தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா

maaveerar day canada 2014

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், வழமைபோல் இநத் ஆண்டும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான நவம்பர் 27 வீரவணக்க நாளை ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக ஒன்றிணைந்த கனடியத் தமிழ் மக்களின் எழுச்சி மிக்க வருகையுடன் உணர்வுபூர்வமாக நடாத்தவுள்ளது.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிரக்ளை ஈகம் செய்து, தாயகக் கனவுடன் வீரச் சாவடைந்த எமது மாவீர்கள் அனைவரையும் வணங்கும் நவம்பர் 27 ஈழத் தமிழர்களின் உன்னதமான நாள் ஆகும். ஒன்றுபட்ட சக்தியாகக் கனடியத் தமிழர்கள் அனைவரும் மாவீரர்களை வணங்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளைக், கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், தேசியப்பற்றாளரக்ள், தமிழ் ஆர்வலர்கள். தன்னார்வத் தொண்டர்கள். இன உணர்வாளர்கள், இளையோர் கட்டமைப்புக்கள் என்று கனடா வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரதும் முழுமையான செயற்பாட்டுத் திறனோடு கடந்த ஆண்டுகளைப் போல் இநத் ஆண்டும். நடாத்தவுள்ளது.

இலட்சிய உறுதியோடு நின்று, எமக்காகத் தம்மை ஈகம் செய்தவர்களை நினவில் ஏந்தி, எழுச்சி பெறும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நாள் ஆகும். கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், நவம்பர் 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளையும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மாவீரர் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் அனைவரதும் முழுமையான ஒத்துழைப்போடு உணர்வுபூர்வமாக நடாத்தும் என்பதை அறியத் தருகின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.
கனடா
தொடர்புகளுக்கு. (416) 450 9661

*****


Advertisements