தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகக் கூறும் தமிழ்கவி : பிபிசி

‘வடிவம் மாறலாம் ஆனால் போராட்டம் முடியவில்லை’ : தமிழ்கவிv.prabaharan 2

இலங்கையில் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் என்கிறார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகவும், போராளியின் தாயாகவும், ஊடகவியலாளராகவும் இறுதி யுத்தம் வரை, யுத்த மண்ணிலேயே இருந்த தமிழ்கவி அவர்கள், தனது போராட்ட அனுபவங்கள் குறித்து நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு உண்மையான போராளி என்று கூறும் அவர், அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுபவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்.
அதேவேளை, தற்போதைய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வே முதன்மையானது என்று கூறும் அவர், அடிபட்டுப் போயிருக்கும் ஒருவனால், தற்போதைக்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

அரசாங்க புனர்வாழ்வுத்திட்டம் முன்னாள் போராளிகளுக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்று கூறும் அவர் ஊரில் எஞ்சியுள்ள போராளிகளின் குடும்ப நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இராணுவ பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்தும் அவர் விமர்சிக்கிறார்.

thamilkavi

அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

Advertisements