ஏன் லைக்கா மொபைலை நாம் புறக்கணிக்க வேண்டும் – பல ஆ தாரங்கள்

ராஜபக்சவின் கூட்டாளி தயாரிக்கும் படம் விஜய் நடிக்கும் கத்தி படத்தை எதிர்க்க வேண்டும். லைக்கா மொபைல் நிறுவனம் தனது சிங்கள கூட்டாளியை மறைக்க பெரும் பாடு பட்டு வருகின்றது அனைவரும் அறிந்தது.lyca lanka 2

ஏன் லைக்கா மொபைலை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது.

முதலாவது:

சிங்கள அரசு நடத்திய காமன் வெல்த் மாநாட்டுக்கு பல மில்லியன் ரூபாக்களை வழங்கியது. அதாவது உலகத் தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் அம்மாநாட்டை புறக்கணிக்க கோரி போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தி வந்த வேளையில் அதுவும் ஈழத்தழிழர்களாக இருந்துகொண்டு அம்மாநாட்டை பலப்படுத்த அதிஉயர்ந்த கோல் ஸ்பான்சர் செய்துள்ளது லைக்கா மொபைல் நிறுவனம்.

இரண்டாவது:

பிரித்தானியாவில் உள்ள சிங்கள அரசின் நிதி உதவியுடன் இயங்கும் புத்த பிக்குகள் நடத்தும் புத்த கோவில் சார்பில் நடைபெற்ற சிங்கள சுதத்திர தினத்திற்கு, அதாவது தமிழர்கள் தங்களுடைய கரி நாளாகவும், பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்திய தினமாக கருதும் அந்த சிங்கள சுதத்திர தினத்திற்கு தனித்துவமான ஆதரவு வழங்கி பெரும் தொகை பணத்தை வழங்கியுள்ளது ஈழத்தமிழர் நிறுவனம் என இப்போது கூறும் லைக்கா நிறுவனம்.lyca

மூன்றாவது:

பிரித்தானியாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற சிங்கள அணிக்கும் இந்திய அணிக்குமான விளையாட்டுப் போட்டியில் சிங்கள அணிக்கு எதிராக தமிழ் இளையோர்கள் சிறு குழுவாக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு வந்த சிங்கள அணியின் ஆதரவாளர்கள் தமிழர்களை அடித்து பலத்த காயங்களுக்கு உட்படுத்தினார்கள், சிறு பெண்கள் என்றும் பாராமல் அவர்கயும் எட்டி உதைத்து விரட்டினார்கள். இது எதுவம் அறியாதவர்கள் போல் அடுத்த ஆண்டு அதே மைதானத்தில் நடந்த சிங்கள் அணிக்கும் பிரித்தானிய அணிக்கும் நடைபெற்ற போட்டிக்கு டிக்கட்டுகளை விற்று சிறப்பு சலுகைகளை தனது நிறுவனத்தின் சார்பாக தனது இணைத்திலேயே டிக்கட்டும் விற்றது லைக்கா மொபைல் நிறுவனம். லைக்கா டிக்கட் விற்ற அந்த போட்டி நடைபெற்ற போதும் அப்போட்டியை புறக்கணிக்கக் கோரி இளையோர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ஈழத்தமிழர் என்று கூறும் லைக்கா அப்போது ஈழத்தமிர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

நான்காவது:

சிங்கள பயங்கரவாத அரசின் அதிபர் ராஜபக்சவின் கட்சியின் எம்பியான ஜெயசூர்யாதான் இவர்களின் நேரடி கூட்டாளி. அவரை பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அழைத்து வந்தது லைக்கா நிறுவனம். இதே ஜெயசூர்யா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை வெற்றி விழாவாக கொண்டாடும் சிங்கள அரசின் ஏற்பாடுகளை இனப்படுகொலைவாதியான கோத்தபாயவுடன் சேர்ந்து நடத்தியவர்களில் ஒருவர் ஆவார். அது மடடுமல்லாது கோத்தபாயவுடன் சேர்ந்து வெற்றி விழாவில் சிங்கள பயங்கரவாத இராணுவம் வழங்கிய மரியாதையையும் கோத்தபாயவுடன் சோர்ந்து ஏற்றுக்கொண்டவர். முத்தையா முரளிதரனையே ராஜபக்சவுக்கு ஆதரவாக பேசியதற்காக தமிழ்நாட்டில் நுழைவதற்கு எச்சரிக்கை விடப்பட்டு புறக்கணிக்கப்பட்டார் ஆனால் எமது இனத்தின் சடலங்களில் வெற்றி விழா கொண்டாடும் ஜெயசூர்யாவை தனது முக்கிய கூட்டாளியாக கொண்டுள்ள லைக்கா நிறுவன அதிபர் எப்படி ஒரு ஈழத்தமிழனாக இருக்க முடியும்.

ஜந்தாவது:

பிரித்தானியாவில் கார்டிப் எனும் பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கு சிங்கள அணிக்கு பஸ் வசதிகளை ஒழுங்கு செய்ததும் இந்த லைக்கா நிறுவனம்தான். அதே போட்டி நடைபெற்ற இடத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டு சிங்கள அணிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதோடு மைதானத்திற்குள் நுழைந்தும் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தியிருந்தார்கள். ஆனால் இப்போது ஈழத்தமிழர்கள் எனக்கூறும் லைக்கா சிங்களவர்களுடன் நின்றது.lyca lanka

ஆறாவது:

மகிந்தவுக்கு ஆதரவாக பேசியும் ஆதரவும் அளித்து வரும் முத்தையா முரளிதரனை தனது விளம்பரங்களுக்கு ஓப்பந்தம் போட்டு பெரும் தொகையை வழங்கியள்ளது லைக்கா நிறுவனம். இப்படி தேடித் தேடித் தமிழர்களுக்கு எதிரானவர்களுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு எதிரான அனைத்து செய்றபாடுகளையும் செய்துவிட்டு இப்போடு தானும் ஈழத்தமிழன் என தமிழநாட்டு பத்திரிக்கைகளுக்கு தனது ஆதரவாளர்கள் மூலம் பேட்டி கொடுத்து வருகின்றது லைக்கா நிறுவனம்.

இதையெல்லாம் மறைப்பதற்கு தாம் இலங்கையில் தமிழர்களுக்கு உதவிகள் செய்வதாக தம்பட்டம் அடித்து விளமப்பரப்படுத்தி வருகின்றது. தனது தனது இனத்திற்கு உதவிகளை செய்வதை தம்பட்டம் அடித்து அதையும் விளம்பரமாக மற்றி லாபம் சம்பாதிக்கு ஈனப்பிறவிகள்தான் இந்த நிறுவனத்தினர். அதுவும் போரில் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவிகள் செய்துவிட்டு விளம்பரங்கள் தேடுகின்றது லைக்கா. அப்படிப் பார்த்தால் புலம்பெயர் மக்கள் சிலரிடம் பணம் பெற்றுவிட்டு சிறையிலும், முள்வேலி முகாம்களிலும் வாடிய தனது உறவுகளை கருணாவுக்கு பணம் கொடுத்து வெளியில் எடுத்தார்கள்.

அப்படியென்றால் கருணாவும் ஈழத்தமிழர் மிகவும் நல்லவரா? தமிழின துரோகி டக்கலசும் பணம் பொற்றுக்கொண்டு சில தமிழர்களை முள்வேளி முகாம்களில் இருந்து விடுவிக்க உதவி செய்தவன்தான் அப்படி என்றால் அவனும் ஈழத்தமிழன் நல்லவனா?

இதே வகைதான் லைக்காவும், புலம்பெயர் மக்களிடம் பணம் பெற்று அதை தாயக மக்களிடம் வழங்கிவிட்டு முழுக்க முழுக்க தன்னுடைய பணத்தை வழங்கியது போல் விளம்பரம் செய்கின்றது. இப்போது கூறுங்கள் லைக்கா நிறுவனத்தை தமிழகத்ததை விட்டு ஓட வைக்க வேண்டுமா இல்லையா?

சங்கதி 24

 

Advertisements