தமிழ் அரசியலில் இளைஞர்களின் கடப்பாடு!

TNPF_party

தமது அரசில் இருப்பு காணாமற்போய்விடும் என்ற காரணத்தினாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் அச்சம் கொண்டிரு க்கின்றன.

இது, நியாயமான அரசியலின் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வுக்கு பெரும் இடையூறாகும். தவிர்க்க முடியாமல் தமிழ் மக்களின் அடுத்த கட்டங்களை தமது தோள்களில் இளைஞர்களே சுமந்தாக வேண்டும் என்கிற சூழ் நிலையில் அதனைத் புரிந்து கொண்டு இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் அரசியல் தலைமைகள் அக்கறை கொள்ள வேண்டும

மாறாக, தமது பதவிகளுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று புறந்தள்ளும் போது அது, தமிழ் சமூக த்துக்கு ஆற்றும் துரோகமாக மாறும். இதனை நாம் தொடர்ச்சியாக எதிர் கொண்டே வந்திருக்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷ என்கிற சர்வாதிகாரத்துக்கு எதிராக வட மாகாண சபைத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் தீர்க்கமான முடிவுகளோடு செயற்பட்ட தமிழ் மக்கள், ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டங்களில் அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டிய தருணம் இது.

மஹிந்த ராஜபக்ஷவின் வீழச்சியோடு அரசியல் ரீதியிலான போராட்டங்கள் முடிந்துவிட்ட தாகவோ, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் தீர்வினை உடனடியாக தந்துவிடும் என்றோ கொள்ள முடியாது.

தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கக் கூடிய அரசியலை எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி தமிழ் மக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். இப்போது கிடைத்திருக்கின்ற ஜனநாயக இடைவெளியை குறிப்பாக, தமிழ் அரசியல் தலைமைகளும், கட்சி களும், இளைஞர்களும் சரியாகக் கையாள வேண்டும்.

ஆயுதப் போராட்டங்களின் வீழ்ச்சிக்குப் பின்னரான சிறுகாலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வெறுமையை மாத்திரமே விட்டு வைத்திருந்தது.

ஆனால், மெல்ல நகர்ந்த காலம் யதார்த்தப் போராட்டக் களத்தை உணர வைத்தது. அது தான், தமிழ் இளைஞர்கள் மத்தியில் போராட்ட குணம் இன்னமும் அதே ஆக்ரோசத்தோடு இருக்கின் றது என்பதையும் வெளிப்படுத்த வைத்தது.

வட மாகாண சபைத் தேர்தலும், ஜனாதிபதித் தேர்தலும் பெரும் அச்சுறுத்தலான ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றது. ஆனாலும், அவ்வாறான காலங்களிலும்கூட தம்முடைய கருத்துக்களினூடு அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து அக்கறையோடு செயலாற்றினார்கள்.

இரண்டு தேர்தல்களிலும் தமிழ் மக்களின் பெரும் அர்ப்பணிப்பான வாக்களிப்பு என்பது இளைஞர்களின் குறிப்பிட்டளவான முயற்சியினாலேயே சாத்தியப்பட்டது.

தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்களில் இளைஞர்களது பங்களிப்பு என்பது காலம் கால மாக பெரும் வகிபாகத்தைக் கொண் டது. அது, ஆயுத ரீதியிலான போராட்டங்களின் போக்கிலும் கோலொச்சிக் காணப்பட்டது.

சில நம்பிக்கைகள், கொள்கைகள் பொய்த்துப் போனாலும் கூட, புதிய நம்பிக்கைகளைக் கொள்வதும், உரிமைகளை இழந்துவிடாது தக்கவைப்பதற்காக போராட்ட த்தை முன்னெடுப்பதையும் தமிழ் இளைஞர்கள் என்றைக்குமே கைவிட்டதில்லை.

வேணுமென்றால் சிறிய இடை வெளியை எடுத்துக் கொண்டிருக் கின்றார்கள் என்று கொள்ள முடியும். இளைஞர்களும், தொழிலாளர்களுமே ஜனநாயக அரசிய லின் பெரும் சக்தி. அவர்களே நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை அதிகம் பிரதிபலிக்கின்றனர்.

அப்படிப்பட்ட நிலையில், வட – கிழக்கு தமிழ் இளைஞர்கள் தமது அரசியல் உரிமைப் போராட்டங்களின் பங்களித்தல் நிலையில் அடுத்த கட்டம் நோக்கி செல்ல வேண் டும். அதுவே, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அடுத்த கட்டம் நோக்கி அழை த்துச் செல்ல உதவும்.

தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசியல் போரா ட்டங்களில் நம்பிக்கை கொண்டவர்கள், தவிர்க்க முடியாமல் இணைந்திருப்பவர்கள், விரக்தி மன நிலையில் இருப்பவர்கள்” என்று மூன்று தரப்பினரைக் காண முடியும்.

இந்த மூன்று தரப்பும் தேர்தல் மற்றும் வாக்களிப்பு உள்ளிட்ட விடயங் களில் ஒரே புள்ளியில் இணைக்கின்றார்கள். வாக்களிப்பு என்பது தமிழ் மக்களிடம் இருக்கின்ற இறுதி ஆயுதம் என்ற நிலையில் பெருமளவான வாக்களிப்பை உறுதி செய்கின்றார்கள்.

ஆனால், தேர்தலும், வாக்களிப் பும் மட்டுமே அரசியல் போராட்ட ங்களின் பங்களிப்பாகக் கொள்ள முடியாது. அதனைத் தாண்டி அரசியல் ரீதியிலான தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியாக தமிழ் இளைஞர்கள் மாற வேண்டும்.

சர்வதேச பொறிமுறை என்ன வென்பதைப் புரிந்து கொண்டு, அதனைக் கையாளும் அளவுக்கு தம்முடைய அரசியல் அறிவினை வளர்த்துக் கொண்டு நகர வேண் டும். அதுதான், தமிழ் மக்களை தொடர்ச்சியாக தக்கவைக்க உதவும்.

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்த வரையில் தலைமைகள் மீது பெருமளவான இளைஞர்கள் அதிருப்தியில் இருக்கின்றார்கள்.

இதனை தமிழ் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டிருக்கின் றன. அதிக தருணங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் இளைஞர்களின் பங்களிப்பு என்பது தேர்தல் மற்றும் வாக்களிப்போடு நிறுத்தப் பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஆனால், அது, நியாயமான அரசியலில் சரியான அணுகு முறையாக இருக்க முடியாது.

இளைஞர்களிடம் உணர்ச்சி வேகம் அதிகம்தான், எனினும் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது யதார்த்தப் புரிதல் இல்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது.

தனி ஈழம் இனி சாத்தியமில்லை என்பதை பெரும்பான்மையான தமிழ் இளைஞர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அப்படியிருக்கின்ற நிலையில்தான் ஜனநா யக ரீதியிலான அரசியல் போராட் டங்களில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள்.

ஆனால், நேரடியாக செயற்பாட்டு அரசியல் தளத்துக்குள் நுழைவது தொடர்பில் அவர்களுக்கு பெரும் சந்தேகம் இருக்கின்றது. அதற்கு தமிழ் அரசியல் தலைமை களும் காரணமாக இருக்கின்றன.

தமது அரசில் இருப்பு காணாமற்போய்விடும் என்ற காரணத்தினாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் அச்சம் கொண்டிரு க்கின்றன.

இது, நியாயமான அரசியலின் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வுக்கு பெரும் இடையூறாகும். தவிர்க்க முடியாமல் தமிழ் மக்களின் அடுத்த கட்டங்களை தமது தோள்களில் இளைஞர்களே சுமந்தாக வேண்டும் என்கிற சூழ் நிலையில் அதனைத் புரிந்து கொண்டு இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் அரசியல் தலைமைகள் அக்கறை கொள்ள வேண்டும

மாறாக, தமது பதவிகளுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று புறந்தள்ளும் போது அது, தமிழ் சமூக த்துக்கு ஆற்றும் துரோகமாக மாறும். இதனை நாம் தொடர்ச்சியாக எதிர் கொண்டே வந்திருக்கின்றோம்.

தமிழ் அரசியல் தலைமைகள் மீது அதிருப்தியிலுள்ள இளைஞர் கள் தமது தெளிவான அரசியல் குறித் தும் நிறையவே செயலாற்ற வேண்டி யிருக்கின்றது. ஏனெனில், பரவ லாக சிதறடிக்கப்பட்டிருக்கும் கருத்தி யலை ஒரே புள்ளியில் இணைத் துக் கொள்ள வேண்டும்.

அதுபோல, விரக்தி மனநிலை யிலிருக்கும் இளைஞர்களையும் நம்பிக்கையுள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த இரண்டு செயற் பாடும் தமிழ் அரசியல் தலைமை களுக்கு பெரும் அழுத்தங்களை வழங்கி தமிழ் அரசியலில் தீர்மா னங்களை மேற்கொள்ளும் சக்தி யாக மாற்றும்.

தமிழ் இளைஞர்களின் அரசி யல் முழு முனைப்பு என்பது புதிய தொரு அமைப்பினூடாக முன்னெடு க்கப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. மாறாக, எம்மிடையே இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அமைப்புக்குள் உள்நுழைந்தும்கூட ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும்.

தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்களைச் சீர்குலைப்பதற் காக தொடர்ச்சியாக பினாமிக்குழுக் களையும், முகவர்களையும் சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங் கள் தமிழ் மக்கள் மத்தியில் ஏவி வந்திருக்கின்றன.

அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசி யல் அமைப்பாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முழுமை யாகப் புறக்கணித்து புதிய அரசியல் அமைப்பினை தோற்றுவிக்க வேண் டிய அவசியம் இல்லை. ஏனெனில், பலமான கட்டமைப்பொன்றுக்குள் புதிய வழிகளைத் திறப்பதுதான் தமிழ் இளைஞர்களின் முன்னாலு ள்ள இப்போதைய கடமை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர்த்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசி யல் அமைப்பொன்று இல்லை என்கிற நிலையில், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினை தமிழ் இளை ஞர்கள் மேற்கொள்ளும் அரசியல் முடிவுகள் சிதறடித்துவிடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்கள், கட்சிகள் மீதான விமர்சனங்களை கூட்டமைப்பின் செயற்பாட்டு அரசியலுக்குள் நுழை ந்து வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோ, முக்கியஸ்தர் களோ இளைஞர்களின் பலமான கோரிக்கைகளை அல்லது செயற் பாட்டு அரசியலை புறந்தள்ள முடி யாத சூழல் இருக்கின்றது.

அப்படி யான நிலையில், இரண்டு தரப்பும் ஒன்றையொன்று பற்றி தமிழ் மக்களின் அரசியலை சரியாக நகர்த்த வேண்டும்.

தேர்தல்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் நிகழ்வுகளின் போது அதிக அக்கறையோடு இருக்கும் தமிழ் இளைஞர்களில் குறிப்பிட்டள வானவர்கள் மற்றைய காலங்களில் ஆழ் உறக்க நிலைக்கு சென்று விடு கின்றார்கள்.

அது, தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண ;டிய கடமையை இல்லாமற் செய்து விடுகின்றது.

வடக்கு, கிழக்கில் தமிழ் அரசி யல் பிரதிநிதித்துவங்களை எவ் வாறு பேணுவது, அதற்கான தயார் ப்படுத்தல்கள், தெளிவூட்டல்கள் என்ன?, என்பதையெல்லாம் அதிகம் கவனத்தில் கொள்ளாது விடுகின் றது.

ஆயுதப் போராட்டம் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களில் ஒரு தொகையானவர்களை பலிவாங்கி விட்டது. அதுபோல, குறிப்பிட்டள வானவர்களை வெளிநாடுகளை நோக்கி புலம்பெயர வைத்துவிட்டது.

அப்படியான நிலையில், எஞ்சி யுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதி த்துவத்தைக் காப்பது எப்படி, அதற் கான முனைப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

பல்லின நாடான இலங்கை இனவாத அரசியலினால் ஆட்சி யைத் தக்க வைத்து வரும் நாடு. எப்போதாவது அதிசயம் நிகழ்ந்து மாற்றங்களும் ஏற்படுதுண்டு.

இலங்கை தேர்தல் முறையின் பிரகாரம் சிறுபான்மையினமான தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதித் துவம் இழப்பும் கூட பெரும் இழப் பாகவே கொள்ள வேண்டும்.

தேர்தல் காலங்களில் வாக்குக ளைப் பிரிக்கும் சதித்திட்டங்களை முறியடிப்பது போல, வடக்கு, கிழ க்கிலுள்ள தமிழ் மக்களின் தொகை க்கு ஏற்ப எத்தனை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், மாகாண சபைப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண் டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்தாழும் சக்திகள் அந்த வாக்கு களைக் கொண்டு தம்மை அரசி யல் அரங்கில் தக்கவைக்க முயல் கின்றன. இந்த விடயம் தொடர் பில் தமிழ் இளைஞர்கள் முழு அக் கறையோடு இருக்க வேண்டும்.

வடக்கில் வன்னித் தேர்தல் மாவட்டமும், கிழக்கு மாகாணத் திலுள்ள அனைத்து மாவட்டங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தி யில் முழுமையான விழிப்புண ர்வை ஏற்படுத்த வேண்டும்.

அந்த மாவட்டங்களில் வாக் களிப்பு என்பது ஏன் முழு முனைப் போடு முன்னெடுக்கப்பட வேண் டும் என்பதுவும், மாறாக அக்கறை யற்ற வாக்களிப்பு என்பது இன சமநிலையை கேள்விக்குள்ளாக் கும் வகையிலான பிரதிநிதித்துவத் தெரிவை ஏற்படுத்தி விடும் என்ப தையும் கருத்தில் கொள்ள வேண் டும்.

இலங்கையில் இப்போது ஏற் பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றம் தமிழ் அரசியலை சீர்ப்படுத்துவ தற்கும், இளைஞர்களை சரியான புள்ளியில் ஒருங்கிணைப்பதற்கும் உதவக் கூடியது.

ஆனால், இந்த ஆட்சி மாற்றம் வழங்கியிருக்கும் ஜனநாயக இடைவெளி எவ்வளவு காலத்துக்கு நீளும் என்பது கேள் விக்குறி.

அப்படியான நிலையில், தமிழ் இளைஞர்கள் ஆழ் உறக்க நிலை க்கு செல்லாது அரசியல் போராட் டத்தின் அடுத்த கட்டத்துக்கு விரை விலேயே நகர வேண்டும். முதல் அடியை யார் எடுத்து வைப்பது என்ற சந்தேகம் அனைவர் மத்தி யிலும் இருக்கின்றது.

ஏன், தனித்த ஒருவர் முதல் அடியை எடுத்து வைக்க வேண் டும். அனைவரும் இணைந்தே முதல் அடியை எடுத்து வைக்க லாம். அதுதான், தமிழ் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு மிக வும் அவசியமானது!

வலம்புரி

Advertisements