புலிகளைப் பங்கரவாதிகள் எனக்கூறிய குஷ்புவின் வீடு முற்றுகை!

bitch kushpu_houseதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்ற சர்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழர் முன்னேற்றப்படை உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தையும் சிறிதுநேரம் சாலை மறியலிலும் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடிகை குஷ்வின் வீடு தமிழர் முன்னேற்றப்படை நிறுவுனர் வீரலட்சுமி தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் குஷ்புவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. குஷ்புக்கு ஆதரவாக அவரது வீட்டுக்கு முன் காங்கிரஸ் ஆதரவாளர்களும் காலை முதல் கூடியிருந்ததால் அங்கு பதற்றம் நிலவியதாகக் கூறப்படுகிறது.

குஷ்புக்கு எதிரான போராட்டத்தை நடத்திய தமிழர் படை முன்னேற்றப்படையினரைக் கைது செய்த காவல்துறையினர் மலை அவர்களை விடுவித்துள்ளனர்.www.tkada.com

Advertisements