கனடா: தந்தையை மிஞ்சிய தனயன் கரி ஆனந்தசங்கரியின் கழுத்தறுப்புகள் சில….

Gary_2அன்பான கனடாவாழ் தமிழ் ஈழ உறவுகளே !

எமது அன்பான உறவுகளே! ரூஜ்-பார்க் தேர்தல் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் வேட்பாளர் தெரிவுக்கு போட்டியிடும் கரி ஆனந்தசங்கரியைப் பற்றிய உண்மையான கருத்துக்களை படித்துவிட்டு உங்கள் முடிவை எடுக்குமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

1) கனடாவில், இதுவரை காலமும் உங்களால் கட்டியெழுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை சிதைக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டு கரி ஆனந்தசங்கரி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.

2) கரியினால் எமது இளையோர்க்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட போட்டி நிகழ்வில் நிகழ்வின் அனுசரணையாளராக இலங்கை அரசின் கைக்கூலி கணேசன் சுகுமார் கலந்து கொண்டார். இவர் நீண்ட காலமாகவே தமிழர்களின் தேசிய அபிலாசைகளிற்கு எதிராக செயற்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்கள். இவர் முள்ளிவாய்க்கால் அழிவு முடிந்தவுடன் ராஜபக்சேயுடன் படமெடுத்து இணையத்தளத்தில் போட்டவர். இனத் துரோகிகளான கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை மற்றும் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளுடன் சேர்ந்து இப்போது தமிழினத்துக்கு துரோகம் செய்ய கரி ஆனந்தசங்கரி இத் தேர்தலில் குதித்துள்ளார். இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று இவர்களின் இணையத்தளத்தில் சென்று பார்த்தால் தெரியும்.hari_anandasankari gangs

3) தமிழ் தேசியத்தின் வழி நின்று வீடு வீடாக ஆதரவு தேடிய மாணவிகளை கரியும் அவரது ஆதரவு ஒட்டுக் கும்பலும் சேர்ந்து இனப்படுகொலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அந்த மாணவிகளை அடிக்க போனவரே இந்த கரி ஆனந்தசங்கரி. (வீடியோ ஆதாரம் உள்ளது). ஈழத்தில் இராணுவத்தாலும் இவரது அப்பா ஆனந்தசங்கரியின் ஆதரவு கும்பலாலும் மானபங்கப்படுத்தப்பட்ட ஈழத்து பெண்களுக்கு இவரா நீதி பெற்றுத் தரப்போகிறார். மாணவிகளை பிரச்சாரத்தின்போது படம் பிடித்த கரியின் அடியாட்கள் முகுந்தன், திவா பரம்சோதி மற்றும் குணா நாகலிங்கம் ஆகியோர் தாங்கள் எடுக்கும் இப்படங்களை சிறீலங்கா அரசிற்கு அனுப்பி வைப்போம் என கூறி பயமுறுத்தியது இவர்களுடைய இலங்கை அரசுடனான தொடர்பையும் துரோகத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

4) தாயகத்தில் தமிழ்த் தேசியத்தின் வழி நின்று, எமது இன விடுதலைக்காக தன்னுயிரை துச்சமென நினைத்து போராடுபவர் அனந்தி சசிதரன் அவர்கள். இவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்ற விடயத்தை கொண்டு செல்ல முற்பட்ட போது இம் முயற்சியை கரி ஆனந்த சங்கரி அவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பதை அனந்தி அவர்கள் கனடியத் தமிழ் வானொலியில் (CTR) வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

5) கரி ஆனந்தசங்கரி, தான் ஒரு தமிழர், எனவே தனக்கு தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என கூறுகின்றார். ஆனால் இவர்தான் பல தமிழர்களின் அரசியல் வாழ்வை குழி தோண்டி புதைத்தவர். கனடிய அரசியலில் போட்டியிடும் தமிழர்களுக்கு எதிராக வேற்று இன வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்.

உதாரணங்களாக:
அ. ராதிகா சிற்சபேசன் அவர்களின் தேர்தல் காலத்தில் அனைவரும் அவரின் வெற்றிக்காக உழைத்த நேரத்தில் அதே தொகுதியில் போட்டியிட்ட லிபெரல் கட்சி வேட்பாளர் ராணா சர்க்காரிற்காக கரி தலைமையில் CTC வேலை செய்ததை யாவரும் அறிவீர்கள். இந்த ராணா சர்க்கார்தான் இம்முறை லிபெரல் கட்சி வேட்பாளர் போட்டியில் டொன்வலி வடக்கில் படு தோல்வி அடைந்தார்.

ஆ. முரளி நாராயணதாஸ் என்பவர் லிபெரல் கட்சியின் வேட்பாளர் நியமனப் போட்டியில் ஏஜின்கோட் தொகுதியில் பங்கு பற்றியவர். இவருடைய குடும்பம் நீண்ட காலமாக சமூகப் பணியில் ஈடுபட்டவர்கள். அவரிற்கு எதிராக கடந்த இரு மாதத்திற்கு முன்பு சீன சமூகத்தைச் சார்ந்த ஆர்னொல்ட் சானுக்கு கரி ஆனந்தசங்கரி ஆதரவு கொடுத்திருக்கின்றார்.

இ. நீண்ட கால லிபெரல் அங்கத்தவரான தியோ அன்ரனி அவர்களின் வேட்பாளர் போட்டியில் அவரிற்கு எதிரான பிலிப்பைன்ஸ் சமூகத்தை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தார். இவர்கள் அனைவரையும் நீங்கள் அணுகி தமிழர்களுக்கு எதிராக நடந்த அநீதிகளை விபரமாக கேட்டு அறிந்து கொள்ளலாம்.

6) இவருக்கு முண்டு கொடுப்பவரும், நிரந்தரமான கொள்கை அற்றவருமான தங்கவேலு ஐயா என்பவரைப் பற்றி சொல்வதென்றால் 2009 முள்ளிவாய்க்கால் நேரம் தங்கவேலு ஐயா என்பவர் இங்கு ரிவிஐ இன் கொண்டாட்டம் நிகழ்வினை வைக்கலாம் என்று ரிவி இல் பேட்டி கொடுத்தவர். 2009 ல் எம்மினம் அழிக்கபட்டபோது தான் புலி என்று சொல்ல வெட்கப்படுவதாக சொல்லியவர், காற்று அடிக்கும் போது பறக்கும் சருகுக்கு ஒப்பானவர். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் தமிழ் ஈழத்தில் தனது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையிலும் ஈழத்துக்காக போராடி வருகிறார். கஜேந்திரன் பொன்னம்பலத்தை கரித்துக் கொட்டும் தங்கவேலு, துரோகி ஆனந்தசங்கரியின் மகனை நல்லவர், வல்லவர் என்று வக்காலத்து வாங்குகிறார். இதில் இருந்து தெரியவில்லையா கரி ஆனந்தசங்கரியும் அவரது ஆதரவாளர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பது?

7) அடுத்தவர் ஈ-குருவி இணையத்தளம் நடாத்தும் நவஜீவன். இவர் சிறீலங்கா அரசின் கைக்கூலி என்பது யாவரும் அறிந்ததே. இவரின் அப்பா ஆனந்தராஜா வல்வெட்டித்துறை நகரசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவாகி இப்போது EPDP உடன் சேர்ந்து துரோகம் செய்வதுடன் ஆனந்தசங்கரியுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுபவர்.

ஈ-குருவி நவஜீவனின் தந்தை பற்றிய தகவலுக்கு: இங்கே அழுத்தவும்

ஆனந்தசங்கரியும், ஆனந்தராஜாவும் இணைந்து எவ்வாறு தமிழ் தேசியத்தை சிதைக்கின்றார்களோ அதைப் பின்பற்றி கனடாவில் கரி ஆனந்தசங்கரியும் நவஜீவனும் இணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள்.

எத்தனையோ மாவீரர்களாலும் மக்களின் தியாகங்களாலும் உங்களின் அளப்பரிய பங்களிப்புகளாலும் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியத்திற்கு இந்த சுயநலம் பிடித்த கரி ஆனந்தசங்கரியினாலும் இவர் போன்றவர்களினாலும் எந்த பாதகமும் வருவதை அனுமதிக்க முடியாது. இவை முளையிலேயே கிள்ளி எறியப்படுவதை உறுதிப்படுத்துவதே நாம் தேசியத்திற்கு ஆற்றும் கடமையாகும்.

அன்பான தமிழ் ஈழ உறவுகளே !

தமிழ் மக்களுடைய ஆதரவு தமிழ்த் தேசியத்தினதும் தமிழர்களின் அபிலாசைகளின் அடியொற்றியதே தவிர தமிழ்ப் பெயர் வைத்திருக்கின்றார் என்பதற்காக அரசியல் ஆதரவு கிடைத்துவிடாது என்பதை வலியுறுத்தி கூறிக்கொள்வதுடன், கிளிநொச்சியில் எமது மக்கள் ஆனந்தசங்கரிக்கு அளித்த பரிசினை நாமும் அவர் வழி தொடரும் புதல்வருக்கு வழங்குவோம் என்பதுடன், இவர்களின் துரோகத்தை மாவீரர் தியாகத்தை நெஞ்சில் சுமந்து எதிர் கொள்வோம் என உறுதி கொள்வோம்.

நன்றி

Boycott Gary Campaign Team !

ஈழதேசம்

Advertisements