மருத்துவ சிகிச்சையைக்கூட சீரான முறையில் பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மலேசியா வாழ் ஈழத்தமிழ் அகதிகள்!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களில் பெருமளவான மக்கள் புலம்பெயர்ந்து மலேசியாவிலே அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

indonesia-tamil refugees 2இவர்கள் அனைவரும் மலேசியாவில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ரானிகராலயத்தில் (UNHCR) தங்களை அகதிகளாக பதிவு செய்து விட்டு UNHCR இன் பாதுகாப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுடைய அகதி அந்தஸ்த்துக்கோரிக்கையை பரிசீலனை செய்யும் UNHCR அதிகாரிகள் அகதியாக அங்கீகரிக்க தகுதியுடையவர்களை UNHCR அகதிகள் பாதுகாப்புச்சட்டம் 1951ம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் அகதியாக அங்கீகரித்து அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட சிறப்பு அடையாள அட்டையை வழங்கி வருகின்றனர்.

UNHCR இனால் வழங்கப்பட்டு வரும் சிறப்பு அடையாள அட்டைக்கு மலேசியாவின் சட்டப்படி வேலை செய்ய முடியாது,பிள்ளைகளை அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு இணைக்க முடியாது,சாதாரண அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாது.

இன் நிலையில் அகதிகளுக்கு அரசாங்கம் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்க மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்பவர்களுக்கு 50% சிறப்புக்கழிவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆனால் அரசாங்க மருத்துவமணைகளில் சிகிச்சைக்காகச் சென்றால் சாதாரண நோய்களுக்கான சிகிச்சைக்கான மட்டும் தான் வழங்கப்படும். எனவும் ஏனைய நோய்களுக்கு வெளிநாட்டவர்களுக்கு நாங்கள் சிகிச்சை வழங்கமாட்டோம் நீங்கள் தனியார் மருத்துவமணைகளில் சென்று சிகிச்சை பெறுங்கள் என மலேசியா கோலாலம்பூர் பொது மருத்துவமணை மருத்துவர்கள் திருப்பி அனுப்புகின்றார்கள்.

இதனால் அகதிகள் தனியார் மருத்துவமணைக்கு பெருந்தொகையான பணத்தை செலவு செய்து சிகிச்சை பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றார்கள்.

எனவே மலேசியாவிலே மருத்துவ சிகிச்சையைக் கூட முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்காவது புலம்பெயர் அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ரானிகராலயத்துடன் தொடர்பு கொண்டு மனிதாபினமான முறையில் மருத்துவ சிகிச்சையை இலவசமாக முழுமையாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்ப்பாடுகளை மேற்கொண்டு தருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் மலேசியாவில் வாழ் இலங்கைத் தமிழ் அகதிகள் கோரிக்கை விடுகின்றனர்.

இவ்வண்ணம்
மலேசியா வாழ் ஈழத்தமிழ் அகதிகள்

Advertisements