நகுலேஸ்வரனை இராணுவ புலனாய்வுப் பிரிவினரே கொலை செய்தனர்- வீ.ஆர். வரதராஜா

Nakuleswaran_funeral_16_11_2014_00நகுலோஸ்வரனின் பிரச்சினை தற்போது ஐ.நா. வரை சென்றுவிட்டது. அவரை சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரே சுட்டுக் கொன்றனர்.

மன்னார் மாந்தைப் பகுதி வெள்ளாங்குளம் கிராமத்தில் அமைதியான வாழ்வை மேற்கொண்டிருந்தவர் மீதே மகிந்த அரசு துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.

மனைவி, இரண்டு பிள்ளைகள் என சிறிய குடும்பம் ஒன்றின் தலைவர். வயது 40. அவரைக் கொலை செய்யும் அளவுக்கு அந்தக் கிராமத்தில் எதிரிகளே இல்லை.

ஆனால், அவரைக் கொலை செய்யுமாறு கோத்தபயா, தமது கொலைப்படைக்கு உத்தரவிட்டார். முன்னைய லிபிய ஜனாதிபதி கேணல் கடாபி கொலைப்படை ஒன்றை உருவாக்கி, தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்துவந்தார்.

அந்தக் கொலைப் படையைப் பற்றிக் கேள்வியுற்று நம்பிக்கையான சிலரை அவரிடம் அனுப்பி சட்டவிரோதமாக கொலை செய்வது எப்படி என்ற பயிற்சியை வழங்கினார்.

2009ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுற்றதின் பின் அப்பயிற்சி இடம்பெற்றது. அங்கு பயிற்சி பெற்றவர்களை வைத்தே கோத்தபயா சிறிலங்காவில் கொலைகளைச் செய்துவருகிறார். நகுலேஸ்வரனின் கொலை தொடர்பாக முதலில் சர்வதேச ஊடகங்கள் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை.

அவர் ஒரு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என்றளவில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அவர் விடுதலைப் புலிகளின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட தமிமீழ காவல் துறையில் கடமையாற்றியவர். அவர் இராணுவக் கட்டமைப்பில் இணையவில்லை.

பொதுமக்களின் சட்ட ஒழுங்கை கவனிக்கும் காவல்துறை உத்தியோகத்தர். அதேபோன்று சட்டத்துறை, செயலகத்துறை போன்றவற்றில் கடமையாற்றியவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல.

ஆனால், அந்த நிர்வாகத்தில் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களும் விடுதலைப் புலிகள் என்ற நிலைப்பாட்டையே இலங்கை அரசு எடுத்திருந்தது. இருப்பினும் அக்கால கட்டத்தில் கிளிநொச்சியிலிருந்து வெளியான தகவல்களில் பொதுமக்களின் சேவைகளில் ஈடுபடுவோர் தமிழீழ அரச உத்தியோகத்தர்கள் என்றே குறிப்பிட்ப்பட்டிருந்தனர்.

அதனால்தான் அவ்வாறானவர்களை புனர்வாழ்வு முகாங்களுக்கு அனுப்பியதின்பின் இலங்கை அரசு விடுதலை செய்திருந்தது. அவர்களில் நகுலேஸ்லரனும் ஒருவர்.

அவர் கொல்லப்பட்ட செய்தி பெரும்பாலான உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. முன்விரோதம் காரணமாகவே இக்கொலை இடம்பெற்றதாக இலங்கை காவல்துறையினர் அதில் தெரிவித்திருந்தனர்.
அது தொடர்பாக மன்னார் இலுப்பைக்கடவை காவல்துறையினர் விசாரணை நடாத்திவருகின்றனர். வெள்ளாங்குளம் கிராம சேவகர் உட்;பட ஆறு பேர் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டுவருவதாகவும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச ஊடகங்களும் இலங்கை அரசினால் தெரிவிக்கப்பட்ட இந்தத் தகவல்களையே முதலில் வெளியிட்டன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு.செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவந்தனர்.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டவர் என்றும் இந்திய வீட்டுத் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட வீட்டைக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டவர் என்ற தகவலும் வெளியாகின.
இக்கொலையில் கூட்டமைப்பு சந்தேகம் தெரிவித்தபோது சர்வதேச ஊடகங்களும் சற்று விழித்துக்கொண்டன. அப்போதுதான் நகுலேஸ்வரன் பற்றிய கண்டுபிடிப்புகளை வெளிநாட்டமைச்சர் திரு.பீரிஸ் வெளியிட்டார்.

இது தொடர்பான விபரங்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. ஐ.நா.விசாரணைக் குழுவின் விசாரணைகளில் சந்தேகம் தெரிவித்தே அமைச்சரின் ஊடக அறிக்கை அமைந்திருந்தது.

அவர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டோம் என்றே அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் அறிக்கையின் பின்பே நகுலேஸ்வரனின் கொலை சந்தேகப் பிரச்சனையாகிவிட்டது.

பல ஊடகங்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுவந்தன. அவரின் கொலை எதற்காக நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளிப்படத்தின.

அவற்றில் ‘இன்ன சிட்டி’ பிரஸ் கேள்விகளை மாத்திரமே கேட்டிருந்தது. அதனை வாசிப்பவர்கள் பதிலைக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்ற நோக்கம் அதற்கு…..!

ஐ.நா.வின் உள்ளகத் தகவல்களை வெளியிடும் ஊடகம் ‘இன்ன சிட்டி பிரஸ்’ பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக பல விடயங்களை இந்த ஊடகம் வெளியிட்டிருந்ததை அனைவரும் அறிவர்.

‘போர்க்குற்றம்’ மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை எடுக்கத் தயங்குவதேன்? என்ற செய்தியை அது வெளியிட்டது. அந்த ஊடகம் வெளியிடும் தகவல்கள் சர்வதேச ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யதார்த்தம்!

அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் அறிக்கையின்பின் அந்த ஊடகம் ஒருசில சந்தேகங்களை வெளியிட்டுள்ளது.
நகுலேஸ்வரன் என்பவரின் கொலை வழக்கை காவல் துறையுனரே விசாரித்து வருகின்றனர். அவரிடம் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படும் ஆவணங்கள் குறித்து காவல்துறையினர் வெளியிடாமல் அமைச்சர் பீரிஸ் ஏன் வெளியிடவேண்டும்?

கொலை செய்யப்பட்டவர் அரசியல் பிரமுகர் அல்லவே? அவர் ஏன் வெளிநாட்டுத் தூதுவருடன் தொடர்பு கொண்டார்? வெளிநாட்டுத் தூதுவர்கள் என் அவருடன் நின்று படம் எடுத்துக்கொண்டனர்.
அவரடம் எப்படி நானூறு பொதுமக்களின் பெயர் விபரங்ள் வந்தன? வெற்றுப்பத்திரங்களில் அவர் கையெழுத்துப் பெற்றதை யார் நேரில் பார்த்த சாட்சிகள்? அவை ஐ.நா. விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்க இருப்பவர்கள் என்று யார் கூறினார்கள்?

விசாரணைக் குழுவுக்குச் சாட்சியங்களை அனுப்பும் திகதி முடிவடைந்ததின் பின்பும் எதற்காக அந்தப் பத்திரங்களை அவர் வைத்திருந்தார்? எதற்காக அமைச்சர் அவை விசாரணைக் குழுவக்கு அனுப்பப்பட இருந்தவை எனக்குறிப்பிடவேண்டும்?

அவர் அவ்வாறு ஈடுபட்டிருந்ததை புலனாய்வுப் பிரிவினர் முன்பே கண்டுபிடிக்கவில்லையா? அவர் கொல்லப்பட்டதின் பின்புதான் தெரியவந்ததா? விசாரணைக் குழுவின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என அமைச்சர் ஏன் தெரிவிக்கவேண்டும்? அவ்வாறாயின் அவர் அந்தத் தீர்ப்பை வெளியிடலாமல்லவா?
நகுலேஸ்வரன் கொல்லப்பட்டதற்கும் கண்டுபிடிக்கப்பட்ட படிவங்களுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? அந்தக் கிராமத்தில் துப்பாக்கியுடையவர்கள் யார்? விசாரணைக் குழு தீர்ப்பு வருவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என அவர் ஏன் குறிப்பிடவேண்டும்?

இந்தக் கேள்விகளை அந்த ஊடகம் தொடர்ச்சியாக கேட்டுள்ளது. விசாரணைக் குழு தமது விசாரணைகளில் கவனம் செலுத்திவருகின்றது. எழுத்துமூல சாட்சியங்களை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடித்து விட்டன.

அப்படியிருக்க அமைச்சர் பீரிஸ் தெரிவிக்கும் காரணிகளை ஏற்பது சந்தேகத்திற்குரியது என ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் பீரிஸ் முன்னைய சந்தர்ப்பங்களிலும் பல தடவை அறிக்கைகளை வெளியிட்டு சர்வதேச கண்டனத்திற்கு இலக்காகி இருந்ததை இங்கு சுட்டிக்காட்ட இருந்தோம்,ஆனால் இம்முறை சர்வதேச விசாரணைக் குழுவை நேரடியாக சந்திக்கு இழுத்திருக்கும் அவரின் அறிக்கை தொடர்ந்தும் கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது.

-உலகத் தமிழர் இணையம்-

Advertisements