மேஜர் செந்தூரன்

Maj senthooran

பல ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தால் உரமேறிய ஆனையிறவு மண்ணில் யோகராசா தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தான் இராஜ்கண்ணன்.

சிறுவயதில் மிகவும் சுட்டிப் பையனாக மிகவும் திறமையானவனாக உப்பள மண்ணில் வலம் வந்தான் கண்ணன். தனது ஆரம்பக் கல்வியை ஆனையிறவு தமிழ் கலவன் பாடசாலையில் கற்றான். சந்தோசமான அவர்களின் வாழ்க்கையில் இடிவிழுந்தது போல 1990ஆண்டு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு காரணத்தால் இடம்பெயர்ந்து வட்டக்கச்சியில் வாசித்தார்கள்.

இவனின் அப்பா உப்பளத்தில் வேலை செய்த காரணத்தால் ஆனையிறவில் வசித்தார்கள். சிங்கள இராணுவ முகாம் அருகில் இருத்த காரணத்தால் இராணுவத்தினரின் அடாவடிகளைச் சிறு வயதில் சந்தித்தவன் அவற்றில் இருந்து விடுபடத் துடித்தவன் சிறுவன் என்பதால் எல்லா ஏக்கங்களையும் மனதில் போட்டு வைத்து இருந்தான்.
இடம் பெயர்ந்து சென்று வட்டக்கச்சியில் குடும்பத்துடன் வசித்தான் இடம் பெயர்வைச் சந்தித்த போதும் தனது கல்வியைத் தெடர்ந்தான். வட்டக்கச்சி மகா வித்தியாலத்தில் உயர்தரம் வரை கற்றான். கலைப்பிரிவில் பாடசாலையில் நடக்கும் எந்த நிகழ்வாக இருத்தாலும் முன்னுக்கு நிற்பான்,ஆசிரியர்கள் ,மாணவர்களால் பெரிதும் மதிக்கபட்டவன்.

மிகவும் துடிதுடிப்பனவன் ஒரு இடத்தில் சும்மாவே இருக்கமாட்டன். ஏதாவது செய்து கொண்டே இருப்பான். இதனால் இவனின் அப்பா இவன் தான் என் சுமையை இறக்க வந்துள்ளான் என அடிக்கடி சொல்லிக் கொள்வர். வட்டக்கச்சி மக்களிடம் இவனின் குடும்பம் பிரபல்யமானது. ஏனெனில் உதைப்பாந்தட்டம் என்றால் இவனின் குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமானது.

வட்டக்கச்சி லக்கி ஸ்ரார் உதைப்பந்தாட்ட அணியின் நம்பிக்கை வீரன் ,இவன் மட்டுமில்லை. இவனின் அண்ணன்கள் குமார் , பிரபா அவ்வணியின் பல வெற்றிக்கு இவர்களின் பங்கு கணிசமானது. இவனின் மைதானத்தில் இறங்கிவிட்டால் இவனை தெரியாதவர்கள் கூட இவனின் பெயரை சொல்லி ஊக்கபடுத்துவர்கள்.

வேகம்,விவேகம்,அழகாக பந்து நகர்த்துவது இவற்றால் பலரும் இவனின் விளையாட்டை விரும்புவர்கள். இவனின் அப்பாவும் உதைப்பந்தாட்ட வீரன் என்பது இவர்களின் வளர்ச்சிக்கு காரணம்.

10ஆம் ஆண்டு கற்று கொண்டு இருந்த பொழுது இவனின் நண்பர்களுக்கு இடையில் யார் வீரன் என நிரூபிக்க மாடு ஒன்றை அடக்க வேண்டும்,பலர் முயன்றும் பலன் கிடைக்க வில்லை இறுதியில் வென்றது இவனே,அதற்கு கிடைத்த பரிசு 500ரூபா காசு. அதற்கு தங்கைகளுக்கு ஆடைகள் வேண்டி கொடுத்தான் தனக்காக எதுவும் வாங்கவில்லை.

உயர்தரம் கற்று கொண்டிருந்த பொழுது ஆண்டு நடுப்பகுதியில் போராட்டத்தின் தேவையை உணர்ந்தான். தன்னை போராளியாக இணைத்துக் கொண்டவனை இம்ரான் , பாண்டியன் படையணியின் சரத்பாபு உள்வாங்கியது. அங்கேயே அடிப்படை இராணுவ பயிற்சியைப் பெற்று செந்துரனாக வெளிவந்தவனை இவனின் திறமையைப் பார்த்து தலைவருக்கான வெளிப்பாதுகாப்பு பணிக்காக தெரிவு செய்யபட்டன்.

சகபோராளிகள் கஸ்ரபடுவதை தாங்கிக் கொள்ளமாட்டன். எவ்வழியிலும் அவர்களுக்கு உதவி செய்வான் இவ்வாறு தான் ஒரு நாள் சக போராளி உணவினைக் கொட்டிவிட்டான். ஆனால் யாரும் காணவில்லை பின்னர் பொறுப்பாளர் கண்டு எல்லாப் போராளிகளையும் கேட்டும் யாரும் சொல்லவில்லை. அதனால் கால அவகாசம் வழங்கப்பட்டது. யரரென உண்மை சொல்லும்படி கேட்கும்படி கூறப்பட்டது. ஆனால் யாரும் சொல்லவில்லை நேரம் சென்று கொண்டு இருக்கு போராளிகள் மத்தியில் குழப்பம் ,பயம் கால அவகாசம் முடித்தும் எவ்வித தண்டனையும் கிடைக்கவில்லை.

ஒரே குழப்பம் போராளிகள் மத்தியில் மறுநாள் காலை செந்தூரன் தானேதான் உணவு கொட்டினேன் என தண்டனை பெற்றான் என்பதை தெரிய வந்தது ஆனால் உண்மையில் உணவினை செந்தூரன் கொட்டவில்லை வேறு ஒரு போராளிதான் கொட்டினான். அது செந்தூரனுக்கு மட்டும் தான் தெரியும் உணவு கொட்டினால் கடும் தண்டனை கிடைக்கும். கொட்டிய போராளியால் அந்தண்டனையை செய்ய முடியாது. எனவேதான் இவன் அந்தண்டனையை ஏற்றுக் கொண்டான். மற்றைய போராளிகள் தண்டனை பொறாமல் போனார்கள்.

வெளி பாதுகாப்புப் பணிக்கான கல்வி பயிற்சிகளை திறம்பட செய்து முடித்தான். இதன் அடிப்படையில் விசுவமடு பிரதேசத்தில் மக்களுடன் மக்களாக நின்று பணிபுரிந்தான். விசுவமடு பிரதேச மக்களுக்கு கண்ணன் என்றால் தெரியாதா அளவுக்கு மக்கள் விருப்பட்டவன்.

எதனையும் இவன் எதிர்பார்ப்பவன் இல்லை. வெளிப்பாதுகப்பு அணியின் பகுதி ஒன்றின் பொறுப்பாளராக இருந்தவன் எல்லோருக்கும் முன்னோடியாக செயல்பட்டவன். இவனிடம் இயலாது என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. விசுவமடு,உடையார்கட்டு ,வள்ளிபுனம் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நடைபெறும் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் பழைய மாணவர்களுக்கான ஓட்டப் போட்டியில் பங்கு கொண்டு பரிசுகள் பொறுவான்
.
ஓயாத அலை .03 தொடர் நடவடிக்கையின் பொழுது தானும் சண்டைக்குப் போக வேணும் என அடம்பிடித்து 2000ஆம் ஆண்டு சண்டைக்கு போனான். இம்ரான் , பாண்டியன் படையணியின் தாக்குதல் அணியில் யாழ் தென்மராட்சி சாவகச்சேரியில் எதிரியை முன்னேற விடாது சக போராளிகளுடன் இணைந்து காவல்காத்தான்.

இறுதிச் சமரில் படையினர் எங்கள் அரண்களை உடைத்துக் கொண்டு எங்கள் பகுதிக்குள் நுளைந்துவிட்டார்கள். வாழ்வா சாவா என்ற நிலை கடும் சமர் முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடிய பொழுது இவன் தனது அணியினருடன் எதிரியை விரட்டினான்.

இச்சமரில் பல படையினர் கொல்லப்பட்டார்கள்.அன்றைய முன்னேற்றம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு அன்று வெற்றிக்கு வழிவகுத்து விழி மூடியவர்களுடன் மேயர் செந்துரனாக இவனும் தாயக மண்ணை முத்தமிட்டான்.

– வயவை நண்பன்.

Advertisements