தமிழீழத்திற்கு விஜய் டிவி-கோபிநாத் செய்த அடாவடி…

தமிழைக் கதைத்து தமிழீழத்திற்கு கோபிநாத் செய்த அடாவடி…

தமிழீழம்.. தமிழீழ விடுதலை… ஈழத் தமிழர்கள்… தமிழீழ தேசியத் தலைவர் இவை யாவும் தமிழர்கள் எனக் கூறும் இவர்கள் போன்ற சிலருக்கு பேசக் கூடாத சட்ட விரோத குற்ற சொற்கள் 

vijay tv kobynath

கனடாவிற்கு, ஒரு நிகழ்வுக்கு திரு. கோபிநாத் அவர்கள் வருகை தந்திருந்தார். அவரின் தமிழ் ஆங்கில உரைகளும் அறிவு சார் உரைகளும் சிறப்பானவை. மதிக்கின்றோம். ஆனால் அவற்றில் தமிழ் அடிப்படையான தமிழ் உணர்வு கூட வெளிப்படையாக வெளிப்பட்டதில்லை என்பது ஏமாற்றமே.

உரை நடுவில் அவர் சபையோரிடம் சொன்னார் நீங்கள் விரும்பிய தலைப்பை தாருங்கள் அந்த தலைப்பில் நான் 5 நிமிடங்கள் பேசிக் காட்டுகின்றேன் என்றார். பேசினார் அவர் விரும்பிய தலைப்பை மக்கள் கொடுத்த போது. என் மேசையில் அமர்ந்திருந்த நண்பர்கள் உரத்து சொன்னோம் “தமிழீழம்” என்ற தலைப்பை. அவர் ஒரு பார்வை பார்த்து புறம் ஒதுக்கினார். மீண்டும் மீண்டும் உரத்து ஒலித்தோம்!

“புரிகிறது… தமிழர்கள் மனதில் இருக்கும் கனவு தமிழீழம். ” என்றார்… தவிர்க்க முடியாமல்.. பாவம் அதற்கு மேல் அவரை வருத்தக் கூடாது என விட்டு விட்டோம்…மணிக்கணக்காக பேசும் தமிழர் ஒருவரால் ஐந்து வரிகள் பேச முடியாது போன ஒரு தலைப்பு “தமிழீழம்”…..

அவர் சூழ்நிலை…. அவரை தவறாக நினைக்காதீர்கள்..ஏற்பாட்டாளர்கள் தம்பியாக நான் மதிப்பவர்கள் என பலர் அவர் குரலாக சப்பை விளக்கங்கள்.. வலித்தது எனக்கு அன்று!! பேசாமல் இருந்து விட்டேன்.

திரு கோபிநாத்தின் அறிவில், நிகழ்ச்சி தொகுப்பாற்றலில், தமிழ் அழகில் நான் கூட மதிப்பு வைத்து இருப்பவள். ஆனால் அதற்காக தமிழ் தேசிய உணர்வை அவர் காட்ட முடியாத சூழலில் தன்னை மறைத்து தன் உணர்வுகளை வெளிபடுத்தாத தமிழராக வாழ்கிறார் என்ற விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

தமிழீழம்.. தமிழீழ விடுதலை… ஈழத் தமிழர்கள்… தமிழீழ தேசியத் தலைவர் இவை யாவும் தமிழர்கள் எனக் கூறும் இவர்கள் போன்ற சிலருக்கு பேசக் கூடாத சட்ட விரோத குற்ற சொற்கள் ஆகலாம்.

ஆனால் தமிழர்களின் வரலாற்றில் இவை இல்லாமல் எம் மொழியின் மறுமலர்ச்சி இந்த நூற்றாண்டில் பேசப் பட முடியாது….

இதுவே உண்மை….

இவர்கள் எல்லோரும் அற்ப மாயைகள்…

வரலாறு நின்று நிலைத்து சொல்லும்……எம் தமிழீழ தேசிய தலைவரையும் நாளை பிறக்கப் போகும் தமிழீழம் தமிழர் நிலம் என்பதையும்!!!!!!

தமிழ் தேசிய உணர்வு தமிழர்கள் மத்தியில் வளர்ந்து வரும் காலம் இது!!!

எம் மொழியையும் எம் இன எழுச்சியையும் எம் விடுதலை தாகத்தையும் அழிக்க எதிர் கொண்டு வரும் அத்தனை கொடும் பகையையும் அவர்களுக்கு துணை போகும் ஈனர்கள் இடுக்கர்களையும் அவர்கள் நாம் வீழ செய்யும் இழி செயல்களையும் அழித்து ஒழித்து வீழ்த்தி எம் தமிழ் தேசிய உணர்வு பொங்கி எழுகை கொண்டு சரிதம் படைக்கும் இது உறுதி!!!!!!

தமிழுக்கு இது பொங்கும் காலம்!!!

-நன்றி

முகநூல்  -சிவவதனி பிரபாகரன்.

Advertisements