மாவீரர்களே! தாயகம் நோக்கி நடக்கின்றோம்

maveerar_day_2014தாயகத் தமிழர்கள் மிகுந்த துன்பத்துடன் வாழ்கின்றார்கள். மிகப் பெரிய மனித அவலத்திற்கு முகம் கொடுத்த தமிழர்கள் தொடர்ந்தும் அல்லற்படுகின்றார்கள்.
ஆனால், புலம்பெயர் தமிழர்கள் எமது தேசியத் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்;களல்லவா? அவர்கள் தாயகத் தமிழர்களைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அவர்களின் சிந்தனை தாயகம் தழுவியதாகவே இருக்கின்றது. அவர்கள் தாயகம் நோக்கி நடக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ஏராளமான நண்பர்களை சந்திக்கின்றார்கள்.
அதேநேரத்தில் எதிரிகளையும் சந்திக்கின்றார்கள். ஆனால் காக்கை வன்னயர்களின் காட்டிக்கொடுப்பும் இடம்பெறுகின்றது. அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதும் சிரமமே.

தமிழர்களின் அவலத்தை அறிந்ததின் பின்பும் மகிந்த அரசுக்கு வால் பிடிக்கும் காக்கை வன்னியர்களை துரோகிகள் என்றுதானே அழைக்கமுடியும்.
ஜனநாயக ரீதியிலான போராட்டங்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கு எதிராக ஐரோப்பிய நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஜெனிவா ஐ.நா.பணிமனை நடவடிக்கைகளிலும் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தாயகத் தமிழருக்கு நீதிவழங்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் ஆவர்வமாக உள்ளனர்.
மாவீரர்களின் தமிழுணர்வு மிக்க தியாகத்தை குறியிட்டாக எழுத்தாளர்களினால் குறிப்பிட முடியÿல்லை. அல்லது அவர்களை முழுமையாக எழுத்தாளர்களின் படைப்புக்கள் கொண்டுவரமுடியவில்லை. ‘இதோ வருகின்றோம்’ என சாவுக்கே சாவுமணி அடிக்கும் வல்லமை கொண்டவர்கள். இளமைத் துறவிகள். காவி உடை தரிக்காமவேயே துறவறம் பூண்டவர்கள்.

‘ தமிழர்கள்…. தமிழீழம்’ என்ற மந்திரத்தை தம் உணர்வோடு கலந்துவிட்டவர்கள். அவர்களின் அதி உயர்வான வேள்வியைக் கண்டு உலகமே அஞ்சியது. அண்டசராசரங்கள் கோடானகோடி தேவர்கள் ஆகியோருக்குச் செய்யும் யாகத்தைப் பற்றியெல்லாம் கதைகளில் படித்துள்ளோம். ஆனால் மாவீரர்களின் யாகம் தமிழர்களின் இதயங்களில் இடம்பெற்றக் கொண்டிருக்கின்றது. இதயங்களில் வைத்து யாகம் செய்யும் பாக்கியசாலிகள் மாவீரர்களைத் தவிர உலகில் வேறு எவரும் இலர்.

சாவை வென்ற சாமிகள். வனவாசம் செய்யும் சாமிகளுக்கில்லாத சக்தி மாவீரர்களிடம் உண்டு. சாதுவானவர்கள் சாதுக்கள். ஆனால் எதிரிகளுக்குச் சிம்மசொற்பனமாக விளங்கியவர்கள். தமிழீழ இலட்சியத்தில் வீரமரணம் அடைந்த வித்துக்களை விதைத்த துயிலும் இல்லங்களை அழித்து இராணுவ முகாம்களை அமைத்துள்ளனர்.
ஆனால் உலக விதிகளுக்கு முரணான மனிதநேயமற்ற இந்தச் செயலுக்காகவும் நடந்துமுடிந்த மிகப்பெரிய தமிழினப் படுகொலைகளுக்காகவும் சிங்களமே எதிர்பாராத அளவிடமுடியாத விலை கொடுக்கவேண்டி ஏற்படலாம். காலத்தின் நியதிகள் வழங்கும் தண்டனைகளிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. காலம் பதில் சொல்லும் என்ற குறிப்பின் கருவும் அதுவே.
மாவீரர் வாரம் இது என்பதை தமிழர்கள் குறிப்பிடுவதற்கு முன்பே சிறிலங்கா அரசாங்கம் மாவீரர் வாரகெடுபிடிகளை ஆரம்பித்து ஆரவாரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இராணுவம் மிகப் பெரிய எடுப்பில் வடக்க கிழக்கில் சோதனை, விசாரணை, ஆலயங்களில் மணிகள் ஒலிக்கக்கூடாது போன்ற இம்சைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழீழத்தின் அதியுயர் மானிடர் தொகுதியாக மாவீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள். அவர்களுக்கு இறப்பு என்பது ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் இறந்த பின்பும் வாழ்கிறார்கள். உலகில் மனிதர்கள் இறக்கின்றார்கள். தமிழீழத்திலோ மாவீரர்கள் வாழ்கிறார்கள். இது புத்துயிர்ப்பு மிக்க உன்னதமானதொரு நெறி.
எம் மண் தம் வரலாற்றுப் பேழையினுள் அடுக்கி வைத்துள்ள ஆயிரமாயிரம் மாணிக்கங்களின் சாதனைகள் என்ன சாதாரணமானவையா? அந்தச் சாதனைகளைக் கண்டு உலகின் வல்லரசுகளே மலைத்து நின்றனவே. உள்ளூர தோன்றும் மதிப்பை உணர்த்துகின்றார்கள்.
உயிரை உருவி வெளியே எடுத்து கைகளில் தாங்கி வீரச்சாவுக்கு நேரம் குறிக்கும் வீரர்களல்லவா? அந்த உயிரையே ஆயுதமாக்கி களத்திலே அதி உயர் சாதனை படைத்து மேற்குலக போர்த்திட்டங்களை

‘பூ’வென ஊதிவிடும் மாவீரர்கள் அவர்கள். களமாடும் புலி வீரர் கண்டு ‘இவர்கள் மாறுபட்டவர்கள், வேறுபட்டவர்கள், விசேடமானவர்கள்’ என உலகம் உணரத் தொடங்கிற்று. அந்த அளவுக்கு உலகப் புகழ் போர் வியூகங்களில் பங்குபற்றியவர்கள். வெற்றியும் கண்டவர்கள்.

காடுகளிலும் மலைகளிலும் மரப்பொந்துகளிலும் நிலவறைகளிலும் வாழ்ந்து பழகிக் கொண்டவர்கள். நேரத்துக்கு உணவோ, பல சந்தர்ப்பங்களில் பட்டினியாகவோ இருந்துள்ளார்கள். தமிழர்கள் கண்ணியத்தோடு வாழவேண்டும் என்பதற்காக அண்ணன் எதைச் சொன்னாலும் செய்வதற்குத் தயார் நிலையில் இருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் விடுதலைப் படையணியாகவே செயற்பட்டார்கள். தமிழர்களின் கட்டளைக்கிணங்க தரை கடல் வான் புலிகளாக மாறி தமிழர்களைக் காப்பாற்றும் புனிதப் போரில் விதையான மாவீரர்கள் உலகத் தமிழர் மனங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்கள். அது என்றும் அழியாவரம் பெற்றது.
கரும்புலிகள் மிகப் பெரும் சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். அதிலும் கடற் கரும்புலிகளின் சாதனைகளை முறியடிக்க உலகில் வேறு எவரும் இதுவரை அடையாளப்படுத்தப்படÿல்லை. சிங்களத்தின் கடற்படகுகள், கப்பல்கள், துருப்புக்காÿகள், டோராப் படகுகள் எனப் பல கடற்கலங்களை முற்றாக அழித்தவர்கள்.
தமிழரின் கடற் பகுதிக்குள் சிங்களம் புகமுடியாதவாறு கடற் கரும்புலிகளின் சாதனை அமைந்தது. கடற் கரும்புலிகள் கடலாதிக்கம் செய்வதில் வல்லவர்கள். சிங்களக் கடற்படையினரை துரத்தித் துரத்திக் கடலிலேயே அடித்து வீழ்த்தினார்கள். உலகமே வியக்கும் வண்ணம் கடலிலே காவியம் படைத்த அந்த மாவீரர்களின் தியாகத்துக்கு ஈடாக நாம் எதனைக் குறிப்பிட முடியும்? தம்மைக் கொடுத்து எம்மைக் காத்தவர்கள்.

சிங்களர் தரையால் வந்து தாக்கினார்கள். மாவீரர்கள் அதனைத் தடுத்தார்கள். கடலில் வந்து தாக்கினார்கள் சிங்களப் பயங்கரவாதிகள். அதிலிருந்தும் தமிழ் மக்களைப் பாதுகாத்தார்கள். ஆனால், ஆகாய மார்க்கமாக வந்து விமானமூலம் தமிழ் மக்கள் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தினார்கள். அதனைத் தடுக்க வான்புலிகள் உருவெடுத்தார்கள். இரவு நேரங்களில் ஒளியின்றியே விமான கண்காணிப்புக் கருவிகளுக்குப் பிடிபடாமலேயே விமானத்தைச் செலுத்தி தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் தளம் திரும்பிய வான்புலிகளுக்கு நிகராக சிறிலங்காவில் மாத்திரமல்ல உலகிலேயே எவருமில்லை என்று குறிப்பிடலாம்.

தமிழ் மக்களின் கட்டளைக் கிணங்க தரை, கடல், வான் புலிகளாக மாறி தமிழர்களைக் காப்பாற்றும் புனிதப் போரில் விதையான மாவீரர்கள் உலகத் தமிழர்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ளார்கள். அது என்றும் அழியாத வரம் பெற்றது. அவர்களின் கனவை நனவாக்குவதும் எம்மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய கடமையாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் படையணியாகவே செயற்பட்டார்கள். அந்தப் பணியில் உயிர்க்கொடையான மாவீரர்களுக்காகவே கார்த்திகை மலர்கள் மலர்கின்றன. தமிழீழத்தின் தேசியப் பூவான அம்மலர்கள் அந்த வேந்தர்களை தம் இதயங்களில் வைத்து தாலாட்டுகின்றன. அதனால், கார்த்திகை மலர்களின் சேவை உலகமெங்கும் தேவைப்படுகின்றது.
பன்னிரண்டு கோடி தமிழ் மக்களுக்கும் கார்த்திகை மலர்களும் சேவையாற்ற வேண்டியுள்ளது. அதனால் மலர்களே! மலருங்கள். மாவீரருக்காகவே மலரும் மலர்களல்லவா நீங்கள்! அதில் குறை வைக்காதீர்கள்.

முப்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட எம் மாவீரர்களின் இலட்சியக் கனவு சாதாரணமானதல்ல. சாதனை மிக்க சாதனையாளர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பார்கள். அந்த இலட்சியமும் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!
தம் இலட்சிய செயற்பாட்டில் உயிரையே ஈயவும் ஆயத்தமாகச் செயற்பட்ட மாவீரர் மாண்பு இன்றைய உலகின் அதி முதன்மை வலு என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. நாம் பெருமைகொள்ளும் நேரமிது.

பழைமைக்கும் புதுமைக்கும் பாலமிடும் எம் கவிஞர் முருகையன் இயற்றிய புதுக்குறளில் மாவீரரைப் பற்றி இரண்டு குறள்கள் உண்டு!

‘கொல்வோரை மோதி கொடுபட்ட
இன்னுயிரை எல்லா உயிரும் தொழும்’
எம் மாவீரர் மாண்பு இவ்வாறுதான் உலகிற்குணர்த்தப்பட்டிருக்கின்றது. “மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்” என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டதில் ஆழமான அர்த்தம் பொதிந்திருக்கின்றது.

காத்திகை மாதம் மாவீரர் காலம். சொரியும் மழைத்துளிகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு எம் கண்ணீர்துளிகளும் அவர் முகம் தேடும் காலம். கவிஞை பாரதி ஒரு பெண் போராளி. அவர் மாவீரர் பற்றிய கவிதையும் எழுதிவிட்டு மாவீரரானார்.

அவர் எழுதிய வரிகளில்,
வானில் பறக்கும் புள்லெல்லாம் – நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் – நான்
தானில் வளரும் மரமெல்லாம் – நான்
காற்றும் புகையும் கடலும் நானே.

பெண்ணாலும் சாதிக்க முடியும் என்பதை தமிழ்ப் பெண்கள் உலகுக்கு நிரூபித்துச் சென்றுள்ளார்கள்.

வீ.ஆர். வரதராஜா

Advertisements