திரன். டக்ளஸ் கூட ஆடாதஆட்டம் அது. யாரைக்கேட்டு கிறிகெற் ஆடப்போனாய் என்று கட்சிஏன் அவர் மீதுநடவடிக்கை எடுக்கவில்லை? இவர் தமிழரின் பேராட்டங்களின் போது எதிரியிடம் அடிவாங்கியவர் அல்ல, எச்சந்தர்பத்திலும் எதிரிக்கு திருப்பி அடித்தவரும் அல்ல, எமதுமக்கள் மத்தியில் வாழ்ந்தவரும் அல்ல, எமதுமக்களால் தெரிவுசெய்யப்பட்டவரும் அல்ல, இப்படி ஏதாவது ஒன்று இருந்தால் இவரால் கட்டாயம் கிறிக்கற் ஆடப் போயிருக்கமுடியாது.

இவரைத்தான் கட்சிதமிழ்க் கைதிகளின் விடயத்தை கையாளவிட்டிருக்கின்றது. சிறைச்சாலைக்குச் செல்லும் சகநாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூட இவர் பேச அனுமதிப்பதில்லை. இவர் இல்லாமல் தனியேபோனால் தான் அவர்களின் துயரங்களை மற்றவர்களால் கேட்கமுடிகிறது. கைதிகள் கேட்காமல் ‘நான் கிரிகற் ஆடப்போனாதுஒரு இராஜதந்திரம், கோத்தபாயவுடன் டினருக்குப் போனோன், அவர் சில விடயங்களை செய்துதருவதாக கூறுகின்றார். முதலில் தண்டனை பெற்றகைதிகளின் விபரங்களை தனியாகத் தாருங்கள், மற்றவர்களின் விபரங்களை தனியாகத் தாருங்கள்’என்றெல்லாம் கூறிவிட்டுச்சென்றவர் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை, கொடுத்தபட்டியலைகுப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டார். அந்தப்பட்டியல் இவரிடம் இருந்தால், தற்போதைய ஜனாதிபதியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அதைக் கொடுத்திருப்பார்களே. கைவீசு அம்மாகைவீசு என்றபாணியிலேயே அங்குசென்றிருந்தார்கள். மகசின் சிறைச்சாலைக் கைதிகள் எங்கள் குடும்பங்கள் கஸ்ரப்படுகின்றன, அவர்களுக்குஉதவ ஏற்பாடு செய்யுங்கள்’என்றுகேட்டனர். அதற்கு இவர் ‘புலி இருந்தபோது எல்லோருக்கும் காசுகொடுத்தார்கள், இப்போதுஒருவருக்கும் தருவதில்லை, கட்சியிலும் காசு இல்லை, தேர்தலுக்குசெலவுசெய்யக்கூட கட்சியிடம் பணம் இல்லை’என்று மூக்கால் அழுதவர். மக்கள் மத்தியில் வாழ்ந்தவர் என்றால் இப்படிப் கூறியிருப்பரா.

இத்தனைஆண்டுகள் ஆகிவிட்டன. யார் யார் சிறையில் இருக்கின்றார்கள், யார் காணாமல் போனர்கள், எத்தனை விதவைகள் என்றெல்லாம் தெரியாமலா கட்சிநடத்துகின்றார்கள்?, எத்தனை உள்ளுராட்சிஉறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,செயலாளர்கள் இருந்து என்ன பயன்? இனி மைத்திரிகேட்டபடி பட்டியல் தயாரிக்க கைதிகளை நாடுவார்கள். என்னபுதினம் இது? பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போர்,தண்டனைபெற்றோர் அனைவரையும் விடுதலை செய்வதாக ஒரு உத்தரவுவாங்கமுடியாதஅளவுக்குத்தான் எமதுஅரசியல் பேரம் இருக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சு,நீதியமைச்சு, சிறைச்சாலைத் திணைக்களம், முதலியவற்றுடன் தொடர்புகொண்டால் ஐந்து நிமிடங்களுக்குள் ஜனாதிபதிக்குபதில் கிடைக்கும் என்பது கூட தெரியாத அப்பாவி ஜீவன்கள் இவர்கள்.

இந்த சுமந்திரனுக்கும் அனந்திக்கும் இடையே பிரிட்டிஸ் பிரதமரின் வருகை, ஜெனிவா கூட்டம் என்பவற்றின் போது முறுகல் நிலைஏற்பட்டது. பொருத்தமானநேரத்தில் சிக்ஸர் அடித்துவிட்டார் இந்த கிறிகெற் வீரர். எல்லாவற்றிற்கும் காரணம் புலி வாசனையை ஒழிப்பதே, மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்தபோது அனந்தி போன்றோர் தேவைப்பட்டார்கள். மக்கள் இப்போது இயல்பாகவாக்களிக்கின்றார்கள் என்றதும் கட்சிக்குள் புலி வாசனையை போக்கநினைக்கின்றார்கள். இவர்களுக்கு புலிகளின் ஆதாரவாளர்கள், மாவீரர் குடும்பங்கள்;, காணாமால் போனாரின் குடும்பங்களின் வாக்குகள் மட்டும் தேவை. மற்றையபடி அவர்களை எட்டவைத்திருக்கவே விரும்புகின்றார்கள்.

இவர்கள் அனந்தி,சிவகரன் மீதுநடவடிக்கை எடுக்கட்டும், அதையாரும் ஆட்சேபிக்கவில்லை. தன்னிச்சையாக கிரிக்கெற் ஆடப்போய் தமிழரின் அவலநிலையை உலகிற்குமறைக்க சுமந்திரன் மற்றும் குலநாயகம் உள்ளீட்ட உள்ளுராட்சி உறுப்பினர்கள், மாகாணபிரதிஅவைத் தலைவர் ஆகியோர் மீதுநடவடிக்கை எடுத்தபின் இவர்கள் மீது எடுக்கட்டும்.

கட்சியி ஒழுங்காற்று நடவடிக்கை எடுப்பது இப்போதுதான் புதிதுஎன்றல்ல. ‘தமிழரசுக் கட்சியின் மூளை’ என்று வர்ணிக்கப்பட்டவரும், ஊர்காவற்றுறை தொகுதிநாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவில் மரணித்தபோது ‘நாட்டுப்பற்றாளர்’என்று கௌரவிக்கப்பட்டவருமான வ.நவரட்ணம் அடையாளஅட்டை மசோதவிற்கு எதிராக வாக்களித்தமைக்காக காட்சியினால் நடவடிக்கைக்க உள்ளாக்கப்பட்டார். ‘ அப்புகாமி அடையாள அட்டையைதொலைத்தால் பிரச்சினை இல்லை. அப்புசாமி தொலைத்தால் அதேகதிதான்’என்றுஎச்சரித்தார் அவர். காலமும் அவரது கூற்றை நிரூபித்தது. அடையாள அட்டைமசோதவை ஆதரிப்பதற்காக‘நாய் பட்டிக் கட்சி’என்று வர்ணித்தவர் அவர்.

எதுஎப்படி இருந்hhலும் வ.நவரட்ணம் காலத்திலும் சரி அனந்தி காலத்திலும் சரி சிங்களவர்களோடு ஒத்திசைக்க மறுத்ததிற்காக நடவடிக்கை எடுக்கிறது தமிழரசுக் கட்சி.

தாயளன்

Advertisements