சர்வதேசக் கடற்பரப்பில் வீரகாவியமான ஆழக்கடலோடிகள்

அலையில் கரைந்த வீரங்கள்……sea tigers external

எமது விடுதலைப் போராட்டத்திற்கு அடி நாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களை கொண்டுவந்து சேர்க்கவும். அடக்கு முறையாளர்களின் தடைகளால் அல்லலுறும் எம் மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவந்து கரை சேர்க்கவும் என கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பிலுள்ள கடலெல்லாம் சென்று வருகின்றன “வெளியே தெரிந்ததுமாய் உள்ளே மட்டும் அறிந்ததுமாய்” அளப்பெரிய பணிகளை இந்தக் கடலோடிகள் செய்து முடிக்கின்றனர்.

உயிரைக் கூட துச்சமாக மதித்து சர்வதேசக் கடற்பரப்பின் விரிப்பில் ஒர்மமுள்ள எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் முலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்கமுடியாத பெரும் தீயாக முளாசி எரிகின்றது.

அசையாத மனவுறுதியும், அள்லாடாத வழித்தெளிவும் கொண்ட எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் கடற்புலிகள் ஆற்றிய சாதனைகள் கால வரலாறாக விளங்கும்.

சர்வதேசக் கடற்பரப்பில் 10.03.2003 – 14.06.2003 – 28.02.2007 – 18.03.2007 – 10.09.2007 – 11.09.2007 – 07.10.2007 அன்று தாயக மக்களுக்கு அத்தியாவசிய வளங்கள் ஏற்றிப் பயணித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல் பகைவனின் முற்றுகைக்குள் உள்ளான வேளை பகைவனிடம் சரணாகதி அடையாமல் தமிழீழத்தின் விடயங்களைப் பாதுகாத்து கப்பலுடன் தங்களைத் தாங்களே எரிவாயுக் கலன் கொண்டு எரித்து கப்பலை வெடிக்கவைத்து கடலன்னை மடியில் ஆழம் காண முடியாத அளவுக்கு சென்றவர்கள் எம் ஆழக்கடலோடிகள்.

Advertisements