இளையசமுதாயமே!! விழித்தெழு

வேகமும் விவேகமும் மிக்க இளையவர்களால் முன்னெடுக்கப்பட்ட எமது விடுதலைப்போராட்டம் இன்று கடல்கடந்து கண்டங்களைத்தாண்டி வியாபித்துள்ளது. தமிழினம் சிங்கள மேலாதிக்கத்தினால் அழிக்கப்பட்டபோது அதற்கெதிராக தமது உரிமையினை நிலைநாட்ட தமது சமூகம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்திற்காக எழுபதுகளில் ஆயுதங்களை தமிழ் இளையவர்கள் கையிலே எடுத்தபோது பல போராட்டக்குழுக்களாக உருவெடுத்தபோது அவர்களை நசுக்கிவிடலாம் ஒரு இரண்டு மூன்று நாட்களிலேயே அழித்துவிடலாம் என்று நையாண்டிசெய்தவர்கள் முப்பதுவருடத்திற்குமேலாக அவர்களை வெல்லமுடியாமல் தினறியடித்துக்கொண்டிருந்தார்கள்.tamil youths

எந்த ஒரு காலத்திலும் தமிழர்களின் பேச்சுக்கு செவிகொடுக்காத சிங்களமேலாதிக்கம் ஒரு சந்தர்ப்பத்தில் கைகட்டி தமிழர்கள் சொல்வதை கேட்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள் இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவர்கள் தமிழ் இளையவர்கள் எவராலுமே முடியாது என்ற செயல்களை எல்லாம் எம்மால் முடியும் என்று செய்துகாட்டினார்கள். எப்போதுமே ஒப்பாரிசத்தம் கேட்ட தமிழன் தேசம் வீரமும் விவேகமும் மிக்க இளையவ்ர்களின் வரவினால் வெற்றிவாகை சூடி விழாக்கோலம் கொண்டது.

தமிழன் என்றால் தமைக்கு சேவகம் செய்யவேண்டிய அடிமைகள் என்று இறுமார்ந்து போயிருந்தசிங்களதேசம் தமிழர்களது பிரதிநிதிகளை நாய்கள் போல சித்தரித்தும் அவர்களை பொம்மைகள் என்று நையாண்டி செய்துகொண்டிருந்ததும் 1958ஆம் ஆண்டு தமிழர்களுக்காக குரல்கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மூத்த தலைவர்கள் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது ஒரு காலகட்டத்தில் தமிழர்கள் பலமாக இருந்தபோது தமிழர்களைக்கண்டால் சற்று தள்ளிநின்று பேசும் அளவு பயத்தையும் தமிழர்களின் பிரதிநிதிகளைக்கண்டால் ( கோமத சேர் ) என்று மரியாதையுடன் நலன்விசாரிக்கும் சூழலையும் உருவாக்கித்தந்தவர்கள் இளையவர்களே! என்பதை மறுப்புக்கூற முடியாது நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் வீரமிக்க இளையவர்களை எந்த சக்திகளாலும் இலகுவாக வென்றுவிட முடியாது இதற்கு ஒரு சிறிய உதாரணம். ஒருகட்டத்தில் இந்திவாவில் தலைவர் பிரபாகரனும் முக்கிய உறுப்பினர்களும் அசோகாகோட்டலிலே இந்திய அரசால் சிறைவைக்கப்பட்டதைப்போல அடைத்துவைக்கப்பட்டு தமிழர்களுக்கு பாதகமான ஒரு ஒப்பந்தத்தினை புலிகள் தரப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ராஜிவ்காந்தியினால் நிர்ப்பந்திக்கப்பட்டபோது அதற்கு தலைவர் மறுப்பு தெரிவிக்க அன்றய இந்தியப்படைகளுக்கு தலமைவகித்த ஒருவர் தலைவர் குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையேல் தான் புகைத்துக்கொண்டிருக்கும் வெண்சுருட்டு அணைவதற்குள் ஈழத்தில் உள்ள அனைத்து போராளிகளையும் அழித்துவிடுவதாக ஒரு மிரட்டலை விட்டிருந்தார்.

ஆனால் இந்திய வல்லாதிக்க இரானுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டபோது அதையெல்லாம் சமாளிக்கமுடியாமல் உலகத்தின் வல்லரசுநாடு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியா எப்படி தினறியடித்தது என்பதையும் இந்திய இராணுவம் சந்தித்த இழப்புக்களையும் இன்றுவரைக்கும் இந்தியா மறந்திருக்க மாட்டாது.

வீரமும் விவேகமும் மிக்க தலைவனின் பின்னே பல்லாயிரம் இளைஞர்கள் அணிவகுத்து நின்றதால் இன்று உலகம் முழுதும் தமிழர்களின் போராட்டம் பரவியுள்ளது ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வெரு தீப்பந்தத்துக்கு சமன் தீமைகளை எரிந்துவிடவேண்டிய அந்த தீப்பந்தங்கள் சிலவேளைகளில் தவறானவர்களின் வழிநடத்தலினால் பல வீடுகளையும் எரித்துவிடுகின்றது பிரபாகரன் என்ற சிறந்த தலைமையின் கீழ் உருவாகிய எத்தனையோ வீரர்கள் தமிழினத்துக்காக எவளவோ தியாகங்களையும் வீரதீரச்செயல்களையும் செய்துவிட்டு ஈழமன்ணின் விடுதலைவித்துக்களாக புதைந்துபோயுள்ளனர் ஆனால் பல இளைஞர்கள் பல தவறான தலைவர்களின் பின்னே சென்று சமூக சீர்கேடுகள் காட்டிக்கொடுப்புக்கள் சகோதரப்படுகொலைகள் என்பவற்றையெல்லாம் செய்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனார்கள்.

பிரபாகரன் என்ற தலைமையின் கீழ் நின்று நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராடிய வீரர்கள் உடல் சிதறி மண்ணிலே
வீழ்ந்தார்கள் விடியாத சிறைகளிலும் வதைமுகாம்களிலும் இன்றும் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் தன் இனம் வாழவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள் எத்தனையோ இளையர்கள் ஈவு இரக்கம் இன்றிக்கொலைசெய்யப்பட்டார்கள் இது எல்லாம் எதற்காக தன் இனம் வாழவேண்டும் என்று. அவர்கள் காட்டிலும் மேட்டிலும் கன்விழித்து காவல்செய்தது தமக்காக அல்ல எமக்காக ,எமக்காகப்போராடிய ஒரு சந்ததியே அழிக்கப்பட்டுவிட்டதே நாங்கள் அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?எமக்காக போரடியவர்கள் இன்று வதைமுகாம்களிலே வதைபடுகின்றார்களே என்ன செய்யப்போகின்றோம் அவர்களின் விடுதலைக்காக? எமக்காக போராடி கைகால் இழந்து அங்கவீனர்களாக ஒரு நேர உணவிற்கே வழியின்றித்தவிக்கின்றார்களே அவர்களுக்காக என்ன செய்யப்போகின்றோம்?

மேய்போன் இல்லாத மந்தைகளாக மாறிக்கொண்டிருக்கும் இளையசமுதாயம் எல்லாம் முடிந்தது என்று கலைந்து செல்ல இது சந்தை அல்ல விடுதலைப்போராட்டம் சந்ததி சந்ததியாக தொடர்ந்துவரும் உன்னதமான போராட்டம் ஒரு சந்ததி
அகிம்சை ரீதியாகப் போராடிக்களைத்துப்போய் இறுதியில் இரத்தமும் சிந்தி அதை அடுத்த சந்ததியிடம் கொடுத்துவிட்டு வீழ்ந்து போனது அடுத்த இரண்டு சந்ததிகள் ஆயுதங்களை ஏந்தி வெற்றிவேல் வீரவேல் என்று வீரமுழக்கமிட்டு போராடி தமிழினத்தின் அடையாளத்தினை உலகறியச்செய்துவிட்டு பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்ற பழிச்சொற்களுடன் பல தியாகங்களையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்து உயிர்பிரியும் தருனத்திலும் இனவிடுதலைக்காகவும் தம் அடுத்த சந்ததி நின்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்ற எண்ணத்துடனும் போராடி வீழ்ந்துபோனார்கள் ஆனால் தாம் வீழும்போது தமது சுவடுகளைத் தெடர்ந்து அடுத்த சந்ததி போராடும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களிடம் உறுதியாக இருந்தது ஆனால் இன்றய இளையசமுதாயம் என்ன செய்கின்றது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த உன்னதமான விடுதலைப்போராட்டத்தினை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றது அதற்காக
என்ன செய்கின்றது?

போராளிகள் அழிக்கப்பட்டால் போராட்டம் அழிந்துவிடும் என்று விடுதலைப்புலிகளை சர்வதேசத்துடன் இணைந்து அழித்தொழித்தது சிங்களதேசம் ஆனால் போராட்டத்திற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவரைக்கும் போராளிகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என்பதை சிங்களதேசம் இன்னமும் உணர்ந்து கொள்ளவில்லை. அதனால்தான் போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகியும் புலிகள் புலிகள் என்று பல தடைகளையும் சட்டதிட்டங்களையும் தமிழர்களுக்கு எதிராக உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து எமதுபோராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய இன்றய இளைய சமுதாயம் இன்று மேய்ப்போன் இல்லாத மந்தைகளாக திசைமாறிச்செல்லத் தொடங்கியுள்ளன. பச்சைகள் எல்லாம் பசுமை என்று பாசிகளில் காலைவைந்து வழுக்கி
விழுந்துகொண்டிருக்கின்றது எமது எதிரி யார் நண்பன் யார் என்பதைக்கூட மறந்திவிட்டு தவறானபாதையிலே செல்லத்தொடங்கியுள்ளது ,

எமது போராட்டத்தினை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்லவேண்டிய இளையவர்கள் இன்று தமக்கு சுதந்திரம் கிடைந்துவிட்டத்தாக எண்ணத் தொடங்கியுள்ளனர் இரவுபகல் நடமாடமும் செல்பேசியும் இணையவசதிகளும் சாராயக்கடைகளும்தான் சுதந்திரமா?காலகாலமாக எம் இனத்தினை கொலைசெய்ய சிங்கள இரானுவம் தூக்கிவந்த சிங்கக்கொடிகளை தமது கைகளிலே தூக்கிப்பிடிக்கின்றனர் சில இளையவர்கள் கால காலமாக தமிழனை தன் கால்கலால் மிதித்து வதைத்த சிங்கள கொலைவெறி இரானுவத்துடன் ( மச்சான் ) என்று உறவாடத்தொடங்கிவிட்டது இனி தமிழினத்தின் தலைவிதி என்னவாகப்போகின்றதோ என்ற ஏக்கம் இப்போது தலைதூக்கிக்கொண்டிருக்கின்றதுJaffna_Univ_05

இளையசமுதாயமே விழித்தெழு

நூறு இளைஞர்களைத் தாருங்கள் இந்த நாட்டையே மாற்றிக்காட்டுவேன் என்று விவேகாணந்தர் கூறினார் இளையவர்களின் சக்தி மிக மிக பலம் வாய்ந்தது எனவே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட எமது இனவிடுதலைப்போராட்டத்தினை வேகமாகவும் விவேகமாகவும் முன்னெடுத்துச்செல்லவேண்டியவர்கள் இளைஞர்களாகிய நீங்கள் போராட்டம் என்றால் ஆயுதத்தினை தூக்கவேண்டும் என்றோ இரத்தம் சிந்தவேண்டும் என்றோ இல்லை அதையெல்லாம் எமக்கு முந்தைய சமூகம் செய்துவிட்டன அதை மீண்டும் செய்யவேண்டியதேவை இப்போது இல்லை ஆனால் அகிம்சைரீதியாகபோராடவேண்டிய கட்டாயம் இப்போது அரசியல்ரீதியாகப் போராடவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழர்கள் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல்கொடுக்கவேண்டியது ஒவ்வெரு இளைஞர்கள் யுவதிகளின் தலையாய கடமை இதனைச்செய்ய மறுத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது.

இன்றைய மகிந்த அரசு உலகநாடுகளின் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அபிவிருத்தி அபிருத்தி என்று ஒரு மாயையினை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது உன்மையான அபிவிருத்தியினை இன்னும் அடிமட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரணமக்கள் அனுபவிக்கவில்லை வசதி படைத்தவர்களுக்கும் பதவிகளில் இருப்பவர்களும் மட்டுமே அபிவிருத்தி என்பதை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் உன்மையான அபிவிருத்தி என்றால் என்ன? நாட்டின் அனைத்து மக்களையும் அது சென்றடையவேண்டும் வறுமை ஒழிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படவேண்டும் புதிய புதிய
தொழில்ற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும் குடிசைக்கைத்தொழில்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் இதிலே எதையுமே மகிந்த அரசு செய்யவில்லை அப்படி இருக்கும்போது எவ்வாறு அபிவிருத்தி பற்றிப்பேசமுடியும் சீனாவிடம் கடன்வாங்கி வாங்கி எத்தனையோ நாடுகளிடம் நாட்டை அடகுவைத்து வீதீகள் போடப்பட்டால் எமக்கு விடுதலைகிடைத்துவிட்டதாக எண்ணிக்கொள்வது முறையாகுமா??

வரி என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பது உன்மை ஆனால் எங்கள் முதுகெலும்புகளையே வரியாகக்கேட்கும் இந்த அரசுக்கு துணைபோவது எந்த விதத்தில் நியாமாகும் வரம்புகள் உயர்த்தப்பாடமல் ஒருபோதும் நல்ல விளைச்சல் கிடைக்காது நாட்டின் வரம்புகளாக இருக்கக்கூடிய சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படாமல் இந்த நாடு அபிவிருத்தியடைகின்றது நாடு வளர்ச்சியடைகின்றது என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் இதனை இளைய சமுதாயம் நன்றாகப்புரிந்துகொள்ளவேண்டும் .

இப்போது தொடரும் பருவமழையால் இடம்பெயர்ந்த மக்கள் ஏராளம் கூலிவேலை செய்யும் ஒவ்வெரு தொழிலாளியும் வேலையில்லாமல் தவிக்கின்றான். அடுப்பு எரிவதற்குப்பதிலாக எழைகளின் வயிறு எரிகின்றது என்ன செய்தது அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 3000 ரூபா சம்பளம் அதிகரித்தது நாட்டிற்காக வயல்களை உழுது வேளாண்மை செய்யும் விவசாயிக்கும் உடல்வருத்தி உழைக்கும் கூலித்தொழிலாளர்களுக்கும் என்ன இலாபம் இதனால்?குறைந்த பட்சம் அடைமழையினால் வேலை இன்றி தவிக்கும் ஒவ்வெருகுடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி பருப்பு என்றாலும் கொடுக்க முடியாத இந்த சுயநலவாத அரசாங்கம் அபிவிருத்தியைப்பற்றிப்பேசுவதற்கே தகுதியற்றது என்றுதான் கூறவேண்டும் இந்த நாட்டின் மூத்த பிரஜைகள் என்று கௌரவிக்கப்படும் முதிவர்களுக்கு இந்த அரசங்கம் ஒருமாதம் வெறும் 200 ரூபாவைத்தான் கொடுக்கின்றது 200 ரூபவிற்கு இந்த நாட்டிலே தற்கொலைசெய்ய நஞ்சுப்போத்தல் கூட வாங்கமுடியாது

இளையசமுதாயம் எப்போதும் சரியான அரசியல்த்தெளிவுடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு அடுத்த சந்ததியை அடகுவைத்தார்கள் என்று வரலாறு இழிவாகப்பேசும் அளவு நடந்துகொள்ளக்கூடாது எமது நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை நன்றாகப்புரிந்துகொள்ளவேண்டும் இனத்துரோகிகளின் சூழ்ச்சிவலைகளுக்கும் சில இளைஞர்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்ரார்கள் அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத்தொடங்கிய நிலையில் தமிழின அழிப்பின் வெற்றியாளராக்கப்பட்ட மகிந்தாவின் சுவரொட்டிகளைக்கையிலே தூக்கிக்கொண்டு எத்தனையோ தமிழ் இளையவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

கொலைகாறனுக்கு கொடிபிடிக்கும் இழிவான செயல்களை ஈழமண்ணின் விடுதலைக்காகப் போராடவேண்டியவர்கள் செய்யத்தொடங்கிவிட்டனர். மகிந்தா வந்துதான் பாதை திறந்துவைத்தான் மகிந்தா வந்துதான் வீடுகள் கட்டித்தந்தான் என்று அதற்கு நன்றிக்கடன் செலுத்த புறப்பட்ட இளையவர்கள் தாம் தம் இனத்தையே சிங்களப்பேரினவாதிகளிடம் அடமானம் வைக்கின்றோம் என்பதைப்பற்றிச்சிந்திக்கவில்லை.

தமிழின அழிப்புக்குத்துணைபோன கூட்டுக்கொலையாளிகள் இனத்துரோகிகள் என எமக்கு அநீதிசெய்தவர்களுடன் கைசேர்த்துக்கொண்டு செயற்படத்தொடங்கியுள்ளனர். சில இளைஞர்கள். தேர்தலை முன்னிட்டு பல இடங்களின் இலவசமாக பல பொருட்கள் வழங்கப்படுகின்றன பல குடும்பங்களுக்கு பணம் கொடுக்கப்படுகின்றன. சிங்கள அரசின் கைக்கூலியான ஈ பி டீ பி அமைப்பினரே இவ்வாறண செயல்களிலே முன்னிலையில் உள்ளனர் சில தினங்களுக்கு முன்னர் ஈ பி டீ பி யின் பல அலுவலகங்களில் முக்கியமாக தீவகங்களிலே இலவசமாக ரீவி றீசீவர்கள் வழங்கப்பட்டன. யாருக்கு ஓட்டு என்ற ஒரே கேள்வி மகிந்தாவுக்கு என்றவுடன் பரிசாக றீசீவர் கொடுக்கும் இவர்கள் ஒருவேளை மைத்திரிபால வெற்றிபெற்றால் அப்போதும் மிகிந்தாவுக்கே ஆதரவாக இருப்பார்களா? இல்லை நிச்சயமாக மைத்திரிபக்கம் ஒரே பாச்சலில் தாவிக்கொள்வார்கள் இவர்கள் ஒட்டுண்ணிபோல் வாழமட்டுமே தகுதியானவர்கள் அப்பட்டிப்பட்டவர்களுடன் எம் தமிழ் இளைஞர்கள் ஒருபோதும் கைகோர்த்துக்கொள்ளக்கூடாது.srilanka election

இணக்க அரசியல் செய்கின்றோம் என்று கூறிக்கொண்டும் எத்தனை அப்பாவித்தமிழர்களை படுகொலை செய்தார்கள் சிங்கள இரானுவத்துடன் இணைந்து இவர்கள் செய்த படுகொலைகள் காட்டிக்கொடுப்புக்கள் ஏராளம். கடத்தல்கள் காணாமல்ப் போதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் இவர்களே இன்றும் தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படுபவர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதும் இவர்கள் என்பதனை ஏன் இளையவர்கள் மறந்துவிட்டனர். இணக்க அரசியலின் ஊடாக நான் வேலைவாய்ப்புக்களை பெற்ருத்தருகின்றோம் அதைச்செய்தோம் இதைச்செய்தோம் என்று கூவித்திரியும் இந்த ஒட்டுகுழுவினர் புதிதாக எதனைச்செய்தார்கள் என்பதனை இளையசமுதாயம் சிந்திக்கவேண்டும்.

சிங்கள அரசு தமிழர்களுக்கு கட்டாயமாக கொடுக்கவேண்டிய சலுகைகளை இந்த இனத்துரோகிகள் மூலம் செய்வதனால் தமது ஆதரவினை பெற்றுக்கொள்ளமுடியும் என்று நினைக்கின்றது வேலைவாய்புகள் கட்டாயமான ஒன்று அதனைக்கூட இந்த ஒட்டுக்குழுக்களினூடாகச்செய்வதனால் தேர்தல்க்காலங்களின் தமக்கான வெற்றி வாய்ப்புக்களை அதிகரிக்கலாம் என்று அதனையும் இவர்களினூடகவே செய்கின்றது இதைவிட இணக்க அரசியல் என்று சொல்லிக்கொண்டு இனத்துரோகம் செய்துகிண்டிருக்கும் இவர்கள் புதிதாக தமிழர்களுக்கு எதை செய்தார்கள் இனப்படுகொலையின் பங்குதாரர்களான இவர்களும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டிய குற்றவாளிகளே

கடந்த சில வாரங்களுக்குமுன்னர் யாழ் ஒருங்கினைப்புக்குழுக்கூட்டத்திலே நடைபெற்ற வன்முறைச்சம்பவமும் அதற்கெதிராக தமிழினம் என்ன செய்தது என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். எமக்கான பிரதிநிதிகள் எமக்காக பேசிக்கொண்டிருக்கும்போது சில கோமாளிகள் இடையூறு செய்தது மட்டுமல்லாது அவர்களை தாக்கி காயப்படுத்தியும் உள்ளார்கள் இதுதான் ஜனநாயகமா? இந்தத்துரோகிகளுக்கெதிராக போர்க்கொடிதூக்கவேண்டிய தமிழர்கள் சிலர் தமக்காக பேசி தமக்காகப்போராடிக்கொண்டிருக்கும் வடமாகாணசபைக்கெதிராக யாழ் பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டார்கள் இது எந்த விதத்தில் நியாயமாகும்.

இளையசமுதாயம் ஒருபோதும் திசைமாறிச்செல்லக்கூடாது அக்கினிப்பறவைகளாக மாறவேண்டியவர்கள் பச்சோந்திகளாக மாறக்கூடாது எம் இனத்துக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகப்போராடவேண்டியவர்கள் ஒருபோதும் துரோகிகளின் மாயவலைகளிலே சிக்கிக்கொள்ளகூடாது எப்படி எமது போராட்டத்தினை முன்னெடுத்துச்செல்லமுடியும் என்று சிந்திக்கவேண்டும் அரசியல் என்பது சாக்கடை என்று பலர் கூறுவார்கள் ஆனால் அது ஒரு புனிதமான நதி அதிலே அழுக்கான சிலர் இறங்குவதால்த்தான் அது சாக்கடையாக மாறுகின்றது இதனை இளையவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் அரசியலில் நல்ல தெளிவுபெற்று
அரசியல் ரீதியாகப்போராட இளையவர்கள் முன்வரவேண்டும்.

பதிவு-கதிரவன்-

Advertisements