பிரித்தானியாவில் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் படங்கள் எரிப்பு!

uk sampanthan burnt
சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களால் கொழுத்தி எரிக்கப்பட்டது.

1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்து துக்கநாளாகக் கடைப்பிடிக்கும் சிறீலங்கா சிங்கள அரசின் சுதந்திரநாள் நிகழ்ச்சியிலே தமிழ் அரசியல் தலைவர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டமையானது ஏற்படுத்திய கோபாவேசத்தைப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெளிப்படுத்தினர்.

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மீது மட்டுமன்றி ஏனைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மாலை 6.00 மணியளவில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்களின் உரையைத் தொடர்ந்து, வடமேற்கு லண்டன் மாவீரர் செயலகப் பொறுப்பாளரும் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் பெரியதம்பியின் மகனுமாகிய திரு பிறேம் அவர்கள் விடுதலைச்சுடரை ஏற்றி வைக்க, பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தென்மேற்கு லண்டன் செயற்பாட்டாளர் திரு சிவானந்தம் செல்வக்குமரன் அவர்கள் விடுதலைச்சுடரேந்தி போராட்டத்தை முன்னெடுத்தார்.

தொடர்ந்து விடுதலைச்சுடரேந்திய பேரணி Westminister நாடாளுமன்ற சதுக்கத்தை நோக்கி நகர்ந்தது. விடுதலைச்சுடரேந்தி திரு செல்வக்குமரன் நடந்து செல்ல, கொட்டொலிகளை எழுப்பியபடி கைகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மக்கள் நடந்து சென்றனர். Westminister நாடாளுமன்ற சதுக்கத்தை சென்றடைந்த விடுதலைச்சுடரேந்திய நேற்றைய போராட்டம் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்களின் உறுதியுரையுடன் நிறைவுக்கு வந்தது.SL Independence 67

மீண்டும் இன்று காலை 10 மணிக்கு விடுதலைச்சுடர் போராட்டம் Westminister நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து ஆரம்பித்து வடமேற்கு லண்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.sambathan_sumanthiran_black day

Advertisements